To search this blog

Showing posts with label Idols. Show all posts
Showing posts with label Idols. Show all posts

Sunday, November 17, 2024

Astral Vulture Crimson Plumage ~ கருட சேவை.

Genshin Impact fans have plenty to look forward to with the proposed  release of Version 5.2 on Nov 20, 2024. There are four powerful weapons added in this update, with one being offered for free, and it will depend on flagship events for the other three. These weapons would  redefine character builds, hosting great potent effects and tailored bonuses both for signature users and flexible team compositions.

 


One among them is : ‘Astral Vulture's Crimson Plumage (5-Star Bow)’ - tailored for Chasca, Anemo characters make good combinations with it, to trigger Swirl reactions.  Genshin Impact is a 2020 action role-playing video game.  The game features an anime-style open world environment and an action-based battle system using elemental magic and character-switching. A free-to-play game monetized through gacha game mechanics, Genshin Impact is updated regularly using the games as a service model; it was originally released for Android, iOS, PlayStation 4, and Windows, followed by PlayStation   with an Xbox Series X/S version coming in November 2024.

 

Genshin Impact takes place in the fantasy world of Teyvat, home to seven nations, each of which is tied to a different element and ruled by a different God (archon). The story follows the Traveller, an interstellar adventurer who, at the start of the game, is separated from their twin sibling after the two land in Teyvat. Thereafter, the Traveller journeys across the nations of Teyvat in search of the lost sibling, accompanied by their guide, Paimon. Along the way, the two befriend myriad individuals, become involved in the affairs of its nations, and begin to unravel the mysteries of the land.

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதலங்களில் பிரம்மோத்சவத்தின் முக்கிய விழா - கருட சேவை.  திருவல்லிக்கேணியில் ப்ரஹ்மோத்சவத்தில் மூன்றாம் நாள் காலை - எம்பெருமான்  கருட வாகனத்தில் எழுந்து அருள்கிறார்.   கருடன் ஸ்ரீமன் நாரணனின்  வாஹனம், நித்யஸூரி, எப்போதும் அவருடனே இருப்பவர். இவருக்கு  ‘பெரிய திருவடி’ என திருநாமம்.  

கொற்றப் புள்ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின்றாளால்,

வெற்றிப்போர்  இந்திரற்குமிந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் –

என்பது திருமங்கை மன்னன் வாய்மொழி.   



Physical appearance is the main way most birders identify different bird species, and understanding the differences between bird plumages is critical for proper identification. Plumage maturation in many birds  is an important clue to temporal patterns in their complex social system.   Plumage,  is the collective feathered covering of a bird. It provides protection, insulation, and adornment and also helps streamline and soften body contours, reducing friction in air and water. 

Of the many, Breeding plumage,  is the most brilliant, colorful plumage for many bird species, and it is displayed during the courtship season when birds are trying to attract mates. It is most often the males that develop bold breeding plumage, and these feathers may involve extraordinary colors or unusual shapes such as long streamers. 

Plumage (from Latin pluma 'feather') is a layer of feathers that covers a bird and the pattern, colour, and arrangement of those feathers. The pattern and colours of plumage differ between species and subspecies and may vary with age classes. Within species, there can be different colour morphs. The placement of feathers on a bird is not haphazard but rather emerges in organized, overlapping rows and groups, and these feather tracts are known by standardized names.



This evening MA Narasimhan showed me a rare Garuda vahana vigraham of  from his collection – the rare Seva of  Perumal with Ubayanachimar on Garuda vahanam,was enthralling and the plumage of the Garuda was exceptionally attractive.  Thanks to Mr MA Narasimhan for showing this artifact and allowing it to be photographed.

Regards – S Sampathkumar
17.11.2024 

Thursday, October 10, 2024

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! ~ 'எங்கும் உளன் கண்ணன்' !!!

அகிலம் போற்றும் பாரதத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் பற்பல அவதாரங்களை எடுத்து துஷ்டர்களை கொன்று, தன் பக்தர்களை காப்பாற்றி, தர்மத்தை நிலை நாட்டினான்.  இவ்வவதாரங்களில், இதிஹாச புராணங்களாலே புகழப்படுவது - 'இராமாவதாரமும் - கிருஷ்ணாவதாரமும்'.

