To search this blog

Tuesday, February 26, 2019

Sri Andal Purappadu @ Kizh Tirupathi 2019


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் * மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் * வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை * எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் * தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.


பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது.  ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அபரிமிதமான காதல், மிக அழகான சொல்லாடல், எளிய நடை, ஒரே தடவை படித்தவுடன் புரியக்கூடிய அர்த்தம் எனினும் பல்லாயிரக்கணக்கான வியாக்கியானங்கள்  ~  எல்லாம் கோதைப்பிராட்டியின் திருப்பாவைக்கே உரியன.  இப்பாடலின் எளிய உரை : "நாற்புறமும் குத்து விளக்குகள் எரிய, அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம், தூய்மை ஆகிய ஐந்து தன்மைகளையுடைய, (பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தை) தந்தத்தினால் ஆன, மஞ்சனத்தில் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களை கூந்தலில் அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியின் மார்பினில் சாய்ந்து உறங்கும் (நறுமலர்களால் ஆன மாலையை அணிந்த) கண்ணபிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் நீ பேசுவாயாக!



For Sri Vaishnavaites, the  purpose of birth is kainkaryam to Emperuman and his devotees – One needs to do kainkaryam at His abode ~ great it would be, when that happens to be a Divyadesam – the great place sung by Azhwargal.  The beautiful temple of Lord Srinivasa at Thirumala Tirupathi in its present form owes a lot to the works of the greatest Vaishnava Acharya – Sri Ramanujar.  The very thought of Tirumala and chanting the name of Lord of Seven Hills would cleanse our souls.




Thirumala has existed for Centuries and Lord Venkateshwara provides to His devotees - riches, all wealth and all goodness.  Thiruvengadam, the abode of Lord Balaji is the  ‘Thilakam’ the shining glory of the whole Earth.  Lakhs of devotees of all ages, from all over the Country and from other parts of the World throng to the hills, by walk, by vehicles of various hues and wait in the queue for hours to have a glimpse of the Lord.

At the foothills of most divine Thirumala lies Thirupathi – having  the ancient temple of Sri Govindarajar.    This temple was consecrated by our Emperumanar but has existed perhaps even in earlier centuries too.  Moolavar Sri Govindarajar is in  reclining yoga nidra posture, facing east,  keeping right hand under his head and left hand straight over his body. Sridevi and Bhudevi nachimars are in sitting  posture at the foot of Govindaraja.

This temple is remarkable for its style of architecture, the tall and remarkable 7 storied gopuram with 11 kalasas – with sannathis for Sri Govinda Rajar, Sri Kalyana Venkateswarar, Sri Parthasarathi in sitting posture, Sri Choodikudutha nachiyar, Sri Bashyakarar, Sri Pundarikavalli thayar, Kaliyan, Koorathazhwan among others. In front of the temple is our Acaryar Swami Manavala Mamunigal sannathi.  On 22nd Feb 2019, had the fortune of worshipping at this Temple and in the evening there was purappadu of Sri Andal ~ here are some photos of the purappadu and Sri Andal .. .. in describing this, felt that something on Thiruppavai would be relevant and am posting here ‘beautiful explanation of pasuram 19 – Kuthu vilakkeriya’ posted by Sri Desikan Narayanan (popularly Sujatha Desikan)

ஸ்ரீ வைணவர்கள் நலமந்தமில்லாதோர் நாடு பெற அனுதினமும்  அநுஸந்திக்கத் தக்கதும் மிக இனிமையானதுமானது  '   எட்டு எழுத்து திருவஷ்டாக்ஷர மஹா மந்திரம்: ஓம் நமோ நாராயணாய:"  ...  இப்படி எம்பெருமான் பெருமைகளையும், அவனது திருநாமங்களை மேன்மேலும் அநுஸந்திப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து, நமது பந்தங்களான  ஸம்ஸார இதர பந்தங்களை அறுத்து உய்விக்கும் எம்பெருமான் - மிக உகந்த மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற விசாலமான சோலைகளாலே சூழப்பட்டதும், எல்லாவுலகங்களுக்கும், திலகம்போன்று விளங்குவதுமான -  திருவேங்கடம் எனும் திருமலையை மனமே! அடைந்திடு என்று நமக்கு அற்புத வழியை காட்டுகிறார் திருமங்கை மன்னன்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது - கீழ் திருப்பதியில் உள்ள, உயர்ந்த கோபுரத்தை கொண்ட திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில்.




