Triplicane's most
attractive golu @ Athanki Swami thirumaligai
அல்லிக்கேணி அற்புத கொலு - ஸ்ரீ அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை
https://youtu.be/V2zdgftYWfEvide
Triplicane's most
attractive golu @ Athanki Swami thirumaligai
அல்லிக்கேணி அற்புத கொலு - ஸ்ரீ அத்தங்கி ஸ்வாமி திருமாளிகை
https://youtu.be/V2zdgftYWfEvide
Aippaisi Sadayam 2026 ~ Sri Peyalwar sarrumurai
Sri Parthasarathi perumal purappadu with alwar to Peyazhwar
sannathi
: https://youtu.be/-MFLvMdgtWU
கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில் - புறப்பாடு - 11.3.2022 இரவில் எடுத்தது
குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயம்- குடந்தைக் கீழ்க்கோட்டம். இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 27ஆவது சிவத்தலமாகும்.அமுத
குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம்
வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயிலுக்காகத் திருநாவுக்கரசர்
அருளியிருப்பது ஆறாம் திருமுறை, 75-ஆம் பதிகம். இது திருத்தாண்டகம் என்னும் பண்ணில் அமைந்தது; பதிகத்தின் தொடக்கச்
சொற்கள் “சொன்மலிந்த மறைநான்கா றங்கமாகிச்” என்பவை. இதில் 10 பாடல்கள் உள்ளன. இத்தல மரம் - வில்வம். தீர்த்தங்கள்: சூரிய புஷ்கரணி,
சிங்கமுக தீர்த்தம், நாகதீர்த்தம்.
இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “குடந்தைக் கீழ்க்கோட்டத்தெங்கூத்தனாரே”
என்ற மகுடம் இடம்பெறுகிறது; இதனால் பதிகம் முழுவதும் தலத்தின் இறைவனான நாகேஸ்வரரின்
பெருமை மையமாகிறது : https://youtu.be/YgLpFup93ew
adiyen dhasan – S Sampathkumar
20.10.2026
.
Navarathiri
celebrations at Sri Rathnagireeswarar Thirukkovil Besant Nagar
https://youtu.be/t-lTqo7qrPA?si=_xsaJba8UA7nuTAD
While people celebrate Navarathri and other festivals grandly in places like Mylapore / Triplicane - many of my friends may not have seen villages and would be pleasantly surprised to see so many participating in Navrathri thayar purappadu – a typical village temple with less lighting, innocent devotees, things happening calmly – Sri Sundaravalli sametha Lakshmi Narayana perumal thirukkovil, Mamandur, near Dusi, Thiruvannamalai tk. [near Kanchipuram / Palaru] on way to vandavasi.
Navarathri 2026 celebrations at Dusi Mamandur village
Sri Sundaravalli thayar purappadu and oonjal
: https://youtu.be/BduO7grsTz4
Sri Parthasarathi
vidayarri - Trichur Brothers 2026
After the grand Chithirai Brahmothsavam for Sri Parthasarathi
Perumal at Thiruvallikkeni divyadesam , it is 7 days of rest called
‘Vidayarri’.
Vidaayaaerri is time for music too !! -
vidayarri (period of rest) for Sri Parthasarathi Perumal. Music
kutchery by renowned people have been arranged, coordinated by Sri
Parthasarathi Swami sabha. On day 3 of Vidaayarri today
(13.5.20263) is was grand performance by Trichur
Brothers.
திருவல்லிக்கேணியில் பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான்
ஸ்ரீபார்த்தசாரதி விடாயாற்றி' என இளைப்பாறுகிறார். இவ்வமயத்தில் இசைக்கச்சேரிகளும்
திருக்கோவிலில் நடைபெறுகின்றன. விடையாற்றி என்று பரவலாக சொல்லப்பட்டாலும் அது
"விடாயாற்றி" - ஆற்று-.1. Rest, repose, as relief from weariness; இளைப்பாறல். 2. That which
affords rest or relief; இளைப்பாற்றுவது. 3. Festivities within the temple following the main festival, பெரியதிருவிழாவை அடுத்து சுவாமிக்கு இளைப்பாறலாகக் கோயிலுக்குள்
நடைபெறும் உற்சவம். 'விடாய்' என்றால் தாகம்/களைப்பு, 'ஆற்றி' என்றால் ஆற்றுப்படுத்துதல்
(அ) களைப்பைப் போக்குதல்.
