To search this blog

Showing posts with label Samprathayam. Show all posts
Showing posts with label Samprathayam. Show all posts

Saturday, October 3, 2026

Thirumalai Ezhumalaiyanukku maavilakku

 Thirumalai Ezhumalaiyanukku maavilakku

 

ஏழுமலை வாசனுக்கு கோவிந்தம் போடுவோம்

- ஏழேழு ஜென்மத்துக்கும் கோவிந்தம் போடுவோம் !! 

இன்று 3.10.2026 புரட்டாசி சனிக்கிழமை.  திருமலையப்பனுக்கு உகந்த திருநாள்.  மலையப்பனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடும் மரபு பல இல்லங்களில் உள்ளது.   பச்சரிசி  அரிசி மாவு, நாட்டு  சர்க்கரை, நெய், வாசனை திரவியங்கள்,  ஏலக்காயுடன்கலந்து  அகல்விளக்குப் போல் பசு நெய் இட்டு ஏற்றி மலையப்பன் முன்வைத்து பக்தியுடன் விளக்கு ஏற்றி வணங்குவோம்.   

 


பூதத்தாழ்வார் பாசுரத்தில் இயம்பியது போல -  'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா'  என  பக்தியுடன் திருவேங்கடவனை வழிபட்டு - அந்த திருவிளக்கையே திருமலையப்பனாக தரிசித்து - திருமலை பாசுரங்கள், பாமாலை, கோவிந்த நாமம் சொல்லி -   விளக்கு  நிதானமாக எரியும் நேரம் முழுவதும், அந்த திருப்பதி பாலாஜியே  நம் இல்லம் வந்துள்ளதாக பரவசத்துடன் - "கோவிந்தா! கோவிந்தா!"  என்று கோஷம் எழுப்பி எம்பெருமானை பற்றி அவனருள் பெறுவோம்.

 
தூசி மாமண்டூர் வீரவல்லி சம்பத்குமார்

Thursday, September 24, 2026

dwaja arohanam at most reverred Badrinath dham

 

It perhaps is the ultimate dream of a Srivaishnavaite – darshan at the most holy Sri Badrinath dham.  It is not easy even in the modern World.  As we travelled, the bus would stop – one would find scores  of vehicle in a line  (mostly disciplined !) – the gorges on the mountain   offer a very pleasant at the same time a fearsome view !  One could see river flowing all the way – yet the vehicle passing on a ridge could evoke fear.  

In most Srivaishnava temples, there is dwajasthambam and we start with prostration before the kodimaram.  This post is not about dwajasthambam but about the holy flag that flutters atop garbagraham at some temples and the hoisting of it.



At holy Puri,  for a pilgrim approaching Puri, the flag and Nilachakra can be seen from afar, even before entering the temple. Traditionally, therefore, the distant sight itself becomes a kind of first darśana — Jagannath's presence reaching the devotee before the devotee reaches Him.  Here - “the daily ceremonial changing of the Patitapāvana Bana atop the Nilachakra of Sri Jagannath Temple is a great spectacle.” “Every evening at Sri Jagannath Dham, a hereditary sevaka climbs the soaring śikhara and ceremonially replaces the sacred Patitapāvana flag above the Nilachakra — a spectacular act of devotion performed high above Puri.”

Sri Badrinath Dham — Badari Vishal — is among the most  reverred Vaishnava kshetras, set high in the Garhwal Himalayas of Uttarakhand at about 3,133 metres, on the bank of the sacred Alaknanda. The temple is dedicated to Sri Badarinarayana, Sriman Narayana  in a meditative posture, and stands amid the great mountain setting associated with Nara and Narayana.   When Narayana performed tapas here, Sri Mahalakshmi is   assumed the form of a Badari tree—a wild berry or jujube tree—to shelter Him from the harsh Himalayan elements. Hence the Lord became Badarinatha, the Lord of Badari. The region is also traditionally regarded as the tapas-bhumi of Nara–Narayana Rishis.     