ஆண்டாள் ஸ்ரீமன்நாராயணனின் திவ்ய மஹிஷியான பூதேவி நாச்சியாரின் அவதாரம். பூதேவி நாச்சியார் இந்நிலவுலகில் கோதா தேவி எனப்படும் ஆண்டாளாக அவதரித்து, எம்பெருமானின் பெருமைகளை எளிய தமிழில் விளக்கி, ஜீவாத்மாக்களை இந்த ஸம்ஸாரத்தின் துயரங்களிலிருந்து விடுவித்து எம்பெருமானுக்கு களையில்லாத கைங்கர்யம் செய்வதாகிற ப்ராப்யத்தை அடைய உபகாரம் செய்தாள்.  திருப்பாவை நம்முடைய லக்ஷ்யமான எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்தலுக்குத் தடைகளை விலக்கி அவன் திருவடிகளை அடைவிக்கும். இது ஸகல வேத ஸாரம். திருப்பாவை அறியாதவர் இந்த பூமிக்கு ஒரு சுமையே.

கடந்த வெள்ளியன்று (22.2.2019) கீழ் திருப்பதி கோவிந்தராஜர் சன்னதி தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது.  அன்று ஆண்டாள் புறப்பாடு கண்டருளினார்.  இங்கே சில புகைப்படங்களும் - திருப்பாவை 'குத்து விளக்கெரிய’  பாசுரத்தின் வியாக்கியானமும் - திரு சுஜாதா தேசிகன் எழுதியதை அப்படியே தந்துள்ளேன்.

**  குத்து விளக்கெரிய**  இந்தப் பாசுரத்தில் ”எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்” என்கிறாள் ஆண்டாள். அது என்ன ‘கில்லாயால்’ ? ’கில்’ என்பது இடைச்சொல் தனித்து அது அர்த்தம் கொடுக்காது.  “ஐயோ” என்பது தனித்து பொருள் கொடுக்காது ஆனால் “நீலமேனி, ஐயோ!” என்று ஒரு சொல்லுடன் சேர்ந்து பொருள் கொடுக்கும். அதே போல அறிவாரோ ? என்பதில் கடைசியில் வரும் ‘ஒ’ என்பது ஐயத்தை உணர்த்தும் இடைச்சொல். அதே போல பல சொற்கள் உள்ளது. இந்தப் பாசுரத்தில் 'கில்' என்பது ஆற்றலை உணர்த்தும் இடைச்சொல் !

ஆழ்வார் பாசுரங்களில் இந்த ‘கில்’ பல இடங்களில் வருகிறது. நம் எல்லோருக்கும் தெரிந்த நம்மாழ்வார் பாசுரம் இது:
“அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா”
’அகல கில்லேன்’ என்பதில் ‘கில்’ வருவதைக் கவனிக்கலாம். இந்தப் பாசுரத்துக்கு அர்த்தம் சொல்லும் போது மிக ஜாக்கிரதையாகச் சொல்ல வேண்டும். ”எந்நேரமும் உன் மார்பை விட்டு அகல மாட்டேன்” என்று பொருந்துவது போல வந்தாலும், அது தவறு. அகல மாட்டேன் என்பது வேறு அகல கில்லேன் என்பது வேறு. மாட்டேன் என்பதில் முடியும் ஆனால் மாட்டேன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். அகல கில்லேன் என்றால் நினைத்தாலும் முடியாது என்று அர்த்தம்.
அகலமாட்டேன் என்பது : unwillingness (not willing)
அகலமுடியவில்லை - willing but not able to (inability)
அகலகில்லேன் - it is not a matter of willingness or ability as it is a disability i.e. impossible
திருமங்கை ஆழ்வார் “பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா!*” என்கிறார். பெருமாளின் மார்பு எப்போதும் ’திருமார்பு’ தான். ஒரு கண நேரம் கூட பெருமாளின் திருமார்பை விட்டுப் பிரியமாட்டாள் பிராட்டி. பிரம்மச்சாரியாக ஓங்கி உலகளந்த போது கூட பிராட்டி பெருமாளை விட்டுப் பிரியவில்லை. நாம் கூட கண்ணை விட்டு அகலவில்லை மனதை விட்டு அகலவில்லை என்று கூறுவோம். ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் பற்றி ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.

ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருக்குமாரர். தேவப்பெருமாளிடம் வரம் பெற்று எம்பெருமானாரைத் திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர் இவரே. அவர் அந்திம காலத்தில் ( மரணத்தருவாயில் ) எழுந்தருளியிருந்த போது அவரிடம் உடையவர் சென்று :  “தற்போது தேவரீர் மனதில் ஓடுகின்ற நினைவு எதைப் பற்றியது ?” என்று கேட்க அதற்கு அரையர் “எம்பெருமானுக்கு பற்பல திருநாமங்கள் இருந்தாலும் ‘திரு-வ-ர-ங்-க-ம்’ என்று நாலைந்து எழுத்துக்கள் சேர்ந்திருக்கின்ற அழகு தான் என்னே! என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். இதனால் தான் உடையவர் “பொன்னரங்கம் என்னில் மயலே பெருகுமிராமானுசன்” என்கிறார் அமுதனார். அரையருக்கு மனதில் திருவரங்கம் ‘அகல கில்லேன்’.

ஆளவந்தாரின் இன்னொரு மகனார் சொட்டை நம்பி. ஒருமுறை திருக்கோட்டியூர் நம்பியைக் கடுமையாக பேசிவிட்டார். இதனால் கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி, சொட்டை நம்பியைப் பார்த்து “என் அருகில் இருக்காதே.. தூரப் போ” என்று கூற சொட்டை நம்பியும், கங்கை கொண்ட சோழபுரம் சென்று அரசாங்க வேலை பார்த்து வந்தார். அவருடைய கடைசி காலத்தில் அவர் ஸ்ரீரங்கம் வந்துவிட்டு உடம்பு முடியாமல் படுத்துக்கொண்டு இருக்கிறார். பாதி வாழ்க்கையை அரசாங்க பதவியில் கழித்த இவருக்கு ஸ்ரீவைஷ்ணவம் பற்றி என்ன தெரியும் என்ற நினைப்பில் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் “தேவரீர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர் ?” என்று கேட்க அதற்குச் சொட்டை நம்பி “அடியேனுக்கு ஆளவந்தார் சம்பந்தம் அதனால் பரமபதத்தில் நிச்சயம் இடம் உண்டு ஆனால் அங்கே சென்றவுடன் பரமபதநாதனை வணங்குவேன், அவர் திருமுகம் நம்பெருமாளின் திருமுகம் மாதிரி குளிந்து இல்லை என்றால், ‘தொப்பென்று கீழே குதித்துவிடுவேன்’ ஆனால் பரமபதம் சென்றால் மீண்டும் இங்கே வர முடியாது என்று வேதம் சொல்லுகிறது. அதை மீற வேண்டியிருக்கிறதே “ என்றாராம். இவருக்கு நம்பெருமாள் திருமுகம் ‘அகல கில்லேன்’




நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
பாசுர அர்த்தம் - என் உடல் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்பட்டது. மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது என்கிறாள். வைகுண்டத்தில் நம்பெருமாள் இல்லை என்றால் குத்திவிடுவேன் என்று சொட்டை நம்பி சொன்னது போல !

கண்ணகி சிலம்பை உடைத்த போது பாண்டிய மன்னன் தன் தவற்றை உணர்ந்து உடனே மாண்டான். தன் கணவனை இழந்த கோப்பெருந்தேவி கற்புடைய மகளிர்க்கு இது அழகில்லை என்று தன் கணவனின் காலடியில் அவளும் வீழ்ந்து, உயிர் துறந்தனள். ஆனால் ஸ்ரீராமாயணத்தில் அசோகவனத்தில் ராவணன் ஸ்ரீராமருடைய தலையை வெட்டி அதைச் சீதையிடம் காண்பிக்கச் சீதா பிராட்டிக்கு உயிர் போகவில்லை. ஏன் என்றால் நான் இருக்கிறேன் என்றால் ஸ்ரீராமர் இருக்கிறார் என்று பொருள், ஸ்ரீராமர் இருப்பதால் தான் தான் இருக்கிறேன் - ‘அகல கில்லேன்’. இது தான் ஸ்ரீவைஷ்ணவத்தின் தத்துவம்.

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மார்பில் பிராட்டியின் பதக்கமும், தாயார் மார்பில் பெருமாளின் பதக்கமும் என்றும் இருக்கும். இது தான் ஆண்டாள் சொல்லும் ‘தத்துவம் அன்று’ என்ற தத்துவம். தத்துவம் என்ற சொல்லுக்கு ‘அழியாத விஷயம்’ என்று பொருள். அதுவே உண்மை. நப்பின்னையைப் பார்த்து ஆண்டாள் “எம்பெருமானைப் பிரியாமல் எப்போதும் அவனுக்கு ஜீவர்களுக்காகப் பரிந்து பேசும் உன்நக்குள்ள நீர்மையை விடலாமோ ? இது தத்துவம் அன்று என்கிறாள். யுத்த காண்டத்தில் “வானரே! பாவம் செய்தவர்களாக இருந்தாலும், புண்யம் செய்தவர்களாக இருந்தாலும், கொல்லத் தகுந்தவராக இருந்தாலும், குணவானாய் இருந்தாலும் அவன் விஷயத்தில் கருணை காட்ட வேண்டும் .தப்பு செய்யாதவன் ஒருவனுமில்லையே!” என்பது சீதா பிராட்டியின் வாக்கு. இதுவே பிராட்டியின் தத்துவம்.

திருப்பாவையில் ஆண்டாள் பெருமாளை “புண்ணியன்” என்று கொண்டாடுகிறாள், நாச்சியார் திருமொழியில் பெருமாளே ”தத்துவன்” என்கிறாள்.
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில்; தலை அல்லால் கைம்மாறு இலேனே.
குயிலே என் தத்துவன் வருகிறான் என்று கூவு, உன்னைத் தலையில் வைத்துக் கொண்டாடுகிறேன் என்கிறாள்.
விசிஷ்டம் என்றால் சேர்ந்து இருப்பது/பிரியாமல் இருப்பது என்று பொருள். நம் சரீரத்தில் ( உடலில் ) பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சேர்ந்தே ”உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்” என்று ஆழ்வார் சொல்லுவது போலச் சேர்ந்தே இருக்கிறார்கள். ஜீவாத்மா இந்த உடலிலிருந்து கிளம்பும் போது பரமாத்மாவும் கூடவே கிளம்புகிறான் - ஆண்டாள் “உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்பது  ‘அகல கில்லேன்’ தத்துவம் !

Exceptional ! ~ the part in this colour entirely reproduced from the FB post of Mr Desikan Narayanan (Sujatha Desikan) ~ happy in reading it again and again and posting here with his kind permission.


~ adiyen Srinivasadhasan (S. Sampathkumar)





Friday, February 22, 2019

Masi magam @ Vanga Kadal - Sri Parthasarathi 2019


Life in a divyadesam is always exciting ! ~ one easily has darshan of Emperuman as He comes out to bless his devotees.  Thiruvallikkeni has more .. .. history, education, shopping and .. .. the shores of Marina.  In our childhood, we played in the hot Sun – in our adulthood, have enjoyed sitting near the Ocean, enjoying the hissing sound and the waves trying to touch the sand and getting back – the boats and ships sailing would make a great sight



19.2.2019  was  a great day ~ MasiMagam – a day on which the Ocean (Bay of Bengal) becomes much happier – for Sri Parthasarathi Perumal visits bay of Bengal at Marina beach.  The vast expanse of Bay of Bengal  is the northeastern part of the Indian Ocean. Bay of Bengal, the largest bay in the world, forms the northeastern part of the Indian Ocean. Roughly triangular, it is bordered mostly by India and Sri Lanka, Bangladesh, Myanmar (Burma) and the Andaman and Nicobar Islands to the east.  Number of rivers flow into it and that includes the holy Ganges, the Brahmaputra, Godavari, Mahanadi, Krishna and Cauvery. 

 At 0530 in the morning  Sri Parthasarathi  adorning beautiful  ornaments had purappadu atop Garuda Vahanam and reached Bay of Bengal for theerthavari. This is an annual Uthsavam,  thousands accompany Him, have purificatory bath after Chakrathazhwar theerthavari. Sri Peyawlar has sung about Thiruvallikkeni temple in his ‘Moondram Thiruvanthati’ – describing  Thiruvallikkeni waves as being  white as milk and there are red pavazham and white pearls at the time of twilight and at that sandhya time he has the darshan of the Lord at Thiruvalllikeni

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்*
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை*
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,*
திருவல்லிக்கேணி  யான் சென்று.

கடற்கரையில் வெள்ளை அலைகள்வந்து உதைக்க சிவப்பான பவளம்வெண்மையான முத்துக்கள்அந்தி நேரத்தில் அழகான மங்கள விளக்குகள்  என விளங்கும்  திருவல்லிக்கேணி!   Bay of Bengal on Pournami day would have high ebbs and it would be jumping with joy celebrating the arrival of Sri Krishna, the charioteer to Arjuna atop Garuda vahana.





                           By chance occasioned to read a book titled ‘Cyclonic storms in the Bay of Bengal’ – for the use of Sailors by John Eliot. .. ..   

The object of the little volume according to the author is to give the mariner who navigates in Bay of Bengal, an account of the dangerous storms that occur in it and explain the signs and indications by which he may recognize when he is approaching a cyclone !   it is hardly necessary to remind sailors that storms which are met with in Bay of Bengal are occasionally of excessive violence.  Formerly when little or nothing was known of the laws of storms, they caused frequent grave destruction to shipping.  Brief accounts of atleast two storms that occurred in Bay of Bengal in 1700s are described in detail in  Orme’s History of India.  On 2nd Oct 1746 [that was no Gandhi Jayanthi for obvious reasons !!]the weather at Madras was remarkably fine and moderate all day.  About midnight a furious storm arose and continued with great violence until the noon of next day causing havoc and killing people.   
It is hardly too much to say that the knowledge of laws of storms which is due to the labours of meteorologists utilising the observations furnished by thousands if seamen, is now sufficient, if properly employed to enable sailors avoid the full strength of cyclonic storms in the open sea of the Bay of Bengal. Disasters still occasionally do happen, may be traced to neglect of the most ordinary precautions or to disregard of the accumulated experiences of the past.  During a cyclonic storm in Arabian sea and Gulf of Aden in May 1885, the Augusta German man-of- war, the Renard French man-of-war, and the SS Speke Hall foundered at sea within a few hours of each other.  If such disasters are not enough, there are strong currents too.  The cyclonic winds by friction with surface water may give rise to strong currents in the Bay of Bengal.  In the open sea, the currents over the whole storm area of fierce and hurricane winds approximately agree in direction with the winds, and are probably stronger than are generally imagined.

Though boats appear poetry in motion in high seas, it is often difficult and could have : Heaves, the linear vertical motion excess of which can swamp a boat;  Sway; Surge; Pitch; Roll and Yaw – all causing discomfort.  The book printed in 1890 however adds that – cyclonic storms very rarely occur in Bay of Bengal during the months of Jan, Feb & March.  During 15th June to 15th Sept, cyclonic storms are of frequent occurrence, but are not very extensive or violent. 

Triplicanites and other devotees who thronged Marina had great darshan of Sri Parthasarathi as also many other deities – it was a great day to be bathing in Sea – while having darshan of Sri Parthasarathi on Garuda vahanam.  Here are some photos taken at Vanga Kadal .. ..

adiyen Srinivasadhasan.













Wednesday, February 20, 2019

'மருவும் நின் திருநெற்றியில் சுட்டி* அசைதர' ~ Yashodha's thoughts on Sri Krishna


17th Feb 2019   - was  ‘Punarvasu (punarpoosam) nakshathiram’ in the month of ‘Maasi’ – the Thiruavathara thirunaal of Sri Kulasekhara Azhwaar.   Kulasekarar was the amsam of ‘kausthubam’ – the jewel adorning Sriman Narayana.  He was born at Thiruvanjikulam as son of King Thiruviradhan and ruled the Chera Empire.  I had posted on Sri Kulasekarar Sarrumurai at Thiruvallikkeni and on alwar’s avatharasthalam at Thiruvanjikalam [Sri Kula sekara pattinam]

sri Kulasekara azhwar at Thiruvallikkeni
This Azhwar’s unique contribution is ‘Perumal Thirumozhi’  ~ that describes his bakthi to Thiruvarangan, his attachment to Arangan, the holy Thirumala and what Azhwar aspires to be there, Thiruvithuvacode, .. .. and canto 7 [ezham thirumozhi] is on lamentation of Devaki who could not enjoy the deeds of Krishna as he grew up.    We have been brought up hearing the beautiful life history of Bhagwan SriKrishna who was born at Mathura to Devaki and Vasudevar inside the prison of Kamsa, and on the same night on that rainy day, was taken across river Yamuna to Gokul where he grew with Yasodha and Nandagopar. 
பூர்ணாவதாரம் என்று புகழப்படுகின்ற  ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளில் மயங்காதவர்கள் யார்? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே மண்ணுலகோர் உய்வுறும் வண்ணம் தன் தனிப்பெருங்கருணையால் ஒரு மானிடக் குழந்தையாக தேவகிக்கும் வாசுதேவருக்கும் - கம்சன் சிறைதனிலே  அவதரித்தது  ஒரு அற்புதம் எனின், அன்று கொட்டும் மழையிலே, யமுனை ஆறு வழி விட, ஆதிசேஷன் குடை பிடிக்க, கோகுலம் சென்று  யசோதா நந்தகோபரிடம் வளர்ந்தது ஒரு அத்புதம்.

கோதை பிரட்டி தனது திருப்பாவையிலே செப்பியது :  ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர் இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற ஒரே யாதவ ரத்னமாக கண்ணன் பிறந்தான்.  பாலகிருஷ்ணன்  பிறந்த சில மணிக்குள்ளே, தன் சங்க சக்ராதி அம்ஸங்களை மறைத்துக்கொள்ள தேவகி ப்ரார்த்திக்க உடனே அப்படி தன் அம்சங்களை மறைத்துக்கொண்டு அவள் இட்ட வழக்கை செய்து காட்டினான்.  சிறைச்சாலையில் பிறந்து, பிறந்த சில மணித்துளிக்குள்ளாகவே, கொடும் இரவில், கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வேறொருத்திக்கு மகனாய் போய் சேர்ந்தானே! என்ன ஆச்சர்யமான சம்பவங்கள்!   பிறந்த குழந்தைக்குத் தான் எத்தனை எதிரிகள்?. பூதனை, சகடாசுரன், கேசி, காளிங்கன் என எவ்வளவு அசுரர்கள் - ஒரு பக்கம்   யசோதை 'என் குழந்தைக்கு மட்டும்  ஏன் இப்படி?' என்று தினம் வருந்த - தேவகி எப்படி வருந்தினாள். 

குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் கண்ணனது பால லீலைகளைக் காணப் பெறாத உண்மைத் தாயான தேவகியின் புலம்பலை மிக அழகாக விவரித்துள்ளார்.  இந்த பாசுரம் அறிந்ததே ! - ஆயின், நம் ஸ்ரீநிதி அக்காரக்கனி ஸ்வாமியின் எளிய நடை விவரணம் கட்டி இழுத்து.  இதோ இங்கே பாசுரமும், அவரது எழுத்தும் !
Sri Mannathar at Thiruvallikkeni.

'மருவும் நின் திருநெற்றியில் சுட்டி* அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும்*  உன்தன் தாதையைப் போலும்; வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர*
விரலை செஞ்சிறுவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ்வுரையும்*
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை  பெற்றாளே !

பாலகிருட்டிணன் ஆய்ப்பாடியில்  வளர்ந்த பொழுது, அவர் அணிந்த  அழகான  நெற்றிச்சுட்டி அசைய, ‘உன் வாயில் முத்தம் தரவும் உன் அப்பா சாயலில் இருக்கிறாய்’ என்று உள்ளம் குளிரவும்’  விரலை வாயில் வைத்து வெகுளியாய்ப் பேசும் மழலைப்பேச்சை ரசிக்கவும் பாக்கியமில்லாத நான் பெறவில்லை. யசோதைக்குக் கிடைத்ததே என தேவகி புலம்புவதாக !  ~ இதோ இங்கே ஸ்ரீநிதி ஸ்வாமியின் எழுத்துக்கள்.

பரம்பொருளையே பிள்ளையாகப் பெற்ற யசோதை ; ஒப்பற்றவள் ! ஈடு இணையற்றவள் என்று கொண்டாடப்படுகின்றாள் ! தேவகிப் பிராட்டி , கண்ணனைக் கருவிலே சுமந்திருந்தாலும் , அவளும் யசோதைக்கு ஈடாகாள் ! ஏனெனில் ,கண்ணனுடைய கோலச் செயல்களை, சேஷ்டிதங்களை அவளைப் போல் அனுபவித்தாளல்லளே இவள்..

குலசேகரப் பெருமாள் நெடுங்காலமாக , ஜந்ம ஜந்மாந்தரங்களாகத் தாம் இறைவனைப் பெறாதொழிந்ததையெண்ணி , வருத்தமுற்றுக் கிடந்தார் ! அவனோடே (இறைவனோடே ) ஊடுவதற்கும் ( சண்டை போடவும் ) கூடுவதற்கும் உரிமையுள்ள நாம் , இப்படி அவனை இழந்தோமே என்று வேதனைப்பட்டார்.. அப்பொழுது அவருக்கு தேவகிப்பிராட்டியின் நினைவு வந்ததாம்.

ஐயோ பாவம் அவள்.. கண்ணனைப் பிள்ளையாகப் பெற்று வைத்தும் , அவனைப் பெற்ற அன்றே இழந்தவளன்றோ அவள். பிறந்த உடனே அவனைத் திருவாய்ப்பாடிக்கு அனுப்பி விட்டாளே ! குழந்தையாயிருந்த போது , அவன் விளையாடின விளையாட்டுகள், அவன் செய்த லீலைகள் என்று எதனையும் அனுபவியாது போனாளே .. கண்ணன் கம்ஸனைக் கொன்றொழித்து, தாய் தந்தையரை ( தேவகி - வஸுதேவர் ) வணங்கினபோது, தேவகி தன் குறைகளையெல்லாம் சொல்லிப் புலம்பினாளாம்.

இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த குலசேகராழ்வார், தம்மை தேவகியாகவே எண்ணிக் கொண்டு பாடத் தொடங்குகிறார் பெருமாள் திருமொழி - ஆலைநீள் கரும்பு பதிகத்தில். அதில் 'மருவும் நின் திருநெற்றியில் ' என்கிற பாசுரத்தில் தேவகி , அசோதையை தெய்வ நங்கை என்று கொண்டாடுவதாகப் பாசுரமமைத்துள்ளார். தன்னைத் திருவிலாதவள் ( பாக்கியமற்றவள் ) என்றும் தேவகிப்பிராட்டி நொந்து கொள்கிறாளாம்.

