To search this blog

Showing posts with label pasura vilakkam. Show all posts
Showing posts with label pasura vilakkam. Show all posts

Monday, May 4, 2026

 

Sri Parthasarathi Perumal  Surya prabhai 2026 ~

கதிராயிரமிரவி கலந்தெரித்தால் ஒத்த !!

 


ஏக காலத்தில் ஆயிரஞாயிறு உதித்தாற்போல் கண்கொண்டு காணவொண்ணாதபடி ஜ்வலியா நின்ற கிரீடத்தையுடையவனாய் மஹாநுபாவனான சக்கரவர்த்தித் திருமகன் எழுந்தருளியிருக்குமிடம் யாது?  திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை சூர்யப்பிரபை.  மாலை சந்திரப்ரபை வாகனங்கள்.   சூரியனின் ஒளியைப் "பகலொளி' என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளியை "நிலவொளி' என்றும் சங்க பாடல்களில் காட்டப்பட்டுள்ளது. 

In the ongoing Chithirai  brahmothsavam of Sri Parthasarathi Perumal,  today 4.5.2026  is day 4 – and it is Surya Prabhai in the morning.

Compared with the billions of other stars in the Universe,  it  is remarkable.  It is infact  a ball of gas (92.1 percent hydrogen and 7.8 percent helium) held together by its own gravity. It is  4,500,000,000 years old!  That's a lot of zeroes. That’s four and a half billion.  Going by what others do, i.e., burning  for about nine or 10 billion years – it can be said tobe halfway through its life. So no worries, it still has about 5,000,000,000—five billion (500 crores !)—years to go.  It is the SUN.

சென்னையில் வெய்யில் -  சென்னையில் வெய்யில் - கோடை காலம் ஏப்ரல் - மே மாதங்களில் உக்கிரமாகவே இருக்கு,. இந்த வருஷமும் வெய்யில் தாளிக்கின்றது.  மிகவும் வெக்கையாக அதிகம் வேர்வை கொட்டுகிறது.  கோடை காலத்தில், சுட்டெரிக்கும் சூரியனை குறிக்க   நிறையவே சொற்கள் உள்ளன.  நாம்  அனுதினமும் கண்களாலே பார்த்து சேவிக்க வல்லவன் - சூரிய பகவான்.  சூரியனுக்கு, : ஆதவன், ஆதித்யன், கதிரவன், ஞாயிறு, பகலவன், கனலி,  வெய்யோன், பானு, சித்திரபானு, வெஞ்சுடரோன், செங்கதிரோன்,      திவாகரன்,  தினகரன், தினமணி, பரிதி, பாற்கரன்,   மித்திரன்,   அனலி,  அலரி,   பகலோன்,   கிரணமாலி, - - - என பற்பல  பெயர்கள் உண்டு.   ஞாயிறு என்றவுடன் நமக்கு வார விடுமுறையான கிழமை ஞாபகம் வரலாம்.  சூரியன்  என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும்.   கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது.





Science is very interesting !  - When those five billion years are up, the Sun will become a red giant. That means the Sun will get bigger and cooler at the same time. When that happens, it will be different than the Sun we know today. As a red giant, our Sun will become about 2,000 times brighter than it is now!   In what is being considered a particularly rare event, scientists are projecting that the Sun will be an unusually cool customer by the year 2050. Earth is bound to become a dry, scorched rock, as our sun becomes a red giant star. What’s more, as the Milky Way and Andromeda galaxies collide, our sun and Earth (and the rest of our solar system) are expected to be hurled outward, away from the galactic center, to the outskirts of a new large galaxy created in the collision.

