To search this blog

Tuesday, November 28, 2023

Thirukkarthigai Deepam festivity 2023 ~ திருக்கார்த்திகை தீப உத்சவம்.

ஐப்பசி   மாதத்திலே நம் ஆசார்யன் சுவாமி மணவாள மாமுனிகள் உத்சவம் இனிதே நடந்து முடிந்தது ~ கூட,  பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் சாற்றுமுறைகளும் இனிதே நடந்தேறின.   பின் வரும் கார்த்திகை மாதம் ஒரு சிறப்பான மாதம்.  திருமங்கை மன்னன், திருப்பாணர் சாற்றுமுறைகள்  மற்றும் திருக்கார்த்திகை தீப உத்சவம். 




ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்து கொள்ள தேவை  பார்வை -   வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது.   வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவது மட்டும் அல்ல.  இருளை, அஞ்ஞானத்தை ஒழிக்கும் அகல் ஒளி.   தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது. 

கார்த்திகை தீப திருநாள்.  தீபமேற்றி இறைவனை வணங்குவதுதான் நம்முடைய ஸம்ப்ரதாயம்.  வீடு முழுக்க, வாசலில் வரிசையாக, வீட்டைச் சுற்றிலும் என தீபங்கள் வரிசைகட்டி ஏற்றிவைத்து, தீபத்தை வணங்கும் அருமையான நன்னாள்தான் திருக்கார்த்திகை தீபத் திருநாள். நம் வீடுகளில் எப்படி ஒளி நிறைந்திருக்கிறதோ... பரந்துவிரிந்த ஆகாயமும் பெளர்ணமி முழு நிலவால் தகதகத்து பிரகாசிக்கிற நன்னாள்  திருக்கார்த்திகை தீப திருநாள். 

நம் வைணவ ஸம்ப்ரதாயத்திற்கு திருவிளக்கு மிக முக்கியமானது. அன்றோர் பெருமழை நாளில் திருக்கோவலூர் இடைகழியில் - முதலாழ்வார்கள் மூவர் சந்தித்த அரும் சமயத்தில், பொய்கைப்பிரான் - "வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக" என   உலகம் அகல், கடல்தான் நெய், சூரியன் ஒளிப்பிழம்பு, என ஒரு  பிரம்மாண்டமான விளக்கை சங்கு சக்கரம் ஏந்திய பெருமானின் பாதத்தில் ஏற்றி, பாசுரங்களால் மாலை அணிவிக்க, தொடர்ந்து பூதத்தாழ்வார்   "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியா" என அன்பை  விளக்காகவும், ஆர்வத்தை  நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதிக்க, அவ்வருள் வெள்ளத்தில் பேயாழ்வார் திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என மங்களாசாசனம் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே !!  

திருக்கார்த்திகை என்றவுடன் பக்தர்களுக்கு நினைவில் வருவது - திருவண்ணாமலை தீபம்.   தீப திருவிழா அன்று திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.   பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த தீப உற்சவம்.   1668 ஆம் ஆண்டு, வேங்கடபதி என்பவர் கொப்பரையை  அளித்துள்ளது பற்றி குறிப்புகள் உள்ளன.   இது காலப்போக்கில் பழுதான பின்னர், தற்போது உள்ள கொப்பரையின் வடிவமைப்பு  1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 92 கிலோ செம்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களால் வடிவமைக்கப்பட்டது. கொப்பரையில் அடிப்பாகம் 27அங்குல விட்டமும் மேற்புறம் 37 அங்குல விட்டமும் உடையது. மொத்த உயரம் 57 அங்குலம் என ப்ரம்மாண்டமானது   