The
performers of the day Trichur Brothers,
Srikrishna Mohan and Ramkumar Mohan are
renowned Carnatic Musicians. Sons of veteran Mridangam Vidwan Shri Trichur R
Mohan, the brothers were exposed to Carnatic Music from a very tender
age. They trained under the late Neyyantikara Mohanchandran
for 10 years. They were titled "Trichur
Brothers" by HH Jagadguru Shankaracharya of Kanchi, Shri Jayendra Saraswathi
Swamigal.
The
duos hail from a traditional business family in Trichur known as the
"SitaRam Group". The brothers along with their family are currently
settled in Chennai. The duos are known for their uncompromising attitude
towards Bhavam (Bhakthi, or Spiritual quotient) and Pataanthara (Orthodoxy with
respect to the composers and their compositions). They also adopt a
unique style of Raga delineation where both of them exchange phrases, long and
short, in exploring the nuances of a Raga (Musical Scale).
Both
are qualified Chartered Accountants. The CA professionals also have
a band called ‘Anubhoothi’ which performs from Carnatic to
rock and jazz. They were further famous through the anthem for the Clean Ganga campaign ‘Namami Gange’ which garnered them national attention. Here is a short
video taken during their performance : https://youtu.be/JhbcUEWIBqY
My friend Carnatic critic Essel identifies this to be : a varnam in Shanmukhapriyā, and the video captures the muktāyi śvaras in the Charanam.
With
regards – S. Sampathkumar
நாம சங்கீர்த்தனம் ~ Navarathri celebrations
@Vasavi Parthas (by TKKNN
vysya charities)
15.10.2026 : https://youtu.be/wq3efc3oDqM
Sri
U.Ve. Dr. MA Venkata Krishnan Swami 72 (Purattasi visakham)
:
https://www.youtube.com/watch?v=dvm5nLTE03M
திவ்யதேசங்களில்
தொழுதல் மிகவும் உகந்தது. பல திருப்பதிகள் அருகருகே திகழும் இடம் திருநெல்வேலி.
இங்கே நவ திருப்பதிகளுள் ஒன்றாக திகழும் திவ்யதேசம் திருக் குருகூர் உள்ளது.
108 திருப்பதிகளுள் ஒன்றான
திருக்குருகூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம்
நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது.
நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். தாமிரபரணி
ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில்
அமைந்துள்ளது.
நமது
தென்னசார்ய சம்ப்ரதாயத்துக்கு மாசற்ற செம்பொன் விசதவாக் சிகாமணிகள் என்றும், ஆதிசேஷனுடைய
அவதாரம் என்றும், யதீந்த்ரரான இராமானுசருடைய மறுஅவதாரம் என்றும் புகழ் பெற்ற ஆச்சார்யர்
ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஐப்பசியில்
திருமூலத்தில் அவதரித்த ஸ்தலமும் இதே.
திருவாய்மொழி தனியனில் : - “திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்” - பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் (வண்பொருநல்) பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.
இங்குள்ள நம்மாழ்வாரின் விக்ரஹம் மதுரகவிகளால் தாமிரபரணி நீரை காய்ச்சி உருக்கி செய்யப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த 'பவிஷ்தாசார்யர்' சன்னதி பொறுப்பில் உள்ள மடம் 'ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் மடம்'. இம்மடத்தின் வர்த்தமான ஜீயர் சுவாமி- 41வது பீடாதிபதி - ,ஸ்ரீமத் பரமஹம்ச ரங்க ராமானுஜ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி இன்று திருவல்லிக்கேணி எழுந்து அருளினார்.