Science keeps throwing newer facts and changing facts !  -  the  source of potentially hazardous solar particles, released from the Sun at high speed during storms in its outer atmosphere, has been located for the first time by researchers at UCL and George Mason University, Virginia, USA.  These particles are highly charged and, if they reach Earth’s atmosphere, can potentially disrupt satellites and electronic infrastructure, as well as pose a radiation risk to astronauts and people in airplanes. In 1859, during what’s known as the Carrington Event, a large solar storm caused telegraphic systems across Europe and America to fail. With the modern world so reliant on electronic infrastructure, the potential for harm is much greater. To minimize the danger, scientists are seeking to understand how these streams of particles are produced so they can better predict when they might affect Earth. In the new study, published in Science Advances, researchers analyzed the composition of solar energetic particles heading towards Earth, and found they had the same “fingerprint” as plasma located low in the Sun’s corona, close to the middle region of the Sun’s atmosphere, the chromosphere.

Moving away from all the melee – are you intending to search the abode of Chakravarthi Thirumagan Maryadha purush Sri Ramachandra Murthi of  peerless fame and a tall crown that shines like the light of a thousand suns?  Here is what Periyazhwar tells us :

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் துஷ்ட சக்திகளை களைந்து, நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக திருவவதாரங்கள் எடுத்து அருளினார்.  மச்ச கூர்மமாய், கிருஷ்ணனாய்  இராமபிரானாய்  அவதரித்ததும் நரஸிம்ஹமாய் அவதரித்துமெல்லாம் ஒரே   ஈச்வர வ்யக்தியேயென்று  விஷ்ணுசித்தர் அறுதியிட்டு உரைக்கின்றார் தமது பெரியாழ்வார் திருமொழியில்.: 

கதிராயிரமிரவி கலந்தெரித்தால்   ஒத்த  நீள்முடியன்

எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்

அதிரும் கழற்பொருதோள் இரணியனாகம் பிளந்து  அரியாய்

உதிரமளைந்த  கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர். 

சூரியன் தங்கமென பளபளக்கும் எண்ணிறந்த  கிரணங்களையுடையவன்  - அத்தகைய  ஆதித்யர்கள் ஆயிரம் பேர்  ஜ்வலித்தாற்போல்  நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான  இராமபிரான்  எழுந்தருளியிருக்குமிடத்தை  தேடுகிறீர்களாகில்; அவ்வெம்பெருமானை  நினைத்து, உருகி, பணி செய்ய விருப்பம் உள்ளோர்க்கு,  அவ்விடத்தை சொல்லுகின்றேன் .. .. கல் கல் என்று அதிரும் வீரக்கழலையும் போர்செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய ஹிரண்யாஸுரனுடைய மார்பை நரஸிம்ஹருபியாய்க்கொண்டு, பிளந்து, அதனாலுண்டான  ரத்தத்தை அளைந்த கைகளோடு கூடி இருந்தானை, அத்தகைய சீற்றந்தோற்றத்துடன்  எழுந்தருளியிருந்த நிலைமையில் - அவ்வெம்பெருமானை உள்ளபடி  ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.  இந்த அவதாரங்களையெல்லாம் எடுத்த நம் ஸ்ரீமன் நாராயணன், பாற்கடலில் துயிலும் அவன்,  பக்தர்களை காக்க திருவவதாரங்கள் எடுத்தும்,  அர்ச்சை மூர்த்தியாக, திவ்யதேசங்களிலும் நமக்காக சேவை சாதிக்கிறான்.  அந்த பரிபூர்ண எம்பெருமான் இன்று திருவல்லிக்கேணியில் - ஸ்ரீபார்த்தசாரதியாக   சூர்ய பிரபையில் சேவை சாதித்தான்.  

Today 4.5.2026    is a glorious day –   day 4 of Chithirai  Brahmothsavam at Thiruvallikkeni and it was grand Surya Prabhai purappadu in the morning  ~  and, in the evening it would be  the  real cool Chandra Prabhai that of moon. Here are some photos of  Sri Parthasarathi  Emperuman purappadu at Thiruvallikkeni divyadesam this morning. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.5.2026 

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.   











