To search this blog

Showing posts with label Ornaments. Show all posts
Showing posts with label Ornaments. Show all posts

Tuesday, July 28, 2026

Thakkankulam Sri Varadharajar muthangi Samarpanai

 

Muthangi Samarpanai for Sri Varadharajar @ thakkankulam, Sholinghur

 


புகழ்பெற்ற திவ்யதேசங்களிலே சோழசிம்ஹபுரம் [எனும் ஷோலிங்கர்]  ஒரு அற்புத திவ்யதேசம்.  இது மலைகளில் அமைந்துள்ளது.  கடிகாச்சலம் என பெயர் பெற்ற இந்த திவ்யதேசத்தில் ஒரு நாழிகை வாழ்ந்தாலே எல்லா நன்மையையும் பயக்கும்.  பெரிய மலையில் (சுமார் 1300 படிகள் மேல் ஏறிச்சென்று சேவிக்க வேண்டும்) எம்பெருமான் - சங்கு சக்ரதாரியாக யோக பீடத்தில் யோக ந்ருஸிம்ஹனாக சேவை சாதிக்கின்றார்.  சிறிய மலையில் யோக நிஷ்டையில் சிறிய திருவடியும் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.  உத்சவர் அக்காரக்கனி எம்பெருமான் (ஸ்ரீ தக்கான்) கொண்டபாளையம் ஊரில் அமர்ந்துள்ளார்.

இவ்வூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  தக்கான் குளம் மிகவும் பிரசித்தி.  ஸ்வாமி முதலியாண்டான் திருவம்சத்தில் அவதரித்த ஸ்வாமி ஸ்ரீ தொட்டையாச்சார்யார் இந்த திருத்தலத்தில் அற்புதமான கைங்கர்யங்கள் செய்து வந்தார். திருக்கச்சி ஸ்ரீதேவப்பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த இவருக்கு, ஒரு சமயம் - திருக்கச்சி தேவாதி ராஜனே கருட வாகனத்தில் பறந்து வந்து இங்கேயே காட்சியளித்தது சிறப்பான வைபவம்.   

திருக்கச்சி ப்ரஹ்மோத்சவ வைபவத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் - ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று சிறப்புற  வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். எம்பெருமானின் வாகனமான பெரிய திருவடி கருடாழ்வார் 'ஸ்ரீமன் நாரணனே' பரம்பொருள் என விளக்கும் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார்.  இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்  





மூலவராக இருக்கின்ற கருடன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம், காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில் ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச் சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது.  இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவில் நம் தொட்டையாச்சார் பரம்பரையினரால் சிறப்புற கைங்கர்யங்களுடன் மிளிர்கிறது.  சில ஆண்டுகள் முன்னர் நம் ஆச்சார்யரால்    இந்த திருக்கோவிலில் புனருத்தாரணம் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம் சிறப்புற நடைபெற்றது.  ஸ்ரீ உ.வே. கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டையாச்சார் சுவாமி வம்சத்தினரே இத்திருக்கோவிலின் பரம்பரை  ஆதீன  அறங்காவலர்கள்.

இந்த திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் உற்சவருக்கு அழகான வேலைப்பாடுகள் கொண்ட  முத்தங்கி, இன்று (25.7.2026)   திரு கோபி குடும்பத்தினரால்   நமது ஆச்சார்யர் மூலமாக சமர்ப்பணம் செய்யப்பட்டு, சகஸ்ர தீப அலங்கார சேவை மிக சிறப்புற நடைபெற்றது.  இந்த வைபவத்தின் சில படங்கள் இங்கே







ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !! 

 

adieyn  Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

 

 

Friday, July 17, 2026

Sholinghur Thakkan Emperumanukku thiruvabaranangal samarpanai 2026

 

Thirukadigaipathi Thakkan Emperumanukku thiruvabarangal  Samarpanai 2026

சோழசிம்ஹபுரம் (சோளிங்கர்)  108 திவ்யதேசங்களில் மிகவும் சிறப்புமிக்க, இயற்கை எழில் சூழ்ந்த புண்ணியத் திருத்தலம். இத்திருத்தலத்தில் பெரியமலை, சின்னமலை, மற்றும் கொண்டபாளையம் திருக்கோவில் என மூன்று முக்கியமான திருக்கோவில்கள்  உள்ளன.