கண்ணனுடைய திருநெற்றியில் திருச்சுட்டி ரொம்ப அழகாக இருக்கிறதாம். அவன் நடந்தால், அதுவும் அசைகின்றதாம். ஊரில் பலபேர் தங்கள் குழந்தைகளுக்கு நெற்றிச் சுட்டி அணிவித்தாலும் , கண்ணனுக்குப் போலே அத்தனை பொருத்தமாக யாருக்கும் அது அமையவில்லையாம். பெரியவாச்சான் பிள்ளை அவ்விடத்தில் அருமையானதொரு விளக்கம் தருகிறார்.

கண்ணனுடைய திருநெற்றிச்சுட்டி , அவன் கூடவே பிறந்தது போல அவனுக்குப் பொருந்தியிருக்கிறதாம். தேவகி சிந்தித்துப் பார்க்கிறாள் ! இப்பொழுது கம்ஸனை முடித்த கண்ணன் என் முன்னே நிற்கிறான். அவன் நெற்றியில் சுட்டி இப்பொழுதும் அழகாகத் தான் இருக்கிறது. ஆனாலும்.. குழந்தையில் இன்னமும் அழகாகவன்றோ அது காட்சி தந்திருக்கும். இப்படியிருக்குமோ..

பார்ப்பவர்கள் எல்லாம்,  அசோதையினிடத்திலே ஒரு கேள்வியைத் தவறாது கேட்பார்களாம். அது எப்படி உங்கள் பிள்ளை மட்டும் , பிறக்கும் போதே நெற்றிச்சுட்டியுடன் பிறந்தான் ?! இதற்கென்றும் ஏதேனும் நோன்புளதோ ? என்று வினவுவர்களாம். யசோதை அவர்களிடம் , அப்படியெல்லாமில்லை அம்மா ! அது சாதாரண நெற்றிச் சுட்டி தான் என்றாலும் யாரும் நம்புவதில்லையாம் ! பதில் சொல்லிச் சொல்லியே களைத்தும் , தளர்ந்தும் போயிருந்தாளாம் யசோதை ! உடனே அவள் , கேள்வி கேட்போரைப் பக்கத்திலே நிற்க வைத்துக்கொண்டு, கண்ணனை அணைத்தபடி, அவர்கள் பார்க்க அவன் நெற்றிச் சுட்டியை சற்றே நெற்றியில் இருந்து (கழற்றாமல் ) அசைத்துக் காண்பித்து , அவர்கள் ஐயம் தீர்த்திடுவளாம்.

இந்த பாக்கியம் நான் பெறாதொழிந்தேனே என்று கதறுகின்றாள் தேவகி. யசோதை நிச்சயமாக தேவமாது ( தெய்வநங்கை ) தான் ! தைவம் திஷ்டம் பாகதேயம் என்கிறபடி அவள் பாக்கியத்தையே இங்கு தெய்வம் என்றாளோ !! யசோதையைப் போலே நாமும் திருவுடையவர்களே ! அர்ச்சையில் அநவரதமும் நமக்கு அவன் வடிவழகு சேவையாகின்றதே ! நீங்களும் ( அவன் ) ' மருவும் திருநெற்றியில் சுட்டி ' காணுந்தோறும் இப்பாசுரத்தையும் இவ்விளக்கத்தையும் நினைவில் கொள்ளுங்கள் ! அவன் உங்கள் மடிகளில் தவழ்வதை உணர்வீர்கள் !!

குலசேகரப் பெருமாள் திருவடி போற்றி !

with pranams and thankful gratitude to Sri Srinidhi Akkarakkani Swami..

adiyen Srinivasadhasan
20th Feb 2019.


Tuesday, February 19, 2019

Masi Magam 2019 ~ Sri Parthasarathi Perumal Garuda Sevai


Today (19.2.2019) is a great day ~ MasiMagam – a day on which the Ocean (Bay of Bengal) becomes much happier – for Sri ParthasarathiPerumal visits bay of Bengal at Marina beach.


The vast expanse of Bay of Bengal  is the northeastern part of the Indian Ocean, bounded on the west and northwest by India on the north by Bangladesh, and on the east by Myanmar and the Andaman Islands of India and Myanmar and the Nicobar Islands of India. The Bay of Bengal occupies an area of 2,172,000 square kilometres (839,000 sq mi). A number of large rivers flow into the Bay of Bengal: the Ganges-Hooghly, the Padma, the Brahmaputra-Jamuna, the Barak-Surma-Meghna, the Irrawaddy, the Godavari, the Mahanadi, the Brahmani, the Baitarani, the Krishna and the Kaveri.  There are so many seaports - Chennai-Ennore, Chittagong, Colombo, Kolkata-Haldia, Mongla, Paradip, Port Blair, Tuticorin, Visakhapatnam and Yangon,Dhamraand a host of smaller ports including Kakinada.