இதன் தொன்மை:  "அண்ணாமலையார் கோவிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு"  (கி.பி. 1031) கார்த்திகைத் திருநாளில் இறைவன் திருவேட்டைக்கு எழுதருளுவதைப் பற்றிக் கூறுகிறது.  'திருவண்ணாமலை உடையார் திருக்கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளி இருந்தால் பெந்திருவவமிர்தமெய்து செய்தருளவும் அடியார்க்குச் சட்டிச்சோறு பிரசாதஞசெய்தருளவும் குடுத்த பொன் ஏழு கழஞ்சில்' என்று அந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.  1311ஆம் ஆண்டில் ஹொய்சாள மன்னரான வீரவல்லாளனின் கல்வெட்டு பஞ்சபர்வ தீப உற்சவம் பற்றிக் குறிப்பிடுகிறது. திருவண்ணாமலை தீபத்தை  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்   வந்து வழிபடுகின்றனர்.  கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு இன்புற்றனர்.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் 27.11.2023 அன்று கார்த்திகை தீப உத்சவமும் திருமங்கை மன்னன் சாற்றுமுறை புறப்பாடும் சிறப்புற நடந்தேறின.  கோவிலின் வாசலில் பனைஓலைகளாலான சொக்கப்பனை பற்றி ஓர் முறை விரிவாக எழுதி இருந்தேன்.  திருக்கார்த்திகை தினத்தன்று - பெரிய சன்னதியில் தொடங்கப்பெற்று, எல்லா சன்னதிகளிலும்,  கொடிமரத்தின் முன்பும், வெளியே - சுவாமி நம்மாழ்வார் சன்னதி, பேயாழ்வார் சன்னதி, கைரவிணி திருக்குளம், திருக்குள திருவடி சன்னதி என எல்லா இடங்களிலும் - பெரிய அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.   



தீபத்தில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை, நம் திருவல்லிக்கேணி காப்போன் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானை  திருக்கார்த்திகை நன்னாளில் வேண்டும்  நம் அனைவரது நம் குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் ஒளிமயமான வாழ்க்கையைத் தந்தருள்வான்  எம்பிரான்.

 
~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.11.2023 













Sri Parthasarathi Emperuman Pinnazhagu !

 திருவல்லிக்கேணி திருமங்கைமன்னன் சாற்றுமுறை புறப்பாடு  27.11.2023




ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பின்னழகும், நாக பதக்கமும்!

Monday, November 27, 2023

Thirukkarthigai Sokkapanai 2023 - அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

இன்று 27.11.2023  திருவல்லிக்கேணியில் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புற கொண்டாடப்பட்டது.  இன்று திருமங்கையாழ்வார் சாற்றுமுறையும் கூட.  நம் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கோபுரவாசல் தாண்டி எழுந்தருளி - திருக்கோவிலில் வாசலில், தெற்கு மாட வீதியில்  சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. 



தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இவ்விழாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு  இனிய கொண்டாட்டங்கள்  நடைபெறும்.  கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.  பனை மரத்தை இலக்கியங்கள் - , `பூலோக கற்பகவிருட்சம்’ என்று போற்றுகின்றன.   கார்த்திகை புறப்பாட்டின் போது சொக்கப்பனை கொளுத்துதல் உண்டு. இது காய்ந்த பனை ஓலைகளால் ஆனது.




பாரதியாரின் தனிப்பாடல்கள் வரிசையில் இந்த பாடலை படித்து, ரசித்து இருப்பீர்கள்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு- தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!”

நூறாண்டுகள் முன் அந்நியரது ஆதிக்கத்தில் நம் தாய்நாடு அடிமைப்பட்டு இருந்தபோது, மக்கள், முக்கியமாக வீர சுதந்திரம் வேண்டி நின்றோர் சொல்லொணா துன்பங்களை சந்தித்தனர்.   பிரிட்டிஷ் நாட்டவர் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் விடுதலை எனும் தீப்பொறியை ஏற்றி வைத்தேன். அதன் தாக்கத்தால் அனைவரது மனங்களிலும் படர்ந்திருந்த அடிமைத்தனம் எனும் காடு அழிந்தது. அடிமைத்தனக் கொடுமையில் ஆட்பட்டு அதிலிருந்து மீள முயல்வோர்க்கு சிறு பொறியளவிலான விடுதலை வேட்கையே போதுமானது. அச்சிறு பொறி பல்கிப்பெருகி அதன் தாக்கத்தால் அடிமைத்தளை நீங்கும். 

