To search this blog

Showing posts with label Jewels. Show all posts
Showing posts with label Jewels. Show all posts

Monday, April 21, 2025

'பொன்னிவர் மேனி மரகதத்தின்' ~ Sri Parthasarathi Emperuman after porvai kalaithal

 

எம்பெருமானது திருமேனி வடிவழகை அழகிய பளபளக்கும் பைம் பொன்னோடு ஒப்பிடுதல் வழக்கம்.  திவ்விய தேசமான நாகையில் எழுந்தருளி உள்ள சௌந்தரராஜ பெருமாள், வர்ணிக்க முடியாத பேரழகுடன் திகழ்பவர்!’ என்று சிலாகிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.   'பொன்னிவர் மேனி மரகதத்தின்' என்று ஒரு பாசுரம் திருமொழியில். 



Here is the very  definition of the pasuram – Sri Parthasarathi Emperuman after porvai kalaithal this morning   21.4.2o25

Monday, May 1, 2023

Chithirai Ekadasi purappadu 2023 - new Thoda for Sri Parthasarathi Emperuman

A Mumbai jeweller has entered the Guinness Book of World Records for creating a ring with the most number of diamonds set on it, the world record body said. HK Designs and Hari Krishna Exports Pvt. Ltd set the massive record in March with their ring which has a total of 50,907 diamonds set on it. The ring is made entirely out of recycled materials. Recycled gold was mixed with re-purposed diamonds to create the piece. The gold weight of the ring is 460.55 grams and its diamond weight is 130.19 carats. The ring costs over Rs 6.42 crore. 

What is commonly called Jewelry has some synonyms.  

Accessory  - is something added to a machine or to clothing that has a useful or decorative purpose.

Ornament: is  a small, fancy object that is put on something else to make it more attractive

Jewellery – is a decorative objects worn on your clothes or body that are usually made from valuable metals, such as gold and silver, and precious stones: 

அணிகலன்கள்  என்பவை  அழகுக்காக மனிதர்கள்  அணிந்துகொள்ளும் பொருட்கள்.  இவை  நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிப்பிட படுகின்றன.  அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர்  பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. முத்து, பவளம், வைரம் போன்ற பொருட்களும், பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 

 


மிக உயர்ந்த நகைகள் அணிகலன்கள் நாம் வணங்கும் தெய்வங்களுக்கு சமர்பிக்கப்படுகின்றன.  எம்பெருமான் கைகளில் அணிபவை - தோடா, காப்பு, கடகம், வளையல், வங்கி என அழைக்கப்படுகின்றன.  பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே உகப்பாக சமர்ப்பிக்க படுகின்றன.    

தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டுகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணையின் சிறப்பு - ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும் உள்ளதே. . நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை, அதில் பொருந்திருக்கும் முத்து,பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன. பேரரசர் இராஜராஜன்,  தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல். 

முந்தைய காலத்தில், மக்கள் ஒரு செயலைச் செய்ய உறுதி பூணும்போது அதன் நினைப்பு எப்போதும் தமக்கிருக்க வேண்டும் ஒரு வகை வளையத்தை அணிவார்கள்   கங்கணம் கட்டிக் கொள்ளுதல் என கேள்விப்பட்டு இருப்பீர்.  பவித்ரோத்சவம் போன்ற யாகங்கள் நடக்கும்போது எம்பெருமானுக்கு இத்தகைய காப்பு சாற்றப்படுகிறது.

 


இன்று  திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் ஏகாதசி புறப்பாட்டின் போது பக்தர் ஒருவர் புதிதாக சமர்ப்பித்த 'தோடா' என்ற கடகத்தை, வலது திருக்கரம் அபய ஹஸ்தத்தின் கீழே அணிந்து இருப்பதை சேவித்து மகிழலாம். 

 
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
1.5.2023 

Friday, April 21, 2023

Swami Ramanujar muthuk kondai 2023

Swami Ramanujar muthukondai 2023 

Today (21.4.2023) is day 6 of Emperumanar Uthsavam.  At Thiruvallikkeni, in the evening Sri Ramanujar had purappadu in Mangalagiri adorning muthu kondai.


 

The Thura, Surya Chandra pathakkangal were exceptionally attractive. The Fair Stone standard, is a social and environmental standard for the global natural stone industry and it was a light green stone dangling in the crown amidst red stones. 

Garnet gleams a dark red luster that stirs the soul. This stone is long known for its rich connection to creativity and love. Of all the Earth's green gemstones, emerald is perhaps the most popular. It has inspired many legends and famous jewelry pieces. 

சிகப்பு கற்கள் ரத்ன கற்கள்; மரகதம்  ஒரு கனிமம், நவரத்தினங்களுள் ஒன்று.  இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் குரோமியம், சிலவேளைகளில் மட்டும் அடங்கும் வனேடியம் மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது.

 


Never mind what they were  !  -  they were beautiful as they adorned the King of all Hermits – Yathiraja Raja – Swami Udayavar.  Here are couple of photos.

 
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.4.2023 

Wednesday, October 26, 2022

Bangles - அருங்கல உருவின் ஆயர் பெருமான் 2022

அருங்கல உருவின் ஆயர் பெருமான்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் திருவிழா என்றவுடன் ராட்டினம், பச்சை குத்துபவர்கள், வளையல் வண்டிக்கார்கள், பலூன் விற்பவர்கள் எனக் கிராமமே களைகட்டும்.  பல பழைய படங்களில், வளையல் விற்பவர்கள் கதாபாத்திரமாக வருவது நினைவு இருக்கலாம். வாழ்க்கை மாறிவிட்டது.

கன்றுகள் மேய்த்து தம் தோழரோடு வலம் வந்த மாயோன் கண்ணபிரான்.  இன்று 26.10.2022 திருவல்லிக்கேணியில் அன்னக்கூட உத்சவம்.  அருங்கல உருவின் ஆயர் பெருமான்  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் 'ஆயர் குலத்தில்வந்து உதித்தவராக  கோல் (சாட்டை), தலைப்பாகைதண்டம்என அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார். 


Women’s lust for bangles is too well known .. .. in our country, it is  a tradition to wear bangles after marriage, symbolizing health, luck, and prosperity. Bangles are more than accessories for Indian women.   Red signifies energy and prosperity, while green denotes good luck and fertility.  The bangles are usually made from metal (copper, silver, gold, iron, etc.), wood, plastic, and glass. 

 


Archaeologists have excavated bangles made of various metals from various parts of India with highly ornate bangles dating back to the Mauryan Empire and gold bangles excavated from the historic site of Taxila, proving just how far back the tradition goes.   

Firozabad in UttarPradesh has earned the name ‘Suhag Nagari’ which means the city of married women where the married women wear bangles as a symbol of prosperity. So, the city is famous  for its Bangle-making and selling businesses.  Laad Bazaar or Choodi Bazaar in Hyderabad is famous for varieties of  pearl bangles. Moradabad city in India is the largest producer of bangles.  Nakkavanipalem, a tiny village near Narsipatnam was once a place where skilled bangle workers were in existence.   



It is not Indian alone .. miles away, Tiffany’s newest jewellery launch, the Lock bracelet, is positioned to be an instant icon for the LVMH-owned brand, if all goes according to plan. The bangle, designed to be worn by both men and women, ranges in price from $6,800 for the yellow gold version to $32,000 for one encrusted with pavé diamonds. Tiffany is betting big on the bangle, opening a pop-up store around the bracelet in New York and promoting it with stars including model Imaan Hammam, skater Tyshawn Jones, and Hailey and Justin Bieber.  

Other luxury houses have recently gone for the wrist, launching new bangles in the past year that feature emblematic brand elements and are made to serve as status symbols. This year, Louis Vuitton released the unisex Volt bracelet (from £6,400 for the gold version), depicting a zizag-like shape with its initials; Dior introduced Bois de Rose (from £6,000), which mimics the Dior Rose’s stem, while Bulgari unveiled the Viper bangle (from £5,100), in the shape of a snake. Meanwhile, Boucheron has released new versions of the versatile bracelet (from £3,790) from the 2019 Jack de Boucheron collection.  Any luxury brand keen on establishing a meaningful presence in the business of bangles needs to measure up to Cartier’s Love bangle, which has dominated the sector since the 1970s (a classic plain gold version sells from £6,350).  

The second part of the post ie., in English – you can chose to ignore and have darshan of our Sri Parthasarathi Emperuman adorning beautiful jewels and wearing bangles too on the occasion of Annakoota Uthsavam at Thiruvallikkeni – today being day 7 of Acarya Manavala Mamunigal uthsavam.  

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26th Oct 2022.