 


பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்தது முதலே பல சோதனைகளை, கஷ்டங்களை எதிர்கொண்டான்.  கண்ணன் ஜனித்தது வடமதுரையில், கம்சன் எனும் கொடிய மன்னனின் சிறைச்சாலையில்.  பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த அந்த புனித தருணத்தில், கடல்கள் கலக்கமடைந்தன, பூமி, மலைகள்  நடுங்கின, அணைந்த நெருப்புகள் கூட  எரியத் தொடங்கின, மங்கலக் காற்று வீசத் தொடங்கியது, பெருமழை பொழிந்து, யமுனை ஆறு வெள்ள பெருக்கு எடுத்து ஓடியது.  அந்த இரவு ஓர் அற்புத முஹூர்த்தம் - அஷ்டமி திதியுடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் (இதுவே ஜெயந்தி) -  முஹூர்த்தம் விஜயமாகவும் இருந்தது. 

சிறைப்படுத்தப்பட்டு இருந்த   வசுதேவர் தேவகி தம்பதிகளுக்கு மதுரா சிறைச்சாலையில் பிறந்த எட்டாவது பிள்ளையான கண்ணனை இரவோடு இரவாக வசுதேவர் ஆதிசேஷன் குடை பிடிக்க,  யமுனை வெள்ளத்தை தாண்டி கோகுலத்தில் தலைவனான நந்தன் யசோதை தம்பதிகளிடம் மறைவாக வளர விட்டு விடுகிறார். ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாக ஒளித்து வளர்ந்த, நந்தனது அரண்மனையில் வளர்ந்த கண்ணனுக்கு நந்தகுமாரன் என்ற பெயர். 

ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்தில் பசுக்களை மேய்த்து பலராமனோடு திரிந்து வளர்ந்த அந்த காலத்தில்,  தன்னை முறையாக வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே நந்தனின் கிராமத்தில் காலத்தைக் கோபாலனாகக் கழித்தான்.  அவ்வமயம்  சிறுவர்களில் மூத்தவனுக்கு ஸங்கர்ஷணன் (பலராமன்) என்றும், இளையவனுக்குக் கிருஷ்ணன் என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன.  கண்ணபிரான்  மனித குலத்தின் நன்மைக்காகவே உதித்தவன்.   இந்த அவதாரத்தில், பாண்டவர்களுக்காக தூது சென்றான், அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினான், துர்யோதனாதியர்களை மற்றும், சிசுபாலன்,  கம்சன், அரிஷ்டன், விருஷபன், கேசி, பூதனை, யானையான குவலயப்பீடன், சாணூரன், முஷ்டி, குதிரை வடிவ கேசி  ஆகியோரையும், மனித வடிவில் இருந்த இன்னும் பிற கொடியவர்களை அழித்தான்.  அவனால் பானனின் ஆயிரம் கைகள் துண்டிக்கப்படன.  

இவ்வாறு அற்புத பிறப்பு எடுத்து தர்மத்தை காத்தவன் கண்ணன் -  நந்நனுடைய செல்லப்பிள்ளையான கண்ணனை நந்தலாலா என்று அழைத்தனர்.  கருப்பு நிறம் கொண்ட  காக்கை என்பது அழகற்ற பறவை!  மனிதர்கள் அதை அவ்வளவாக விரும்புவதில்லை.   ஆனால் அகப் பார்வைக்கு அதுவும் ஆண்டவனின் அழகைக் காட்டும் ஓர் ஆடி  தானே !  பிரபஞ்ச ஆகத்தில் கரிய காகமும் ஒரு பாகம் அல்லவா?  பார்க்கும் பொருள்கள் மாறலாம். அவற்றின் நிறங்கள் மாறலாம். ஆனால் அகப்பார்வைக்கு அவை அனைத்திலும் ஆண்டவனே தெரிகிறான். ஏனெனில் நிறங்கள் பல என்றாலும் அவற்றின் ஆதாரமாய் உள்ள ஒளி ஒன்றுதான்.  மஹாகவி பாரதியார் கண்ணன் மீது மையலுடன் அற்புத பாடல்களை தந்துள்ளார்.  அதில் ஒன்று : 

 

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! - நின்றன்

கரியநிறம் தோன்றுதையே, நந்த லாலா!

 

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்

பச்சைநிறம் தோன்றுதையே, நந்தலாலா!

 

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா! - நின்றன்

கீதம் இசைக்குதடா, நந்த லாலா!

 

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! - நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!