Of the Nava Thirupathi divyadesams, Thiruk Kurugoor is hailed as Azhwar Thirunagari, as it was here Swami Nammalwar was born. Madura Kavigal saw the leading light from Thiru Ayodhya and travelled all the way to Azhwar Thirunagari and identified Nammazhwar in the Puliyamaram.
Located in this holy place is the Thennacharya samprathaya Mutt – Sree Azhwar
Thirunagari Emperumar Mutt – the present pontiff of this Mutt His Holiness
Srimath Paramahamsa Ranga Ramanuja Emperumanaar Jeeyar did mangalasasanam at
Thiruvallikkeni divyadesam this morning.
Later he
visited the house of Dr U.Ve. MA Venkatakrishnan swami and blessed
devotees. At that time Thirumozhi
sevakalam was on at the place. Here is a video taken on the occasion.: https://youtu.be/hYY8ckYZ0WM
Thiruvallikkeni Sri Andal Neeratta uthsavam 2026
மாலே மணிவண்ணா பாசுரம் பின்புலத்தில்
Thiruppavai pasuram - Malae Manivanna
Voice of Kalaimamani GP Kamala : https://youtu.be/PMEo0IyfP-8
https://www.sampspeak.in/2014/05/jewels-of-triplicane-kalaimamani-smt-gp.html
Thiruvallikkeni Purattasi Krishna paksha Ekadasi 2026
Sri Parthasarathi Perumal purappadu with Mylai Sri Peyalwar
Nadaswara innisai : https://youtu.be/I6t7jep1wjM
.. .. and my friend, music critic Essel identifies this as :
“Sadā madini talatu gadarā”
Rāga: Gambhīravāṇi
Tāḷa: Ādi
Composer: Śrī Tyāgarāja
The
opening is given as:
sadā madini talatu gadarā
mudāspada nagajādhipatē
It
is a composition praising Lord
Śiva,
and the charanam ends with “tyāgarāja vinuta.”
It
has a deep,
dignified and somewhat majestic personality. It does not have
the immediately recognisable sweetness of Kalyani, Mohanam or Madhyamavati. Its
identity comes much more from its characteristic prayogas and treatment of the
swaras.
The
commonly given scale is:
Ārohaṇa:
S G₃ P M₁ D₃ N₃ S
Avarohaṇa:
S N₃ P M₁ G₃ R₂ G₃ R₂ S
Notice
something quite unusual: the ascent does not
simply go in the normal S R G M P D N S order. There is no
Rishabha in the ascent, while the descent introduces R₂ and has the distinctive G–R–G–R–S movement.
[Gaanapriya Foundation]
“Sadā
madini talatu kadara” is particularly interesting because this is one
of the very few compositions associated with Gambhīravāṇi. The
kriti is in Ādi tāḷa and
addresses Śiva.
sadā madini talatu kadarā
mudāspada nagajādhipatē
conveys: “Am I not always remembering You in my mind, O
Lord, the abode of bliss, O consort of Pārvatī?” and the charanam is packed with Śiva imagery — Digambara, destroyer of Antaka, bearer of
Ganga, wearer of the crescent moon, the expert dancer — finally
ending with “Tyagaraja
vinuta.”
“Sadā madini talatu” — traditionally
attributed to Tyagaraja, in Gambhīravāṇi.
Interesting !
Regards – S
Sampathkumar
7.10.2026
Thamizhthalaivan Thirumylai Sri Peyalwar
Thiruvallikkeni mangalasasanam today [6.10.2026]
Srisadagopam
/ Thiruparivatta mariyathai for Azhwar
: https://youtu.be/nn-7QY8RJrs
Aadhi
Badri ~
Adi Badri is the first of the Panch Badris. The
complex has around 16 temples that were built by the Gupta rulers between the
5th and 8th centuries AD.
The
Main temple of Sriman Narayana is distinguished by a raised platform in the
front, roofed in and leading to the small enclosure of the pyramidal form,
where the idol is enshrined.
Adi Badri is approachable from
Karnaprayag, 19 kms connected by a motorable road with Ranikhet,
Nainital and Ramnagar. Adi Badri Temple
complex showcases architectural brilliance, with a pyramidal raised platforms constructed during the Gupta period,
reflecting the artistic and cultural nuances of that era.