சுமார் 450 அடி உயரமுடைய பெரியமலையில், மூலவராக ஸ்ரீ யோக நரசிம்மர் யோகாசனத்தில் அருள்பாலிக்கிறார். அவர் சாளகிராம மாலை அணிந்து, சதுர்புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியிருப்பதோடு,   இரண்டு கரங்கள் ஆழ்ந்த யோக தியான திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சின்னமலையில், ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் யோக திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருக்கோவிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருச்சன்னதி அமைந்துள்ளது. அந்தச் சன்னதிக்கு முன்பாக, ஸ்ரீ பக்தோசிதர் எனப் போற்றப்படும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், தக்கான், அக்காரக்கனி எம்பெருமான் ஆகிய திருநாமங்களுடன் பக்தர்களால் ஆராதிக்கப்படுகிறார். "தக்கான்" என்பது, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றத் தகுதியும் கருணையும் உடையவர் என்ற பொருளை உணர்த்துகிறது. "அக்காரக்கனி" என்பது, இனிமை நிறைந்த அமுதமாகிய எம்பெருமானின் பேரருளைக் குறிக்கும் திருநாமமாகும்.

இந்தப் புனிதத் திருத்தலத்தின் பெருமையைப் போற்றி நம்மாழ்வார், பேயாழ்வார், மற்றும் திருமங்கையாழ்வார் ஆகிய ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். கடிகைத் தலத்து யோக நரசிம்மப் பெருமானின் அருளால், பக்தர்களின் மனக்கவலைகள் நீங்கி, அவர்கள் விரும்பும் நலன்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது தலைமுறைகளாக நிலைத்து வரும் நம்பிக்கையாகும்.

சோளசிங்கபுரம் தொட்டையாச்சார்யார் எனும் மஹாசார்யர் இந்த திருத்தலத்தில் அற்புத கைங்கர்யம் செய்து எழுந்தருளி இருந்தார்.  அவர் தம் திருவம்சத்தில் இப்போது .  நமது வர்த்தமான ஆசார்யர் - ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம் கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன் ஸ்வாமி பற்பல கைங்கர்யங்கள் செய்து வருகிறார்.

இன்று காலை (ஜூலை 17 - ஆடி வெள்ளி - மகம் நக்ஷத்திரம்) ஸ்ரீ அக்காரக்கனி எம்பெருமானுக்கு உபய நாச்சிமார்களுக்கும் - நமது "கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சிஷ்ய ஸபை' சார்பில், நமது வர்த்தமான ஆச்சார்யரால் - வெள்ளி மீது தங்க முலாம், வண்ண கற்கள் இழைத்த பதக்கங்கள் மூன்றும், அதே போன்று வெள்ளியில் தங்க முலாம் பூசிய நீண்முடிகள் (திருக்கிரீடங்கள்) மூன்றும் சமர்ப்பிக்கப்பட்டன.




திருவாபரணங்களின் படங்களை இங்கே காணலாம். 

 

 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி 

எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து,திருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே ***  ***  

 

adieyn  Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

17.7.2026

 

Saturday, January 3, 2026

Sri Parthasarathi Perumal Rathnangi - Irapathu 5, 2026

 

Thiruvallikkeni Irapathu 5 – 2026

 


Adhyayana Uthsavam is for Swami Nammalwar.  Here is Sri Parthasarathi Emperuman Rathnangi sevai as seen in the eyes of Azhwar (also see Azhwar’s muthu kondai)
 
3.1.2026

Saturday, July 5, 2025

Thiruvallikkeni Thelliya Singan - Simha vahana pathi ula 2025

 


Thiruvallikkeni Aani Brahmothsavam 2025

Sri Azhagiya Singar simha vahana purappadu – pathi ula – Rajamudi kireedam


Thursday, January 9, 2025

Thirumylai Madhavar Nachiyar thirukolam 2025

என் நலனும்  என் நிறைவும் என் சிந்தையும்

என் வளையும் கொண்டு என்னையாளுங் கொண்டு,

 


(என்னுடைய அழகையும், என் அடக்கத்தையும், என் நெஞ்சையும், என் கைவளைகளையும் எம்பெருமான் அபஹரித்துக் கொண்டதுமன்றி -என்னை அடிமையாகவும் கொண்டான்) - அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க, என்னுடையவற்றை அவர் கொள்ளைகொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! 

