To search this blog

Friday, June 4, 2021

Thiruvallikkeni Azhagiya Singar 'porvai kalaithal" 2021 (incognito)

Thiruvallikkeni Azhagiya Singar  Special  Brahmothsavam 2021  -    

day 9 Morning - Porvai Kalaithal

திருக்கோவில்களில் எம்பெருமான்கள் புறப்பாடு  கண்டருளும்  வாஹனம் பல்லக்கு.  திருவல்லிக்கேணியில் தினமும் காலையில் செல்வர் பல்லக்கில் எழுந்தருளி பலி சாதித்து அருள்வார்.   தங்க பல்லக்கு, முத்து பல்லக்கு, புஷ்ப பல்லக்கு என பல்வேறு வகைகள் உள்ளன.  திரு அழகிய சிங்கர் சிறப்பு ப்ரஹ்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளை காலை  "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும்,  அதிகாலை பெருமாள்   நாச்சிமாருக்கு கூட தெரியாமல்  தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன் தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்" என  கொண்டாடப்படுகிறது.

In movies, often a moustache or even a mole on the face would make them incognito – or to show the difference between identical twins, such difference would be shown .. this is no post on movie but of Perumal in incognito mode !!  A recent study conducted by investigators from the University of Texas Health Science Center at San Antonio has discovered how the SARS-CoV-2 virus exploits metal ion concentrations in the body to disguise itself from the immune system.

Incognito is an English adverb  meaning "in disguise".  You would for sure know, that you can surf on ‘incognito’ mode.  Many a times, one would not like to leave traces on the web – no information on what was seen or searched for.  Web browser functions like those trace their roots back more than a decade, and the feature — first found in a top browser in 2005 — spread quickly as one copied another, made tweaks and minor improvements.  Yet, privacy-promising labels can be treacherous. Simply put, going "incognito" is as effective in guarding online privacy as witchcraft is in warding off a common cold.  That's because private browsing is intended to wipe local traces of where you've been, what you've searched for, the contents of forms you've filled. It's meant to hide, and not always conclusively at that, your tracks from others with access to the personal computer. That's it.

                     At their most basic, these features promise that they won't record visited sites to the browsing history, save cookies that show you've been to and logged into sites, or remember credentials like passwords used during sessions. But your traipses through the web are still traceable by Internet providers – and the authorities who serve subpoenas to those entities – employers who control the company network and advertisers who follow your every footstep.  Many  browsers have added additional, even more advanced privacy tools, generically known as "anti-trackers," which block all kinds of bite-sized chunks of code that advertisers and websites use to trace where people go on the web in attempts to compile digital dossiers and/or serve targeted advertisements. Although incognito modes and anti-tracking features don't compose a true system, they're certainly complementary.  

That was best illustrated this week when a proposed class-action lawsuit was filed in a California federal court seeking at least $5 billion from Google for allegedly tracking users' online behavior and movements – even when they browse in Chrome's Incognito mode. The suit claimed that Google tools, notably Google Analytics and Google Ad Manager, "are actually designed to automatically track users when they visit webpages – no matter what settings a user chooses. This is true even when a user browses in 'private browsing mode.'"  !!!!

The day’s  events are sequel to that of previous day i.e., ‘Thirumangai Mannan Vaibhavam’; Emperuman turning Kaliyan into his astute devotee teaching him the  ‘ashtakshara mantra’.... In symbolizing search of lost ring, Perumal has Himself covered with 9  ‘sheets’ (shawls)  and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Parthasarathi with no floral garlands – then many flowers adorn Perumal.  Upon reaching theTemple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted.   

The conflict is not that of mortals…it is divine… ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’….  In the words of Andal ~  *ஊடல் கூடலுணர்தல் புணர்தலை*  

                "போர்வை களைதல்" -  ஸ்ரீபாதம்தாங்கிகள் அழகு மிளிர சுற்றி வரும்போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஓரோர் போர்வை நீக்கி,  கற்பூர ஆரத்தி கண்டருளி ~ அனைத்து போர்வைகளும் கலைந்த கணத்தில், சில நிமிடங்கள் - எம்பெருமான் சௌந்தர்யம் திகழும் திருமேனியை - சங்கு சக்ர  கதாபாணியை அணிகலன்களுடன்  சேவிக்கும் ஒரு அற்புத வாய்ப்பு;  உடன் சில நிமிடங்களில் மணம்கமழும் மாலை அணிந்து வேறொரு சேவை அளிக்கிறார் நம் ஸ்ரீபார்த்தசாரதி.  இத்தகைய சிறப்பு பெற்ற போர்வை களைதல் வைபவத்தின் போது (சித்திரை மற்றும் ஆனி  மாத வைபவங்கள்)  எம்பெருமான் ஒன்பது பட்டு தகடிகளை சாற்றிக்கொண்டு ஏளுவார் -  இப்போது உள்ள சற்று குளிர் காற்று உள்ள சூழ்நிலையில் எம்பெருமான் அழகிய சால்வைகளை சாற்றிக்கொண்டு எழுந்து அருளியது மிக மிக ரம்மியமாக இருந்தது.  


             இந்த வருடம்  (10/3/2021) அசம்பாவிதம் காரணமாக பெரிய மாட வீதி புறப்பாடு இல்லை. குளக்கரை புறப்பாட்டிற்கு பிறகு போர்வை களைதல் வைபவம் தென்னண்டை மாட வீதியில் கோவில் கோபுரம் / அத்தங்கி திருமாளிகை முன்பே நடந்தேறியது.  பின்னர் தெற்கு மாட வீதி புறப்பாடு கண்டருளி  மேற்கு கோபுர வாசலில் மட்டையடி வைபவமும், பிறகு பூப்பந்து விளையாடுதலும் விமர்சையாக நடைபெற்றன.

Here are some photos of day 9 of Sri Azhagiya Singar  special  brahmothsavam ‘porvai kalaithal’ vaibhavam on 10.3.2021. 

இத்தகைய சேவைகள் கண்டு இன்புறும் திருவல்லிக்கேணிவாசிகள் பாக்கியசாலிகள் !   நாம் எம்பெருமானை தரிசித்து இன்புறுவோமாக ! - அதற்கு அவனையே உபாயமாக் கொண்டு, அவனது திருவடிகளையே பற்றி, அவனிடத்திலேயே பிரார்த்திப்போம். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4th June 2021.





















  

1 comment: