To search this blog

Showing posts with label Itheeham. Show all posts
Showing posts with label Itheeham. Show all posts

Sunday, June 21, 2026

Swami Doddayacharyar Thirumaligai Thirunakshathiram at Thiruvallikkeni 2026

 

  

Swami Doddayacharyar Thirumaligai Thirunakshathiram at Thiruvallikkeni 2026

 


Sri U Ve Kovil Kanthadai Chandamarutham Periyappangar (Doddayachar) Swami Thirunakshathiram celebrations at Thiruvallikkeni  2026

 

Sri Vaishnava Sampradhayam places great emphasis on following the path shown by Acharyan.  Our  Sampradhayam is proud of the rich lineage of greatest of Acharyas who have guided us towards salvation.  One can easily discern from the  Great ‘Thaniyan’ of Swami Koorathazhwaan that we observe daily –  

 

“Lakshminatha samarambaam, Nathayamuna madhyamam – Asmath Achaarya paryanthaam, vanthe Guru parambaram”.

 For a  Srivaishnavaite, Acharyar leads and guides one to ultimate  Sriman Narayana. My Acharyar  is Cholasimhapuram Doddayachaaryar (presently Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Yoga Nrusimhan  Swamy).   We the Sishyas of Swami belong to the lineage, which emanated from the Holy feet of Sri Periya Perumal, Periya Pirattiar, Senai Muthalvar, Nammazhwar, Naathamunigal, Uyyakkondar, Manakkal Nambigal, Aalavanthar, Periya Nambi, Emperumaanar, Koorathazhwar, Mudaliandan, Embaar, Battar, Nanjeeyar, Nampillai,  Vadakku Thiruveethipillai, Pillai Logachariyar, Thiruvoimozhipillai, Maanavala Maamunigal, Vaanamamalai Jeeyar to  Doddacharyar (of whose lineage we have the present head – Sri Yoga Narasimha Swami).

நம் ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையே - ஆசார்யர்கள் தான்.  பெரிய பெருமாள்; ஸ்ரீ ரங்கநாச்சியார், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, எம்பெருமானார் இராமானுசர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பிள்ளை லோகாச்சார், திருவாய்மொழிப்பிள்ளை, பெரிய ஜீயர் எனும் நம் மணவாள மாமுனிகள், வானமாமலை ஜீயர் சுவாமி,  தொட்டையங்காரப்பை சுவாமி, சண்டமாருதம் சுவாமி எனும் பெரிய சுவாமி தொட்டையாச்சர் என எங்கள் ஆச்சார்யர் குலம் நீள்கிறது.  பெரியப்பங்கார் ஸ்வாமிக்கு பிறகு அவரது திருக்குமாரர் ஸ்ரீ கோயில் கந்தாடை சண்ட  மாருதம் ஸ்ரீ சிங்கராச்சார் சுவாமி; பிறகு வர்த்தமான ஸ்வாமியாக ஸ்ரீயோக ந்ருஸிம்ஹன் சுவாமி.    

20.6.2026  அன்று ஸ்ரீ கோயில் கந்தாடை சண்ட  மாருதம் பெரியப்பங்கார் ஸ்வாமி  திருநக்ஷத்திரம் மற்றும் ஸ்ரீ சிங்கராச்சார் ஸ்வாமியின்   திருநக்ஷத்திர வைபவமும் அவரது சிஷ்யர்களான அடியோங்களால் விமர்சையாக திருவல்லிக்கேணி ஸ்ரீயதுகிரி யதிராஜ ஜீயர்  மடத்தில் கொண்டாடப்பட்டது. 

ஸ்ரீவைணவர்களான நம் அனைவருக்கும் எம்பெருமானார் இராமானுசர் திருவடி சம்பந்தமே மிக போக்யமானது.  உடையவர்   74 சீடர்களை சிம்ஹாசனாதிபதிகளாக நியமித்தருளினார்.  அந்த பரம்பரையில் வந்தவர்களிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்வோர் உடையவர் திருவடி சம்பந்தம் பெறுவர்.  உடையவர் சிஷ்யர்களில் அதி முக்கியமானவர் திரு முதலியாண்டான். அவரது திருக்குமரன் கந்தாடையாண்டான் - அவர் தம் வம்ச பரம்பரையில் வந்தவர் சோளசிங்கபுரம் தொட்டையாச்சார்யார் எனும் மஹாசார்யர்.  நமது வர்த்தமான ஆசார்யர் - ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம் கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன் ஸ்வாமி (Thiru KKC Yogesh Swami)

 

சில நூறாண்டுகள்  முன்பு நம் சுவாமி திருவம்சத்தில் ஸ்வாமி தொட்டாச்சார்யார் என்பவர் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோக நரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால்  பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே  'ஸ்ரீ தேவராஜ  பஞ்சகம்'  எனும்  ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகன ரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. 

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு  எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவம்சத்திலே அவதரித்தவர் நம் ஆசார்யர். இன்று அவர் எழுந்து அருளி இருந்து நமக்கு அருளியது நம் பெரும் பாக்கியம். 

Understand that there were  5  Thirumaligais of the lineage of Doddacharyar  earlier.  Presently there are only two - the family of Swami Periyappangar Swami - of whose lineage is our varthamana Acharyar - Sri Ubhaya Vedantha Kovil Kanthadai Chandamarutham Singarachar Swamy;  the other is that of Swami Vedanthachaar. 

Saturday 20.6.2026,  was  a great day for the sishyas as the  Thirunakshathiram of Sri U.Ve. KKCP Periyappangar Swami &  thirunakshathiram of Sri Singarachar swami were celebrated at  Yadugiri Yathiraja Mutt, Triplicane.  Our varthamana Swami Sri KKCP Yoga Narasimhan  swami descended at Thiruvallikkeni  and hundreds of sishyas and members of ‘Sri Koil Kanthaadai Chandamarutham Periyappangar Swami Sishya Sabha’ gathered  to get the blessings of Acharyar.    

Tracing back our lineage,  Swami Sri Doddachar was born in 1543 in the famous lineage of Swami Mudaliandan.  In this Kaliyuga, we know that Thirukachi Arulalar directly conversed with Acharyan Thirukachi Nambigal  … and centuries later,  Sri Devathirajar had direct interaction with our Doddacharyar Swami too.  The most famous amongst the  brahmothsavam is the  Garuda Sevai – at Thirukachi,  Lord Devapperumal is taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi.  Garuda Seva has special significance not only for Kanchi, more so for Sholinghur because of Swami Doddachaaryar connection.  Swami Doddayachar was an ardent devotee of Lord Varadharaja and did many kainkaryams to Him. He was a regular in the annual Vaikasi Garuda Sevai of Devathirajar. Legend has it that on a particular year, he was not well and could not attend the Garudothsavam at Kachi. He was feeling desperate about his misfortune of not being able to have darshan of PerArulalar at Kachi on Garuda vahanam. He lamented standing near the Thakkan kulam at Cholasimhapuram (Sholinghur]. He composed hymns on Lord Varadharaja, known as Sri Devaraja Panchakam. He longed for the Lord's sevai and these outpourings were a direct result. 

In the Devaraja Panchakam, Acharyan [Doddachaaryar] sings that .’Lord Varadarajan is radiant on the back of Garudan --the son of Vinathai—and is flanked on both sides by the twin sets of white umbrellas and Kavari deer tail chamarams (fans). His sacred, lotus-soft right hand is held in abhaya mudhra pose assuring all that He will free them from all their fears. His beautiful lotus-like eyes rain anugraham on all the beholders. Adiyen salutes always that Sarva Mangala Moorthy emerging out of His aasthaanam through the western gopuram on the third day of His Vaikasi Brahmothsavam. 

Emperuman will never let his ardent bhaktha down. He came down to Sholinghur and gave darshan to Doddacharyar - seated on Garuda vahanam. Such is the mercy and leela vinotham of PerArulalar. Continuing as it does, on every  Vaikasi Garudothsavam day, there is a tradition known as Doddachaaryar Sevai, when the archakas hide Lord Varadar at the western gate for a short time with divine white umbrellas (ven thirukudai) just before He leaves the temple.  It is believed that Lord goes to Sholinghur for giving darshan to Doddacharyar. The mangala harathi takes place thereafter. 

We are proud to follow the lineage of  Doddacharyar and follow the footsteps of our Acharyan - Sri U Ve Koil Kanthadai Chandamarutham Yoga Narasimha Swami. Here is the thanian of our Varthamana Swami…. 

ஸ்ரீமத் வதூல குலவாரிதி பூர்ணசந்த்ரம்

ஸ்ரீமந் மஹார்ய சரணாம்புஜ  ஸஞ்சரீகம்

ஸ்ரீ சிங்கரார்ய கருணாப்த ஸமஸ்தபோதம்

பக்த்யா ச  யோக ந்ருஸிம்ஹ  குரும்  ஸ்ரயாமி !    

On that important day at  Thiruvallikkeni,  there was Thirupallandu, Thiruppalliyezuchi Thiruppavai, Thirumozhi pasuram of Singavelkunram,  & Thirukadigai;  Kovil Thiruvaimozhi, Sri Ramanuja Noorranthathi and Upadesa Rathinamalai sevakalam.  Samasrayanam was performed for some sishyas.    We were too fortunate to have Perumal theertham and Sripada theertham of our Acharyan and  darshan of ‘Thiruvaradhana Perumal – Kannan’ of our Swami.  Sri KKCP Bharath @ Srinivasan swami was also present at Tiruvallikkeni.
















  

Azhwaar Emperumaanar Jeeyar Thiruvadigale Saranam !

Acharyan Thiruvadigale Saranam !!  

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி 

எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து,திருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே ***  ***   

adieyn  Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar


 

Monday, February 17, 2025

தைப்பூசம் - Sri Parthasarathi Perumal harvest ~ Kalinga Narthanam 2025

தைப்பூசம் - Sri Parthasarathi Perumal harvest

~ Kalinga Narthana Thirukolam 2025

 

 


எல்லா நாகரீகங்களிலும்  அறுவடை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்தவர்களாய்  தமிழர்களின் சிறப்பு கூறப்படுகிறது.    

Ever heard of ‘City of Westminster’,  an inner London city and borough. It has been the capital city, de facto, of multiple British governments. Historically in Middlesex, it is immediately to the west of the older City of London.  Not much was  read about : Oliver Cromwell (1599 – 1658), an English general and statesman who, first as a subordinate and latterly as Commander-in-Chief, led armies of the Parliament of England against King Charles I during the English Civil War, subsequently ruling the British Isles as Lord Protector from 1653 until his death in 1658.  Or that a war thousands of miles away threatened changing the dynamics of Chennai, India, - British India to be precise.    

அறுவடை என்பது பயிரிடப்பட்ட பயிரிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை முதிர்ச்சிக்குப் பின் சேகரித்தல் ஆகும்.  நெல்மணிகளை அறுத்து, போரடித்து நாம் உண்ணும் அரிசியாக மாற்றுவது மகத்துவமானது.  மனித நாகரீகத்தில்,  தொன்மையான தொழில், உழவுத் தொழில்.  வயல்களில் களை எடுத்து, ஆழ உழுது, நீர் பாய்ச்சி, விதை தூவி,உரமிட்டு, பயிர்களை பேணி வளர்ப்பர் விவசாயிகள்.   நல்ல வளர்பிறை நாளில் ஏர் பூட்டி நிலத்தில் உழவு செய்வது விவசாயிகளின் பாரம்பர்ய வழக்கம். அந்த ஆண்டு முழுவதும் நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் எனச் சூரிய பகவானிடம் வேண்டி உழவு செய்து வைப்பார்கள் விவசாயிகள். இப்படி ஏர் பூட்டுவதைப் ‘பொன் ஏர் பூட்டுதல்’, ‘ என்பர்.    நன்கு விளைந்த பயிர்களை அறுவடை செய்வது ஒரு திருவிழா !    

Feb 12, 2025  (Thai 305 – Pournami day) was a very special day for all Hindus.  ‘Thai Pusam’  -  Sri Parthasarathi special purappadu. There are very few occasions when Perumal purappadu has purappadu outside the precincts of mada veethi.  On Thaipoosam,  Sri Parthasarathi in ‘Kaalinga Narthana thirukolam’  accompanied by Senai Muthaliyaar   had periya maada veedhi purappadu thence to Big Street.  For Saivaites – thai poosam on pournami day is significant as it commemorates the birth day of Murugan and the occasion when Parvathi gave Subramanyar a spear for vanishing the demon Soorapadman.   

At Thiruvallikkeni divyadesam, traditionally on Thaipusam day, Sri Parthasarathi visits Big Street – the long winding Veeraghava Mudali Street – which now a days is more of a lane than a Big! street….  This is the Uthsavam where Perumal oversees the bountiful harvest from His field. (kadhir aruthal). Perhaps many decades  or even centuries  ago, the junction of Big Street, Bharathi Salai (Pycrofts road), might have represented the end of the locality and perhaps the area thereafter could have been rice fields………… now it is maze of buildings in small lanes and by-lanes where people jostle for space.  There was a  pandal put up at the Junction where Perumal halted for a brief-while and paddy was placed before the Lord, then at His feet.  The rice grains so placed were distributed to the devotees too…  

I had been under the impression that perhaps this could be construed as the boundary of Triplicane village of olden days – but couple of well-informed persons had posted that Perumal used to visit longer – till the vasantha mantap of the Sri Arasadi Karpaga Vinayagar temple (more famously Big Street Pillaiyar kovil) and beyond the famous Red building of The Hindu High School , .. .. not any longer !  

Periyazhwar in his ‘Periyazhwar Thirumozhi’ sings: 

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு * அவன்

நீள்முடியைந்திலும் நின்று நடம்செய்து*

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்*

தோள்வலி வீரமே பாடிப்பற!   தூமணி வண்ணனைப் பாடிப்பற!!

 


This is legend  of most dreaded Kaliya and the exploit of Lord Krishna who jumped into the pond, danced on the hood of deadly snake, thereby turning the lake turbid  - and when Kaliya surrendered, He benevolently favoured him too….   Kaliya  also known as Kalingan was a poisonous Naga living in the Yamuna River, in Vrindavan.  Over the years, the water had turned totally poisonous, thereby causing trouble to  fish, cattle, birds and all living things.  Legend had it that Kaliya had chosen that place as Garuda was prevented from entering there.   

Lord Krishna was playing with cowherd colleagues, when the ball fell into the water source.  Krishna playfully jumped into it.  Kāliya with his anger,  rose up emitting  poison and wrapped himself around Krishna's body.  The folk around and all others were mortally afraid and started praying.  Lord  Krishna subdued him,  sprang into Kāliya's head and danced on its head.  The serpent king’s wives came and prayed to Lord Krishna with folded hands.  Kāliya, too,  recognizing the greatness of Krishna, surrendered, promising he would not harass anybody.  Lord Krishna pardoned him and showed him the divine path, once he vowed to eschew violence and fell at His Lotus Feets.  The chastising of the Naga King is described in great detail.  Lord Krishna whose birth was to subdue envious demons, climbed atop a Kadamba tree and finally changed the very nature of Kalinga.   






இன்று [12.2.2025] தைப்பூசம்.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்கன் மீது  நர்த்தனமாடும் திருகோலத்தில் பாங்குடன் புறப்பாடு கண்டு அருளினார்.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுடன்சேனை முதல்வரும் எழுந்து அருளினார்.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தின் பல புறப்பாடுகளில்   இன்று ஒரு தனி சிறப்பு.   தை பூசம் அன்று மட்டுமேபெருமாள் கங்கை கொண்டான் மண்டபம் தாண்டி பெரிய தெரு (வீரராகவ முதலி தெரு என்பதே இத்தெருவின் தொன்மையான பெயர்) எழுந்து அருள்கிறார். தைப்பூசம் என்பது 'கதிர் அறுக்கும்திருநாளாக கொண்டாடப்படுகிறது.   பெரிய தெருவும் பாரதி சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட  பந்தலில் ஸ்ரீபார்த்தசாரதி எழுந்து அருளியவுடன்,  நெல்மணிகள் கொண்ட கட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுபெருமாளின் திருவடிகளில் வைக்கப்பட்டுபிறகு நெல்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.  பல வருடங்களுக்கு முன்இவ்விடம் ஊர் எல்லை ஆகவும்தாண்டிய பகுதிகள் வயல் வரப்புகள் ஆகவும் இருந்து இருக்க வேண்டும்.  இவ்வுத்சவம்பெருமாள் தனக்கு சொந்தமான வயல்களில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களின் கணக்கு பார்ப்பதாக ஐதீஹம்.  

Thiruvallikkeni and Thirumylai and other places like Thiruvanmiyur, Thiruvottiyur – existed far many centuries before the history of the city of Madrasapattinam started.  .. .. not sure what would have the boundaries of yore .. there existed a river then known as Thiruvallikkeni river too !! 

Following the Irish Rebellion of 1641, most of Ireland came under the control of the Irish Catholic Confederation. In early 1649, the Confederates allied with the English Royalists, who had been defeated by the Parliamentarians in the English Civil War. By May 1652, Cromwell's Parliamentarian army had defeated the Confederate and Royalist coalition in Ireland and occupied the country, ending the Irish Confederate Wars (or Eleven Years' War). 

Around that time, near our residences – Francis Day obtained grant from the Rajah of Chandragiri on 1.3.1639 and the station was considered to be so important   by the Agency at Masulipatam, that they  directed Day to begin building the Fort at the Company’s expense, without waiting for the orders of the Court of Directors. When  Fort St George was initially established - the times were bad. Trade had been very bad at home, as well as on the Coast of Coromandel. England had been distracted by the great Civil War, between Charles and his –Parliament.  The Company were to suffer more when King Charles returned after war against the Scotts; there was pressing need for money that compelled them to resort to   most extraordinary means for obtaining it.  In  1652, matters became even more threatening. Cromwell declared war against Holland, and the Factors in the Fort were now in imminent peril. They prayed to the Directors to increase their little garrison, and permit them to complete their fortifications; and above all to be allowed to construct a curtain towards the sea.  The little Agency forces here in Madrasapatnam felt very threatened of their existence  from natives as also from   a cannonading from the Dutch on the side facing the sea.  The friendship between the Portuguese and English was probably cemented by their common enmity towards the Dutch. Indeed the Dutch possessed so powerful a force in the Indian seas, that it seemed as though no nation could stand against them. They took Ceylon and excluded the Portuguese from the Island. They blockaded the Portuguese capital of Goa ; they blockaded the English settlement at Bantam ; and it was fully expected that if Goa fell, the Dutch would blockade the Surat river, and thus put themselves in possession of the whole of the trade on the Coast of Malabar.

In 1654, a treaty was at length concluded between the English and Dutch, known as the treaty of Westminster. That treaty  concluded between the Lord Protector of the English Commonwealth, Oliver Cromwell, and the States General of the United Netherlands, was signed  in  April 1654. The treaty ended the First Anglo-Dutch War (1652–1654). The treaty is otherwise notable because it is one of the first treaties implementing international arbitration as a method of conflict resolution in early modern times.  But the colonial forces eventually took control of the vast Nation and we ended up reading only British dominance as the only History that occurred to us !! 



புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்.   இதோ இங்கே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருப்பாதங்களில் நெற்கதிர்கள் சமர்ப்பிக்கப்படும் காணொளி  :   https://www.youtube.com/watch?v=ekzuyaCOfws


~adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar













  

Thursday, November 23, 2023

Kaisika Dwadasi Mahatmiyam 2023 – Kaisika puranam

Kaisika Dwadasi Mahatmiyam 2023 – Kaisika puranam

Tomorrow 24.11.2023 is Kaisika Dwadasi. 

Imp Pre-Script:  1) the contents of the post are exactly reproduced from my earlier post  2) Generally I make this post on Dwadasi day, this time posting on Kaisika Ekadasi day itself, so that some could read, be inclined to go to Srivaishnava temples (divyadesams) and hear ‘Kaisika puranam’ and be blessed.



Western Ghats, very rich in bio-diversity,  is older than the Himalayan mountain range. The  forests of the wide ranging region include some of the best representatives of non-equatorial tropical evergreen forests in the world. A UNESCO World Heritage site, the Western Ghats has a significant impact on the monsoon weather pattern in the country.  At least 325 globally threatened (IUCN Red Data List) species occur in the Western Ghats.  It possesses rich varieties of  flora and fauna and some of the critically endangered ones thrive here. Howsoever interesting it be otherwise, for us – this mountain range is most important to Srivaishnavaites for the great divyadesam and this post is on a drama that occurs every year at this divine place. 