 

பார்க்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் கடவுளை காண்போருக்கு, காக்கையில் கூட கண்ணனே தெரிகிறான்!! - பாரதியாருக்கு காக்கையின் கரிய சிறகில் கண்ண பெருமான் நின்று சிரிக்கிறான்.  கண்ணனையே நினைக்கும் பாரதிக்கு நெருப்பு கூட சுடுவதில்லை, மாறாக கண்ணனையே உணர்கிறான்.  என்னே ஒரு உயர் பக்தி நிலை.  ஆழ்வார் பாசுரத்தில் - 'எங்கும் உளன் கண்ணன்' !!!

 


இதோ இங்கே திருவல்லிக்கேணி திரு ம.அ. நரசிம்ஹன் இல்லத்தில் உள்ள கண்ணனது மிக அழகான அற்புத சிலைகள் சில – (இரண்டாவது யானை தந்தத்திலானது.)

 


நன்றியுடன் - உங்கள் நண்பன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
10.10.2024

Thursday, February 29, 2024

கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்

 

How good is your power of observation – though it is too obvious to see – I saw this only today – not sure when He came here ! 

கவியரசு கண்ணதாசனின் வரிகளில் சிம்மக்குரலோன் கே வீரமணி குரலில் நாம் அனைவரும் கேட்டு கேட்டு ரசித்த பாடல் : 

 

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை

கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான். 

மாதவ பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்

ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்.

 


This beautiful Krishna is seen on South Mada street, near  mathil suvar

29.2.2024

Monday, January 30, 2023

Saidapet Sri Prasanna Venkatesa Narasimha perumal thirukkovil

 காளிங்கன் தலையின் மீதே ஆனந்த நடனமாடும் கண்ணன்

 


On the Gopuram of Saidapet Sri Prasanna Venkatesa Narasimha perumal thirukkovil

Monday, April 11, 2022

Bala Kannan

 பாலனாய் ஏழு உலகுண்டு .. ..  ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார்

 

அநாயாசமாக லோகத்தை எடுத்து வயிற்றிலே வைத்து, ஆலிலையில் சாய்ந்த கண்ணன் கழலிணை நாடுதிரே !!

எம்பெருமான் பாலகண்ணன் லீலாவிநோதங்கள் !!

 


Fabulous bronze idol from the collections of Sri MA Narasimhan, Triplicane.

Monday, November 1, 2021

Lord Srinivasa Temple at Sripuranthan needs to be built ! - kainkaryam of a determined individual !!

அக்டோபர் 18 ஐப்பசி பிறந்தது .. .. அடிக்கடி மழை பெய்கிறது.. .. சீதோஷ்ணம் மிதமாக உள்ளது - மொத்தத்தில் ஒரு சந்தோஷ சூழ்நிலை.  ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.    நம் ஆசார்யன் உத்சவத்தில் நல்ல மழை பெய்து நாட்டையே வளப்படுத்தும்.

ஆக்கையின் வழி உழல்வேன் என்ற பாசுரம் காதில் ஒலித்தது.  இதோ இங்கே ஒரு கிராம கோவிலிலே நம் ஆசார்யன் ஸ்வாமி இராமானுஜரும் நம் பொய்யில்லாத மணவாள மாமுனிகளும் !!



Recently went on a pilgrimage covering 5 beautiful Temples – darshan at these places was soul-satisfying and made me feel very happy !  .. .. every morning in various social media, I write about my trips !; my observations !; my photos !; my feelings! My learnings ! – and more of ME  !!  - and as I post on social media, I receive more than my share from others too .. a friend of mine had been sending some posts calling for participation in kainkaryam and today suddenly felt that one should be appreciating people like him more and partaking in the various activities that he has been undertaking ..

How many villages do we visit, do we go to lesser known temples, or for that matter Temples which in the past hogged all glory, but now is uncared for ! – would we put up couple of bricks or lit an oil-lamp in thousands of such temples – thoughts, guilt and more haunt me !

ஆக்கை   பெயர்ச்சொல்லை அதிகம் கேள்வியுற்று இருக்க மாட்டீர்கள் !  (அருகிவரும் வழக்கு) - பொருள் :  உடம்பு.   யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப் பொருள்களும், குருதி போன்ற நீர்ப்ப் பொருளும், சூடு போன்ற நீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டு இயங்குவதை யாக்கை என்பது தமிழ்நெறி.