திருமங்கைமன்னன் திருநெடுந்தாண்டகம் - மின்னிலங்கு திருவுருவும்  பாசுரம்

 


திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாள் நாச்சியார் திருக்கோல அழகும், அவர்தம் வளையலும், திருக்கரங்களில் அழகு கிளியும் - பகல்பத்து சாற்றுமுறை சாற்றுப்படி அழகு !

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
9.1.2025

Friday, November 1, 2024

new Thura pathakkam samarpanai ~ Thiruvallikkeni

என்னே ஒரு திவ்யமான நாள் இன்று 1.11.2024.  ஸ்வாமி மணவாள மாமுனிகள் உத்சவத்தில் 6ம் நாள்.  அமாவாசை தினம்.  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கண்ணபிரான் - அற்புத கிரீடங்கள் அணிந்தவன். இன்று மல்லிகை சரங்களால் ஆன கொண்டை மீது சிகப்பு பட்டு சாற்றின சிகத்தாடை.  நேர்த்தியான திருவாபரணங்கள், தங்கம், வைரம், வைடூரியம் என சிறப்பு வாய்ந்த மாலைகள்.  கொண்டையில் சந்திர, துரா  பதக்கங்கள்,  ஜாஜ்வல்யமான திருவாபரணங்கள் - என அற்புதமான சாற்றுப்படி.    பக்தர்கள்  உஜ்வலமான நிறமும், சூரியன் போன்ற ப்ரகாசத்தையும் கொண்ட ‘கடல் வண்ணன்‘ எம்பெருமான் சிறப்பான தரிசனத்தை காணும் பேறு பெற்றனர்.

 


 

Jewels  are attractive – the ones that readily come to mind are the ones made of Gold, Silver, embedded with Diamond, gemstone and the like. India's jewellery space has had a monumental year with h the Ambani wedding serving some of the biggest baubles the world has seen.  We often hear of ‘Jewellery and Ornaments’ – often used interchangeably.    

An ornament is a decorative item used to enhance the appearance of an object, space, or individual. It can be made from various materials and serves primarily an aesthetic purpose.  Jewellery specifically refers to decorative items worn on the body, typically made from precious metals and gemstones.   Here is something on Jewels. 

Rolled gold is a hybrid material, consisting of a thin layer of gold that's mechanically bonded or heat-fused to one or both sides of a base metal (often brass or copper), then rolled out into sheets to create jewelry.  This type of layered gold was patented in England in 1817 and it became a prime source for semi-precious and better-quality costume jewelry in the Victorian era.  

Pyrite (also known as fool's gold) is a shiny, metallic mineral that is a form of iron. Marcasite stones come from pyrite.  Peweter is an metal alloy that is composed mostly of tin combined with lead, antimony, bismuth, copper, and/or silver.  When pewter is polished it has a silvery luster. Most pewter is over 90 percent tin.  Ever heard of  Padparadscha sapphires  !  a rare pink-orange variety of corundum or the synthetic equivalent. These gems are mined in Sri Lanka and are usually heat treated to improve and intensify the color.   

Pleochroism is the property of having more than two colors, especially when viewed from different angles. In pleochroic minerals, a single stone will show many colors (in the case of Iolite, violet-blue, light blue, and yellow-gray will be visible).  Peking (Beijing) glass was first made in China in the late 1600's, during the Quing Dynasty, when a German priest introduced glass-making techniques to the Imperial court. Early Peking glass was made to imitate porcelain, later,  an overlay technique was developed in which two (or more) layers of glass are fused together, and then the upper layer(s) are partially carved away, creating a multi-colored bas relief   

Stop !  - no article on Jewel types … but on the Thura pathakkam worn by Sri Parthasarathi Emperuman during today’s purappadu at Thiruvallikkeni. 