மண்ஆசை மனிதனை ஆட்டிப் படைத்துள்ளது. பெரியபெரிய சாம்ராஜ்யங்கள் மேலும் நிலத்தை கவரும் ஆசையில் சண்டையிட்டு மாண்டன.  அரசர்கள் படையெடுத்து பலதூரங்கள் சென்றனர்.  மாவீரன் அலெக்சாண்டர் இந்தியகண்டம் வரை வெற்றிகண்டவர் ஆனால் தனது ஊருக்கு திரும்பாமலே மறைந்தார்.  இந்தியாவை மௌரியர்கள், குப்தர்கள் என பலர் ஆண்டனர்.  தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, புலிகேசி, சாளுக்கிய மன்னர்கள் ஆண்டனர்.   தெற்கே விஜயநகர சாம்ராஜ்ய சிதைவுக்குப் பின்னர் ஆங்காங்கே சிதறடிக்கப்பட்ட சிறுசிறுபகுதிகளை  500க்கும் மேற்பட்ட  சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும் ஆட்சிபுரிந்தனர். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் ? - சிலருக்கு வரலாற்றில் சிறுஇடம் உண்டு - பலரது சுவடே இல்லை. 

இன்றைய சூழ்நிலையில்,  உலகநாடுகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ள சிலநாடுகள் முன்னேற்றப் பாதையில் மேலும் விரைந்து செல்கின்றன. இன்னும்  சிலநாடுகள் முன்னேற்றத்துக்கு வழிதெரியாமலும், வழிகாட்டுதலும் இல்லாமல், பசியால், பட்டினியால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. 

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"  -மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் வரிகள்.  நீலகண்டன்,  சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.  சென்னையில் வங்கப்பிரிவினைக்கு எதிராக மெரினாகடற்கரையில் பேசிய விபின்சந்திரபாலின் ஆவேச முழக்கம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  மணியாச்சி ரயில்நிலையத்தில் கலெக்டர் ஆஷை  திரு வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.  நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு பெரிய புரட்சிப்படையை உண்டாக்கி 1857ல் நடந்தது போன்ற மிகப்பெரிய புரட்சியை ஒரேநேரத்தில் நாடு முழுவதும் உண்டாக்கவேண்டும் என்று பாடுபட்டார்.   ஆஷ் கொலையில் நீலகண்ட பிரம்மச்சாரி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.  பெல்லாரிசிறையில் 7 ½ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.  சிறை மீண்டு சென்னை வந்த நேரத்தில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வாடிய   அவரது பசியை கண்டதும் உருகி பாரதியார் முழங்கிய வரிகள் இவை !!

ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி (hunger) என்ற உணர்வு ஏற்படுகிறது.  ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (Hormone)  நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறிவைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி பசிஉணர்வு ஏற்படுகிறது.  நூற்றாண்டுகள் முன்னர், மனிதவாழ்க்கை எளிமையாக இருந்த காலத்தில்,  மனிதனின் நோக்கம் கடுமையாக உழைத்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதுமட்டுமே.  உடல்எடை குறைத்தலோ, ஊட்டச்சத்து என தனியாக உட்கொள்ளுதலோ இல்லை.  தேவைப்படவில்லை ! தினசரி உண்ணும் உணவே அவர்களுக்கு சத்தாகவும் மருந்தாகவும் பயன்பட்டது.   .... விதவிதமாக அறுசுவை உணவுகள் கிடைக்கும் இக்காலத்தில் பலர் சரியான உணவில்லாமல் கஷ்டப்படுவது, மிக வருத்தமான விஷயம்.

According to some info – across the world, up to 811 million people do not have enough food. According to recent estimates, 45 million people in 43 countries are at risk of sliding into famine – the most extreme form of hunger, which can result in death from starvation or disease. Indeed, parts of  Yemen, South Sudan and Madagascar may be close to or are already in the grip of famine. There are other existential crises too – as some countries are engulfed in internal conflicts exposing millions of their own countrymen to hunger,  millions of  children are at risk of dying unless they receive immediate treatment for malnutrition.