In daylight, one sees the bright temple, rushing Alaknanda and immense mountains enclosing the valley. As evening descends, the character changes dramatically: the sunlight disappears behind the mountains, temperatures fall quickly, and the illuminated temple seems almost isolated in the vast darkness of the Himalayas. For a pilgrim who has actually stood there after nightfall, “Dham” begins to feel more appropriate than simply “temple.”

At Sri Jagannath Temple, Puri, the flag-changing ceremony atop the Nilachakra is a remarkable daily ritual. The temple flag, commonly called Patitapāvana Bana, is replaced every day, traditionally around sunset. The servitor climbs the towering temple spire barefoot and without modern climbing equipment, reaches the Nilachakra at the summit, removes the existing flag and fixes the fresh one. The act is not treated as ordinary hoisting and lowering of a national-style flag; it is a seva to Lord Jagannath, carried out according to temple tradition. Odisha Tourism even includes witnessing the evening “Flag Hosting ritual” as a specific part of its Puri pilgrimage itinerary

On 17.9.2026 was fortunate to have darshan at holy Badrinath – at around 5.20 pm, it was very cold – some reports put it around 2 deg C  .. .. and as we stood in the queue inside the temple waiting for Harathi darshan – we fortunately had the opportunity to see  Badrinath dhwaja-arohana  

Here is a short video  -  Jai Bolo Badrinath   :  https://youtu.be/NYs-PGG7BIY

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

24.9.2026

The Divyaprabandha recital heard in the background of the video  is   Thirumangai Azhwar's pasurams on Thiruvathari Asramam (Badrinath), recited by Dr. M. A. Venkatakrishnan, myself, P Lakshmi Narasimhan and Dr. MA Madusudanan.


Wednesday, September 23, 2026

Sri Vedanthachar sarrumurai 2026 ~ அகிஞ்சனன் என்பவன் யார் ?

Sri Vedanthachar sarrumurai  2026   ~   அகிஞ்சனன் என்பவன் யார் ?

 

அகிஞ்சனன் என்பவன் ““தன்னிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவன்”!  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இதற்கு மிக ஆழமான பொருள் உள்ளது.  “அகிஞ்சனன் என்பது, மோக்ஷத்தை அடைவதற்கு தனக்கென எந்தச் சாதனமும் இல்லை; எம்பெருமானுடைய அருளே ஒரே ஆதாரம் என்று உணர்ந்தவன்.”

अकिञ्चननिधिं सूतिम् अपवर्गत्रिवर्गयोः ।
अञ्जनाद्रीश्वरदयाम् अभिष्टौमि निरञ्जनाम् ॥

akiñcana-nidhiṁ sūtim apavarga-trivargayoḥ |
añjanādrīśvara-dayām abhiṣṭaumi nirañjanām

 

 


Thirukachi (Kanchipuram) is a beautiful place with so many temples.  Thiruthanka is one of the 108 Divya Desams of Sriman Narayana  situated in Kanchipuram, this temple is just ½ kms away from Ashtabuyakaram divyadesam. More  significantly, this is the birth place of Sri Vedantachar.  Today – Purattasi  5, 22.9.2026  is Ekadasi – also  ‘thiruvonam nakshathiram’ in the month of Purattasi marking the birth of Sri Vedanthacharyar.   The temple is believed to have been expanded during the Medieval Cholas and Vijayanagar kings. The temple has inscriptions on its walls dating from the period of Rajaraja Chola III (1223 CE).  