ஆங்கிலேயர்களால் பலமுறை சிறை பிடிக்கப்பட்டு கடின வாழ்க்கை வாழ்ந்த திருவல்லிக்கேணி வாசி மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் தம் பாடல்கள், மேடை பேச்சுகள் மூலம் மக்கள் மனதில் தீப்பொறி ஏற்றினார்.  மனித மனமும் ஒரு காடுதான்.  அழுக்காறுகள் அதில் உள்ள மரங்கள், இதில் ஒரு மரத்தின் பொந்தில் ஞானத்தீயின் ஒரு சிறுபொறியை பாரதி வைக்க,  அந்நெருப்புப் பொறியின் தாக்கத்தால் அம்மரங்கள் அடர்ந்த அக்காடு அழிந்தது. அதாவது மன அழுக்குகள் அனைத்தும் அழிந்து ஒழிந்தது. ஞானவேட்கையில் ஆட்பட்டு தெளிவுபெற முனைவோர்க்கு சிறு பொறியளவிலான ஞானமே போதும். அதன் தாக்கத்தால் மனசஞ்சலம் அனைத்தும் தீரும். 

பாரதி கனவு கண்ட பாரதம் இன்று பொலிவுற்று பாரில் உள்ள தேசங்களில் உன்னதமான நாடாக திகழ ஆரம்பித்துள்ளது. 

திருக்கார்த்திகை சொக்கப்பனை தீ  போல துன்பங்கள் ஓடட்டும் !  மக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மைகள் விளைந்து, நல்லனவும் இனியனவும் நடக்கட்டும்.  

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே உன் பாதமே கதி 

Photos of  Thirukarthigai deepam, chokkapanai, Thirumangai Mannan sarrumurai will be uploaded separately later. 

~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
28.11.2021.  







Thirumangai Mannan Sarrumurai 2023

இன்று 27.11.2023  கார்த்திகையில் கார்த்திகை நாள்- திருமங்கை மன்னனின் சாற்றுமுறை வைபவம். இன்று அல்லிக்கேணியில் கலியன் ஸ்ரீபார்த்தசாரதி பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருள்வார்கள்.  இன்று இரவு முதல் தைலக்காப்பு.  நாளை முதல் டிசம்பர் 18வரை மூலவர் சேவை கிடையாது.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் கலியன் - கோபுரவாசலை கடந்து 36 கால் மண்டபத்தில் எழுந்தருளி -  தீமை எல்லாம் ஒழிய சொக்கப்பனை கொளுத்தப்படும்.

 Thirumangai mannan at Thiruvallikkeni

Kaliyan was born in Thiru Kuraiyulur, 2 km from Thiruvali-ThiruNagari near Sirkazhi.  At the time of his marriage with Kumudavalli   – one of the ‘wedding’ conditions  was  to feed 1008 Vaishnavites every day.  By divine grace, Kaliyan turned Thirumangai Azhwar, which gets enacted on day 8 Kuthirai vahana purappadu at Thiruvallikkeni.  He was to categorically direct us on the greatness of chanting Ashtaksharam of Sriman Narayana.

சோழ நாட்டில் உள்ள திருவாலி-திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் ஒரு கார்த்திகைத் திங்களில் கார்த்திகைத் திருநாளில் - திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய் தோன்றியவர். சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர்.  இவரது இயற் பெயர் 'நீலன்'.  சோழநாட்டில் குறுநில மன்னராய் விளங்கினார்.  நீலனின் படைத்தளபதிகளாக, இவரது சீடர்களாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் :  நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான் போன்றவர்கள்.

கலியன் என்றால் அவரது குதிரை 'ஆடல்மா' என்னும் குதிரையும், 'அமரிற் கடமா களியானை' என்னும் யானையும் மற்றும் அவரது சிஷ்யர்களும்  நினைவுக்கு வரக்கூடும். குதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்,  புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு உள்ளது.  குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.   திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.   ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.  ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கவிலோக திவாகரன், ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் எனும் பல பெயர்கள்  உண்டு.

                           Thirumangai mannan at Velukkai @ Alari Divaydesam, Thirukachi

ஆழ்வார் குமுதவல்லியை     மணம்முடிக்க ஆசைப்பட்டார்.  குமுதவல்லி "பஞ்ச ஸம்ஸ்காரமும், ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டினாலின்றி நான் உங்களைக் கணவராக ஏற்க மாட்டேன்" என்று கூற - அதன்படியே   ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டி, தன்னிடம் இருந்த பொருள் அனைத்தும் தீர்ந்த நிலையில் வழிப்பறித்து பொருளீட்டத் தொடங்கினார். அவ்வாறு வழிப்பறிக்க திருமணங்கொல்லையில் திருவரசின் மேலே பதுங்கி இருந்தபோது வயலாளி மணவாளன் பிராட்டியோடு மணவாளக்கோலத்தில் திரளோடு வர, அவனை வளைத்துத் துணிமணிகளைக் கவர்ந்து அறுகாழியையும்  வாங்கினார். அவ்வமயம் அவரை ஆட்கொண்ட எம்பெருமான் அவரது செவியில் திரு எட்டெழுத்தாகிய திருமந்திரத்தைச் சொல்லித் தந்து இவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை.  