Then there is another grave behaviour associated with demons – ‘cannibalism’.  Humans turning into cannibals may seem like the perfect script for an apocalyptic film. It is the act of consuming another individual of the same species as food. Cannibalism is a common ecological interaction in the animal kingdom and has been recorded in more than 1,500 species. Human cannibalism is well documented, both in ancient and in recent times.Cannibalism, however, does not—as once believed—occur only as a result of extreme food shortage or of artificial/unnatural conditions, but may also occur under natural conditions in a variety of species. Have seen fishes eat their own species, cats do, and in one of the gory documentaries in Discovery channel, crocodiles were observed eating their own young !

ThirumangaiAzhwaruthsavam is celebrated in the month of Karthigai, during his times, built the huge walls of Srirangam and contributed in no small measure to the temple there, sought moksham, Lord Ranganatha directed him to visit his ‘Southern Home.’ Accordingly, Kaliyan came down to  the Vamana Kshetram of ThirukKurungudi  and performed services invoking the blessings of Lord AzhagiyaNambi and composed the last of his sacred verses (Paasurams) on the Lord before attaining moksha at Thirukkurungudi.




பசி, ஆசை, தேடுதல், கோவம், ஆத்திரம், போன்றன பல உலக இயல்பு .. பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்நிலை உள்ளனவா ?   செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தாக்கு வழியாக 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வழிந்தோடியதாக ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தண்ணீர் இருந்ததன் அடிப்படையில் அக்கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. 

It is “ThirukKurungudi” divyadesam  located on the  foot of the Mahendra Hill on the Western Ghat. From Chennai, one can take the Kanyakumari/Ananthapuri Express to Valliyur. From here, one can reach Thirukkurungkudi (10 km) in 20 minutes by boarding the Papanasam bound bus.   At this divine place, stands the most majestic Azhagiya Nambirayar Temple ~ sung by Periyazhwar,  Thirumazhisaippiran, Thirumangai Azhwar and Swami Nammazhwar.   The famous ‘Kaisika puranam’ is associated with this temple and is read on ‘shukla paksha’ dwadasi of the month of Karthigai, known as ‘Kaisika Dwadasi’ and enacted in drama form too .. .. .. 

அடர்ந்த வனவிலங்குகள் நிறைந்த காட்டில் - சிங்கம், புலி, கரடி, ஓநாய், கழுதைபுலி போன்ற மிருகங்களிடம் மாட்டிகொண்டால் என்ன ஆகும் ?  நரமாம்சம் புசிக்கும் ராட்சசனிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் !  திருக்குறுங்குடிதனில் - ஒரு பக்திமானுக்கும் ! - பசியில் துக்கப்பட்ட ஒரு ராட்சசனுக்கும் இடையே பெரிய வாதப்போரே நடந்தது.  பசியில் தவித்து இருந்தும், தன் இரையை செல்ல விட்ட ராக்ஷஸன் நல்லவனா ! - அவ்வாறு தப்பி சென்று, தனது இறைப்பணி முடிந்தவுடன், வாக்கை காப்பாற்றி தன்னையே உணவாக ஒப்படைத்த பக்தன் உயர்ந்தவனா !! 

If one were to describe the Puranam in a simple captivating manner: it is :-   

"ஊன் மல்கி மோடு பருத்தவனுக்கும்..... நினைந்து,  நினைந்து  உள்கரைந்துருகி இளைத்தவனுக்கும்' நடந்த சத்திய போராட்டம் “கைசிக புராண மகாத்மியம்.” 

(the battle of wits beween a Rakshas who grew fat eating meat and the baktha who became leaner living  thinking, and singing paeans of God all the time) 

Every year on the Kaisika Dwadasi day the puranam is  read out [in characteristic manner by Sri U.Ve M. A. Venkadakrishnan Swami] at Sri Parthasarathi Swami temple and by sampradhaya vidwans in many other divyadesangal.   The high moral  story of Nampaduvaan is in the 48th  chapter of Sri Varaha Puranam,;  explains and emphasizes the importance of singing the glory of Lord Sriman Narayana.     Sri Varaha Purana is considered one of the major eighteen Mahapuranas. 

It would have been wonderful to have a photo of Dr MAV Swami rendering Kaisika puranam in front of Sri Parthasarathi and Thiruppanar but photography inside is not allowed and hence could not post such a photo.