A short
video taken in 2019 : https://youtube.com/shorts/5HPO-MtO8IE
பஞ்ச பாண்டவர்கள் பரமபதம் ஏகிய கதை
எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் ஆசியுடன் குருக்ஷேத்திர யுத்தத்தில் பகைவர்களை அடியோடு நாசம் செய்து அரியணை கண்டா பாண்டவர்கள் - காலப்போக்கில் சில துயரங்களை எதிர் கொண்டனர். இறுதியில் ஹிமாலய பர்வதத்தை கடந்து அவர்கள் எம்பெருமான் உறைவிடத்தை நோக்கி நடந்தனர்.
Even in modern
days, a trip to Badrinath dham is arduous.
Sri Badrinath Dham —
Badari Vishal — is among the most reverred Vaishnava
kshetras, set high in the Garhwal Himalayas of Uttarakhand at about 3,133 metres, on the bank of
the sacred Alaknanda. Beyond Badrinath, is the
Mana village, touted as India’s first village, customary for people to go,
drink chai, and post on social media.
A few kilometers up - begins
the sacred trail traditionally associated with the Pandavas’ Mahaprasthan —
their final journey towards Swarga. The route past Bhim Pul and Vasudhara,
towards the high Himalayan region of Satopanth and the Swargarohini glacier,
evokes the timeless story of Yudhishthira’s ascent to heaven.”
Nestled in the Garhwal Himalayas of Uttarakhand, Mana is a picturesque mountain village situated about 3–4 km from Sri Badrinath Temple, at an altitude of approximately 3,200 metres. Located near the India–Tibet frontier, it has long been celebrated for its extraordinary natural beauty, ancient traditions and deep connections with Hindu mythology. The Uttarakhand government has designated it a Tourism Village. Beyond the village, the trail winds through the magnificent Himalayan landscape towards Vasudhara Falls and the remote Satopanth region, forever associated in popular tradition with the Pandavas' ascent to Swarga. Mana is thus much more than a scenic mountain hamlet. It is a place where the grandeur of the Himalayas, the sanctity of Badrinath and the timeless narratives of the Mahabharata converge — leaving the pilgrim with a profound sense of wonder and reverence.
Bhim Pul, a natural rock bridge over the
Saraswati River - . Bhima placed this
enormous rock across the river to enable Draupadi to cross. Beyond Mana, the trail leads towards
Vasudhara Falls and the remote Satopanth region, which is traditionally
associated with the Pandavas' ascent to heaven.
ஸ்வர்க்காரோஹணிக
பர்வம் (स्वर्गारोहणिक पर्व) என்பது வியாசர் அருளிய மூல மகாபாரதத்தின்
ஒரு பகுதி - 18-ஆவது, இறுதிப் பர்வம். மகாபாரதத்தின்
இறுதிப் பகுதியில், பாண்டவர்கள் தங்கள் அரசாட்சியைப் பரீக்ஷித்துவிடம் ஒப்படைத்துவிட்டு,
திரௌபதியுடன் உலக வாழ்வைத் துறந்து புனிதப் பயணமாகப் புறப்படுகிறார்கள். அவர்கள் இமயமலைப்
பகுதியைக் கடந்து, மேரு மலையை நோக்கிச் செல்லும் வழியில், திரௌபதியும் நான்கு பாண்டவர்களும்
ஒருவர் பின் ஒருவராக வீழ்கிறார்கள். இறுதியில் தர்மபுத்திரரான யுதிஷ்டிரர் மட்டுமே
தொடர்ந்து செல்கிறார்.
ஸ்வர்க்காரோஹணிக
பர்வம்:
யுதிஷ்டிரன் தனது மனித உடலோடு சொர்க்கத்திற்குச் செல்வதையும், அங்கு அவர் எதிர்கொள்ளும்
இறுதிச் சோதனைகளையும், இறுதியில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் அனைவரும் தங்களின்
மனிதப் பகைமைகளை மறந்து ஆன்ம வடிவில் இணைவதையும் விவரிக்கிறது.