                                                      Thirumangai mannan at Thirunagari

கலியன் அவதாரஸ்தலத்தில் கையில் வேலுடன் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வார் சோழநாட்டுத் தலமான தில்லை சித்திரகூடம் (சிதம்பரம்) சென்று மங்களாசாசனம் செய்து, காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) எல்லையில் நுழையும்போது, அவருடைய தொண்டர்கள் "நாலுகவிப் பெருமாள் வந்தார்' என்று விருதுகூறிச் செல்ல, சைவம் தழைத்தோங்கிய சீர்காழி (தோணிபுரம்)யில் திருஞானசம்பந்தரின் சீடர்கள் "விருது கூறலாகாது' என்று கூறி, திருமங்கையாழ்வாரை திருஞானசம்பந்தரிடம் அழைத்துச் சென்றனர். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரிடம் ""நாலுகவிப் பெருமாள் என்று கூறப்படுவது உண்மையெனில், ஒரு குறள் பாடும்'' என்றார். (நாலுகவி-ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி).  திருமங்கையாழ்வாரும் ""ஒரு குறளாய் இருநிலம் மூவடி வேண்டி'' எனத் தொடங்கி பத்துப் பாசுரங்களில் 108 வைணவத் தலங்களுள் ஒன்றான சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளுக்குப் பாசுரமிட்டார்.  இதனால் மகிழ்ந்த திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரை "பரகாலன்' என்று அழைத்து,  வேல் ஒன்றை அளித்தார். திருமங்கையாழ்வார் கையில் உள்ள வேல் பற்றி  .. ..   திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு  நம் ஆசார்யர் சுவாமி மணவாள மாமுனிகள் அருளிய  வடிவழகு சூர்ணிகை: - 

அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்

ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்

பரந்த விழியும் -பதிந்த நெற்றியு- நெறித்த புருவமும்

சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும்  .. .. ...

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’. 

Thirumangai Azhwar was a  vivid versatile personality – a great poet, efficient in horse riding and warfare, exceptional faith on his Lord, travelled very widely the length and breadth of the country  and did most mangalasasanam of divyadesangal.  Kaliyan has many names -  Arulmari, Kaliyan, Parakalan, Arattamukki, Adayarseelam, and Thirumangai Mannan. He was passionate about anything he pursued,  be that bewitching damsel Kumudavalli nachiyar, feeding Srivaishnavaites  or building temples. 

ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம்.  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்  என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார்.  சிறிய திருமடல், பெரிய திருமடல் எனும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக 'பரகால நாயகியாய்'  உருவகித்த நிலையில் அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.  

                                         Thirumangai mannan at our native Dusi Mamandur 

Sensing his final days, Alwar reached Thirukkurungudi, did kainkayram to Vadivazhagiya Nambi and attained lotus feet of our Emperuman from there.  Among dense fields, his thiruvarasu now stands testimony that ‘the abode of Lord – Vaikundam’ is calling distance from here.  

"நம்மை உய்விக்கும் - நலம் தரும் சொல் - நாராயணா என்னும் நாமமே'' என அறுதியிட்டு உரைத்த திருமங்கை மன்னன் தாள்கள் பணிவோம்.

வாட்கலியன்  பரகாலன் மங்கையர்கோன் வாழியே .. .. ..

 

~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
27.11.2023

 





Saturday, November 25, 2023

Blue Sky !! - அங்காதுஞ் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்

Sunset (or sundown) is the disappearance of the Sun below the horizon of the Earth   due to its rotation. As viewed from everywhere on Earth, it is a phenomenon that happens approximately once every 24 hours except in areas close to the poles.    The time of actual sunset is defined in astronomy as two minutes before the upper limb of the Sun disappears below the horizon.  Near the horizon, atmospheric refraction causes sunlight rays to be distorted to such an extent that geometrically the solar disk is already about one diameter below the horizon when a sunset is observed.   The Sun would look a big fire ball of  orange and red hues.

