To search this blog

Friday, June 11, 2021

Getting rid of birth and karma .. .. கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்

அரியது கேட்கின் வரிவடி வேலோய் ! - அரிதரிது மானிடர் ஆதல் அரிது - என்பது அவ்வையாரின் உரை.  உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும்   குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும் என்று ஒளவையார் பாடியுள்ளார்.  ..  In every family, in every culture, birth of a new-born is a joyous occasion, celebrated in many ways.  The  old riddle, “Which came first, the chicken or the egg?” is relatively easy to answer as a question about the evolution of birth in animals, according to a Science magazine. Egg laying almost certainly came before live birth; the armoured fish that inhabited the oceans half a billion years ago and were ancestral to all land vertebrates seem to have laid eggs. But the rest of the story is far from straightforward. Over millennia of evolution, nature has come up with only two ways for a newborn animal to come into the world. Either its mother lays it in an egg, where it can continue to grow before hatching, or it stays inside its mother until emerging as a more fully formed squirming newborn.

Birth is the act or process of bearing or bringing forth offspring,also referred to in technical contexts as parturition. Multiple births in one pregnancy happen either when a single fertilised egg splits to create identical fetuses or because of the fertilisation of multiple eggs creating fraternal fetuses or a combination of these factors.  

While twins are the most common form of multiple births, there have been other cases in the past where mothers have given birth to seven to eight babies in one pregnancy, known as very high-order multiple birth. The story of a 37-year-old woman who reportedly gave birth to 10 babies, seven boys and three girls, has led to public appeals from the South African government for information about the mother and her children after it failed to find medical records at hospitals, both public and private.  News of Gosiame Sithole delivering the 10 babies at a Pretoria hospital may have grabbed headlines all over the world, but also sparked questions over its authenticity.

Moving away, life after birth is strewn with difficulties .. .. people suffer pain and suffering in multiple ways, do mistakes, sins, reap for such wrongful acts – suffer, are born again and again undergoing untold miseries !! – how to get rid of such suffering !!

பிறவியில் மனிதர்கள் பல கெடுதல்கள் செய்து அவற்றின் வினைப்பலனாக இன்னல்களை அனுபவிக்கின்றனர். மென்மேலும் தவறுகள் செய்து கஷ்டத்தில் உழல்கின்றனர். மறுபடி மறுபடி பிறக்கின்றனர்.   முன் இருந்த துன்பங்களையும், இனிச் சாரவேண்டிய துன்பங்களையும் அறுத்தவர்க்கு, நடுவிலே, பிராரப்த்த வினை காரணமாக நின்ற உடம்பும், அதற்கு ஏற்ற வினைப்பயன்களும் உள்ளன. மேலே கூறியபடி, நிலையாமையை உணர்ந்து துறவு நெறியில் நின்று இருந்தாலும், பழைய வாசனை காரணமாக புலன்களின் மீது ஆசை செல்லும். அதுவும் பிறவிக்குக் காரணமாக அமைவதால், அந்த நினைவையும் இடைவிடாத கடவுள் உணர்வால் அறுக்கல் வேண்டும் என்றது. 
பிறவிப்பற்றறுத்தலும் - மறுபிறவியே இல்லாத முக்தி நிலையும் உயர்ந்தவை - கிடைத்தற்கரியவை. மயர்வற மதிர்நலம் அருள்பெற்ற ஆழ்வார்கள் அன்றோர் மழை நாளிலே திருக்கோவலூர் இடைகழையிலே எம்பெருமானை விசேஷணங்களுடனே சேவிக்கப்பெற்றனர்.  எம்பெருமானிடத்தில் தம் மனம் உவந்து விட்டபடியால், அவனது பொன்னடிகளையே சரணாக பெற்றதனால், இதுவரையில் பாழே கழிந்த பல பிறவிகளுக்குள்ளே இருந்த  ஐந்ம பரம்பரைகளையும் இன்றோடு அறுத்துவிட்டேன்;  எனவே தமக்கு இனிமேல் மேல் பிறவியில்லையென்று அறுதியிட்டு உரைக்கின்றார் நம் தமிழ்த்தலைவன் பேயாழ்வார்.  இதோ இங்கே அவரது மூன்றாம் திருவந்தாதியின் இரண்டாவது பாசுரம்: 

இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,

பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே, உன்னை

மருக்கண்டு கொண்டேன் மனம். 

In the words of Sri Peyalwar  - his hearts brims with love for the lotus feet of the Lord whose Chest resembles mountain and is glittering with gold ornaments – the very thoughts of adorable Lord would destroy our sins and destroy our seven births too.  

பொன்மயமான சிறப்பு   அணிகலன்கள் சேரப்பெற்றதும், மலை போன்றதுமான திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த) திருத்துழாயை  கடல்கடைந்த அக்காலத்தில் பெரியபிராட்டியார் கண்டு கொண்டு  அநுபவிக்கும்படியாக பெற்ற  திருமாலே !  ஸ்ரீலக்ஷ்மீநாதனே! -  அடியேனுடைய மனமானது,  உன்னிடத்தே மையல் கொண்டு பொருந்தப்பெற்றதனால், அடியேன் இன்றே உனது திருவடிகளை கண்டு அநுபவிக்கப் பெற்றேன்,  ஏழ்பிறப்பாகிய  ஜென்ம பரம்பரைகளையெல்லாம், என்னை தொடர்ந்து வாராதபடி   ஒழித்திட்டேன் என்கிறார் திரு பேயாழ்வார்.

Reminiscing the past and thinking of those happier days – here are some photos of Sri Parthasarathi perumal purappadu a decade ago on 16.1.2011.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11th June 2021. 
No comments:

Post a Comment