இன்று  புரட்டாசி திருவோணம்.  ஸ்ரீ தூப்புல் பிள்ளை என்ற கவிதார்க்கிக சிம்மம் என்ற ஸர்வதந்திரஸ்வதந்தரர் என்ற ஸ்ரீமந்  வேதாந்தாசாரியார்  -   கிபி 1268ல் புரட்டாசி விபவ ஆண்டில்  அவதரித்தார்.  758 திருநட்சத்திரம் இன்று ! காஞ்சியில் திருத்தண்கா என்கிற திவ்யதேசம் உண்டு. 'கண்ணன் வெஃக்கா' எனப்படுகிற ஸ்ரீயதோக்தகாரி எம்பெருமான் ஸன்னிதிக்குச் சமீபத்தில் உள்ள ' தேனிளஞ்சோலையே' தண்கா (குளிர் சோலை) என்பர் பெரியோர். அதற்கருகில் இருக்கும் அக்ரஹாரத்தில்   முன்பு, உத்தமமான புரட்டாசித் திருவோண நன்னாளில் உதித்தவர் குருவான வேதாந்தாசாரியார்   எனும் வேதாந்த தேசிகன் !    

திருத்தண்கா எனும்  ‘தூப்புல்’ வேதாந்த தேசிகனின்  அவதாரஸ்தலம்.  'தூப்புல்’ தூய்மையான புல். வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தை குறிக்கும்.   உபய வேதாந்தத்துக்கும், [தமிழ், ஸம்ஸ்க்ருதம்]  என்ற இரண்டிலும் சிறந்து விளங்கியதால்  'வேதாந்தாச்சார்யர்’.  நமக்கு நல்வழி காட்டிடும் ஆசானை நாம் குரு, ஆசாரியன், தேசிகன் என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றோம்.  தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள். 

திருவரங்கனுடைய பாதுகையைப் பற்றி, பாதுகா சகஸ்ரம் என்ற தலைப்பிலே விடிவதற்குள்ளே 1000 ஸ்லோகங்களைத்  சுவாமி பாடியதால் - கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தது. இவர்  “சர்வ தந்திர சுதந்திரர்”,  என்று போற்றப்படுகிறார்      

எவை எவற்றை உண்ணக்கூடாது என சுவாமி வேதாந்தாச்சார் எழுதிய "ஆகார நியமம்" என்ற நூல்.  பகவானுடைய அடியவர்கள் பகவத்பக்தியை வளர்ந்துக்கொள்ள ஸாத்விக ஆஹாரங்களையே உட்கொள்ள வேண்டும். சில ஆஹாரங்களை விட்டே தீர வேண்டும். எவையெவைகளை விட வேண்டும் என்று ஆசார்யர்  21 பாசுரங்களாலே காட்டியுள்ளார்.   இவற்றையெல்லாம் கடைபிடிப்பது கடினம் எனும் நல்லோர் தங்கள் ஆக்கையின் வழி உழலலாம்.  நாம் நிறுவனத்தில் டை கட்டச்சொன்னால் கட்டுவோம் !  - அதிகாரி நினைப்பதற்கு முன்பே கை காட்டுவோம் - ஆனால் நமது நல்வாழ்க்கைக்கு நியமனங்கள் பற்றி கூறினால் உதாசீனம் செய்வோம் !!   

மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள் அந்தாதி வடிவிலும் இருக்கும். ஸ்வாமி வேதாந்தச்சார் எம்பெருமான் மீது ஒரு மும்மணிக்கோவையை அளித்துள்ளார்.

Sri Venkatanathan was the  amsam of  “Thirumani” (bell).  One day, Kidambi Appular, Venkatanathan’s Maternal Uncle, took him to the “Kalakshepam”  of Guru Nadathur Ammal. On seeing Venkatanathan’s “divya thejas” (brilliance), Nadathur Ammal stopped the Kalakshepam and asked the boy to come on stage. Young Venkatanathan grew up to become an astute scholar, a preacher of Srivaishnava siddhantam.  Venkatanathan travelled to Thiruvahindirapuram and did “mangalasasnam” to Lord Deivanayagan and his consort. He then went to Lord Nrusimha’s sannidhi in Oushadagiri, sat under an “Ashwattha” tree and recited the Garuda Mantram.    He also composed  Hayagreeva Sthotra, Garuda-dhandakam, Devanayaga-panchasath, Achyutha-sadakam, and many more literary gems in future.  Swami was well versed in Sanskrit, Prakritham, Tamil and was great in debate earning the title  “Kavitarkikasimham”(A lion among poets). Of his many skills, he confronted a mason in building a well which is now seen at his thirumaligai at Thiruvahindrapuram. 

Swami Vedanthachar  lived a full and fruitful life for 102 years. In the misfortune when Islamic invaders looted Thiruvarangam, alongwith Swami Pillai Logachar, he emerged at the forefront in protecting our sampradhayam.   In the year 1369, he rested his head on the lap of his son Kumara Varadhachariar and left his mortal coil. During his lifetime, Swami lived in Karnataka for 12 long years in a place know as Sathyagalam. 





இந்த பதிவின் ஆரம்பத்தில் நாம் கண்ட பாசுரம் :

அகிஞ்சந நிதிம் ஸூதிம் அபவர்க்க த்ரிவர்க்கயோ:

அஞ்சனாத்ரி ஈஸ்வர: தயாம் அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.

தயா சதகம் என்பது திருமலை ஸ்ரீநிவாஸப் பெருமானின் கருணையைப் போற்றி வேதாந்தாச்சார்யரால்  வடமொழியில் இயற்றப்பட்ட  ஸ்தோத்திர நூல்.  இங்கே “தயை” என்பது வெறும் இரக்கம் அல்ல.  எம்பெருமானின் தயையே நம்மைப் போன்ற குறையுடைய ஜீவர்களை அவரிடம் சேர்க்கும் புருஷகார சக்தி. அதனால் தயையைத் தனி தேவதையாகவே உருவகித்து, “தயா தேவி” என்று போற்றுகிறார்.  எம்பெருமான்  ஸ்ரீநிவாஸனுடைய தயை என்னும் தேவியைத் துதித்து இயற்றப்பட்ட நூல் இது.

“வேறு புகலோ, சாதனமோ இல்லாதவர்களுக்கே பெரும் செல்வமாக இருப்பவளும், மோக்ஷத்தையும் தர்ம–அர்த்த–காமங்களையும் அளிப்பதற்குக் காரணமாக இருப்பவளும், மாசற்றவளுமான அஞ்சனாத்ரி நாதன் ஸ்ரீநிவாசனின் தயையை நான் போற்றுகிறேன்.” இதில் “அகிஞ்சன நிதிம்” என்பது மிக முக்கியமான சொல். தன்னிடம் சாதனை, ஞானம், பக்தி, தகுதி என்று எதையும் சொந்தமாகக் காட்டிக்கொள்ள முடியாத ஜீவனுக்குக் கூட, பெருமாளின் தயையே செல்வம் என வேதாந்தாசார்  கூறுகிறார்.  அகிஞ்சனன் என்பவன் “என்னிடம் எதுவும் இல்லை” என்று பொருளாதார வறுமையை மட்டும் குறிக்கவில்லை. இங்கு, என்னுடைய முயற்சி, ஞானம், பக்தி, அனுஷ்டானம், புண்ணியம் — இவற்றில் எதையும் மோக்ஷத்திற்கு உரிய சாதனமாக நான் நம்பவில்லை என்று நிற்பவனே அகிஞ்சனன். அத்தகைய ஜீவனுக்கு எம்பெருமானுடைய தயையே நிதி, அதாவது உண்மையான செல்வம்.  இதுவே பிரபத்தியில் வரும் ஆகிஞ்சன்யம். “என்னால் என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடியாது” என்ற உணர்ச்சி. அதனுடன் அநன்யகதித்த்வம் — “உன்னைத் தவிர எனக்கு வேறு புகல் இல்லை” — சேர்கிறது. ஸ்ரீவைஷ்ணவ சரணாகதியின் உள்ளார்ந்த நிலை இதுவே.