Swargarohana Parva notes that after entering heaven, Yudhishthira
is frustrated to find people in heaven who had sinned on earth. He then asks
for a visit to hell and there he finds people who he thought were good and
virtuous on earth. He questions whether Gods were fair at all, whether virtue
during earthly life means anything ever and then in anger demands that he be
sent to hell so he can be with those people who were good, just, virtuous, who
he loved and who loved him. The Gods then remove the fake hell they had created
for show. Lord Dharma appears and says that this has been a third test of
Yudhishthira, and congratulates him for always standing up for justice, truth,
virtue and other aspects of Dharma.
மஹாபாரத இதிகாசம் - ஜனமேஜயன் வைசம்பாயனரிடம் உரைப்பதாக சொல்லப்படுகிறது. விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக்
குறித்துக் கேட்ட யுதிஷ்டிரன்}உலகை விட்டுச்
செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தி, தன சகோதரர்களுடன் கலந்தாலோசித்து யுயுத்சுவை மன்னன் ஆக்குகின்றனர். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் சகோதரர்களுடன் சேர்ந்து, பெரும் நுண்ணறிவைக்
கொண்ட வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, முதியவரான தங்கள் தாய்மாமனுக்கும் {வசுதேவருக்கும்},
ராமருக்கும் {பலராமருக்கும்}, பிறருக்கும் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையாக்கினான்.
தர்மனின் மகனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன்,
தன் ஆபரணங்களை அகற்றி, மரவுரிகளைத் தரித்தான். பீமன், அர்ஜுனன், இரட்டையர் மற்றும்
பெரும்புகழைக் கொண்ட திரௌபதி ஆகியோரும் அதே
போலவே மரவுரிகளையே உடுத்திக் கொண்டனர். ஐந்து சகோதரர்களும், ஆறாவதாகத் திரௌபதியும், அப்படி
நடை பயணம் மேற்கொள்ள ஒரு நாயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. பாண்டவர்கள் வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும்
மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர். ஹிமவானைக்
கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த
சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர். அனைவரும் வேகமாகச் சென்று
கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள் இப்படி இதிகாசத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இங்கே
உள்ள சிலைகள் - சஹதேவன், திரௌபதி, நகுலன், அர்ஜுனன், பீமன், தர்மன் என வரிசைப்படுத்தி
உள்ளன.
பெரும் கல்வி கற்றவனான சகாதேவன் பூமியில் விழுந்தான். யுதிஷ்டிரன் - சகாதேவன், ஒருபோதும் ஞானத்தில் தனக்கு
இணையானவரென ஒருவரையும் கருதவில்லை. அந்தக் குற்றத்தின் காரணமாகவே இந்த இளவரசன் {சகாதேவன்}
விழுந்தான்" என்றான். நகுலன் - அற ஆன்மா கொண்டவனாகவும், நுண்ணறிவு மிக்க மனிதர்கள்
அனைவரிலும் முதன்மையானவனாகவும் இருந்தான்.
எனினும், மேனியெழில் தனக்கு நிகராக எவரும் இல்லையென நினைத்தான்.
அது அவனுக்கு வீழ்ச்சி ! வெண்குதிரைகளைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும்,
பாண்டுவின் மகனுமான அர்ஜுனன், பகைவர்கள் அனைவரையும்
ஒரே நாளில் எரித்துவிடுவேன் என்று தன் வீரத்தில்
செருக்குக் கொண்டவனாக இருந்தது அவன் தவறானது.
பராக்கிரமசாலியான பீமன் அதிகம் உண்டு, பலம் குறித்துத் தற்பெருமை பேசியது தவறானது.
இப்படி
ஒருவர் பின் ஒருவராக மற்றவர் வீழ , யுதிஷ்டிரன்,
திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சென்றான். அவனுடன் அந்த நாயும் பின் தொடர்ந்தது.நீதிமானான
மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் பூமியில் விழுந்ததைக் கண்டு, தேவனிடம்
- "என் தம்பிகள் அனைவரும் கீழே விழுந்து
விட்டனர். அவர்களும் என்னுடன் வர வேண்டும். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, அவர்கள் அனைவரும்
என்னுடன் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை இளவரசியும் (திரௌபதியும்)
எங்களோடு வர வேண்டும். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்" என்றான்.
