To search this blog

Wednesday, May 19, 2010

Sree Parthar Vasantha Uthsavam [ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் வசந்த உத்சவம்]

ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் வசந்த உத்சவம் ஆரம்பித்தது. வசந்தம் என்பது பருவம். வசந்த ருது எனவும் இளவேனில் எனவும் பெயர் பெற்றது இது. சித்திரை. வைகாசி இரண்டையும் இளவேனில் என்பார்கள். எனவும் வசந்தகாலம் பொதுவாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம். தளிர்க்கும்,பூக்கும் தாவரங்கள்,பாடித் திரியும் பறவைகள் என கூர்ந்து நோக்கினால் மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும் காலம் இது. வேங்கடரங்கம் பிள்ளை தெருவில் ஒரு அழகான பெரிய பங்களா இருந்தது. எனது சிறு வயதில் காலை வேளையில் பெருமாள் இங்கே எழுந்து அருளி திருமஞ்சனம் கண்டு அருளி, மாலை உலா வந்து, திரும்பி கோவிலுக்கு புறப்பாடு கண்டு அருள்வதை சேவித்துஉள்ளேன். பங்களா கதவை பெருமாள் ஏளும்போதுதான் திறப்பார்கள். உள்ளே ஏராளமான பூச்செடிகளும் மரங்களுமாக பசுமையும் மணமும் குலுங்கும். நடுவில் உள்ள மண்டபத்தை சுற்றி இரண்டு சிறிய தடாகைகள். அவற்றில் நீரூற்று கூட இருந்ததாக ஞாபகம். நடை பாவி என்னும் படிக்கட்டு இறங்கி குளிக்க கூடிய கிணறு ஒன்றும் உண்டு.


ப்ரம்மோத்சவத்தில் ஐந்தாம் நாள் நாச்சியார் திருகோல புறப்பாடு அன்றும் திருத்தேர் முடிந்து சாயங்காலம் திருமஞ்சனம் கண்டு அருளவும், வசந்தோத்சவம் ஏழு நாட்களும், கோடை உத்சவம் ஏழு நாட்களும், விஜயதசமி பார் வேட்டை அன்று வன்னி மர அம்பு எய்துவதற்கும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளி வந்தார். அழகிய சிங்கரும் ஐந்தாம் நாளும் திருத்தேர் அன்றும் இங்கு எழுந்து அருளி வந்தார்.


ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு பல விதமான புது அணிகலன்கள் பெருகி வரும் நாட்களில், இது போன்ற ஒரு மண்டபம் இல்லாதது ஒரு குறையாகவே படுகிறது. பெருமாள் காலை வேளையில் இங்கு எழுந்து அருளி சாயங்காலம் திரும்புகால் செய்வது சில நடைமுறை காரணங்களால் தடை பட்டு போனது. பின்னர் 2004 மே 24 அன்று சம்ப்ரோக்ஷணம் முடிந்து அன்று வசந்த உத்சவம் நான்காம் நாள் புறப்பாடு கண்டருளின சமயம் மேடை இடிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு இருந்தது. உத்சவ சாற்றுமுறை (27-05- 2004) குதிரை வாகனத்தில் பங்களா எழுந்து அருளி பின்னர் வாசுதேவபுரம் புறப்பாடு கண்டு அருளும் உத்சவத்தில் இது தடை பட்டு போனது. அதன் பிறகு பெருமாள் இன்னமும் வசந்த உத்சவ பங்களா ஏளவில்லை.


இந்த வருடம் வசந்த உத்சவத்தில் முதல் புறப்பாடு மிக சிறப்பாக விருச்சி மாலை அணிந்து பொலிந்து  நின்ற பெருமானின் திருக்கோல வைபவம் இங்கே காண்பீர். எங்கள் பெருமாள் பேரழகு ; மாலை சிறப்பழகு ; சாற்றுப்படி அற்புதம்.


அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்

Sunday, May 16, 2010

Thiruvallikkeni Flower Planquin [திருவல்லிக்கேணி புஷ்ப பல்லக்கு]

ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானின் சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்தேறியது. மே 6 (சித்திரை23) அன்று தீர்த்தவாரியும், மறு நாள் சப்தாவரணமமும், திருவாய்மொழி சாற்றுமுறை முடிந்து சிறிய தேர் புறப்படும் நடை பெற்றன.  பத்து நாட்கள்  விடையாற்றி  உத்சவம் என எம்பெருமானுக்கு உத்சவ களைப்பு தீர மண்டபத்தில் எழுந்தருள பண்ணி இசை கச்சேரிகள் நடந்தன.
மே 15(வைகாசி முதல் நாள்) இரவு சிறப்பாக அமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பெருமாள் உபய நாச்சிமர்களுடன் புறப்பாடு கண்டு அருளினார்.  பூ பல்லக்கு புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

Wednesday, May 12, 2010

THIRUVARANGAM CHITHIRAI THIRUTHER THIRUVIZHA


Most of us do visit temples regularly. 