At Thiruvallikkeni divyadesam, today it was periya maaddaveethi purappadu for  Vedanthachar   with    Sri Parthasarathi Emperuman. Here are some photos of Sri Vedanthachar and one close up of Sri Parthasarathi Emperuman new muthangi sevai. 

-adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

 


Friday, September 11, 2026

Brahmothsavam ~ thirukkovil mariyathai for Battacharyar 2022

 

நம் சனாதன தர்மமும் ஹிந்து சமயமும் அற்புத வாழ்வியல் நெறிகள்.  நம்மை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தும் இந்த அற்புத தர்மத்தில் மிக சிறப்பான சடங்கு சம்பிரதாயங்களை நம் பூர்வர்கள் ஏற்படுத்தி உள்ளனர். ஸ்ரீ வைணவ திருத்தலங்களில் ப்ரஹ்மோத்சவம்  சிறப்பானது.  பெரிய வாகனங்கள், பூமாலைகள், அழகு வஸ்திரங்கள், ஒன்று கூடும் மக்கள் என பலப்பல !!  .. .. .. இது எம்பெருமானுக்கு அற்புத கைங்கர்யம் செய்யும் அர்ச்சர்களுக்கு மரியாதை எனும் சிறப்பு ஏற்பாடு பற்றிய பதிவு.

திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம் ~ சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு ஆனி  மாதத்திலே  பிரம்மோத்சவம். கொரோனா காரணமாக 2020ல் உத்சவங்கள் நடைபெறவில்லை.. ..  

ஒவ்வொரு ஆண்டும்  பிரம்மோத்சவம் பத்து நாட்கள் நடைபெறுகிறது.  பத்து நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், - உத்சவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'செல்வர் கொத்து’  எனும் செல்வர் உற்சவம் புஷ்ப பல்லக்குடன் துவங்குகிறது.  அடுத்த நாள்,  அங்குரார்ப்பணம்.   உத்சவ கால தொடக்க நாளில் 'த்வஜாரோஹணம்'  - கோவில் வாசலில் நுழைவாயிலை கடந்து உள்ள கொடிமரத்தில் கொடி  ஏற்றப்படுகிறது.  முப்பது முக்கோடி தேவர்களையும் வருவித்து, ஆவாஹனம் செய்து - தினமும்  வாகன புறப்பாடு  முன்பே - விஷ்வக்சேனர் சென்று எட்டு திக்கிலும்  தேவதைகளுக்கு  பலி சாதிக்கப்பெற்று உத்சவம் நடக்கிறது.  பல வாஹனங்களில் - தர்மாதி பீடம், கருட வாஹனம், அம்ச வாஹனம், சூர்யா சந்திர ப்ரபைகள், ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு வேளையுமே ஒவ்வொரு சிறப்பு.  திருத்தேர் அதி விசேஷம். ஒன்பதாம் நாள் காலை ஆளும் பல்லக்கில், பெருமாள் கணையாழியை தேடும் போர்வை களைதல் முடிந்து, ப்ரணயகலகம் 'மட்டையடி’ என கொண்டாடப்பட்டு, இரவு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு  முடிந்து, கொடி  இறங்குகிறது.  

பத்தாம் நாள் காலை புறப்பாடு கிடையாது.  ஸ்ரீ பார்த்தசாரதி, ஆண்டாள் ஏக பீடத்தில், திரு தெள்ளியசிங்கர், சக்கரவர்த்தி திருமகன்,  ஸ்ரீ வரதர், ஸ்ரீ வேதவல்லி சமேத மன்னாதர்  ~ மற்றும் அனைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளப்பெற்று -  த்வாதச ஆராதனம் சிறக்கிறது.  பத்து நாட்கள் வீதிதனிலே - முதலாயிரம், இரண்டாவதாயிரம் (திருமொழி); இயற்பா சேவிக்கப்படுகிறது.  பத்தாம் நாள் - நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி சேவிக்கப்படுகிறது.  இரவு வெட்டிவேர் தேர் எனும் சிறிய திருத்தேரில் புறப்பாடு நடக்கிறது.  புறப்பாடு முடிய இரவு சுமார் 10.30 மணி ஆகிறது.  ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் உள்ளே எழுந்தருளி, பட்டர் சப்தாவரணம் நடத்துகிறார். உத்சவ கால விவரணங்கள் நம் முன்னோர்களால்  மிக அழகாக  வடிவமைக்கப்பட்டுள்ளன.  