 


இன்று கைசிக துவாதசி - திருவல்லிக்கேணியில் காலை 'கைசிக புராணம்' செவி சாற்றிய ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மாலை பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.   

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்

அங்காதுஞ் சோராமே  ஆள்கின்ற வெம்பெருமான்

பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும், விண் உலகமும், எந்தக் குறையுமின்றி,தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான்.  

Celeste   is the colloquial name for the pale turquoise blue colour. The same word, meaning "of the sky", is used in Spanish, Portuguese and Italian for the colour. In English, this colour may also be referred to as Italian sky blue. The Japanese equivalent is known as sora iro or mizuiro, referring to the colour of the sky or its reflection on the sea. 

Sunlight reaches Earth's atmosphere and is scattered in all directions by all the gases and particles in the air. Blue light is scattered more than the other colors because it travels as shorter, smaller waves. This is why we see a blue sky most of the time.  The light from the Sun looks white. But it is really made up of all the colors of the rainbow.  When white light shines through a prism, the light is separated into all its colors. Like energy passing through the ocean, light energy travels in waves, too. Some light travels in short, "choppy" waves. Other light travels in long, lazy waves. Blue light waves are shorter than red light waves.இன்று மாலை (24.11.2023) மேகங்கள் சற்று விளையாடி மழை பொழியுமோ என வினவ வைத்தன. புறப்பாடு சமயம் சற்று வெளிச்சம் மங்கலானது - திருவந்திக்காப்பு சமயம் எம்பெருமானின் பின்னர் அழகிய இருள் கவிழ்ந்த,  நீல வானம் இருந்தது. 



நீல வானம்,  நீயும் நானும் !!

கண்களே. பாஷையாய், கைகளே.. ஆசையாய், வையமே கோயிலாய் - என ஏதோ சினிமா பாட்டு கேட்ட ஞாபகம். உங்களில் பலர் பிறக்கும் முன்னர் 1965ல் பி மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ நடிக்க - நீல வானம் என்று ஒரு படம் வந்ததாம். 




இன்று சாயங்காலம் (அந்தி நேரத்தில்) ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்  பெரிய வீதி  புறப்பாடு நடைபெற்றது.  அந்தி என்ற பெயர் சொல்லுக்கு :  மாலை, சந்தியா காலம், செவ்வானம், சந்தியாவந்தனம், முச்சந்தி, பாலை யாழ்த் திறவகை என பல பொருட்கள் உண்டு.  அந்தி’ எனும் சொல் இங்கு மாலை நேரத்தை மட்டும் குறித்தாலும் - பொதுவாக நேரத்தினைக் குறித்து நிற்பதாகவும் சில கூற்றுக்கள் உள்ளன.   எனினும் நாம் இதை சூரியன் மறையும் காலமாகவே கொள்கிறோம்.  திருவந்திக்காப்பு சமயத்தில் நீல வானத்தில் அம்புலி உயர காட்சியளித்தது.   இன்றைய புறப்பாட்டின் திருவந்திக்காப்பு சமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே

 
adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.11.2023   

Thursday, November 23, 2023

Kaisika Dwadasi Mahatmiyam 2023 – Kaisika puranam

Kaisika Dwadasi Mahatmiyam 2023 – Kaisika puranam

Tomorrow 24.11.2023 is Kaisika Dwadasi. 

Imp Pre-Script:  1) the contents of the post are exactly reproduced from my earlier post  2) Generally I make this post on Dwadasi day, this time posting on Kaisika Ekadasi day itself, so that some could read, be inclined to go to Srivaishnava temples (divyadesams) and hear ‘Kaisika puranam’ and be blessed.



Western Ghats, very rich in bio-diversity,  is older than the Himalayan mountain range. The  forests of the wide ranging region include some of the best representatives of non-equatorial tropical evergreen forests in the world. A UNESCO World Heritage site, the Western Ghats has a significant impact on the monsoon weather pattern in the country.  At least 325 globally threatened (IUCN Red Data List) species occur in the Western Ghats.  It possesses rich varieties of  flora and fauna and some of the critically endangered ones thrive here. Howsoever interesting it be otherwise, for us – this mountain range is most important to Srivaishnavaites for the great divyadesam and this post is on a drama that occurs every year at this divine place. 