 

Sunday, May 3, 2026

Sri Parthasarathi Garuda Sevai 2026 : கருடன்!!! தெருடன் ! ???

 

Thiruvallikkeni Garuda Sevai 2026 - Sri Parthasarathi Emperuman

 


எதுகை (Ethugai) and மோனை (Monai) are foundational Tamil poetic devices (prosody). There are no exact single-word English translations, but they are categorized as specific types of rhymes, alliteration, and assonance.

 Brahmothsavam  is a grand festivity – each day it is different Vahanam, and Perumal has classy alankarams … on Garuda vahanam day, thousands gather early in the morning to catch glimpse of the Lord as he comes out of the gate (Gopura vasal darsanam).  In the grand Brahmothsavam, each Vahanam, every purappadu has its  own charm, yet, if one were to ask the most majestic and most crowd-pulling ones,  it would be Thiruther and Garuda vahanam. !!  .. .. ..    On Garuda Sevai day, people from far and away come to the temple, offer vasthram (new clothes), place before Lord coconut, fruits & other offerings and have darshan of Lord in Garuda vahanam. 

In the ongoing Chithirai  Brahmothsavam of Sri Parthasarathi Emperuman  at Thiruvallikkeni divyadesam today  3.5.2026  is the third day – a very important day ~ it is Garuda Vahanam for Perumal.  Garuda is depicted as having the golden body of a strong person, has a white face, wings,  prominent beak, wears a crown – massive, strong – and more than anything else – ever devoted to Sriman Narayanan, carrying Him on his shoulders all the time. His devotion and being close to Emperuman all the time – Garuda, is admired as ‘Periya Thiruvadi’

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எளியன்   .. .. தன் பக்தர்களை ஓடோடி வந்து காப்பவன்.  நற்பயன் பெற நாம் என்னென்ன செய்ய வேண்டும் ? -  திவ்யதேசத்தில்,  வசிக்கும் நாம் ஒன்றுமே செய்யவேண்டாம் .. .. எம்பெருமானை நினைத்து, அவன்தம் பெருமைகளை நாம சங்கீர்த்தனம் செய்து, அவன் உறையுமிடங்களுக்கு சென்று, அவர்தம் அர்ச்சாவதார திருமேனியை கைகூப்பி வணங்கினாலே போதுமானது.  

அவ்வாறு திருத்தலங்களுக்கு செல்லும்போது எம்பெருமானுக்கு உகப்பான புஷ்பங்கள், பழங்கள் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள் ! - எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்யுங்கள் ! - அவன் உகக்கும் அவர்தம் அடியார்க்கு - பாகவதர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகள் செய்வோம் .. .. 






Before you proceed further, here is some Tamil Grammar !!   இன்றைய கருட சேவை பற்றிய பதிவிற்கு தமிழ் தலைவன் பேயாழ்வாரின் பாசுரம் எழுத ஆசைப்பட்டேன். கருடன் மீது ஸேவைஸாதிக்கின்ற பெருமானுடைய திருவடிகளிலேயே நெஞ்சே! நீ பக்திபண்ணு என அவர் கூறும் பாசுரம். இதன் கடைசி இரண்டு வரிகள் : 

கருடன் மேல் கொண்ட கரியான் கழலே, தெருடன் மேல் கண்டாய் தெளி.

- என வருகின்றன.  


தெருடன்  என்றால் என்ன ?  இணையத்தில்   தெருடன் என்பதற்கு அர்த்தம் கிடைக்கவில்லை; நாம் ஏதோ திருடன் பற்றி தேடுவதாக புரிந்து கொள்கிறது இணையம்.  Perplexityல்  வினவிய போது :  “தெருடன்” என்று எழுதப்பட்ட இந்த வார்த்தை, தமிழில் ஒரு தனி சொல்லாக (dictionary word‑ஆக) பயன்பாடும் அர்த்தமும் பெற்று வழங்கப்பட்டுள்ளதாக எந்த நிலையான அகராதி/நூற்பொருளும் காட்டவில்லை என அறுதியிட்டு உரைத்தது.

ஒருவேளை -  எதுகை மோனை போன்றதா என்ற ஐயம் எழுந்தது.  மஹாகவி பாரதியார் உரைத்தார்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

போதினிலே  -  காதினிலே போன்று -  கருடன் தெருடன்  எதுகை மோனைக்காக எழுதப்பட்டதா !!    கருடன் மற்றும் தெருடன் ஆகிய சொற்களுக்கு இடையேயான தமிழ் இலக்கணப் பொருத்தங்கள் (மோனை மற்றும் எதுகை) இல்லை.  மோனை என்பது ஒரு சொல்லின் அல்லது அடியின் முதல் எழுத்து ஒன்றி வருவது ஆகும். 'கருடன்' என்ற சொல்லின் முதல் எழுத்து 'க' ஆகும், 'தெருடன்' என்ற சொல்லின் முதல் எழுத்து 'த' ஆகும். முதல் எழுத்துக்கள் வெவ்வேறாக இருப்பதால் மோனை நயம் இல்லை.    எதுகை என்பது ஒரு சொல்லின் அல்லது அடியின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ஆகும். 'கருடன்' என்ற சொல்லின் இரண்டாம் எழுத்து 'ரு' ஆகும், 'தெருடன்' என்ற சொல்லின் இரண்டாம் எழுத்து 'ரு' ஆகும்.எனினும், எதுகையின் இலக்கணப்படி இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தாலும், முதல் எழுத்துக்களின் ஒலி (குறில் - நெடில்) ஒன்றாக இல்லை ;  எனவே, இவற்றை முழுமையான எதுகைச் சோடிகளாகக் கொள்ள முடியாது.

தெருடன்  என்ற சொல் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தில் ஈற்று வரியில் வருகிறது.  தெருடன் என்பதற்கு அர்த்தம் காண இயலாது.  இது தெருள் என்ற வினைச்சொல்லின் மருவு.

தெருள்(வி):  தெரிந்துகொள்; உணர்வுறு ; நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி !!

'தெருடன் மேல் கண்டாய்;' என்பதை தெருள்தன் மேல்கண்டாய் - என உணர வேண்டும்.  –‘தெருள்‘ என்று ஜ்ஞானத்திற்குப் பெயர், ‘கர்மஜ்ஞாந பக்திப்ரபத்திகள்‘ என்ற அடுக்கிலும் ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள்‘ என்ற அடுக்கிலும் ஜ்ஞாநத்திற்கு மேற்படியாக பக்தி சொல்லப்பட்டிருப்பதால், இங்கே தெருள்தன்மேல் என்றது பக்தியைச் சொன்னபடியாய், அவனது திருவடிகளை பக்திக்கு விஷயமாக்கு என்றதாம்.  எம்பெருமான் கழல் கண்டாய் ! - திருவடிகளையே  அடையப்பெற்றாய் -இனிமேல் கலக்கம் நீக்கித் தெளிந்திரு என்பதாக உரைக்கலாம்.

பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,

மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்த

கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,

தெருடன்மேல் கண்டாய் தெளி. 

Sriman Narayana appears riding on the mighty Garuda – to  Thirumylai Peyazhwar -  it is akin to  a glorious dark raincloud lit by a lightning, the most merciful Saviour of the Universe – Emperuman with lotus dame Sri Mahalakshmi on his chest – provides darshan seated on Periya thiruvadi Garuda. He ordains his heart, that having seen Emperuman’s  feet  through knowledge,  asks Heart to rise and understand the greatness of eternal Saviour Sriman Narayana.  

Here are some photos of the Garuda sevai at Thiruvallikkeni divyadesam this morning.

adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
3.5.2026

பாசுர விளக்கம் : கச்சி ஸ்வாமி  ஸ்ரீ உ.வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை  - கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம் திராவிட வேதாவில் இருந்து !! 