We are in the state of extreme Bliss !  - the adjective ‘blissful’ would mean -  Extremely happy; full of joy; experiencing, indicating, causing, or characterized by bliss.  .. .. it is the month of Aippaisi and it heralds  rains in Tamil Nadu .. .. it is a time of bountiful goodness – Srivaishnavaites are extremely blissful as alongside Deepavali festival comes sarrumurai of Muthal Azhwargal (Thiruvonam, Avittam & sadayam)  and Thirumoolam marks the birth celebrations of our Matchless AcaryaSwami Manavala Mamunigal.  From today 30.10.2021  starts the glorious 10 day celebrations – Deepavali is on day 6 of the Uthsavam 4.11.2021; Annakkoda uthsavam, the next day and Sarrumurai celebrations (Aippaisi Thirumulam) on Monday, 8.11.2021.

Devotees may bleed in their heart to see Emperuman Lord Srinivasa in such a position in a remote village !

For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils. 

ஸ்வாமி நம்மாழ்வாரின் பாசுரத்திலே "ஆக்கையின் வழி உழல்வேன் " - நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்; நான் சரீரத்தின் வழியே போந்தேன். ‘தெப்பத்தை நூக்கிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாயிருக்க, ‘சரீரம் பாங்கன்று’ என்று நீரின் வழியே சென்று கடலிலே புகுவாரைப் போலே, இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினை விளைத்துக்கொண்டேன்,’ என்கிறார் என்பர் எம்பார்.

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்வண்ணனே,

அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,

வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப்பாய்ந்து

எந்நாள் யான் உன்னை இனிவந்து கூடுவனே? 

‘முந்நீர்’ எனப்படும் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தைப் படைத்தவனே, எங்களுடைய முகில்வண்ணனே! நான் எப்போதோ செய்த வினைகளுக்காக, நீ எனக்கு இந்த உடலைக் கொடுத்து விட்டாய். அது என்னை எந்தப் பக்கம் இழுத்துச் செல்கிறதோ அந்தப் பக்கம் நான் சென்று சிரமப்படுகிறேன். பிறவி என்கிற இந்தத் துன்பம் எப்போது தீரும்? என்னுடைய வினைகள் வேரோடு அழிவதுஎன்றைக்கு? யான் உன் பாதத்தில் சேரும் நாள் எப்போது வரும்?  - என வினவுகிறார் நம்மாழ்வார்.  ஆனால் நாமோ, யார் பெரியன், எனது செல்வம் என்ன, செருக்கு என்ன, மூளை என்ன, அறிவு என்ன என சிந்தையில் வழுக்கி வாழ்கிறோம்.

Have read a book  called ‘Ego is the Enemy’ – wherein there is compelling argument on why ego hurts us, and also shares some practical suggestions about how we can manage our ego.  Most of us would admit having been a victim of ego in the past.  Perhaps we have also observed others (close friends, relatives  and colleagues) who have made poor decisions, or have generally been unhappy, because of their ego. So this thought strongly resonates with me.  Pride and Ego – think about their incredible power. But gone wrong, what might they have cost and lost you?  Many a times,  we have allowed inflated ego’s and pride that has simply “gone too far” becoming  destructive forces! – killing energies, countless relationships, opportunities and initiatives of greater value. All that we have allowed stubbornness  to over-rule common sense.  Being stubborn on principle is welcome but not overreliance on self !!  



Life at Thiruvallikkeni offers chance to mingle with scores of people who are selflessly doing kainkaryam to Emperuman in various forms [be it Arulicheyal, Sreepadham, or many many forms in direct service to Emperuman and more to those serving Him] and various other community service, social service and more.  This person is less than 40, works in an IT company,  married, has kids and has every other distraction that all of us have !  .. .. have been watching his transformation – at the time of doing Sreepadham kainkaryam, he was into various activities like cleaning the tank, helping others – now he has been transforming various things and touching the lives of people. He conducts Ramanuja yatras too !


This gentleman Srikanth Pakshimannar is really doing exceptionally appreciable kainkaryam, visiting various villages, spreading noble thoughts, and bakthi cult and taking care of temples hitherto standing uncared for.  In doing kainkaryam purposefully and in a structured manner, he has created a trust - Sri Ramanujarya Divyagnya Seva Trust- in case you felt moved by the ruins and present looks of this temple – We may join Srikanth in renovating this temple, brick by brick and putting up first a shelter for Emperuman.

Srikkanth and others in kainkaryam during Deepavali purappadu earlier  !