சக்ரன்
"உன் தம்பிகளை நீ சொர்க்கத்தில் காண்பாய். அவர்கள்
உனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டனர். உண்மையில், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்தே
அவர்கள் அனைவரையும் அங்கே காண்பாய். ஓ! பாரதர்களின் தலைவா, நீ துயரடையாதே என்றான்.
இதற்கு
மேல் தர்மன் - இந்த நாய் என்னிடம் மிகுந்த
அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இதுவும் என்னுடன்
வர வேண்டும். இதனிடம் நான் இதயம் நிறைந்த கருணை கொண்டிருக்கிறேன்" என்றான். இந்திரன்
"நாய்களுடன் இருக்கும் மனிதர்களுக்குச் சொர்க்கத்தில் எவ்விடமும் கிடையாது.
த சிந்தித்துச் செயல்படுவாயாக. நீ இந்த நாயைக்
கைவிடுவாயாக. இதில் கொடுமையேதும் இல்லை" என்றான்.
என்
மகிழ்ச்சியை விரும்பி நான் இன்று இந்த நாயைக் கைவிட மாட்டேன். அச்சமடைந்தவனையோ, என்னிடம் அர்ப்பணிப்புள்ளவனையோ,
என் பாதுகாப்பை நாடுபவனையோ, ஆதரவற்றவனையோ, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனையோ, என்னிடம்
வந்தவனையோ, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் பலவீனனையோ, உயிரை வேண்டுபவனையோ ஒருபோதும்
கைவிடமாட்டேன் என்பது என் உறுதியான நோன்பாகும். இத்தகைய ஒருவனை என் உயிர் போகும் வரை
ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்" என்றான் தர்மன். . "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின்
இந்தச் சொற்களைக் கேட்டு (நாயாக இருந்த) அறத் தேவன் மிகவும் நிறைவடைந்தவனாகப் சொன்னான். மன்னர்களின் மன்னா, நீ நற்குடியில் பிறந்தவனாகவும், நுண்ணறிவையும், பாண்டுவின்
நல்லொழுக்கத்தையும் கொண்டவனாக இருக்கிறாய். நாயைத் துறப்பதற்குப் பதில் தேவர்களின்
தேரையே நீ துறந்துவிட்டாய். உன்னுடைய கதி உயர்ந்ததும்,
தெய்வீகமானதுமாகும்" என்றான்
இந்த அற்புதமான காவிய நிகழ்வு பதரிகாச்ரமம் - மானா கிராமம், சரஸ்வதி நதி உருவாகும் வ்யாஸர் கோவில், பீமன் பாலம் அருகே சிலா வடிவில் உள்ளது. ஒரு சிறிய காணொளி இங்கே : [taken by me on 17.9.2026]: https://youtu.be/WFgtwJwtCZI
அன்புடன் - அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
தமிழ் பகுதி ... : திரு அருள் செல்வபேரரசன் - திரு.கிசாரி மோஹன் கங்குலியின்
முழு மஹாபாரதத்தை அற்புதமாக மொழி பெயர்த்துள்ள நூலில் இருந்து. அவருக்கு நன்றிகளும் ஒப்புகைகளும் !
It perhaps is the ultimate dream of a
Srivaishnavaite – darshan at the most holy Sri
Badrinath dham. It is not easy even in the modern World. As we travelled, the bus
would stop – one would find scores of
vehicle in a line (mostly disciplined !) – the gorges on the mountain offer a
very pleasant at the same time a fearsome view ! One could see river
flowing all the way – yet the vehicle passing on a ridge could evoke
fear.
In most Srivaishnava
temples, there is dwajasthambam and we start with prostration before the
kodimaram. This
post is not about dwajasthambam but about the holy flag that flutters atop
garbagraham at some temples and the hoisting of it.