For Sri Vaishnavaites (followers of Lord Vishnu) – “Kovil” refers to Thiruvarangam (Srirangam). Located near Trichy, this sacred place is a small island formed by river Kaveri and its tributary Kollidam (Coleroon). The Sri Ranganathaswaky temple is a temple dedicated to Lord Ranganatha in a reclining form.

The temple occupies an area of 156 acres (6,31,000 m²) with a perimeter of 1,116m (10,710 feet) making it the largest temple in India. It actually a very small city with inner columns surrounded by compound walls and outer columns known as Madaveethi.

As most of you would know, in temples, the Moolavar idol is inside Sanctum sanctorum to whom all rites are performed. There would be a Uthsavar vigraham (idol which is taken out on procession). On important days, this Uthsava vigraham is taken out on the streets surrounding the temple, enabling the devotees to have darshan of the Lord. In vaishanavaism, this form is called ‘archai or idol worship’.

In traditional temples, once a year a grand Brahmotsavam is performed. Brahma is believed to have originated this festival which is celebrated for 10 days during which period, the beautifully decorated Lord embellishes various vahanas. At Srirangam, there are three important brahmotsavams, one of which falls in the month of Chithirai. Generally, on the 7th day the Lord is taken out on magnificent wooden chariot, pulled by hundreds of devotees. The Chithirai ther thiruvizha is a famous function at Srirangam as devotees, primarily peasants offer the new grains and other agricultural produce, herds of cattle to the Lord.


Here is a write up (in tamil) about this Srirangam, Chithirai Car Festival and some photos (taken during my visit to the temple during 2008)

With regards
S Sampathkumar.

********************************************************************************


திருவரங்கம் சித்திரை திருத்தேர் சமீபத்தில் நடை பெற்றது. இரண்டு வருடங்கள் முன்னால் திருவரங்கனின் சித்திரை திருத்தேரை தரிசிக்கும் பேறு கிடைத்தது. அப்போது எடுத்த சில படங்களுடன் ஸ்ரீரங்கத்தை பற்றி சில வார்த்தைகளும்  -  (பல வலைகளிலிருந்து தொகுத்தது)வைணவத் தலங்களில் முதன்மையானதும்,​​ பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் பல நூறு ஆண்டுகள் முந்தியது. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம். சங்க நூல்களிலும் அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்)  திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.

ஸ்ரீரங்கம் முதலாவது திவ்ய க்ஷேத்திரம் . அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

க்ஷீராப்தியில் ப்ரணவ வடிவான விமானத்துடன் தோன்றிய அரங்கனை ப்ரம்ம தேவர் ஆராதித்தார்; பின்னர் மாமன்னர் இக்ஷ்வாகுவுக்கு அளித்தார்; சூரிய குலத்தோன்றல்கள் வழிவழியாக ப்ரணவாக்ருதி விமானத்தை ஆராதித்து வந்தனர்.இரகுவீரன் மைதிலியுடன் வழிபட்டார்; அவரிடமிருந்து விபீஷணாழ்வான் அதைப் பரிசாகப் பெற்றார்; இலங்கை செல்லும் வழியில் அரங்கனை ஆராமம் சூழ்ந்த காவிரியின் இடைக்குறை கவர்ந்தது; அங்கேயே கோயில்கொள்ளத் திருவுள்ளம் பற்றினான் என்பது இந்த ஸ்தல புராணம்.

காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். காவிரி கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது; கொள்ளிடம் வைணவ மரபில் ’வட திருக்காவேரி’ என்று பெயர் பெறுகிறது. இந்த இடைக்குறையின் மறுபெயர் ”திருவரங்கம்”. ’வண்டினமுரலும் சோலை, மயிலினமாலும் சோலை’ என்றபடி இயற்கை எழில் மலிந்து தோன்றும் இத்தீவின் நடுவில் திருப்பொலிய நிற்பதுதான் ‘அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில்’ என்னும் நம் பெருமாள் இனிதுறையும் ‘பெரிய கோயில்’

இத்தலம் புராணம் போற்றும் பெருமை பெற்றது; ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாஸநம் செய்யப் பெற்றது. (மங்களம் - நற்பேறு,மேன்மை,வளம். கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இச் சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதானஇராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.

‘தென்னாடும், வட நாடும் தொழநின்ற திருவரங்கம்’ எனவும், ‘பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே’ எனவும் அடியார்கள் இதைப் புகழ்ந்துள்ளனர்.இங்குதான் உடையவர் கத்யத்தை அருளினார். ஈடு விளைந்த இடம்; பெரிய நம்பிகள், பட்டர், சீராமப்பிள்ளை, லோகாசார்யர் போன்ற மஹநீயர்களின் அவதார ஸ்தலம் இது.