மண்ஆசை மனிதனை ஆட்டிப் படைத்துள்ளது. பெரியபெரிய சாம்ராஜ்யங்கள் மேலும் நிலத்தை கவரும் ஆசையில் சண்டையிட்டு மாண்டன.  அரசர்கள் படையெடுத்து பலதூரங்கள் சென்றனர்.  மாவீரன் அலெக்சாண்டர் இந்தியகண்டம் வரை வெற்றிகண்டவர் ஆனால் தனது ஊருக்கு திரும்பாமலே மறைந்தார்.  இந்தியாவை மௌரியர்கள், குப்தர்கள் என பலர் ஆண்டனர்.  தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, புலிகேசி, சாளுக்கிய மன்னர்கள் ஆண்டனர்.   தெற்கே விஜயநகர சாம்ராஜ்ய சிதைவுக்குப் பின்னர் ஆங்காங்கே சிதறடிக்கப்பட்ட சிறுசிறுபகுதிகளை  500க்கும் மேற்பட்ட  சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும் ஆட்சிபுரிந்தனர். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் ? - சிலருக்கு வரலாற்றில் சிறுஇடம் உண்டு - பலரது சுவடே இல்லை. 

இன்றைய சூழ்நிலையில்,  உலகநாடுகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ள சிலநாடுகள் முன்னேற்றப் பாதையில் மேலும் விரைந்து செல்கின்றன. இன்னும்  சிலநாடுகள் முன்னேற்றத்துக்கு வழிதெரியாமலும், வழிகாட்டுதலும் இல்லாமல், பசியால், பட்டினியால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. 

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"  -மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் வரிகள்.  நீலகண்டன்,  சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.  சென்னையில் வங்கப்பிரிவினைக்கு எதிராக மெரினாகடற்கரையில் பேசிய விபின்சந்திரபாலின் ஆவேச முழக்கம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  மணியாச்சி ரயில்நிலையத்தில் கலெக்டர் ஆஷை  திரு வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.  நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு பெரிய புரட்சிப்படையை உண்டாக்கி 1857ல் நடந்தது போன்ற மிகப்பெரிய புரட்சியை ஒரேநேரத்தில் நாடு முழுவதும் உண்டாக்கவேண்டும் என்று பாடுபட்டார்.   ஆஷ் கொலையில் நீலகண்ட பிரம்மச்சாரி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.  பெல்லாரிசிறையில் 7 ½ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.  சிறை மீண்டு சென்னை வந்த நேரத்தில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வாடிய   அவரது பசியை கண்டதும் உருகி பாரதியார் முழங்கிய வரிகள் இவை !!

ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி (hunger) என்ற உணர்வு ஏற்படுகிறது.  ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (Hormone)  நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறிவைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி பசிஉணர்வு ஏற்படுகிறது.  நூற்றாண்டுகள் முன்னர், மனிதவாழ்க்கை எளிமையாக இருந்த காலத்தில்,  மனிதனின் நோக்கம் கடுமையாக உழைத்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதுமட்டுமே.  உடல்எடை குறைத்தலோ, ஊட்டச்சத்து என தனியாக உட்கொள்ளுதலோ இல்லை.  தேவைப்படவில்லை ! தினசரி உண்ணும் உணவே அவர்களுக்கு சத்தாகவும் மருந்தாகவும் பயன்பட்டது.   .... விதவிதமாக அறுசுவை உணவுகள் கிடைக்கும் இக்காலத்தில் பலர் சரியான உணவில்லாமல் கஷ்டப்படுவது, மிக வருத்தமான விஷயம்.

According to some info – across the world, up to 811 million people do not have enough food. According to recent estimates, 45 million people in 43 countries are at risk of sliding into famine – the most extreme form of hunger, which can result in death from starvation or disease. Indeed, parts of  Yemen, South Sudan and Madagascar may be close to or are already in the grip of famine. There are other existential crises too – as some countries are engulfed in internal conflicts exposing millions of their own countrymen to hunger,  millions of  children are at risk of dying unless they receive immediate treatment for malnutrition.