எம்பெருமானிடத்திலே  பக்தி கொண்டு அவனது திருவடி நீழலையே அடையவேண்டி திண்ணம் கொண்டு  இருப்பவர்கள் - சகல உயர்வும் பெறுபவர்களாவர்.  திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் மகேந்திர மலையில் நடந்த இந்நிகழ்வு அனைத்துக்கும் சிகரம் வைத்ததை போன்றதாகும். கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று ஸ்ரீமன் நாராயணின் பரம பக்தனான நம்பாடுவான் திருக்குறுங்குடிநம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழிமறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனாலும்  அவன் சற்றும் மனக்கிலேசம் அற்றவனாய்,  தான் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே கொண்ட நம்பிக்கை சற்றும் அசையாதவனாய் இருந்தான். ப்ரம்மரக்ஷஸை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு;  என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். எனது இந்த அற்புதமான விரதத்தை கோயிலின் வாசலில் வீணையை மீட்டி  நம்பெருமாள் முன்பே ‘பண்’ இசைத்து திருப்பள்ளியெழுச்சி  பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். 

அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, "யாரவது தானாக வலிய  வந்து உயிரை மாய்த்துக்  கொள்வாரோ ?  நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; நீ  இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்" என - அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான். லோகம் உண்டானதும் சத்யத்தாலே என வாக்கை காப்பாற்றி  திரும்பிய நம்பாடுவானிடம் ராக்ஷஸ் பல பலன்களை யாசித்து,  கடைசியில் கீத பலத்தையாவது தருமாறு கேட்டு, சத்தியத்தின் பெருமையை உணர்ந்து, அவனிடமே சரணாகதி அடைந்து மோக்ஷம் அடைந்தது.   இந்த சிறப்புதான் கைசிக மகாத்மியம்** 

The World exists on promises and fulfillment of them and the story of Nam Paduvaan only describes the greatest virtues of those devoted and committed to the kanikaryam (service) to Lord.  The ardent devotees of Sriman Narayana will never err or sin in life.   There cannot be a better example than that of ‘Nampaduvaan’.   

The story of Num Paduvaan can be best summarised as “the fight between ‘Padi Ilaithavan and Pasiyale Ilaithavan’ [one who leaned by fasting in the vratha of Singing paeans and one who was starved off food].  Legend has it  that on every Kaisika Ekadasi day, Nampaduvaan, an ardent devotee of the Lord Maha Vishnu  used to do Namasankeerthanam for Emperuman at Thirukurungudi.  This Nampaduvan Charithram was narrated by Sri Varaha Perumal to Bhoomi Pirarttiyar in Varaha puranam.  

It is believed that those who go to temple on this holy Kaisika Dwadasi day and read ‘kaisika purana’ will be showered with  munificence of Lord…. For us hearing the Kaisika puranam in Divyadesam nearer will give us all benefits of a good pure happy life ; those who hear ‘kaisika purana’ will get His choicest blessings and perhaps all of us who read and think of Nampaduvaan and Lord would also be getting the bountiful blessings of Lord Sriman Narayana, 

Parayana palan 

ஏதத் கீத பலம் தேவி கௌமுதத்வாதஸீம் புந:

யஸ்து காயதி ஸ ஸ்ரீமாந்  மம லோகஞ்ச கச்சதி  

ஸ்ரீவராஹப் பெருமாள் பிராட்டியிடம் உரைத்தது : " யார் ஒருவன் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ  த்வாதசி நாளில் -  நமக்கு முன்பாக கைசிக மகாத்மியம் வாசிக்கின்றானோ, வாசிப்பதை கேட்கிறானோ - அவன் நமக்கு என்றும் திருப்பல்லாண்டு பாடியபடி இருக்க கடவன்". இப்படி ராகம்/பக்தி  மூலமாகவே எம்பெருமானை அடைவதற்கான உபாயம்  உள்ளது. 




There would be grand periya mada veethi purappadu of Sri Parthasarathi Emperuman on Kaisika Ekadasi and Kaisika Dwadasi days  - here are some photos of Thirukkurungudi taken earlier and Sri Parthasarathi Emperuman Kaisika Ekadasi purappadu this evening.

Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale Saranam. 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.11.2023