Thursday, February 24, 2022

Sri Parthasarathi Perumal Pandiyan kondai

 Sri Parthasarathi Perumal Pandiyan kondai – pathi ulathal – day 5 – Hanumantha vahana purappadu




Friday, July 16, 2021

Kodai Uthsavam 2021 sarrumurai ~ பலபலவேயாபரணம் பேரும்பலபலவே

 நம் சத்சம்ப்ரதாயத்திற்கு பெருமை  யாதெனில் - மிகப்பெரிய திருக்கோவில்களும், அவற்றில் அர்ச்சாவதார திருமேனியாம் அழகு எம்பெருமான்களும்  - அவர்தமை புகழ்ந்த ஆழ்வார் பாசுரங்களும், திருவாபரணங்களும், பட்டர்கள் அற்புத சாற்றுப்படிகளும், மணமிக்க பூக்களும், அருளிச்செயல் கோஷ்டிகளும், பக்தர்களும், எம்பெருமானை திருவீதிகளில் ஏளப்பண்ணும்  ஸ்ரீபாதம் தாங்கிகளும், - அனைத்தையும் அனுபவிக்கும் பக்தர்கள், பாகவதர்களும் - அவர்கள் செய்யும் கைங்கர்யங்களுமேஇவற்றை தவிர ஆழ்வார் பாசுரங்களுக்கு அற்புத வியாக்கியானம் அருளிச்செய்த பூர்வர்களும், இந்நாளில் காலக்ஷேபம் சாதித்து நம்மை பாசுரங்களின் அற்புத ஆழ்ந்த அர்த்தங்களை உணர்ந்து அனுபவிக்க வைக்கும் அதிகாரிகளும்இவற்றில் கச்சி ஸ்வாமி எனும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி நமக்கு இட்டுச்சென்ற அமுதங்கள் மிக மிக இனிப்பானவை. 



Today 16th July 2021 is day 7 – the concluding day of Kodai Uthsavam – today is day 2 of Alavanthar uthsavam too.  During Kodai Uthsavam, Sri Parthasarathi and Ubaya Nachimar have purappadu in separate kedayams… and  on day 7  it was exceptionally grand… in every sense –  He adorned a predominantly ornate white dress ~ the floral alankaram was exceptional… first it was the most fragrant ‘magizham poo’ [Spanish chery; medlar / bullet wood] – then one made of mullai buds [jasmine];  then a beautiful garland made of – jasmine, yellow rose; read rose; and thavanam ~ in the posterior, He had Sevvarali [red arali – oleander] 


As the Emperor, He had a wonderful Crown called ‘sigathadai’ – tightly woven around with reams of fresh  jasmine flowers with white robe and a kingly ornament atop that.  The parasols  [umbrellas] that accompanied were big magnificent ones [20 jon kudais] 

All these reminiscing the past and of purappadu of 14th July 2013 at Thiruvallikkeni – the added significance in the large numbered goshti was the presence of  His Holiness    Thirukurungudi Srimath Sri Sri Paramahamsethyathi Perarulan Ramanuja Jeeyar.  

ஆழ்வார்கள் தங்கள் பக்தியினால் எம்பெருமானிடத்திலே ஆழ்ந்து மையலுற்று அற்புத பாசுரங்களை நமக்கு அளித்தவர்கள்.  ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியோ எக்காலத்துக்கும் ஒரு ஒப்பற்ற களஞ்சியம்.  இரண்டாம் பத்து  ஐந்தாம் திருமொழியில் ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பலவடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.  

“செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திகழாழிகளும் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங் கிறியும் மங்கல வைம்படையுந் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே திருவாபரணங்கள் எண்ணிறந்தவை.  எம்பெருமானுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும்.  அநுபவிக்குங் காலத்தில் நாமக்ரஹணத்திற்கு இழிந்தவிடமெல்லாம் துறையாகும்.  சீலப்பேர்கள் வீரப்பேர்கள் என்று அநேகமாயிருக்குமே.  இதையே ஸ்வாமி நம்மாழ்வார் தம் பாசுரத்திலே : 

பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,

பலபலவே சோதி வடிவு பண்பெண்ணில்,

பலபல கண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,

பலபலவே ஞானமும்  பாம்பணைமேலாற்கேயோ. 

என சாதிக்கின்றார்.  திருப்பாற்கடலிலே ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு  பண்பு  எது என எண்ணில், ஆழ்வார் தம் கலவியாலுண்டான அழகை  நிரூபித்துப் பார்க்குமிடத்து, திருவாபரணங்கள் மிகப் பலவாயிருக்கும்;  ஒளியுருவான திருமேனி  மிகப் பலவாயிருக்கும்;  பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் முகர்ந்து  உண்டாகிற  சுகங்களும்  மிகப்பலவாயிருக்கும்;  ஞானங்களும் மிக மிகவாம்.  அவ்வளவு உயர்ந்த ஸ்ரீமந்நாரணனின் திருத்தாள்களை பற்றுவோர்க்கு  என்றென்றும் எந்த குறையுமே இராது.   