At holy
Puri, for a pilgrim approaching Puri, the flag and Nilachakra can be seen from
afar, even before entering the temple. Traditionally, therefore, the distant
sight itself becomes a kind of first darśana — Jagannath's presence reaching the
devotee before the devotee reaches Him. Here - “the
daily ceremonial changing of the Patitapāvana Bana atop the Nilachakra of Sri
Jagannath Temple is a great spectacle.” “Every evening at Sri Jagannath Dham, a
hereditary sevaka climbs the soaring śikhara and ceremonially replaces the
sacred Patitapāvana
flag above the Nilachakra — a spectacular act of devotion performed high above
Puri.”
Sri Badrinath Dham — Badari Vishal — is among the most reverred Vaishnava kshetras, set high in the
Garhwal Himalayas of Uttarakhand at about 3,133 metres,
on the bank of the sacred Alaknanda.
The temple is dedicated to Sri Badarinarayana,
Sriman Narayana in a meditative posture,
and stands amid the great mountain setting associated with Nara
and Narayana. When
Narayana performed tapas here, Sri Mahalakshmi is assumed
the form of a Badari tree—a wild berry or
jujube tree—to shelter Him from the harsh Himalayan elements. Hence the Lord
became Badarinatha,
the Lord of Badari. The region is also traditionally regarded as the tapas-bhumi
of Nara–Narayana
Rishis.
In
daylight, one sees the bright temple, rushing Alaknanda and immense mountains
enclosing the valley. As evening descends, the character changes dramatically:
the sunlight disappears behind the mountains, temperatures fall quickly, and
the illuminated temple seems almost isolated in the vast darkness of the
Himalayas. For a pilgrim who has actually stood there after nightfall, “Dham”
begins to feel more appropriate than simply “temple.”
At Sri
Jagannath Temple, Puri, the flag-changing ceremony atop the Nilachakra
is a remarkable daily ritual. The temple flag,
commonly called Patitapāvana Bana,
is replaced every day, traditionally around sunset. The servitor climbs the
towering temple spire barefoot and without modern
climbing equipment, reaches the Nilachakra at the summit,
removes the existing flag and fixes the fresh one. The act is not treated as
ordinary hoisting and lowering of a national-style flag; it is a seva
to Lord Jagannath, carried out according to temple tradition.
Odisha Tourism even includes witnessing the evening “Flag Hosting ritual” as a
specific part of its Puri pilgrimage itinerary
Here is a short video - Jai Bolo Badrinath : https://youtu.be/NYs-PGG7BIY
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.9.2026
The Divyaprabandha
recital heard in the background of the video is Thirumangai Azhwar's pasurams on Thiruvathari
Asramam (Badrinath), recited by Dr. M. A. Venkatakrishnan, myself, P Lakshmi
Narasimhan and Dr. MA Madusudanan.
Ganapati Bappa ! Moraya
-
Vinayaka - getting
ready to reach homes and bless us all
Triplicane Big Street
corner
நம் சனாதன தர்மமும் ஹிந்து சமயமும் அற்புத
வாழ்வியல் நெறிகள். நம்மை செம்மைப்படுத்தி நெறிப்படுத்தும் இந்த
அற்புத தர்மத்தில் மிக சிறப்பான சடங்கு சம்பிரதாயங்களை நம் பூர்வர்கள் ஏற்படுத்தி
உள்ளனர். ஸ்ரீ வைணவ திருத்தலங்களில்
ப்ரஹ்மோத்சவம் சிறப்பானது. பெரிய வாகனங்கள், பூமாலைகள், அழகு வஸ்திரங்கள்,
ஒன்று கூடும் மக்கள் என பலப்பல !! .. ..
.. இது எம்பெருமானுக்கு அற்புத கைங்கர்யம் செய்யும் அர்ச்சர்களுக்கு மரியாதை எனும்
சிறப்பு ஏற்பாடு பற்றிய பதிவு.
திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு
பிரம்மோத்சவங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம் ~
சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக
எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த
ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு
நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு ஆனி மாதத்திலே பிரம்மோத்சவம். கொரோனா காரணமாக 2020ல் உத்சவங்கள் நடைபெறவில்லை.. ..