Then there is another grave behaviour associated with demons – ‘cannibalism’.  Humans turning into cannibals may seem like the perfect script for an apocalyptic film. It is the act of consuming another individual of the same species as food. Cannibalism is a common ecological interaction in the animal kingdom and has been recorded in more than 1,500 species. Human cannibalism is well documented, both in ancient and in recent times.Cannibalism, however, does not—as once believed—occur only as a result of extreme food shortage or of artificial/unnatural conditions, but may also occur under natural conditions in a variety of species. Have seen fishes eat their own species, cats do, and in one of the gory documentaries in Discovery channel, crocodiles were observed eating their own young !

ThirumangaiAzhwaruthsavam is celebrated in the month of Karthigai, during his times, built the huge walls of Srirangam and contributed in no small measure to the temple there, sought moksham, Lord Ranganatha directed him to visit his ‘Southern Home.’ Accordingly, Kaliyan came down to  the Vamana Kshetram of ThirukKurungudi  and performed services invoking the blessings of Lord AzhagiyaNambi and composed the last of his sacred verses (Paasurams) on the Lord before attaining moksha at Thirukkurungudi.




பசி, ஆசை, தேடுதல், கோவம், ஆத்திரம், போன்றன பல உலக இயல்பு .. பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்நிலை உள்ளனவா ?   செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தாக்கு வழியாக 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வழிந்தோடியதாக ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தண்ணீர் இருந்ததன் அடிப்படையில் அக்கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. 

It is “ThirukKurungudi” divyadesam  located on the  foot of the Mahendra Hill on the Western Ghat. From Chennai, one can take the Kanyakumari/Ananthapuri Express to Valliyur. From here, one can reach Thirukkurungkudi (10 km) in 20 minutes by boarding the Papanasam bound bus.   At this divine place, stands the most majestic Azhagiya Nambirayar Temple ~ sung by Periyazhwar,  Thirumazhisaippiran, Thirumangai Azhwar and Swami Nammazhwar.   The famous ‘Kaisika puranam’ is associated with this temple and is read on ‘shukla paksha’ dwadasi of the month of Karthigai, known as ‘Kaisika Dwadasi’ and enacted in drama form too .. .. .. 

அடர்ந்த வனவிலங்குகள் நிறைந்த காட்டில் - சிங்கம், புலி, கரடி, ஓநாய், கழுதைபுலி போன்ற மிருகங்களிடம் மாட்டிகொண்டால் என்ன ஆகும் ?  நரமாம்சம் புசிக்கும் ராட்சசனிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் !  திருக்குறுங்குடிதனில் - ஒரு பக்திமானுக்கும் ! - பசியில் துக்கப்பட்ட ஒரு ராட்சசனுக்கும் இடையே பெரிய வாதப்போரே நடந்தது.  பசியில் தவித்து இருந்தும், தன் இரையை செல்ல விட்ட ராக்ஷஸன் நல்லவனா ! - அவ்வாறு தப்பி சென்று, தனது இறைப்பணி முடிந்தவுடன், வாக்கை காப்பாற்றி தன்னையே உணவாக ஒப்படைத்த பக்தன் உயர்ந்தவனா !! 

If one were to describe the Puranam in a simple captivating manner: it is :-   

"ஊன் மல்கி மோடு பருத்தவனுக்கும்..... நினைந்து,  நினைந்து  உள்கரைந்துருகி இளைத்தவனுக்கும்' நடந்த சத்திய போராட்டம் “கைசிக புராண மகாத்மியம்.” 

(the battle of wits beween a Rakshas who grew fat eating meat and the baktha who became leaner living  thinking, and singing paeans of God all the time) 

Every year on the Kaisika Dwadasi day the puranam is  read out [in characteristic manner by Sri U.Ve M. A. Venkadakrishnan Swami] at Sri Parthasarathi Swami temple and by sampradhaya vidwans in many other divyadesangal.   The high moral  story of Nampaduvaan is in the 48th  chapter of Sri Varaha Puranam,;  explains and emphasizes the importance of singing the glory of Lord Sriman Narayana.     Sri Varaha Purana is considered one of the major eighteen Mahapuranas. 

It would have been wonderful to have a photo of Dr MAV Swami rendering Kaisika puranam in front of Sri Parthasarathi and Thiruppanar but photography inside is not allowed and hence could not post such a photo.