Chola dynasty ruled our land well and  for long. The heartland of the Cholas was the fertile valley of the Kaveri River.  The Cholas left a lasting legacy. Their patronage of Tamil literature and their zeal in the building of temples has resulted in some great works of Tamil literature and architecture. The Chola kings were avid builders and envisioned the temples in their kingdoms not only as places of worship but also as centres of economic activity. The Chola period is also remarkable for its sculptures and bronzes.  One such temple exists in Sripuranthan too.

Away from the complex cities is Sripuranthan, a dusty village in the Ariyalur district of Tamil Nadu.  It is around 250 kms away from Chennai.  There will be muddy path winding across parched lands, scraggy cattle, suddenly enthused village elders, frolicking children – old Temple – all signs of any village scene of South India.  ~ and this village was in global news –  the Lord of Cosmic Dance (Nataraja)  from this village travelled thousands of kilometers smuggled from out his pedestal to the National Gallery of Art Canberra, Australia – by unscrupulous idol dealer Subhash Kapoor,  reportedly bought by NGA for Rs.31 crore in 2008.  Subhash Kapoor is not alone nor or idols from Temple ..... in that maze of network some missing Gods have landed up in foreign lands at private collections and art galleries. Fortunately, this Nataraja idol  was recovered from Australia. 

Sadly there are more sordid stories – there is another temple of Lord Srinivasa, Venkateswarar – Moolavar idol in standing posture – temple not even in a dilapidated condition, sort of non-existent; Uthsavar idols perhaps stolen languishing elsewhere. Our friend is now on a project to construct a small temple a la shelter / roof over Emperuman idol.   Seeing the Moolavar, the temple perhaps has antiquity of few centuries, the least !!


  


His communiqué says it would required around 300 blocks + 30 sacks of cement + one truck load of Msand; wall flooring and plastering work with 5 day 3 men labour – electrical wiring and all put together less than 1 lakh! – sounds incredibly simple and more importantly participation in kainkaryam at a lesser known place.  Here are details of the trust : -

Sri Ramanujarya Divyagnya Seva Trust

SBI, Wallajah Road Branch, Triplicane, Chennai 600005.

Account No.36898050995

IFSC code sbin0016556

Here is a video of the temple in its present form : https://youtu.be/JYYbkfnU1pk

 


Elders say that we do not own, but are custodians of wealth bestowed by Emperuman – perhaps if few of us could contribute little and channelize them through Sri Pakshimannar Srikanth, sooner there would be a Temple – not only here we can support glorious kainkaryabarargal like Srikanth engaged in preserving our rich heritage and culture.  One gets more astonished and over-awed to know that since past few years, he has been running a small Ashram at Thirumandangudi (Thondaradipodi azhwar avathara sthalam) a facility where yatrikas can stay and providing daily breakfast to around 30 school children and offering Prasad daily at Mamunigal thiruvarasu at Thiruvarangam. 

Pranams to all those involved in kainkaryam in every form and appreciations to my friend Pakshimannar Srikanth, who now lives in Peyalwar Koil Street, Thiruvallikkeni and fanning out to many places for kainkaryam

 

adiyen Srinivasadhasan
Mamandur Srinivasan Sampathkumar
1st Nov 2021.

நேர் சம்பந்தமில்லாத பின்குறிப்பு :  யாக்கை (yaakkai) என்பது 2017ம் ஆண்டு வெளிவந்த   தமிழ் திரைப்படம் ஆகும். இதில் கதாநாயகனாக கிருஷ்ணாவும், கதாநாயகியாக சுவாதி ரெட்டியும் நடித்து  இருந்தனர்.  யுவன் சங்கர் ராஜாவின் இசை


Friday, October 15, 2021

Emperumanin Thiruvadi

நவராத்திரி கொலு பொம்மை  

"திருவடிதன் திருவுருவும்" - எம்பெருமானுடைய அத்யந்த கைங்கர்யபரர்கள் - எம்பெருமானை தங்கள் மீது ஏளப்பண்ணும் பாக்கியம் பெற்ற

 

பெரிய திருவடியும் (கருடாழ்வாரும்) சிறிய திருவடியும் (ஹநுமானும் )

 

 ... .. எம்பெருமான் திருவடி தாள்களிலே வீழ்ந்து வணங்குவோம்



Sunday, March 28, 2021

Chennakeshava idol found near Halebelur village, Karnataka

Hoysala  Empire was a prominent Southern Indian Kannadiga empire that ruled most of the modern-day state of Karnataka between the 10th and 14th  centuries. The capital of the Hoysalas was initially located at Belur but was later moved to Halebidu.   In the 12th  century,  they expanded to  areas of present-day Karnataka and the fertile areas north of the Kaveri River delta in present-day Tamil Nadu. By the 13th   century, they governed most of present-day Karnataka, minor parts of Tamil Nadu and parts of western Andhra Pradesh and Telangana in Deccan India. The Hoysala era was an important period in the development of art, architecture, and religion in South India. The empire is remembered today primarily for its temple architecture. Over a hundred surviving temples are scattered across Karnataka.

 


Well known temples "which exhibit an amazing display of sculptural exuberance" include the Chennakesava Temple at Belur, the Hoysaleswara Temple at Halebidu, and the Kesava Temple at Somanathapura.  The Hoysala rulers also patronised the fine arts, encouraging literature to flourish in Kannada and Sanskrit. Their style of architecture is appreciated by all.   Temples built prior to Hoysala independence in the mid-12th century reflect significant Western Chalukya influences, while later temples retain some features salient to Chalukyan art but have additional inventive decoration and ornamentation, features unique to Hoysala artisans. 

The Chennakeshava Temple, also referred to as Keshava,  or Vijayanarayana Temple of Belur, is a 12th century Hindu temple in the Hassan district of Karnataka state.  It was commissioned by King Vishnuvardhana in 1117 CE, on the banks of the Yagachi River in Belur also called Velapura, an early Hoysala Empire capital. The temple was built over three generations and took 103 years to finish.   Sadly, like many other great temples, this temple too  was repeatedly damaged and plundered by marauding invaders  during wars, repeatedly rebuilt and repaired over its history. It is 35 km from Hassan city and about 200 km from Bengaluru.

 




Chennakesava (lit, "handsome Kesava") is a form of Sriman Narayana.  It is reverentially described in medieval Hindu texts, and remains an important pilgrimage site in Vaishnavism.  The temple is remarkable for its architecture, sculptures, reliefs, friezes as well its iconography, inscriptions and history. The temple artwork depicts scenes of life in the 12th century, dancers and musicians, as well as a pictorial narration of our Ithihasa puranas - Ramayana, the Mahabharata and the Puranas through numerous friezes. The Chennakeshava temple is a testimony to the artistic, cultural and theological perspectives in 12th century South India and the Hoysala Empire rule. 

Very rare Hoysala Architect with beautifully carved Channakeshava idol found while sand mining near Halebelur village of Sakleshpur taluk on Thursday. The 4.5ft black stone idol belonging to the Hoysala Dynasty is almost similar to Lord Channakeshava at Belur temple.  The idol has minor damages at the right side.

Interestingly the driver of the earth moving machine was anxious and took to the heels immediately after he saw the Idol.  The matter spread like a wildfire among villagers who rushed to the spot and removed the same safely.  Later they brought it and installed it in front of the temple in the village. The people have started offering pooja for the idol.




Tahsildar HB Jayaraj, PSI Basavaraj, Halebelur GP president Kumar have visited the spot and gathered further details in this regard. Sidegowda a village head opined that Channakeshava Temple also constructed in Halebelur during Hoysala dynasty.  Ancient Channakeshava idol was installed inside the temple. The sculptures might have rejected the newly found idol as it desecrated while carving he added. Expressing happiness the villagers also urged the officials of the Archeology department to give permission to keep the idol inside the temple.  The villagers also urged the officials of the Archeological department to further research and extract the right reason for buring the idol on the banks of Hemavathi River.

Jairaj Tahsildar Sakleshpur said that the newly found Channakeshava idol is belonging to the Hoysala dynasty as it has Hoysala architecture and carving. The taluk authority has submitted the detail report to the deputy commissioner R Girish who will take a decision in this regard he added

With regards – S. Sampathkumar

28.3.2021

News Source :  https://www.newindianexpress.com/states/karnataka/2021/mar/26/rare-channakeshava-idol-found-while-sand-mining-in-karnatakas-sakleshpur-taluk-2282068.html

Photos from twitter pages of : Vertigo_Warrior - @VertigoWarrior  and   Raghu - @IndiaTales7

 

  

Wednesday, September 16, 2020

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே ! இராம எனும் இரண்டு எழுத்தினால் !!

 

మరుగేలరా ఓ రాఘవా!  :  மருகே3லரா ஓ ராக4வா!

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல்கானம் அடைந்தவனை அவனது ஆலயத்தில் இருந்து திருடி எடுத்துச்சென்ற வெளிநாட்டு கயவர்களிடம் இருந்து மீட்டெடுத்த,  விஜயகுமார் போன்ற நல்லவர்களை போற்றுவோம்.

எவ்வளவு அழகான சீதா ராம, லக்குவன விக்கிரஹங்கள் .. .. எப்படி நாம் போற்றும் ஆலயத்தில் இருந்து, கிராம மக்கள் சூழ்ந்து இருக்க, பூஜிக்கும் தெய்வம் காணாமல் போனது ?திருக்கோவிலில் பூஜிக்கப்படுவதற்கு பதிலாக திருடப்பட்டு, கடல் கடந்து கடத்தப்பட்டு  எங்கோ அயல் நாட்டில் கயவர்கள் கலை என்ற பெயரில் காட்சிப்பொருளாக !! என்ன அவலம் !!  இந்த திருட்டு நடந்தவுடன், ஊர் மக்கள் அழுது அலறவில்லையாகாவல் நிலையத்தில் முறையாக குற்றம் பதிவு செய்யப்பட்டதா !; அரசாங்கம் இந்த சிலை கடத்தலுக்கு பின் என் செய்தது !  .. .. நாம் என் செய்தோம் ? - மனதை உறுத்தும் கேள்விகள். 

இது போன்று சிலை திருட்டுக்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்சில ஊர்களில் பெருமாள் விக்கிரஹங்களை திருக்கோவிலில் இருந்து தூக்கி சென்று, அறநிலையத்துறை பெட்டகங்களிலோ அல்லது பிற கோவிலில் வரிசையாக வைக்கும் அறமற்ற செயலையோ நாம் இதுகாறும் கண்டித்து உள்ளோமா ?  .. .. ஒவ்வொரு கோவிலிலும் அந்தந்த தேவதை பரிபூர்ண தலைமையும் மகத்துவமும் பெற்றது - அங்கில்லாமல் பிறிதொரு இடத்தில் வரிசையாக வைத்து, அவற்றிற்கேற்ற பூஜைகள், திருவமுது படைத்தல், உத்சவங்கள் செய்யாமை, கொடிய பாவமல்லவா !! - இதை இடித்து உரைக்காதது நம் குற்றமே அல்லவா !! 

Nagapattinam is a renowned town that was prominent during the period of Medieval Cholas (9th–12th century CE) and served as their important port for commerce and east-bound naval expeditions. The Chudamani Vihara in Nagapattinam constructed by the Srivijayan king Sri Mara Vijayattungavarman of the Sailendra dynasty with the help of Rajaraja Chola I was an important Buddhist structure in those times. Nagapattinam was settled by the Portuguese and, later, the Dutch under whom it served as the capital of Dutch Coromandel from 1660 to 1781.  In  1781, the town was conquered by the British East India Company. It served as the capital of Tanjore district  but later became a district.

AT Nagapattinam, is the famous divyadesam Sri Soundararajaperumal Temple  glorified in the Divya Prabandham. The uthsavar is most beautiful Nagai Azhagiyar - Soundararaja Perumal and his consort Lakshmi as Soundaravalli.  This is no post on the divyadesam but on an otherwise obscure village called Ananthamangalam.

ஜகம் புகழும் அற்புத கடவுள் பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.  மனிதன் உல கில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ இராமாவதாரம்.  கவிச்சக்கரவர்த்தி கம்பன் வார்த்தைகளில் - 'இராம நாம மஹிமை": -

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் !!

 

 ஸ்ரீ ராமா  எனும்  இரண்டெழுத்தைச் சொன்னால், எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு, பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜனன, மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்’ என்கிறார் கம்பர்.  

இராமர் தன் சிற்றன்னை சொல் கேட்டு கொடிய வனத்துக்கு ஏகியவர்.  ஸ்ரீராம பிரான் கொடியவனம் செல்லும் நிலை கேட்டு அயோத்திய மக்கள் அனைவரும் அவருடனே வனத்துக்கு செல்ல முற்பட்டனாராம்.  எம்பெருமான் ராமனோ அனைவரையும் வேண்டி சீதாபிராட்டி, இளையவன் இலக்குவனுடன்  தண்டகாரணியம்  புகுந்ததான்.   மகாராட்டிரம் உள்ளடங்கிய பகுதி  முற்காலத்தில் தண்டகாரணியம்(”தண்டணை அளிக்கப்படும் காடு”) என்றழைக்கப்பட்டதாம்.  அச்சமயத்தில்  இக்காட்டில் பேய்களும் இன்ன பிற கொடிய உயிரினங்களும் வாழ்ந்ததாவும், அதனால் முனிவர்கள் மட்டுமே இங்கு தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கரன், தூசணன், சூர்ப்பனகை ஆகியோருடன் இராம இலக்குவனர்கள் போர் புரிந்தது இங்கேதான்.   சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி: மேற்கே அபூஜ்மார்மலை, கிழக்கே கிழக்குமலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளை உள்ளடக்கிய மர்மபிரேதசம்தான் ""தண்டகாரண்யம்''.

எம்பெருமான் சென்ற கொடிய காடு கூட நல்ல இடமானது ! ஆனால் பண்பட்ட பிறவி என பெருமைப்படும் நாம் நமது கிராமங்களில் உள்ள திருக்கோவில்களில் இருந்து பெருமாள் விக்கிரஹங்கள் களவாடப்பட்டது கூட தெரியாமல், எதை பற்றியும் கவலைப்படாத வாழ்வு வாழ்ந்து வருகிறோம். என்னே ஒரு அவல நிலைமை !!.

Really happy in reading the news of return of 3 beautiful idols of Sree Rama, Sita and Lakshmana,  which were stolen from the Sri Rajagopalaswamy temple in Ananthamangalam, Nagapatnam, Tamil Nadu in 1978.  Reports state that these idols  were handed over to the High Commission of India (HCI) in London at a function on Tuesday. The idols were in the possession of an art dealer. The idols dating back to the 15th century or earlier  were traced to London after the idol wing CID reopened the case after several years. After three years of search to match the idols with those with the dealer, a tip from a volunteer in London helped them confirm the similarities of the Rama idol after which the group informed the HCI.

The online event was attended by Union minister of culture and tourism Prahlad Singh Patel, Tamil Nadu chief secretary K Shanmugam, DGP J K Tripathy, ADGP, idol wing CID, Abhay Kumar Singh and Co-Founder of India Pride project S Vijay Kumar.  “The quest started four years ago when our routine checks on web pages of dealers of Indian art threw up a rather interesting profile of a UK dealer. BADA profile (British Antique Dealers Association) web page showed a rather superlative example of a standing Vijayanagara Bronze,” he said. He said that after three years of search to match the idols with those with the dealer, a tip from a volunteer in London helped them confirm the similarities of the Rama idol after which the group informed the HCI.

After the strenuous efforts by this group, the British police on Tuesday handed over to India ancient idols  as part of growing efforts to return artefacts of India’s cultural heritage from across the world. The handover ceremony at India House was attended by officials of the Metropolitan Police and remotely by Union minister for culture and tourism Prahlad Singh Patel from New Delhi, as well as officials in Chennai. The idols, being sent back to Tamil Nadu, were stolen from a temple built in the Vijayanagar period in the Nagapattinam district. They were voluntarily handed over to the police by an unidentified UK-based collector when informed that they were stolen property. Information from S Vijay Kumar of the India Pride Project helped trace and identify the idols, officials said.   Prahlad Patel said that only 13 antique items were returned to India between 1947 and 2014, but after that, more than 40 such antiquities have returned home. “Efforts are also on to return one idol from the British Museum”.  Indian high commissioner Gaitri Kumar called it an “auspicious day” and thanked the police for their efforts to recover the idols. She recalled recent instances when idols stolen from India were recovered and repatriated to India by the mission.

Detective chief inspector of the Metropolitan Police Tim Wright said: “The Metropolitan Police are proud to have been involved in the return of these Chola bronzes to India. Not only are they beautiful and historically significant, they are of course of religious importance, and therefore it is particularly gratifying that they are to be returned to the temple from which they were taken”. 

India Pride Project (IPP) is a group of art enthusiasts who uses social media to identify stolen religious artefacts from Indian temples and secure their return. Co-founded in 2014 by two Singapore-based art enthusiasts, S. Vijay Kumar and Anuraag Saxena, it now has activists from all over the world.  Salute the efforts of people like Vijayakumar. 

The photo at the start is the recovered idols of Anandamangalam, Nagai – rest of the photos here are of our Sree Rama Piran in silver yanai vahanam at Thiruvallikkeni divyadesam during purappadu on 05.04.2014.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
16.09.2020