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோத்சவம் பத்து நாட்கள் நடைபெறுகிறது. பத்து நாட்கள் என்று சொல்லப்பட்டாலும், - உத்சவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு 'செல்வர் கொத்து’ எனும் செல்வர் உற்சவம் புஷ்ப பல்லக்குடன்
துவங்குகிறது. அடுத்த நாள், அங்குரார்ப்பணம். உத்சவ கால தொடக்க நாளில் 'த்வஜாரோஹணம்' - கோவில் வாசலில் நுழைவாயிலை கடந்து உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. முப்பது முக்கோடி தேவர்களையும் வருவித்து, ஆவாஹனம் செய்து - தினமும் வாகன புறப்பாடு முன்பே - விஷ்வக்சேனர் சென்று எட்டு திக்கிலும் தேவதைகளுக்கு பலி சாதிக்கப்பெற்று உத்சவம் நடக்கிறது. பல வாஹனங்களில் - தர்மாதி பீடம், கருட வாஹனம், அம்ச வாஹனம்,
சூர்யா சந்திர ப்ரபைகள், ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்கள் என ஒவ்வொரு வேளையுமே ஒவ்வொரு
சிறப்பு. திருத்தேர் அதி விசேஷம். ஒன்பதாம்
நாள் காலை ஆளும் பல்லக்கில், பெருமாள் கணையாழியை தேடும் போர்வை களைதல் முடிந்து, ப்ரணயகலகம்
'மட்டையடி’ என கொண்டாடப்பட்டு, இரவு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு முடிந்து, கொடி இறங்குகிறது.
பத்தாம் நாள் காலை புறப்பாடு கிடையாது. ஸ்ரீ பார்த்தசாரதி, ஆண்டாள் ஏக பீடத்தில், திரு தெள்ளியசிங்கர், சக்கரவர்த்தி திருமகன், ஸ்ரீ வரதர், ஸ்ரீ வேதவல்லி சமேத மன்னாதர் ~ மற்றும் அனைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளப்பெற்று - த்வாதச ஆராதனம் சிறக்கிறது. பத்து நாட்கள் வீதிதனிலே - முதலாயிரம், இரண்டாவதாயிரம் (திருமொழி); இயற்பா சேவிக்கப்படுகிறது. பத்தாம் நாள் - நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
சேவிக்கப்படுகிறது. இரவு வெட்டிவேர் தேர் எனும் சிறிய திருத்தேரில் புறப்பாடு
நடக்கிறது. புறப்பாடு முடிய இரவு சுமார் 10.30 மணி ஆகிறது. ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் உள்ளே எழுந்தருளி, பட்டர் சப்தாவரணம் நடத்துகிறார். உத்சவ கால விவரணங்கள் நம் முன்னோர்களால் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவில் - ப்ரம்மோத்சவத்தை காப்பு கட்டிக்கொண்டு
சிறப்புற நடத்திய பட்டருக்கு மரியாதை. திருக்கோவில்
திருச்சின்னங்கள், திருக்குடைகள், அத்யாபகர் ஸ்வாமிகள், பரிஜனங்கள் கூட, பட்டரை அவர்
தம் திருமாளிகைக்கு சென்று அங்கே வேத விண்ணப்பத்துடன்
இவ்விழா முடிவடைகிறது. இவ்வருடம், சிறப்புற
நடந்தேறிய ப்ரம்மோத்சவத்தின் முடிவில் – 26.4.2022 நள்ளிரவில் பெரியமுறை மிராசுதாரர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர் சுவாமி மரியாதை வைபவத்தின்
போது அடியேன் எடுத்த ஒரு குறுங்கானொளி இங்கே.
: https://youtu.be/by5sIXGwTCw
Here is a short video taken by me on 26.4.2022 depicting Battar maryathai for Periyamurai Mirasu Sri Parthasarathi Battar. Incidentally with this Uthsavam Sri Parthasarathi Battar had performed dwajarohanam 50 times ! which is indeed a significant accomplishment.
~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Mamandur Veeravali Srinivasan Sampathkumar