 

Wednesday, August 6, 2025

Aadi Shukla paksha Ekadasi 2025 ~ Aristarchus, Copernicus and SUNH

 

Thiruvallikkeni Aadi Ekadasi 2025- Sri Parthasarathi swami  purappadu

 

Life moves on – it is the month of August, yet we feel it is very hot in Chennai. Extreme heat is a period of high heat and humidity with temperatures above 90 degrees for at least two to three days. In extreme heat your body works extra hard to maintain a normal temperature, which can lead to lot of health issues.  People living in Delhi, Maharashtra, Goa, Kerala, Gujarat, Rajasthan, Tamil Nadu, Andhra Pradesh, Madhya Pradesh, and Uttar Pradesh face the highest risk from heat,  according to a new study which has left out places like Cuddapah, Bellary, Ramaguntam, Hyderabad, Delhi and many more !!  Amidst such heat, Regional Meteorological Centre (RMC) has forecast that heavy rain streaks will continue in the ghat districts of Tamil Nadu and some northern part in view of active southwest monsoon coupled with an upper air cyclonic circulation over the Bay of Bengal.  

Aristarchus of Samos was an ancient Greek astronomer and mathematician who presented the first known heliocentric model that placed the Sun at the center of the universe, with the Earth revolving around the Sun once a year and rotating about its axis once a day. He also supported the theory of Anaxagoras according to which the Sun was just another star. He likely moved to Alexandria, and he was a student of Strato of Lampsacus, who later became the third head of the Peripatetic school in Greece. According to Ptolemy, he observed the summer solstice of 280 BC. Along with his contributions to the heliocentric model,   he created two separate sundials: one that is a flat disc; and one hemispherical. Aristarchus was influenced by the concept presented by Philolaus of Croton (c.470 – 385 BC) of a fire at the center of the universe (i.e. by contemporary understanding, at the center of the Earth).

 



For Srivaishnavaites, the month of Aadi is of special significance – as Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi] –  is the  most blessed day for all Srivaishnavaites –  marking  the birth of Kothai Piratti [Andal]Thiruvadipuram was grandly celebrated on 28.7.2025.  Today 5.8.2025  it is Aadi Shukla paksha Ekadasi. 

திருவல்லிக்கேணி திவ்யதலத்திலே இன்று   - விஸ்வாவஸு வருடம்,   தக்ஷிணாயனம் ~ க்ரீஷ்ம  ருது . - கடக மாஸ  (ஆடி மாதம்) - சுக்ல பக்ஷ   ஏகாதசி  ~ ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட  வீதி புறப்பாடு.   நம் பார்த்தசாரதி திவ்யமங்கள ஸ்வரூபனாய் ஜாஜ்வல்யமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். வீதிதனில் மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி.   இன்று ஆளவந்தார் உத்சவத்தில் ஏழாம்  நாள் - திருவாய்மொழி ஏழாம்  பத்து  சேவிக்கப்பெற்று, பின்னர் கேட்டை திருமாலை கோஷ்டி - ஸ்ரீ தொண்டரடிப்பொடிகள் திருநக்ஷத்திரம். இதோ ஸ்ரீபேயாழ்வாரின் அற்புதவரிகள் :

 

கலந்து மணியிமைக்கும் கண்ணா * நின்மேனி

மலர்ந்து மரகதமே காட்டும்*  - நலந்திகழும்

கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,

அந்திவான் காட்டும் அது.