அரங்கனுக்கு மூன்று பிரம்மோத்சவங்கள் நடக்கின்றன. இவற்றுள் விருப்பன் திருநாள் எனும் சித்திரை உத்சவமும், குடியானவர்களும் பயிரிட்டோரும் சீராட்டும் சித்திரை தேர் திருவிழாவும் மிக பிரசித்தி. திருவுடை மன்னரை காணில் திருமலை கண்டேனே என்னும் ஆழ்வார் பாடலின் படி மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் அழகிய மணவாளனை திருத் தேரில் ஏளப் பண்ணி கொண்டடினராம். ஸ்ரீரங்கம் வீதிகள் மதில் சூழ்ந்து அகலமாக தென்னை மரங்களுடன் சிறப்பாக உள்ளன.


                        திருவீதி (உத்திர வீதி)                        அரங்கன் திருத்தேர்
                         மக்கள் கூட்டம்

திவ்ய பிரபந்த கோஷ்டி
கோவில் யானை
திருதேரின் பின்னால் கட்டை போடுகின்றனர்

திருத்தேர் சக்கரம்
ஊர் கூடி தேர் இழுத்தல்என் அரங்கனை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே என பாடப்பெற்ற திருவரங்கம் திகழும் திசை நோக்கித் தொழுவதே ஸர்வ பாபங்களையும் நிவர்த்திக்க வல்லது.

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா:

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

Monday, May 10, 2010

இன்று முதல் தமிழ் பாடம், [First Tamil lesson today or is it tamil lesson from today]


தலைப்பில் ஒரு கால் புள்ளியிட்டால் இரண்டு அர்த்தங்கள் தொக்கி நிற்கும.  ஒன்று இன்று ஆரம்பித்து தமிழ் பாடம் மற்றது இன்று முதலாம் பாடம். தமிழ் கற்று கொடுக்கும் அளவு எனக்கு தெரியாது ஆனால் ஆர்வத்தின் காரணமாக, வலை உலகில் தேடி, அங்கங்கே படித்ததில் பிடித்ததை எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இது முதல் முயற்சி.  மொழி தேடலில் ஒரு சிறிய இனிய ஆரம்பம். 

 தமிழ் இலக்கணம் மிகவும் கடினமானது என பள்ளி நாட்களில் சரியாக பயிலாமல் விலகி இருந்து விட்ட பல மாணக்கர்களில் ஒரு சிலருக்காவது மறுபடி வாய்ப்பு கிடைத்தால்  அறிந்து கொள்ள ஆர்வம் வரலாம்.  அப்படிப்பட்ட உங்களில் ஒருவனின் ஒரு சிறிய முயற்சி இது.  மொழியை கற்பதோடு அல்லாமல் பிழையின்றி எழுவதற்கும் இலக்கணம் அவசியமாகிறது.  

மொழி:
ஒருவர் தமது கருத்தை பிறரிடம் பகிரிந்து கொள்ள உதவும் கருவியே மொழிஅங்ஙனம் பகிர்தல் இரண்டு வடிவங்கள் பெரும்அவைவரி வடிவம்ஒலி வடிவம்.
ஒலி – ஒருவர் பேசுவதால் உண்டாகும் ஓசையே ஒலி.
அவ்வோசைக்கு கொடுக்கப்படும் வரி வடிவமே எழுத்து.
தமிழ் எழுத்துக்கள்:
உயிர் எழுத்துக்கள் (12), மெய் எழுத்துக்கள்(18), உயிர்மெய் எழுத்துக்கள்(216), ஆய்த எழுத்து(1) ஆக 247 எழுத்துக்கள்.
உயிர் எழுத்துக்கள்:
தமிழ் மொழிக்கு உயிர் நாடியாய் விளங்கும் அ’ முதல் ஔ’ வரையிலான எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள்ஓசையின் மூல காரணமாய் விளங்குவதாலும் இவை உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன.
இவற்றுள்  – ஆகிய குறுகிய ஓசை உடைய எழுத்துக்களை குறில்எழுத்துக்கள் என்பர்.
 – ஆகிய நெடிய ஓசை உடைய எழுத்துக்களை நெடில்எழுத்துக்கள் என்பர்.
மெய் எழுத்துக்கள்:
உயிர் இல்லாத உடம்பு(மெய்ஆற்றலற்றதுஅது போல்தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமலும் உயிர் எழுத்துக்களின் துணை கொண்டு இயங்கும் எழுத்துக்கள் ஆதலில் இவை மெய் எழுத்துக்கள் எனப்பட்டனஇதனை ஒற்று எழுத்து என்றும் அழைப்பர்.
உயிர்மெய் எழுத்துக்கள்:
உயிர் எழுத்து பனிரெண்டும்மெய் எழுத்து பதினெட்டும் சேர்ந்து உருவாகும் 216 எழுத்துக்கள்உயிர்மெய் எழுத்துக்கள்.
.டுக்  .
ஆய்த எழுத்து:
 – இதுவே ஆய்த எழுத்து.   (http://tamilgrammer.wordpress.com/)
   