Reminiscing the good olden days here are some photos of day 7  Kodai Uthsava Purappadu at Thiruvallikkeni divyadesam on 14.7.2013.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
16/07/2021












Thursday, July 1, 2021

'Ammanai' and other ball games .. .. Sri Azhagiya Singar Mattaiyadi vaibhavam 2021

Day 9 of Brahmothsavam would be hectic ~ morning there is  purappadu in ‘Aaal mael pallakku’ – Porvai kalaithal vaibhavam – pranaya kalagam (mattaiyadi) – thirumanjana kudam, theerthavari – purappadu – evening Pathi ulavuthal – Kannadi pallakku – thirumbukal – dwaja avarohanam, and more.    Today 27th June 2021 would have been day 9 of Sri Azhagiya Singar Aani brahmothsavam.




To describe it very simply, the game of Cricket is a battle between ‘bat and ball’. Bowlers hurl (bowl)  the cricket ball at the batsmen trying to dislodge the wicket or get them out in multiple possible ways, while batters try to hit the ball around for runs !  .. .. …

A cricket ball is a hard, solid ball, that consists of a cork core wound with string then a leather cover stitched on.  Currently, the red Dukes cricket ball is used by England, West Indies and Ireland for Test matches. India tends to prefer the locally-manufactured SG cricket ball while the other Test-playing nations use the Australian-manufactured Kookaburra ball.  They come in different colours – for Test matches it is ‘red cherry’ – while in coloured games, it is White – and then there is the pink ball, which perhaps been the most tested ball in the history of the game — nine years, to be precise. After a pink Kookaburra ball was used in a charity match in 2006, the Marylebone Cricket Club (MCC) — the club recognised as the custodian of the Laws of Cricket — issued a request for manufacturers to develop a ball that could be used for day/night matches.

Today, 27th June 2021 (in the night of IST) South Africans are to play West Indies at St. Georges in T20I no 1178.   At Bristol, a city   in South West England, Womens team are playing ODI.   Bristol  city lies between Gloucestershire to the north and Somerset to the south.  Indian women are playing England women in ODI no. 1198. 

A combined eight wickets from Sophie Ecclestone, Anya Shrubsole, Katherine Brunt, and Kate Cross consigned India to a below-par performance with the bat in the first ODI against England in Bristol. The visitors made just 201 for 8 after losing the toss, with Mithali Raj scoring 72 of those.  The short ball was also employed to good effect. Debutant Shafali Verma,  at 17 years and 150 days old, became the youngest player - male or female - to represent India in all formats of the game, fell to a failed pull while backing away to a Brunt offcutting bouncer. The over, fifth in the innings, had begun with two Verma fours - one lofted over mid-off and the other carved behind point - but ended with India losing their first wicket with just 23 on the board.

After writing a few paras, I remember that this no Cricket post but a post on Perumal purappadu at Thiruvallikkeni – the probable day 9 of Sri Azhagiya Singar brahmothsavam.  Today but for Corona restrictions, we would have had darshan of Sri Azhagiya Singar theerthavari in Aani brahmothsavam. - here is something on Uthsavam when ‘the game of ball throwing’ too is played ! .. that is   –‘mattayadi’.






For Sri Azhagiya singar   ‘ mattaiyadi’ – the ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’  with Ubaya Nachimar and Perumal engrossed in wordy duel occurs at the western gate ie., the rear entrance to the temple at Thulasingaperumal koil street. .. ..  Perumal’s entry is denied with thayar slamming the doors and later after the intervention of Swami Nammalwar, Perumal and Ubhayanachimar play exchanging the flower ball – throws and catches being taken by the battars. 

பந்து சங்க கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சங்க கால மகளிர் பந்தாடுவதில் திறன் பெற்றிருந்தனர்.   பல பந்துகளை (அல்லது காய்களை அல்லது பழங்களை) மேலே தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்க கால மகளிரின் பந்தாட்டம். (Jugglery).