 

எம்பெருமான் அழகுக்கு அழகு சேர்ப்பவன்.  ஆபரணங்களும் புஷ்பங்களும் வஸ்த்ரங்களும் அவனுக்கு சாற்றப்பெறுவதன் மூலம் அழகு பெறுகின்றன.  ஸ்ரீகௌஸ்துப மணி  கலந்து விளங்காநின்ற கண்ணபிரானே!; மரதக ரத்னமானது  ஒளிப்பரப்பையுடைத்தாய்க் கொண்டு  உனது திருமேனியை ஒத்திராநின்றது,  அழகாக விளங்குகின்ற கொத்துகளிலே வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற திருத்துழாய் மாலையணிந்த  ஸர்வேச்வரனாகிய உன்னை ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.  அத்தகைய அருமைபெற்ற எம்பெருமான் நமக்கு தரிசனமளித்தது என்னே நம் பாக்கியம்.  [கச்சி ஸ்வாமிகள் உரை - திராவிட வேதா - நன்றி!]

 

The heat is attributed to climatic changes.  Climate change is the long-term shift in the Earth's average temperatures and weather conditions.  The world has been warming up quickly over the past 100 years or so. As a result, weather patterns are changing. Between 2015 and 2024, global temperatures were on average about 1.28C above those of the late 1800s, known as pre-industrial levels, according to the European Copernicus climate service.  Nicolaus Copernicus [1473 – 1543) was a Renaissance polymath who formulated a model of the universe that placed the Sun rather than Earth at its center. Copernicus likely developed his model independently of Aristarchus of Samos, an ancient Greek astronomer who had formulated such a model some eighteen centuries earlier.  The Copernicus Climate Change Service  (abbreviated as C3S) is one of the six thematic services provided by the European Union's Copernicus Programme. The Copernicus Programme is managed by the European Commission and the C3S is implemented by the European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF). The objective of the Copernicus Climate Change Service is to build an EU knowledge base in support of mitigation and adaptation policies for Climate Change and Global Warming. 

Since the 1980s, each decade has been warmer than the previous one, the UK Met Office says. The year 2024 was the world's hottest on record, with climate change mainly responsible for the high temperatures. It was also the first calendar year to surpass 1.5C of warming compared to pre-industrial levels, according to Copernicus. 

Back home being Aadi Ekadasi -  Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu.  Here are some photos taken during the purappadu.

 

~ adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

5.8.2025








Monday, April 8, 2024

Panguni Amavasai 2024 - Bering Sea ! - உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் !!

அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது.  ~   அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’  கதையில் இருந்து !



Most of the Earth's surface is covered with water -- and most of it is water is not potable. 97 percent of Earth's water is salty sea water which is useless to most land-dwelling plants and animals.  Precipitation supports life on land with salt-free water. 

The ocean, in this light, is like an alien world within our own. Many of its creatures are still unknown to us — both in kind and number. Their behaviors and adaptations remain inexplicable. Even the very contours of this world are still unmapped: We probably know more about the surface of Mars than we know about the ocean floor. Understanding the sea is to understand our planet better, at a fundamental level.   Ocean is not only a source of mystery but also a place of adventure.  

Before we dive into the ocean, there are questions about why Earth has them to begin with. Really: Scientists don’t fully understand how water came to cover two-thirds of the surface of our world.  The problem is simple. When the Earth was forming, it was extremely hot. Any water that was around at the beginning would have boiled away. “So how do you get so much liquid condensing onto the surface of a planet that should be really, really hot?”  a planetary scientist at the University of Glasgow,  has some plausible explanation.    Was it delivered by comets crashing into our world? Or more fantastically, do we only have water due to the extremely circumstantial event of planets like Jupiter wandering toward the sun from the outer solar system? Or was it, somehow, deeply buried within the early Earth? 

The possibilities matter because they can help us understand why there is life on Earth. Without water arriving on Earth, life as we know it would not exist. 

Thiruvallikkeni (Triplicane) is on the shores of Bay of Bengal.  The five major oceans listed by size from largest to smallest are the Pacific, Atlantic, Indian, Southern, and Arctic Ocean. The Pacific Ocean is bounded by the Bering Strait ! – heard of this ?  Located between Alaska and Russia, the Bering Strait is the only marine gateway between the icy Arctic and the Pacific Ocean. At its narrowest point, the strait is only 55 miles wide.  The Bering Strait may be narrow, but it’s teeming with wildlife—beluga whales, bowhead whales, gray whales, walruses, polar bears, ringed and ribbon seals.  Each spring, one of the largest wildlife migrations on Earth passes through this narrow gateway to reach the Arctic’s incredibly nutrient-rich and productive waters.

But as Arctic sea ice continues to melt earlier in the season, more and more ships are beginning to use this narrow gateway. With increasing ship traffic comes more noise and water pollution and a higher risk of ship strikes on whales and damaging oil spills—including spills of toxic and long-lasting heavy fuel oil. The Bering Strait is both a bottleneck and a pathway, home to species superbly adapted to this dynamic environment.  

The Bering Sea is a marginal sea of the Northern Pacific Ocean. It forms, along with the Bering Strait, the divide between the two largest landmasses on Earth: Eurasia and the Americas.  The Bering Sea is named after Vitus Bering, a Danish navigator in Russian service, who, in 1728, was the first European to systematically explore it, sailing from the Pacific Ocean northward to the Arctic Ocean. The Bering Sea is separated from the Gulf of Alaska by the Alaska Peninsula.  The Bering Sea ecosystem includes resources within the jurisdiction of the United States and Russia, as well as international waters in the middle of the sea (known as the "Donut Hole". 

எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால் “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“  என பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் சாதிக்கிறார். 

பூமிப்பந்தில் 71 சதவீதத்துக்குக் கடல் சூழ்ந்திருக்கிறது. பெருவெடிப்பில் சூரியனில் இருந்து பூமிப்பந்து பிரிந்துவந்தபோது, வளிமண்டலத்தில் இருந்து வந்த நீராவி, பாறைகளில் இருந்து வெளியான தண்ணீர் மூலம்தான் பெருங்கடல்கள் உருவாகின. கடலின் நிறம் நீலம் என்று நாம் நினைக்கிறோம் !   கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களைச் சூரியஒளியில் இருந்து கிரகித்துக் கொள்கிறது. நிறமாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள் பிரதிபலிக்கின்றன.  

நீலக்கடலின் ஓரத்தில் என நாம் பாடினாலும், செங்கடல், சாக்கடல், கருங்கடல் உலகத்தில் உள்ளன.   செங்கடல் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல்பாசிகள் அதன் மேல்மட்ட நீரில் அதிகம் இருப்பதே. கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல்.   அது இருண்ட நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த கடலை சிறப்பானதாக மாற்றும் பண்புகளில் ஒன்று, அதன் இருண்ட நிறம், சுமார் 100 மீட்டர் தொலைவில் எதையும் பார்க்க இயலாது. இதற்கு இந்த இருண்ட நிறம் இருப்பதற்கான காரணம் கீழே நிறைய தாவரங்கள் மற்றும் கருப்பு மண் உள்ளது.    

இவற்றில் இருந்து விலகி  நாம் பேயாழ்வார் கருங்கடல் நீருள்ளான் எனும் எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்வோம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம் இங்கே:

அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,

உவர்க்கும் கருங்கடல்  நீருள்ளான், துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்  பூணாரம்,

திகழும் திருமார்வன் தான்.

எம்பெருமான் எத்தகையவன் !  உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய், சிவந்த பவளம் போன்ற வாயையுடையளான பிராட்டியும், பல் வகையான ரத்னங்கள்  சேர்ந்த  திருவாபரணங்களும், ரத்ன  ஹாரங்களும்  விளங்கப்பெற்ற  திருமார்பையுடையனான எம்பிரான் - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.  அவ்வளவு சிறந்த  எம்பெருமானுக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிறார் பேயாழ்வார்.  

இன்று பங்குனி மாச அமாவாசை - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8.4.2024