நள்ளிரவில் - ப்ரம்மோத்சவத்தை காப்பு கட்டிக்கொண்டு சிறப்புற நடத்திய பட்டருக்கு மரியாதை.  திருக்கோவில் திருச்சின்னங்கள், திருக்குடைகள், அத்யாபகர் ஸ்வாமிகள், பரிஜனங்கள் கூட, பட்டரை அவர் தம் திருமாளிகைக்கு  சென்று அங்கே வேத விண்ணப்பத்துடன் இவ்விழா முடிவடைகிறது.   இவ்வருடம், சிறப்புற நடந்தேறிய ப்ரம்மோத்சவத்தின் முடிவில் – 26.4.2022 நள்ளிரவில் பெரியமுறை மிராசுதாரர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர் சுவாமி மரியாதை வைபவத்தின் போது அடியேன் எடுத்த ஒரு குறுங்கானொளி இங்கே.

: https://youtu.be/by5sIXGwTCw

Here is a short video  taken by me  on 26.4.2022  depicting  Battar maryathai for Periyamurai Mirasu Sri Parthasarathi Battar.  Incidentally with this Uthsavam Sri Parthasarathi Battar had performed dwajarohanam 50 times ! which is indeed a significant accomplishment. 

~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 
Mamandur Veeravali Srinivasan Sampathkumar

Monday, August 31, 2026

Sri U.Ve. Mudaliandan swami thirukkalyanam

ஸ்ரீ வைஷ்ணவ உலகத்திற்க்கு இன்று  31.8.2026    சீரிய நன்னாள்.



இன்று  திருவரங்கத்தில்  ஸ்ரீ உ.வே. கோ. க. வா. அ - ஸ்ரீ குமார பக்திஸாராச்சார்ய ஸ்வாமி [வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி] திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. 



முதல் படம் -  வர்த்தமான சுவாமி 2021 ஸ்ரீ சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் எடுத்தது;  இரண்டாவது திருக்கல்யாண மஹோத்சவ படம் [இணையத்தில் இருந்து];  மூன்று 2021 ஸ்ரீ சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் திருவாய்மொழி சேவாகாலம்




Monday, August 24, 2026

ThirupPavithrothsavam day 2 @ Thiruvallikkeni : 2026

 

ThirupPavithrothsavam day 2 @ Thiruvallikkeni : 2026

 



In the ongoing ThiruPavithrothsavam at Thiruvallikkeni, today 23.8.2026 is  day 2 

 

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.   It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.   

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short or less. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.   

During this Thiru Pavithrothsavam, yaga salai is constructed and vedic chants made by Thirukovil Battars; alongside homam – there would be arulicheyal as also veda parayanam by Adyapaka goshti.  In the sacred maha Yagnam - aswaththa samith, cow ghee, bilvapatrams - vilva ilai, lotus are used.    The poornahuthi / the conclusion of Thirupavithrothsava Sarrumurai is to  take place on  28.8.2026







Let us all have darshan of Sri Parthasarathi, Thirupavithorthsava yagnam and have the Divine Blessings.  Here are some photos taken during today’s  chinna maada veethi purappadu of Sri Parthasarathi Pavithrothsavam day 2.  

 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.  

திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்;  அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல்- திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது. 

திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)  

முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது.  ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும்  தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன்.  சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும்  தன்னகத்தே கொண்டவன்.  எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை.  எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்கிறோம்.   

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் இரண்டாம் நாள்  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :  

 
adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar