To search this blog

Showing posts with label Novels. Show all posts
Showing posts with label Novels. Show all posts

Thursday, August 7, 2025

தூதுவளை !! Acharyar Swami Aalavandhar Sarrumurai 2025

Acaryan Swami Aalavandhar sarrumurai 2025

 


Tomorrow – Friday 8th of Aug 2025 is Pournami – it is Aadi Uthiradam – sarrumurai  vaibhavam of renowned Acarya – and something on - Solanum tirlobatum  (தூதுவளை)  !!! மருந்து கடைகளிலே தூதுவளை சாக்லேட் பார்த்து இருப்பீர்கள் !  - சுவைத்தது உண்டா ?    தாவரங்களுள் மருந்தாகப் பயன்படும் செடி வகைகளை போல சில கொடி வகைகளும் மருந்தாகப் பயன்படும்.   பற்றி ஏறுவதற்கு வசதியான இடம் இருப்பின், அழகாக வளைந்து நெளிந்து பற்றி ஏறும் கொடி வகையானது  தூதுவளை. 


If I were to add something - other than name this crime thriller has no relevance – yet for a change posting something on this murder that shook Madras in this post – hope my mature readers would not consider this a Crime !! 

Crime stories attract people.  Two old murder cases have not faded from Madras’ collective memory. One involved C. N. Lakshmikanthan, a brazen practitioner of scurrilous journalism, and the other, a small-time businessman and reportedly a womaniser of Casanova proportions.  The second murder was a sensational headline in The Hindu in Aug 1952 !!   

 $##$#$#$#$

Not all  would know or have  visited Kattumannarkoil  a panchayat town and taluk headquarters in Cuddalore district, extending over an area of 19.425 km2. The town is situated along 25 km South West of Chidambaram and lies on the Chidambaram - Coimbatore Highway and 25 km East of Srimushnam and a similar distance north-east of Gangaikonda Cholapuram. The entire road route from Sethiathoppu to Kattumannarkoil runs alongside the Veeranam Lake.   

Map pic from twitter page of TN Geography

நாளை  ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். **ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை** .   கஜேந்திர மோக்ஷம் கூட.  திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி, யானையின் துயரம் தீர அதனை முதலையிடம் இருந்து காப்பற்றிய வைபவம் கொண்டாடப் படும்.   இந்த சுப தினத்தில்  நம் சம்பிரதாய ஸ்தாபகர் -   ஓராண் வழி ஆச்சார்யர்களில் பிரபலர் ஸ்வாமி  ஆளவந்தாரின் சாற்றுமுறை.  ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், நமக்கு அளித்த அற்புத காவியம் "ஸ்தோத்ர ரத்னம்" - நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைத்துள்ள  பழமையான க்ரந்தம் இதுவே. .. ..    

சோழர்  குலம்  (Chola dynasty)  பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் முக்கிய வீர மன்னர் பரம்பரை.  நெற்பயிர்கள் அதிகமாக விளைந்த நாடு  எனவே 'சோழ வளநாடு சோறுடைத்து’  என்பது பழமொழி.  சோழ அரச பரம்பரையில், அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரிவர்மன் முதலாம் இராசராசசோழன்   புகழ் பெற்ற மன்னர்.  இவர் இடைக்கால சோழ அரசர்.  இவ்வரசு பரம்பரை :   விசயாலய சோழன்; ஆதித்த சோழன்; பராந்தக சோழன் ; கண்டராதித்தர்; அரிஞ்சய சோழன்; சுந்தர சோழன்; ஆதித்த கரிகாலன்; உத்தம சோழன்; இராசராச சோழன் (மாமல்லன்); இராசேந்திர சோழன்..

                                           மதுரையும், ஈழமும் வெற்றி கொண்ட  கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். இவர் இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது .  பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்  பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.  போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான்.  இவ்வரசன்  தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். 

விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான்.  1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது. 

அமரர் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க ‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார்.  அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர், குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம், அனுராதபுரம், தம்பள்ளை, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார்.   இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள் மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை.    அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி !! 

நாதமுனிகள் இல்லாமலிருந்தால் நமக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைத்திராது. சுவாமி நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஒன்று திரட்டியவர். இவருடைய புதல்வன் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துரைவர் எனப்படும் யாமுனாசாரியர்.    ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார்.  நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.  நம்முடைய தர்சனத்தில்ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர்.   

Sri Veeranarayana Perumal Kovil - Alavanthar Avathara sthalam – Kattumannar Kovil.

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில உள்ள கோவில் ஆளவந்தாரின் திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் ஆக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். யமுனைத்துறைவர்  தர்க்க சாஸ்த்ரத்திலிருந்து சிறப்பாக விளக்கி ஆக்கியாழ்வனை தோற்கடித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டினார். ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவருக்கு சிஷ்யரானார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.   ராஜ மஹிஷியும் அவருக்கு சிஷ்யை ஆனாள். ஆளவந்தாருக்கும் பாதி ராஜ்யம் கிடைத்து அவரும் அதை நிர்வாகம் செய்யலானார்.

                    வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற  ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில்,  மணக்கால் நம்பி  அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற  தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு,   நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக  ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி குலதனம் என்று ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.   

ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.  இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே. ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட. ஒவ்வொரு வருடமும் ஆடி  மாதம் உத்திராட நட்சத்திரத்தில் ஆளவந்தாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.  இவர் அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம்,  ஆகமப்ராமாண்யம், சதுஸ்லோகி -  ஆகியவை  வடமொழி நூல்கள்.   

ஆளவந்தார் தம் பக்தி மிகுதியுடன் எம்பெருமானை ஸ்தோத்திரம் செய்யும் பாசுரம் ஒன்று இங்கே : - அவர்தம் ஸ்தோத்ர ரத்னம் கிரந்தத்தில் இருந்து : - லோக விஷயங்களில் தமக்கு இருக்கும் வெறுப்பை கூறி - அவற்றை தம்மிடம் இருந்து நீக்கி ரக்ஷித்து அருள வேணுமென்னு பிரார்திக்கின்றார்.

ந தேஹம் ந ப்ராணாந் ந ச சுகமேஷாபிலக்ஷிதம்

நசாத்மாநம் நாந்யத் பிமபி தவ ேஷ்த்வ விபவாத்

பஹிர்பூதம் நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா

விநாசம் தத் ஸத்யம் மதுமதன விக்ஞாபநமிதம் 

எம்பெருமானே ! பரம்பொருளே !  -   உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை என்பது ஆளவந்தாரின் அற்புத பிரார்த்தனை.

In recent past – for  two years (2020 & 2021) there was no  purappadu on this thiruvavathara uthsavam due to Corona.   Tomorrow we would be blessed to have darshan of Acaryan  purappadu with   Sri Parthasarathi Emperuman – this time, since it was Gajendra moksham, it would be  Garuda sevai purappadu for Sri Parthasarathi.

யத்பதாம் போருஹத்யாந வித்வஸ்தாஸேஷ கல்மஷ |

வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம்   நமாமிதம் ||  

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவை காட்டி சத்தை அருளி, எல்லா அஞ்ஞானங்களையும் விளக்கி, என்னை ஆஸ்ரயித்த யாமுநாசார்யாரின் திருவடிகளை த்யானிக்கிறேன் ! 





Here are some photos of Alavanthar purappadu at Thiruvallikkeni in 2010 and the photos below are of present uthsavam at Avatharasthalm Kattumannar kovil – courtesy Ashtagothram Sriraman swami.







~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7.8.2025

PS :  now something about the murder case referred at the start – that of a  man in his early 40s, who  worked as sub-divisional officer at the Army Headquarters at Avadi, a man from Hindu Vysya community, who after discharge ventured into plastics business, which caught fancy those days  The articles were colorful, light, and not so expensive. His friend  Cunnan Chetty, gave him a small space in the frontage of his pen company for him to display the goods and conduct his business. Gem & Company drew many customers and it seemed a fine venue of business for the novelty of the day. Alavandar also had another line of business. Selling sarees on installments. The installment business was something new in Madras during that period. 

ஆளவந்தார் கொலை வழக்கு  தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலை வழக்கு. ஒரு   பேனா வர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை என அவரது முதலாளி எஸ்பிளனேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதற்கு மறுநாள் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் இந்திய-சிலோன் விரைவுத் தொடருந்தின் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றில் தலையற்ற உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.   கொலையுண்ட ஆளவந்தாருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுள் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்த தேவகி மேனன். தேவகி பின் அவரை விட்டு விலகி  பிரபாக்கர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஆளவந்தார் திருமணத்துக்குப் பின்பும் தேவகியை தொடர்ந்து  வற்புறுத்தி வந்தார். இதனால்  தேவகியும் பிரபாக்கரும் இணைந்து ஆளவந்தாரைக் கொலை  செய்தனர்.  இந்த பரபரப்பு வழக்கில்  நீதிபதி - குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஆளவந்தாரை தண்டிக்கவே  கொலை செய்தனர் என  குறைவான தண்டனையே வழங்கினார். பிரபாக்கருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தேவகிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

தூதுவளை.  : -    தூதுவளை கொடி  வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது. இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். தனது மெல்லிய தண்டு மற்றும் இலைகளில் சிறுசிறு முள்களைப் பெற்றிருக்கும் தூதுவளை. 

தூதுவளை, சுரம், இருமல், சளி போன்ற கப நோய்களைக் குணப்படுத்த, `சங்க கால தூதுவனைப்’ போல மகிழ்ச்சியுடன் தூது செல்லும் என்பது சிறப்பு. சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளம், தூதுவேளை ஆகிய வேறுபெயர்களும் இதற்கு உண்டு. நெய்யைக் காய்ச்சும்போது,   தூதுவளை இலைகளையும் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்தினால், நெய்யின் மருத்துவக் குணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். சளி, இருமல் போன்ற குறிகுணங்களைக் கட்டுப்படுத்த `தூதுவளை நெய்’ எனும் ஸ்பெஷல் சித்த மருந்தும் நமது பாரம்பர்யத்தில் உண்டு.   காச நோயாளர்கள் உட்கொள்ளும் மருந்துகளோடு தூதுவளையையும் சேர்த்து பயன்படுத்தும்போது விரைவாக நோயின் தீவிரம் குறைகிறதாம். காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில் குடிக்கும் தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சிப் பயன்படுத்தலாம். இதன் இலைச் சாற்றோடு, சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடிக்க சளி, இருமல் மட்டுமன்றி செரிமான உபாதைகளும் குணமாகும். 

Monday, May 19, 2025

Thiruvallikkeni Sri Varadharaja Perumal kuthirai vahanam 2025

Thiruvallikkeni Sri Varadharaja Perumal kuthirai vahanam 2025

 



How famous are you ? – what are your digital footprints ? – do you often dream of becoming a celebrity overnight !! 

 

சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ் ஸ்டாண்டில் பார்த்து அடுத்த அமாவாசைக்கு ஷூட்டிங்குக்கு வா” என்கிறார். இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெறுகிறார்கள்.  அம்மாதிரி நானும் பிரசித்தமானேன்.   என தொடங்கிய கதையை படித்து இருப்பீர்கள் !! 

யானைகளுக்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்தது குதிரை.  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோவிலில் சில வருஷங்களுக்கு முன்னர் வரை எப்போதும் ஒரு வெள்ளை குதிரை இருக்கும்.  ரேஸில் சிறப்பாக ஓடிய குதிரையை கோவிலுக்கு தானம் தந்து விட்டதாக ஒரு கர்ண பரம்பரை செய்தி.  இன்று மெரினா கடற்கரையில் குதிரை சவாரிக்காக சில குதிரைகள் உள்ளன.  சென்னை காவல்துறையில் குதிரை படை ஒன்றும் உண்டு.  

சுமார் 70 அல்லது 80 ஆண்டுகள் முன் கங்கனா  மண்டபம் பகுதியில் ஒரு குதிரை லாயம் உண்டு. அப்போதெல்லாம் ஒவ்வொரு ஊரிலும் இரயில் நிலையங்கள் முன்னர் பல குதிரை வண்டிகள் நின்று பயணம் செய்பவர்களை ஏற்றி செல்லும்.  கடைசியாக மாயவரத்தில் ஆற்று படுகையில் குதிரை வண்டியில் சென்றது ஞாபகம் உள்ளது.   திருவையாற்றில் அம்பி விக்ரம் பாடியது போல முன்னர் எந்த வண்டியும் செல்லவில்லை !!  சென்னை சென்ட்ரல் - பெரியமேடு பகுதியில் பல குதிரைகள், பெரிய வண்டிகள் நின்று இருக்கும் !!  நிற்க, குதிரைகளுக்கு இதிஹாச புராணங்களில், சரித்திரத்தில், பண்டைய போர்களில், மன்னர்கள், வீரர்கள் காலத்தில் சிறப்பான இடம் உண்டு !

In Greek mythology, the Trojan War was waged against the city of Troy by the Achaeans (Greeks) after Paris of Troy took Helen from her husband Menelaus, king of Sparta. The war is one of the most important events in Greek mythology and has been narrated through many works of Greek literature, most notably Homer's Iliad. The core of the Iliad describes a period of four days and two nights in the tenth year of the decade-long siege of Troy; the Odyssey describes the journey home of Odysseus, one of the war's heroes.   

**  Veerasimhan and Sasankan are the sons of a king. When Veerasimhan rides through a village, he meets a local dancer and they fall in love. At the palace, the king decides to abdicate his throne in favour of Veerasimhan. This enrages Sasankan, Veerasimhan's younger brother, who forms a gang of thieves; who embark on a crime spree.   

The horse (Equus ferus caballus) has evolved over the past 45 to 55 million years.  Horses' anatomy enables them to make use of speed to escape predators and they have a well-developed sense of balance and a strong fight-or-flight response.  Horses have significant place in history, especially battles and formation of kingdoms. 

North America is home to more horses than any other continent — over 19 million, according to some estimates. For most of human history, however, the Americas had no horses at all.   Archaeological evidence indicates that the genus Equus, which includes horses, donkeys, and zebras, evolved in the western hemisphere between 4 and 4.5 million years ago before spreading to Eurasia, only to disappear during a megafauna extinction event at the end of the Pleistocene.  Eurasia’s horses survived this extinction event, going on to influence the rise — and fall — of numerous civilizations. The genus’ millennia-long trip around the globe concluded in the late 15th century, when European explorers unknowingly returned the domesticated horse to its ancestral home.  

From here, horses went on to change life in the Americas just as they had in Eurasia. They enabled Hernán Cortés and other conquistadores to venture deep into the American heartland, where the animals provided a strategic advantage against the native populations. Horses also played an important role in local post-Columbian economies, which still revolve heavily around ranching.  

Trojan horse, huge hollow wooden horse constructed by the Greeks to gain entrance into Troy during the Trojan War. The horse was built by Epeius, a master carpenter and pugilist. The Greeks, pretending to desert the war, sailed to the nearby island of Tenedos, leaving behind Sinon, who persuaded the Trojans that the horse was an offering to Athena (goddess of war) that would make Troy impregnable. Despite the warnings of Laocoön and Cassandra, the horse was taken inside the city gates. That night Greek warriors emerged from it and opened the gates to let in the returned Greek army. The story is told at length in Book II of the Aeneid and is touched upon in the Odyssey. The term Trojan horse has come to refer to subversion introduced from the outside. Beginning in the late 20th century, the name “Trojan horse” was applied to deceptively benign computer codes that seem like legitimate applications but are written to damage or disrupt a computer’s programming or to steal personal information.  

A Trojan horse, or Trojan, is a type of malicious code or software that looks legitimate but can take control of your computer. A Trojan is designed to damage, disrupt, steal, or in general inflict some other harmful action on your data or network.  A Trojan is sometimes called a Trojan virus or a Trojan horse virus, but that’s a misnomer. Viruses can execute and replicate themselves. A Trojan cannot. A user has to execute Trojans. Even so, Trojan malware and Trojan virus are often used interchangeably.   

In Ponniyin Selvan of Kalki, when Vanthiya Devan is thinking of Nandini, the sounds of galloping horses disturbs his silence. Those flying horses raise a cloud of dust swirling like a mini tornado, and Vanthiyadevan recognizes  Parthiban Pallavan  astride.  

The book ‘History of Vijayanagar’ mentions of inscription discovered at Talugunda, Mysore in AD 1894 containing information about Haritaputrus of Manavyagotra.  A clan Mayurasarma goes to Kanchi, where he gets into dispute about the Pallava horses; is so enraged about the insult that he learns the art of using weapon.   Then there is the Pallava emperor Parameswaravarman 1, who ruled in the latter half of 7th Century ascending the throne after Mahendravarman II.  His reign was marked by revived conflicts with Chalukyas – his horse named ‘Atisaya’s valour’ is reportedly noticed in sculptural representation.  

The story of Veerasimhan  and Sasankan described earlier is -  movie Chandralekha, that made audience spellbound in 1948.  This    historical adventure film was  produced and directed by S. S. Vasan of Gemini Studios. Starring T. R. Rajakumari, M. K. Radha and Ranjan, the film follows two brothers (Veerasimhan and Sasankan) who fight over ruling their father's kingdom and marrying the village dancer, Chandralekha.  In the thrilling climax, huge drums are arranged in rows in front of the palace. Chandralekha joins the dancers, who dance on the drums. Sasankan is impressed with Chandralekha's performance but, unknown to him, Veerasimhan's soldiers are hiding inside the drums. As the dance ends, they rush out and attack Sasankan's men. Veerasimhan confronts Sasankan, and their lengthy sword fight ends with Sasankan's defeat and imprisonment. Veerasimhan releases his parents and becomes the new king, with Chandralekha as his queen.  

முதல் பாராவில் சொல்லப்பட்டது  - அற்புத எழுத்தாளர் சுஜாதாவின் கதை.  அந்த நாயகன் பிரபலமானது - அவரை ஒரு குதிரை கடித்ததால்.   என்னை ஒரு குதிரை கடித்ததால்!  குதிரையா?என்று வியப்புடன் கேட்கிறீர்கள் அல்லவா? உங்களுக்குச் சொல்கிறேன். முதலில் என்னைப் பற்றி. அப்புறம் குதிரையைப் பற்றி.  என்பேர் கிருஷ்ண சாமி அதை கிச்சாமி என்று சுருக்கி மனதில் ஒரு பிம்பம் ஏற்படுத்திப் பாருங்கள். அதேதான் நான். தொழில், தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படிதது, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு. மனைவி, குழநதை, மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான். குதிரை கடிக்கும் வரை! குதிரையும் அவ்வளவு பிரசித்தமில்லாத ஜட்கா வண்டிக் குதிரைதான்.

Moving away from all this – 18.5.2024; was day 8 of Sri Varadharajar Brahmothsavam  - at  Thirukachi, lakhs of devotees assemble during this grand brahmothsvam.  At Thiruvallikkeni divyadesam, Sri Varadharaja Perumal was astride   the beautiful gold horse -   and here are some photos of the purappadu at Thiruvallikkeni. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.
18.5.2025
 












  

Saturday, November 9, 2024

கடன்மல்லை பூதத்தார் பொன்னங்கழல் - Sri Boothathazhwar Sarrumurai 2024 : Periplus !?!?

 

கடன்மல்லை பூதத்தார் பொன்னங்கழல்  - Sri Boothathazhwar Sarrumurai 2024

மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?'

இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அருகில் வந்து கடற்கரைப்பக்கம் சென்றான். ஆயிரத்து இருநூறு வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான். ''காமிரா வேணுங்களா... நிக்கான், ஜப்பான்... அப்புறம் ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?" அவன் மௌனமாக இருக்க,  .. .. …  what could be the link to today and its significance to Srivaishnavas.




International tourists flock here - though it is often mentioned as ‘Mahabalipuram’ the connection is more with the Pallavas as the name Mamallapuram is derived  from Mamallan, or “great warrior”, a title by which the Pallava King Narasimhavarman I (630-668 AD) was known. It was during his reign that Hiuen Tsang, the Chinese Buddhist monk-traveller, visited the Pallava capital at Kanchipuram.  

பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர்கள் - எம்பெருமானின் புகழ் பாடி அவரை அடைவதை தவிர வேறொன்றும் நினையாதவர்கள்  - ஆழ்வார்கள்.  ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே ஒரே உயர்ந்த  தெய்வம் என்று  எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருந்தவர்கள், மயர்வற மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள்.  இவர்களில் பொய்கை, பூதம், பேய் எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள்.  இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல்  இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர்.  

 


 ~  have you had darshan at Thirukkadanmallai (most probably you have  visited this place as a tourist); in case, you had darshan, have you travelled to this place with the prime purpose of worshipping Emperuman at this divyadesam  and the Azhwar who was born at this sthalam  ?? Sri Sthalasayana Perumal Thirukovil is at Thirukkadanmallai ~ in case the name does not ring a bell – it is the  more famous  Mahabalipuram (simply Mamallapuram) known for its great architecture.   It is at this divyadesam our Boothathazhwar was born.  Thiru avathara uthsavam of Bootath Alwar gets celebrated in the month of Aippasi (Oct-Nov) on Avittam nakshathiram day.  The temple is one of the 32 Group of Monuments at Mahabalipuram that are declared as UN world heritage sites, but unlike others that are maintained by the Archaeological Survey of India, the temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

நாம் எதற்கெல்லாம் பெருமை கொள்வோம் ??  ~  பட்டியல் நீளலாம்.. ..  .. தம்மைப் போல் தவம் செய்தவர் யாரும் இல்லையென்று பெருமை கொண்டவர் நம் நாயகன் .. .. பெருமானின் இணையடிகளுக்குப் பெருமை வாய்ந்த தமிழால் தொடுத்த மாலையை அணிவித்தமையால் தாம் பெருந்தமிழனான பெருமையினை உடையவன் - : "பெருந்தமிழன் நல்லேன் பெரிது" என்றும்  பெருமிதம் அடைந்தவர் இவர் .. ..  

முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் நம் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை ஸ்தலத்தில்,  குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்களில் அவிட்ட நக்ஷத்திரத்திலே,  எம்பெருமானின்  கதையின் திருவம்சமமாய்  அவதரித்தவர். அவரது திருவவதார சிறப்பு நாள் இன்று  !!  (9.11.2o24) 

 



வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். எம்பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்   பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.  அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை. 

ஆழ்வார் அவதாரஸ்தல மண்டபம் - திருக்கடன்மல்லை ஸ்தலசயனத்துறையவர் திருக்கோயிலுக்கு எதிரே உள்ளது.  சாற்றுமுறை அன்று பெருமாள் கைத்தல சேவை பிறகு, ஆழ்வார், அவதாரஸ்தல மண்டபத்துக்கும் - ஞானப்பிரான் சன்னதியான திருவலவெந்தைக்கும் எழுந்தருள்வது விசேஷம்.   

                          Let us fall at the feet of Sri Boothath Azhwar and reach Emperuman by singing His glories and more specifically his prabandham ‘Irandam thiruvanthathi’ part of Iyarpa.  Here are some photos of Boothath Alwar and Sri Parthasarathi Emperuman taken today at  Thiruvallikkeni.    

புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668)   ஆட்சிக்கு வந்தான்.  இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராச்சியம்  வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. மாமல்லபுரத்து அற்புத சிற்பங்கள் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. 

இந்த பதிவின் ஆரம்ப வரிகள் :  ஆனந்த விகடனில் வந்த  -  மஹாபலி ( சிறுகதை) - நம் ஆசான் சுஜாதா எழுதியது.  அந்த இளைஞனுக்கும் ஒரு பேராசிரியருக்கு நடக்கும் சம்பாஷணை : 

"இவர்களுக்கா பல்லவச் சிற்பக்கலை பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?"  -  "ஏன்?"

"பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகத்திலும், ஹ்யுவான் சுவாங்கிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடத்துக்கு அசைவ உணவகத்தில் புரோட்டா தின்று, பிக்னிக் பெண்களைத் துரத்த வந்திருக்கும் இந்தத் தலைமுறை கலாசார மற்றது..."

"நீயும் இந்தத் தலைமுறைதானே?"-   -  "ஆம்... ஆனால், வேறு ஜாதி..."

அவர் அவனை நிமிர்ந்து பார்த்து, ''பெரிப்ளுஸ் பற்றி உனக்குத் தெரியுமா?"

"கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து இருக்கும் இந்தத் துறைமுகம் என்பதும், பல்லவக் கட்டடக்கலை பற்றியும் தெரியும்.."

 

That Sujatha reference made me search something and ended up with :  A periplus (lit. "a sailing-around") is a logbook recording sailing itineraries and commercial, political, and ethnological details about the ports visited. In an era before maps were in general use, it functioned as a combination of atlas and traveller's handbook.

 


The Erythraean Sea ("the Red Sea") was an ancient geographical designation that always included the Gulf of Aden between Arabia Felix and the Horn of Africa and was often extended (as in this periplus) to include the present-day Red Sea, Persian Gulf, and Indian Ocean as a single maritime area.  The Periplus of the Erythraean Sea  is a Greco-Roman periplus written in Koine Greek that describes navigation and trading opportunities from Roman Egyptian ports like Berenice Troglodytica along the coast of the Red Sea and others along the Horn of Africa, the Persian Gulf, Arabian Sea and the Indian Ocean, including the modern-day Sindh region of Pakistan and southwestern regions of India.   The lost port city of Muziris (near present day Kodungallur) in the Chera kingdom, as well as the Early Pandyan Kingdom are mentioned in the Periplus as major centres of trade, pepper and other spices, metal work and semiprecious stones, between Damirica and the Roman Empire. 

              According to the Periplus, numerous Greek seamen managed an intense trade with Muziris:  Then come Naura (Kannur) and Tyndis, the first markets of Damirica or Limyrike, and then Muziris and Nelcynda, which are now of leading importance. Tyndis is of the Kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris, of the same kingdom, abounds in ships sent there with cargoes from Arabia, and by the Greeks; it is located on a river (River Periyar), distant from Tyndis by river and sea five hundred stadia, and up the river from the shore twenty stadia.  The Periplus of the Erythraean Sea, 53–54

 
Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam !!  

~adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
9th Nov. 2024.