Vedha gosham (Samhitai moonram kaandam)
by young kids at Thirumylai Sri Madhava Perumal Thirukovil –
Sri Peyalwar avathara uthsavam day 9 Nov 2021 - My pranams to them
: https://youtu.be/tSmXq35i-L8
Vedha gosham (Samhitai moonram kaandam)
by young kids at Thirumylai Sri Madhava Perumal Thirukovil –
Sri Peyalwar avathara uthsavam day 9 Nov 2021 - My pranams to them
: https://youtu.be/tSmXq35i-L8
திருக்கண்டேன்
பொன்மேனி கண்டேன் என்றுரைத்த ஸ்ரீ பேயாழ்வார்
திருமயிலை
ஸ்ரீ பேயாழ்வார் திருவல்லிக்கேணி மங்களாசாசனம் இன்று
17-10-2025.
Thirumayilai
Sri Peyazhvaar entering Thiruvallikkeni 17.10.2025
https://youtu.be/iIjlVtZ25qU?si=KCM90Ui_TZu9IhUC
திருக்கண்டேன்
பொன்மேனி கண்டேன் என்றுரைத்த ஸ்ரீ பேயாழ்வாரும்
உனக்கு
பணி செய்து இருக்கும் தவமுடையேன்
என
பெருமை வாய்ந்த கருடாழ்வாரும்.
திருமயிலை
ஸ்ரீ பேயாழ்வார் திருவல்லிக்கேணி மங்களாசாசனம் இன்று
17-10-2025.
இன்று காலை திருவல்லிக்கேணி சாத்தானி தெரு எனப்படும் துளசிங்கபெருமாள் தெருவும் பெசன்ட் ரோடும் சேரும் இடத்தில சில வைணவர்கள் காத்து இருந்தனர். சிலர் இது என்ன விசித்திரம் என்று பார்த்து அங்கலாய்த்தனர் ! .. .. சிலர் இன்று என்ன விசேஷம், இங்கு ஏன் பெருமாள் வருகிறார் என வினவினர் !! விசித்திரமான காரியங்களையும் காரணங்களையுமெல்லாம் விபூதியாகவுடைனாயிருக்கிறபடியை அநுஸந்தித்து இவையென்ன மாயா! என்று ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.
Sri Adhi Kesava Perumal Devasthanam better known as ‘Kesava Perumal Kovil’ is near Mylai Kapaleeswarar Temple and the Chithirai kulam belongs to this Temple. This is Chandra pushkarini (sarva theertham) popularly known as Chithirai kulam. The presiding deity here is Sri Adhi Kesava Perumal and thayar is Mayuravalli – the place itself was historically known as ‘Mayurapuri’. The temple is quite ancient and dates back to centuries. The temple is quite ancient and dates back to centuries. During Ekkattu Thangal Purappadu, Sri Parthasarathi Perumal visits this Temple and has mandagapadi here.
Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier. They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars). Sri Peyalwar was born in a tank in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni). His birthplace is in the present day Arundel Street in Mylapore.
இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் :
மாயா! வாமன னே! மதுசூதா! நீயருளாய்,
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க்
காலாய்,
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய்
முற்றுமாய்,
நீயாய் நீ நின்றவாறு இவையென்ன நியாயங்களே !!
எம்பெருமான் ஆச்சரியமான செய்கைகளையுடையவன் - வாமநாவதாரஞ் செய்தவனே!; மதுகைடபர்களைத் தொலைத்தவனே! உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்; தீ, நீர், நிலன், காற்று, விசும்பு ஆகிய பஞ்ச பூதங்களுமாய்; மாதா பிதாக்களாய்; தம் வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய் - அல்லாதவையுமாய்; சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய் ; அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய் - இவ்வாறு எல்லாமுமாய் நீயே நிற்கிற இந்தச் தன்மைகள் என்னவகைகளோ! இவை என்ன நியாயங்களே! இவைதாம் இன்னபடியென்று எனக்குத் தெரிகிறதில்லையே; தெரிகிறதில்லையே; தெரியவருளிச் செய்யவேணும் என சுவாமி நம்மாழ்வார் இயம்புகிறார்.
For many years, Sri Aadhi Kesava Perumal from Thirumayilai has been visiting Thiruvallikkeni divyadesam and has ‘vana bojana uthsavam’ performed here. Today morning, 29.5.2022 – Adhi Kesavar in pallakku visited Thiruvallikkeni, had Thirumanjanam at Sri Vanamamalai Mutt at East Tank Sq St., Triplicane. Sri NC Sridhar has been taking care of all the arrangements. Here are some photos taken at the time of His entry into Thiruvallikkeni.
Thirumanjana photos will be posted later.
இன்று 28.3.2022
ஸ்ரீஅழகியசிங்கர் பங்குனி ப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி
எம்பெருமானுக்கு 9ம் உத்சவம் இரவு கண்ணாடி பல்லக்கு; தெள்ளியசிங்கனுக்கு அற்புதமான
ஆனந்த விமானம். ஸ்ரீஅழகியசிங்கர் பேயாழ்வார் கோவில் தெரு வழியாக எழுந்து
அருளி, திருமொழி செவி மடுத்து, விமானத்தில் எழுந்து அருளி, குளக்கரை, பெரிய மாடவீதி
புறப்பாடு கண்டு அருளினார்.
We go to Temples, worship Emperuman, forget our
worries and are blissfully happy… .. in the midst of festivity in any
Temple, there is something unmistakably heard .. .. .. that makes you happy
! - the sound of music – not only that of Temple bells – more of Mangala
Isai – Nadaswaram & Thavil.
திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானுக்காக
நாதஸ்வர வித்துவான்கள், தவில் வசிப்பவர்கள் - பக்தி பரவசத்துடன், தங்களை அர்ப்பணித்து
சேவை புரிகின்றனர். நித்தியகால பூஜையில் வாசிக்கப்படும் மங்கல இசை மக்களுக்காக
அல்ல ! இறைவனுக்காக !! மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து,
சுபம் போன்ற பொருள்களில் கையாளப்படுகிறது. மேளக் குழுவின் முதன்மைக் கருவியாக
நாகசுரம் விளங்குகிறது. இது ஒரு குழல் கருவியாகும். இதனைப் பெரு வங்கியம் என்றும்,
நாகசுரம் என்றும், நாயனம் என்றும் அழைப்பர். ப்ரஹ்மோத்சவம் போன்ற திருவிழா காலங்களில்
சிறப்பு வாத்திய இசை ஏற்பாடு பண்ணுகிறார்கள். ஒன்பது நாளுமே உத்சவத்தில், பத்தி உலாத்தல்
மற்றும் பெரிய மாடவீதி புறப்பாடு சமயங்களில் சிறப்பான இசையை கேட்கலாம். இன்று திருமயிலை ராஜேஷ் குழுவினர் அற்புதமாக இசைத்தனர்.
For sure, you have heard many famous singers singing this
Thiyagaraja keerthana ‘Bantu reethi koluv’ - In this beautiful keerthana, Sri
Thyagaraja pleads with Lord Rama to give
him the post of a sentinel of Sree Rama. The symbolic meaning is
that he wants to be in His presence always (just as Sri Kulasekara Azhwar
pleaded Lord Venkateswara to be in holy Thirumala and infront of Lord
Thiruvengadamudaiyan)
బంటు రీతి కొలువీయ వయ్య రామ
తుంట వింటి వాని మొదలైన ! మదాదుల
బట్టి నేల కూలజేయు నిజ
రోమాంచమనే, ఘన కంచుకము
! రామ భక్తుడనే, ముద్రబిళ్ళయు
రామ నామమనే, వర ఖఢ్గమి
! విరాజిల్లునయ్య, త్యాగరాజునికే
baNTu rIti koluv(i)yya(v)ayya
rAma
tuNTa viNTi vAni
modalaina mad(A)dula ! goTTi nEla gUla jEyu nija (baNTu)
rOmAncam(a)nu ghana
kancukamu ! rAma bhaktuD(a)nu mudra biLLayu
rAma nAmam(a)nu vara
khaDgamivi ! rAjillun(a)yya tyAgarAjunikE (baNTu)
O Lord Rama, as an orderly sentry, Into your service,
may I gain entry, O Lord rAma! Bestow on me (Thigayya) the privilege (“kolu”)
of being in Your service as a servitor (“Bantu rIti”). In the Anupallavi, Sri
Thyagaraja Swamy says that, the guard’s post should be such that he is
empowered to destroy all the demons which are Arishadvargas (Arishad Vargas are
the six passions of the mind: Kama - lust, craze, desire; Krodha - anger,
hatred; Lobha - greed, miserliness, narrow minded; Moha - delusory emotional
attachment; Mada or Ahankara - pride, stubborn mindedness; and Matsarya - envy,
jealousy, show or vanity, and pride) and since the guard is empowered to do so,
he needs such a guard's post.
For those interested in Carnatic music here are some photos of Nadaswaram and a rendition by Nadaswara Thirumylai Rajesh kuzhu of the keerthana :
More photos of the Anandha vimana purappadu and Sri Azhagiya Singar
would be posted later.
பின் குறிப்பு : பாட்டறியேன் - ராகம் அறியேன் ! கர்நாடக சங்கீதம் நான் அறியேன் (இதில் ஒன்றும் பெருமை இல்லை என்பது மட்டும் அறிவேன்).. .. .. ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என் போன்ற ஞான சூனியங்களுக்கு - இராகங்களின் பெயர்களே புரிபடாது - இணையத்தில் தேடினால் : அம்ருதவாகினி, அம்ருதவர்ஷினி, அசாவேரி, அடாணா, ஆபேரி, ஆபோகி தன்யாசி, தர்பார், தேவகாந்தாரி, என - .. வாசிப்பை கேட்டு அது எந்த ராகம் என்பது .. .. .. !!! - எனினும் சங்கீதம் கேட்க கேட்க ஆனந்தத்தை தருகிறது. அதுவும் திருக்கோவில்களில் வாசிக்கப்படும் நாதஸ்வரம் மனதை மயக்குகிறது.
மாயோனே
எங்கள் வல்வினைகளை நீக்கி காத்தருளும் மாதவனே !
உந்தன்
அபய ஹஸ்தங்கள் அனைவருக்கும் அற்புத நற்பலன்கள்
தரும்.
திருமயிலை
ஸ்ரீ மாதவப்பெருமாள் ரத சப்தமி 8.2.2022
இன்று 28.01.2022 - தை
வெள்ளிக்கிழமை - கேட்டை நக்ஷத்திரம், ஏகாதசி !
தை பிறந்தால் வழி
பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் சிறப்பு வாய்ந்தது தை மாதம்.
தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும்.
இது தைசிய என்றும் பௌஷ என்றும் வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. சூரியன் மகர இராசியுட்
புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே
இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.
தை மாதப் பிறப்புத் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப்
பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.
தை மாதத்தின் வெள்ளிக்கிழமை
அம்பாளுக்கு/ தாயாருக்கு விசேஷமாகும். இந்த
தை வெள்ளியில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப்
பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு
செய்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள். இந்த நாளில்,
அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள்
நடைபெறும். செல்வத்தை அள்ளித் தரும் சுக்ரனுக்குரிய
வெள்ளிக்கிழமை நாளில், உத்தராயண காலமாகிய தைமாதத்தில் தவறாமல் விரதம் கடைப்பிடிக்க
வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
தையொரு திங்களும் தரை
விளக்கி என்பது கோதை பிராட்டி வாய்மொழி !
மார்கழி முழுதும் திருப்பாவை நோன்பு
இருந்தும், கண்ணன் அவளை வந்து சேரவில்லையே
என ஆதங்கப்பட்டு ஆண்டாள், தான் ஒருவேளை காமனைத் தொழுதால் வந்து சேருவாரோன்னு மன்மதனை தொழ முடிவெடுத்துப் பாடல் பாடுகிறாள். இப்பாசுரத்திலே 'அனங்க தேவா' என விளிக்கிறாள். அனங்க தேவா என்றால் உடல் அற்றவன் என்று பொருளாம்..ஒருமுறை
சிவனால் எரிக்கப்பட்ட காமன் உடம்பு அற்றுப் போனதாக புராணம் ! அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் பரிஷ்கரித்து
அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து மேடையிட்டு
அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம், இது.:
தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்தனங்கதேவா
உய்யவுமாங்கொலோவென்று சொல்லி உன்னையும் உம்பியையும்
தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே.
கரும்புவில் கையில் கொண்ட காமதேவனே, தை மாதம் முழுதும் நீ வருகின்ற இடத்தை அலங்காரம் செய்து, குளிச்சியான அழகுடைய மண்டலம் போன்றதான கோலத்தினை இட்டும்,மாசி மாதத்தில் முதல் நாளில் அழகியதான சிறு மணல் துகள்களினால் நீ வரும் வீதியை அழகுடையதாக அலங்கரித்தும், நான் உஜ்ஜீவனம் பெற , அனங்கதேவனே உன்னையும் உன்னுடைய தம்பியான சாமனையும் வணங்கினேன், வெம்மையான நெருப்பினை பொழியும் திருச்சக்கரத்தினை தனது திருக்கரத்தினில் ஏந்தியவனும் திருவேங்கட மலையில் உறைபவனுமான எம்பெருமானுக்கு என்னை அந்தரங்கமாக தொண்டு செய்யும்படியாக நீ செய்யவேண்டும் என்று கோதை பிராட்டி அருளிச் செய்கிறார். அவருக்கு எம்பெருமானிடத்திலே சேர்த்தல் மட்டுமே முழு நினைப்பு.
திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் - தை வெள்ளியன்று சிறப்பு சாற்றுப்படியுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருக்கோவில் உள்புறப்பாடு, ஊஞ்சல் கண்டருளினார். திருமயிலை ஸ்ரீ அம்ருதவல்லி தாயார் புகைப்படங்கள் சில இங்கே ! கூடவே- “கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா “ .. திருக்கோவில் நாதஸ்வர வித்துவான் திரு ராஜேஷ் அவர்களின் இனிய வாசிப்பையும் காணலாம் / கேட்கலாம். https://youtu.be/m1gpFB0BKVQ
22.1.2022 ஓர் சீரிய நாள்
- ஸ்ரீவைஷ்ணவ உலகம் கொண்டாடும் ஓர் அற்புத நாள். பகல் பத்து பத்து நாள்கள்
நிறைவுற்று, வைகுண்ட ஏகாதசி அன்று துவங்கி, பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும்
எம்பெருமான், சடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம் திருவாய்மொழியை
அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும்
நிகழ்வில் ஸ்வாமி நம்மாழ்வார்
திருநாட்டுக்கு சென்று அலங்கரித்து, மண்ணவர் விண்ணப்பிக்க நமக்கு திருப்பி தந்து அருளப்பட்ட
அற்புத நாள்.
ஸ்ரீவைகுந்தத்தின் எம்பெருமான் வீற்றிருக்கும் பரமபதத்தில் நிலவும் இன்பம் எப்படி இருக்கும் ? இவ்வையகமே நிலையற்றது. ஸ்ரீவைணவர்கள் விரும்புவது என்ன ~ 'வீடு பேறு' - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உறையும் இடமான பரமபதம் சென்று, பரமபதநாதன் வீற்று இருக்குமிடத்திலே அத்தாணி சேவைகள் செய்வதே !.
நம்மாழ்வார் திருவடி தொழலை பல திவ்யதேசங்களிலே கண்டு சேவித்து இன்புற்று இருப்பீர்கள் .. .. எங்கள் சிலருக்கு இவ்வருஷம் திருமயிலை ஸ்ரீமாதவப்பெருமாள் சன்னதியில் இந்த சேவை கிடைக்கப்பெற்றது. எப்பொழுதையும் விட மாதவர் மந்தஹாஸத்துடன், அற்புதமான திவ்ய சேவை சாதித்தார். - மிக அழகான சாற்றுப்படி (ஸ்ரீ அஷ்வின் சுந்தரராஜ பட்டர்)
இந்த கடின காலத்தில் - நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எப்போதும் எழும் ? பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் பணித்துள்ளதுபடி எம்பெருமானுக்கே திருத்தொண்டுகள் செய்து எக்காலங்களிலும் வணங்கி சரணடைவதே நமது கடமையாக கொள்ள வேண்டும் - இது ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழி பாசுரத்தில் கூறப்பட்டுள்ள கருத்து : செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்று வினவ, நெடுங்காலம் பல தவங்கள் புரிந்து, பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றேனென்கிறார். அத்தகைய கீதாச்சார்யனான எம்பெருமான் கமல மலர்பாதத்தை கண்டபோதே, நம் தீவினைகள் எல்லாம் விட்டுவிட்டு ஓடோடி போய்விடுமாம். எம்பெருமானின் தாமரைத் திருவடிகளைக் கண்டேன், அவ்வாறு கண்டதும் என்னுடைய வினைகள் அனைத்தும் விண்டுபோயின, முன்பு அந்தப் பரமன் எனக்கு வகுத்த முறைப்படி அவருக்கு என்றும் தொண்டுசெய்தேன், அவரைத் தொழுது அவருடைய வழியில் நடந்தேன், அதனால் அவருடைய திருவடிகளைக் கண்டேன் என்கிறார் சுவாமி நம்மாழ்வார் இந்த பாசுரத்தில்.:
கண்டேன்
கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே
ஒழிந்த* வினையாயின எல்லாம்*
தொண்டேசெய்து
என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே.
For sure Carnatic connoisseurs have heard "Nithi sala sukhama", one
of the famous Telugu of Thiyagarajar. Saint
Thiyagaraja (Thiyagayya) saw the reigns of four kings of Maratha
dynasty but served none of them. He was so fond of Sree Rama that his
keerthanas exude bakthi rasam of the highest order. At a time when King’s
servants came searching to pick Thiyagayya to sing in the Court, he reportedly
refused – his family which was in penury asked him to forego principles and
earn money for their livelihood – Thiyagayya asks his heart which answered
‘nidhi sala sukhama’ -- !! தியாகய்யர்
இராமனை நெக்குருகி பாடும் ஒரு கீர்த்தனை
:
நிதி சாலா சுக மா ராமு நி சந
நிதி சேவ சுகமா நிஜமுக ப ல்கு மநசா
Nithi Sala Sukhama, Ramuni , SAnnidhi seva Sukhama
செல்வம் முதலியவை மிகுந்த இன்பத்தை aஅளிக்கக் கூடியவையா? அல்லது ஸ்ரீராமனின் சன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே! உண்மையாக இதைக் கூறுவாய். தயிர் வெண்ணை, பால் முதலியன சுவை தருமா? அல்லது தயரதன் மைந்தனைத் தியானித்து பஜனை செய்வது ருசி தருமா?
Thiyagarajar queries and finds a definite answer – ‘are riches more required or the worship of Lord Rama that would be more pleasant’. .. .. .. in this material world, it would be impossible to lead the life of Saints like Thiyagayya – at least let us understand the essence and immerse ourselves in devotion and do kainkaryam to Emperuman.
Here are some photos of beautiful Sri Madhava Perumal at Thirumylai taken on Irapathu sarrumurai on 22.1.2022