 


This exquisite masterpiece embedded with lab grown diamonds costing Rs.15 lakhs+ was today dedicated to Emperuman by  Thiruvallikkeni  Adhyapakar Sri Thirumalai Ananthanpillai  Bakthisaran.  TA Bakthisaran recently retired from United India Insurance Co after close to 4 decades of service and has been an Adhyapakar for close to 5 years now.  Above is close up of Sri Parthasarathi on Deepavali purappadu yesterday and below are the ones  taken today with ‘thura pathakkam’ prominently visible.

 




Appreciate your dedication and kainkaryam “Bakthi”

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.11.2024. 
 
PS : Me & Bakthi studied together in Hindu High School and got into Insurance field in the same year – 1985. 


Monday, October 28, 2024

Sri Parthasarathi Perumal Pandian kondai 2024

 


Acaryar Swami Manavala Mamunigal uthsavam day 2 – 2024

Sri Parthasarathi Emperuman Pandiyan kondai




Wednesday, September 18, 2024

Thiruvallikkeni Pavithrothsavam 4 - 2024

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் திருப்பவித்ரோத்சவம் - தினமும்  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருவீதி புறப்பாடும், யாகசாலை, திருவாய்மொழி கோஷ்டி என சிறப்புற பரிமளித்து வருகிறது.  16.9.2024 அன்று இவ்வுத்ஸவத்தில் நான்காம் நாள்.



திருவல்லிக்கேணி  எம்பெருமான்   ஸ்ரீபார்த்தசாரதி - ஸ்ரீ கண்ணன், பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரத்யம் பண்ணினவன். ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒரு அற்புதம்.  எம்பெருமான் இடையனாக, பலப்பல கஷ்டங்களுக்கு நடுவே நாளொரு மேனியும் பொழுதொரு  அற்புத லீலைகளுமாய் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான்.  யசோதாபிராட்டியும் மற்றைய ஆயரும் கொஞ்சி குலாவி பாலூட்டி சீராட்டி கண்ணனை வளர்த்தனர்.  கண்ணனும் பலராமனும்  “காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி“ என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள்தோறும் திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே சென்று வந்தான்.  அத்தகைய மணிவண்ணன்,   யசோதை தன்கையிலும் தடி வைத்துக்கொண்டிருந்தாளாகையாலே அதனைக் கண்டு அஞ்சி ஓடிப்போய் விடுவனோ வென்று சங்கித்து, பிரானே! நான் அது செய்யகில்லேனென்கிறாள். என்கையில் கோலுள்ளது உண்மைதான், ஆனால் இது கொண்டு காரியங் கொள்ளும்படியான வன்மை எனக்கில்லை காண் என்கிறாள்.




இதோ கலியன் திருமங்கை மன்னனின் வார்த்தைகளில் ஒரு பாசுரம். : -

உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்

நொந்திட மோதவுங்கில்லேன்  நுங்கள்தம்   ஆநிரையெல்லாம்

வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண

அந்தியம் போதங்கு நில்லேல்!  ஆழியங் கையனே வாராய்.

 

திருவாழியினால்   அழகு பெற்ற   திருக்கைகளை உடையவனே! எங்கள் கண்ணபிரானே !  நீ செய்கிற தீமைகளைக் கண்டால், உங்கள் பிதாவாகிய நந்தகோபர் சீற்றம் கொள்வார்.  [யசோதையாகிற] நானோ, என் கையிலுள்ள கொம்பினால் உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன்,  உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம்  காடுகளில் மேய்ந்து திரிந்து,  மீண்டு வந்து ஊர்க்குள்  புகும்போது ஆகாசத்திலுள்ள தேவதைகள் கண் எச்சில் படுமாறு  காணும் மாலைப்பொழுதிலே  நாற்சந்தியிலே நிற்கவேண்டா, என்னருகே வந்திடாய் என யசோதை சீராட்டுகிறாள்.

அத்தகைய அழகிய மணிநிறக் கண்ணபிரான் அற்புதமான திருவபிஷேகம், மலர் மாலைகள், திருவாபரணங்கள், பதக்கங்கள், யக்னோபவீதம்,   திருபவித்ர மாலைகள்  அணிந்து காட்சியளிக்கும் சில படங்கள் இங்கே. 

Here are some photos of Sri Parthasarathi perumal purappadu – Pavithrothsavam day 4 at Thiruvallikkeni on 16.9.2024.  
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 












Tuesday, September 17, 2024

Thiru Pavithrotsavam Thiruvallikkeni 5- 2024: Respondentia Bonds !!!

 

முத்துக்களோ, வைரங்களோ, நன்பொன்னோ  ~ வேறு ஏதும் விலை மிக அதிகமான பொருளோ ? - நமக்கு எதிலே நாட்டம் ?? ஐயம் கிஞ்சித்தும் உளதோ ??  :  சுவாமி நம்மாழ்வாரின் வைர வரிகள் :

 



*பெருங்கேழலார் தம்  பெருங்கண் மலர்ப்புண்டரீகம்  நம் மேல் ஒருங்கே பிறழுவதே **   ~  அன்று  பிரளய  வெள்ளத்திலழுந்தின பூமியை மீட்டு எடுத்த மஹாவராஹரூபாயமயானவர்  தம்முடைய பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை,தன்னை எம்பெருமான் குளிர நோக்கினமை கூறியவாறு,  நம்மேல் வைத்த கடாக்ஷத்தை பற்றி மட்டுமே பேருவகை கொள்தல் நலம். 

 

The history of Chennai, is far older than British settlements, the  black town area came to be known as George Town from 1911 in honour of  King George V when he was crowned,  the Emperor of India.  The Western part of George Town is the Muthialpet area, traversed by couple of  roads running from Madras High Court to Clive Battery, nearer Royapuram Railway.   One among the many lanes is  Pavalakkaran Street housing Sri Venugopala Temple.  It was once the place where diamond and coral trade flourished.  

The Jews imported corals, both in the form of beads and in rough. The place in Muthialpet where they lived was known as Pagadalpet [Coral-town] dating back to 1700s.   A book titled – ‘The English Gentleman Merchant at Work: Madras and the City of London 1660-1740’ by Soren Mentz, mentions that the financial crisis affecting the English market even ruined some of the private merchants in Madras, through respondentias**, as they suffered financial losses when the Captains were declared bankrupt.  After a voyage to Madras in 1721, Captain Martin was declared bankrupt and private merchants like John Adams lost their investment.




 

 

Pearls are attractive.  Palliative care is an approach, an ethic, a multi-disciplinary sub-speciality, not just a new element that can be added and stirred into health systems. Pearl jewellery that glitters needs to be taken care of nicely.   Thousands of miles away, a couple of years ago, two out-of-town jewelry makers who were selling their work at the “Art in the Pearl” festival in Northwest Portland claimed that  someone stole $300,000 of their inventory from the trunk of their car.  It was reported that the woman and her friend  had made a 10-minute stop at a store after the festival closed for the day Saturday. While the pair were in the store, someone opened up their trunk and made off with black jewelry bags containing years’ worth of handmade work,  it was claimed.  The artisan added that some of the stolen items took her weeks to craft -- and that one of the missing necklaces took her more than 200 hours to make. May not be of any interest to us ~ but this dress adorned by Emperuman, made of Pearl [Muthangi] certainly does. On day 5 of annual Pavithrothsavam at Thiruvallikkeni, on 17.9.2024 Emperuman adorned Muthangi. 

 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இன்று 17.9.2024 ஐந்தாம் நாள் புறப்பாட்டின் போது ஸ்ரீ பார்த்தசாரதி முத்தங்கி அணிந்து அற்புத சேவை அளித்தார். 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar  

respondentia  bond :  respondentia bond means any instrument securing a loan on the cargo laden on board a ship and making repayment contingent on the arrival of the cargo at the port of destination;  while   bottomry, or bottomage, is an arrangement in which the master of a ship borrows money upon the bottom or keel of it, so as to forfeit the ship itself to the creditor, if the money with interest is not paid at the time appointed at the ship's safe return