எம்பெருமானிடத்திலே  பக்தி கொண்டு அவனது திருவடி நீழலையே அடையவேண்டி திண்ணம் கொண்டு  இருப்பவர்கள் - சகல உயர்வும் பெறுபவர்களாவர்.  திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் மகேந்திர மலையில் நடந்த இந்நிகழ்வு அனைத்துக்கும் சிகரம் வைத்ததை போன்றதாகும். கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று ஸ்ரீமன் நாராயணின் பரம பக்தனான நம்பாடுவான் திருக்குறுங்குடிநம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழிமறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனாலும்  அவன் சற்றும் மனக்கிலேசம் அற்றவனாய்,  தான் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே கொண்ட நம்பிக்கை சற்றும் அசையாதவனாய் இருந்தான். ப்ரம்மரக்ஷஸை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு;  என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். எனது இந்த அற்புதமான விரதத்தை கோயிலின் வாசலில் வீணையை மீட்டி  நம்பெருமாள் முன்பே ‘பண்’ இசைத்து திருப்பள்ளியெழுச்சி  பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். 

அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, "யாரவது தானாக வலிய  வந்து உயிரை மாய்த்துக்  கொள்வாரோ ?  நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; நீ  இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்" என - அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான். லோகம் உண்டானதும் சத்யத்தாலே என வாக்கை காப்பாற்றி  திரும்பிய நம்பாடுவானிடம் ராக்ஷஸ் பல பலன்களை யாசித்து,  கடைசியில் கீத பலத்தையாவது தருமாறு கேட்டு, சத்தியத்தின் பெருமையை உணர்ந்து, அவனிடமே சரணாகதி அடைந்து மோக்ஷம் அடைந்தது.   இந்த சிறப்புதான் கைசிக மகாத்மியம்** 

The World exists on promises and fulfillment of them and the story of Nam Paduvaan only describes the greatest virtues of those devoted and committed to the kanikaryam (service) to Lord.  The ardent devotees of Sriman Narayana will never err or sin in life.   There cannot be a better example than that of ‘Nampaduvaan’.   

The story of Num Paduvaan can be best summarised as “the fight between ‘Padi Ilaithavan and Pasiyale Ilaithavan’ [one who leaned by fasting in the vratha of Singing paeans and one who was starved off food].  Legend has it  that on every Kaisika Ekadasi day, Nampaduvaan, an ardent devotee of the Lord Maha Vishnu  used to do Namasankeerthanam for Emperuman at Thirukurungudi.  This Nampaduvan Charithram was narrated by Sri Varaha Perumal to Bhoomi Pirarttiyar in Varaha puranam.  

It is believed that those who go to temple on this holy Kaisika Dwadasi day and read ‘kaisika purana’ will be showered with  munificence of Lord…. For us hearing the Kaisika puranam in Divyadesam nearer will give us all benefits of a good pure happy life ; those who hear ‘kaisika purana’ will get His choicest blessings and perhaps all of us who read and think of Nampaduvaan and Lord would also be getting the bountiful blessings of Lord Sriman Narayana, 

Parayana palan 

ஏதத் கீத பலம் தேவி கௌமுதத்வாதஸீம் புந:

யஸ்து காயதி ஸ ஸ்ரீமாந்  மம லோகஞ்ச கச்சதி  

ஸ்ரீவராஹப் பெருமாள் பிராட்டியிடம் உரைத்தது : " யார் ஒருவன் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ  த்வாதசி நாளில் -  நமக்கு முன்பாக கைசிக மகாத்மியம் வாசிக்கின்றானோ, வாசிப்பதை கேட்கிறானோ - அவன் நமக்கு என்றும் திருப்பல்லாண்டு பாடியபடி இருக்க கடவன்". இப்படி ராகம்/பக்தி  மூலமாகவே எம்பெருமானை அடைவதற்கான உபாயம்  உள்ளது. 




There would be grand periya mada veethi purappadu of Sri Parthasarathi Emperuman on Kaisika Ekadasi and Kaisika Dwadasi days  - here are some photos of Thirukkurungudi taken earlier and Sri Parthasarathi Emperuman Kaisika Ekadasi purappadu this evening.

Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale Saranam. 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.11.2023