பெருங்கதை என்னும் தமிழ்நூல் கொங்குவேளிர் என்பவரால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பிருகத் கதா என்னும் வடமொழி நூலைத் தழுவி இது எழுதப்பட்டது என்பர். இதில் பந்தாட்டப் போட்டி நிகழ்ந்த செய்தி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆறு பெண்கள் ஒவ்வொருவராக அரங்கில் அடுத்தடுத்துத் தோன்றி விளையாடுகிறார்கள்.  அந்த பந்தானது -   கிடை எனப்படும் வெண்டு, பூலாப்பூ ஆகியவற்றை நடுவில் வைத்து பஞ்சு-நூலால் சுற்றி அதன்மேல் மயில்பீலி, மென்மையான மயிர் ஆகியவற்றை வைத்து மேலும் வரிந்தனராம்.  இந்த பந்துகள் - மயில்பீலியின் கண் போல கண்ணுக்கு அழகாகவும், கைக்கு மிருதுவாகவும், இலேசாகவும் இருந்ததாம். இத்தகைய பந்துகளைச் செய்தோர் அறிவர் எனப்பட்டனர்.  இவை ஒரு கைக்குள்  அடங்கும் அளவு இருந்தனவாம்.   மானனீகை என்பவள் ஓரிடத்தில் நின்றுகொண்டு தன் கைக்கு எட்டிய தூர்ரத்தில் விரலால் வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுழன்று பந்தாடினாளாம். !!  

அம்மானை  என்று மற்றோரு விளையாட்டு உண்டு.  மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகவும்  கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.   மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு.  முதல் பெண் ஒரு செய்தியைப்  பாட்டாகக்  கூறிவிட்டு,    கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள்.  அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ  இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த அம்மானைப் பாட்டின் நோக்கமாகும். இரண்டாவது பெண் ,  முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள். மூன்றாவது பெண் அந்த வினாவிற்கு  விடை அளித்து ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை  மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.

இவ்வாறு கற்களை சுழற்றி, மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாடும் சில இனிய விளையாட்டுகள் சில பத்து வருஷங்கள் முன்வரை முழங்கின !  - இன்றைய கணினி - ஆண்ட்ராய்டு லோகத்தில் இவை அனைத்தும் வழக்கொழிந்து விட்டன. 

10.3.2021  ன்று  காலை  புறப்பாடு  "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்   நாச்சிமாருக்கு கூட தெரியாமல்  தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன் தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்" என  கொண்டாடப்படுகிறது.

 ப்ரஹ்மோத்சவத்திலே  9ம் நாள் ஆள் மேல் பல்லக்கு - பெருமாள் போர்வை களைதல் வைபவம் - இந்த வருடம் அசம்பாவிதம் காரணமாக பெரிய மாட வீதி புறப்பட்டு இல்லை. குளக்கரை புறப்பாட்டிற்கு பிறகு போர்வை களைதல் வைபவம் தென்னண்டை மாட வீதியில் கோவில் கோபுரம் / அத்தங்கி திருமாளிகை முன்பே நடந்தேறியது.  பின்னர் தெற்கு மாட வீதி புறப்பாடு கண்டருளி  மேற்கு கோபுர வாசலில் மட்டையடி வைபவமும், பிறகு பூப்பந்து விளையாடுதலும் விமர்சையாக நடைபெற்றன.

திருக்கோவிலை சென்றடைந்ததும்  'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்'  -  பிணக்கு - ஊடலில்  பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார்  திருக்கதவை சாற்றி விட, பெருமாள் மறுபடி திரும்ப  திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என  நாச்சியார்  வினவ, பெருமாள்  அலங்கார வார்த்தைகளால் மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  பிறகுபெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.   இதன் பிறகு தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது     இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத பாசுரம் - நாயிகா பாவத்தில் :   

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு  நானதஞ்சுவன்,

மன்னுடை இலங்கை   அரண்காய்ந்த மாயவனே!

உன்னுடைய சுண்டாயம் நானறிவன்   இனியது கொண்டு செய்வதென்,

என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ! 

சங்கப் பாடல்களில் தலைவன், தலைவி  ஊடலும், விளையாட்டும் பிரசித்தம்.  கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ஙனே பிரணய ரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு. அவர்களுடைய பாவனை உறவே   ஆழ்வாருக்கும்  ஆகி   முற்றியிருக்கின்றது.  கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா? என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா?  மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ!" என்கிறார்.

Here are some photos of day 9 of Sri Azhagiya Singar  special  brahmothsavam ‘mattayadi’ vaibhavam on 10.3.2021. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27th June 2021.