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது ொல் எனப்படும்
.காவீடுகண்போ 
சொல்லின் வகைகள்   :   
பெயர்ச்சொல் 
வினைச்சொல் 
இடைச்சொல் 
உரிச்சொல் 

பெயர்ச்சொல் :   
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும்பொருள்இடம்காலம்சினைகுணம்தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்ஆதலால் பெயர்ச்சொல் 

பொருட் பெயர் 
இடப் பெயர் 
காலப் பெயர் 
சினைப் பெயர் 
பண்புப் பெயர் 
தொழிற் பெயர் 
என்று ஆறு வகைப்படும்

பொருள்இடம்காலம்சினைகுணம்தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும்பொருள் முதலாறு என்றும் கூறுவர்

பொருட்பெயர் மனிதன்பசுபுத்தகம் 
இடப்பெயர் சென்னைதமிழகம் 
காலப்பெயர் மணிநாள்மாதம்ஆண்டு 
சினைப்பெயர் கண்கைதலை 
பண்புப்பெயர் இனிமைநீலம்நீளம்சதுரம் 
தொழிற்பெயர் படித்தல்உண்ணல்உறங்குதல் 

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டுஇவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்

1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள் 
1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள் 
1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள் 
1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள் 
1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள் 
1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள் 
1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள் 

வினைச்சொல் 

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும்முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும்முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்

முற்று இருவகைப்படும்அவை 

1.தெரிநிலை வினைமுற்று 
2.குறிப்பு வினைமுற்று 

எச்சம் இரண்டு வகைப்படும்அவை 

1.பெயரெச்சம் 
2.வினையெச்சம் 

தெரிநிலை வினைமுற்று 

செய்பவன்கருவிநிலம்செயல்காலம்செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும் 

கயல்விழி மாலை தொடுத்தாள் 


குறிப்பு வினைமுற்று 

பொருள்இடம்காலம்சினைகுணம்தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றிசெய்பவன்கருவிநிலம்செயல்காலம்செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று 
ஆகும்

அவன் பொன்னன்

எச்சம் 
பெயரெச்சம் 

பெயரெச்சம் என்பதுபெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்றமுற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும்பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம்குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்

படித்த மாணவன் 


வினையெச்சம் 

வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்றமுற்றுபெறா வினைச் சொற்கள் ஆகுமவினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்

படித்துத் தேறினான் 


இடைச்சொல் 

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது

 முதலிய வேற்றுமை உருபுகளும்போலஒப்ப முதலிய உவம உருபுகளும் 
என்னும் சுட்டுக்களும்யா முதலிய 

வினாவெழுத்துக்களும்; `உம்முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று 
கூறப்படும்

மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும்இடை நிலைகள்சாரியைகள்விகுதிகள்தமக்கெனப் பொருளையுடைய மற்றுதான் முதலியனவும் 
இடைச்சொற்களாகும்

அவன்தான் வந்தான் 
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும்பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்
உரிச்சொல் இருவகைப்படும் 

1.ஒரு பொருள் குறித்த பல சொல் 
2.பல பொருள் குறித்த ஒரு சொல் 


ஒரு பொருள் குறித்த பல சொல் 

சாலப் பேசினான்
உறு புகழ்
தவ உயர்ந்தன
நனி தின்றான்
இந்நான்கிலும் வரும்சாலஉறுதவநனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன

பல பொருள் குறித்த ஒரு சொல் 

கடிமனை காவல் 
கடிவாள் கூர்மை 
கடி மிளகு கரிப்பு 
கடிமலர் சிறப்பு 
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் காவல்கூர்மைகரிப்புசிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும் 

பொருள் இலக்கணம் 

பொருள் இரண்டு வகைப்படும்அவை

அகப்பொருள் 

புறப்பொருள் 

நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம்பொருள்வீடு ஆகிய (இன்பம் ஒழிந்தமூன்று பேறுகளை பற்றியும் கூறுவது அகப்பொருள் எனவும்அறம்பொருள்வீடு ஆகிய (இன்பம் ஒழிந்தமூன்று பேறுகளை தவிர்த்து கொடைபுகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்

முதல் படம் பெரிய பாடம் ஆகிவிட்டது.  பின்னர் தொடர்வோம்.

அன்புடன் - தமிழ் ஆசையுள்ள ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்