இன்று 19.2.2019 ஒருசீரியநாள் ~  'மாசிமகம்' .. .. இன்று காலை ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கருடவாகனத்தில் வங்கக்கடலுக்கு புறப்பாடு கண்டருளினார். மாலை அம்ச வாகனத்தில் பெரிய மாடவீதி புறப்பாடு உண்டு.


மாசிமகம் என்பது மாசிமாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகநட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும்விழா என்று கொண்டாடப்படுகிறது.  சில இடங்களில் பெருமாள் திருக்குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு எழுந்து அருள்வதும் உண்டு.  இந்நன்னாளில் எம்பெருமான் கூடச்சென்று தீர்த்தவாரி முடிந்தவுடன் - கடல், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தீர்த்தமாடுவது சிறந்தது.



ஆழ்வார்கள் பக்தியிலே திளைத்தவர்கள்; மயர்வறமதிநலம் அருளப் பெற்றவர்கள்.  இங்கே பொய்கையாழ்வாரின் அற்புத நல்லுரை – என்னே ஒரு எளிய நடை – எவ்வளவு சீரியகருத்து.

நாவாயில் உண்டே*  'நமோநாரணா' என்று,*
ஓவாது உரைக்கும் உரை உண்டே,* - மூவாத-
மாக்கதிக்கண் செல்லும்*  வகை உண்டே,*  என் ஒருவர்-
தீக்கதிக்கண் செல்லும் திறம்?

பக்தியோகம் ஒரு எளிய மார்க்கம்.  எம்பெருமானின் தாள் பணிந்து அவனை அடைவதே நம் லட்சியம்.  நற்கதி பெற என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறதா ? 

மிக எளிய உபாயம். மிக எளிமையாக  செய்யக்கூடியது. நம்மிடமே இருக்கும் அவயங்களை உபயோகிப்பது!  நாம் உண்பதற்கும், உணர்வதற்கும், உரைப்பதற்கும் உள்ளது நாக்கு.  நாம் சொல்லும் நாமம் – ஓம் நமோ நாராயணா எனும் திருவஷ்டாக்ஷரம்.  நாம் அறிந்த எளியவன் நாராயணனாகிய எம்பெருமான். இப்படி உயர்வான எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக் கொண்டு  -அவனை மட்டுமே உயர்வாக உரைப்போம்.  மந்தமதிப்புவி மானிடர்கள்,  உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு தங்கள் நாவை உபயோகித்து அநர்த்தப்படுகின்றார்களே! இஃது என்ன ஆச்சரியம்! என்று ஆழ்வார் வியக்கின்றார். உண்ணும்சோறு, பருகும்நீர், சொல்லும்சொல்,   எண்ணும்எண்ணம். எல்லாம் நாராயணனே என்று ஓயாமல் துதிப்போம்.  களைப்பில்லாமல், வேறுஸ்மரணை இல்லாமல் திரும்பதிரும்ப சொல்வோம்  'நமோநாராயணா ' என்ற நாமம்.  அந்த திருமந்திரம் நம்மை திரும்பப் பிறவாமல்  வைகுண்டத்திற்கு இட்டுச் செல்லும். ~ பொய்கைப்பிரான், முதல்திருவந்தாதி.




                         Poigai Azhwar is unable to comprehend the attitude of earth residents.  All have a tongue and know the mantra ‘Om Namo Narayana’ – the purpose of living and simple way of doing yoga is chanting the name of Sriman Narayana with the blessed tongue / mouth – when recitation is the easiest path, some indulge in unnecessary prattle on useless things using one’s own mouth falling into the abyss of evil – why not they too realise and understand the easy path of attaining the heavenly Lord Maha Vishnu.

Being MasiMagam – Sri Parthasarathi on Garuda Sevai had purappadu – in the morning started around 05.45 am from Sri Nammalwarsannathi, brief halt at gangaikondan, via Nallathambi street, Barathisalai, kamarajarsalai – visited marina beach.  There was Chakrathazhvaartheerthavari.  Thousands of people rejoiced the occasion and had holy bath in the ocean.

Here are some photos of the purappadu.  Photos of Sri Parthasarathi  at  Bay of Bengal would follow in a later post.. .........

~adiyen Srinivasa dhasan.