To search this blog

Saturday, May 26, 2012

Thiruvallikkeni Sri Parthasarathi Pushpa Pallakku


After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Parthasarathi Perumal and after 10 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’.  It looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas. 

On the evening of 23rd May 12, Sri Parthasarathi had purappadu in Pushpa pallakku and photos taken can be worshipped below :-

திருவல்லிக்கேணி புஷ்பப் பல்லக்கு புறப்பாடு   -    புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் மலர்களால் ஆனது.  திருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் பத்து நாட்கள் 'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.

மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே. நம்மாழ்வார் தனது திருவாய்மொழி "திண்ணன் வீடு" என்கிற பத்தில் :

"தேவும் எப்பொருளும் படைக்கப்*   பூவில் நான்முகனைப் படைத்த*
  தேவன் எம்பெருமானுக்கு அல்லால்*     பூவும் பூசனையும் தகுமே?  - என்கிறார். 

தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும்  உருவாக்குவதற்காக   நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு  அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா !!!!

23.05.12 அன்று மாலை, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அன்று எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே. 






அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 

Monday, May 21, 2012

Thirukadanmallai Divyadesam to become National Monument - the threat !



Mahabalipuram, once a Sea port is a very popular tourist place, known internationally.  Thousands of people, especially foreigners visit this place daily which has a legacy  in stone.  This place, around 60 kilo meters away from Chennai is associated with Pallava Kingdom, more especially with Narasimha Varman I  who had the  epithet Maha-malla (great wrestler), as the favourite sport of the Pallavas was wrestling. It has various historic monuments built largely between the 7th and the 9th centuries, and has been classified as a UNESCO World Heritage Site.  This was the second capital of the Pallavas who ruled from Kanchipuram. Formerly, mahabalipuram was known and called as Mahabalipuram.   It is a wonderful exhibition of architecture displaying monuments of yore.


The monuments are mostly rock-cut and monolithic, and constitute the early stages of Dravidian architecture  comprising of the famous  cave temples, monolithic rathas (chariots), sculpted reliefs and structural temples.  The  Pancha Rathas  are a glorious treat to watch as  each Ratha is sculpted in a different style.  

More importantly, this place houses one of  the ‘108 Sri Vaishnava Divyadesams’ – Thirukadanmallai.  The temple of Sthalasayana Perumal is situate near the ‘sculptures of Arjuna Penance, huge elephant’ and nearer the main bus stand.   The Thayar here is “Nilamangai Thayar” and Perumal “Sthalasayana Perumal”.  This is a divyadesam sung by Thirumangai Azhwar and Boothathazhwaar.

In Sri Rangam and in some other divyadesams, you can have darshan of Lord Sriman Narayanan in reclining posture.  Here in this divyadesam,  He is reclining slightly differently – it is not on ‘Aadi Sesha’ – but on the ground itself – giving the name ‘Sthalasayana Perumal”.  Mahabalipuram also known as Mamallapuram is also the place where ‘Sri Boothath Azhwaar’ was born.

Not sure whether my fears are unfounded or are real !  Read in ‘the Hindu’ of the announcement and Preliminary Notification pertaining to protection of Sri Sthalasayanaperumal Temple, Mamallapuram, District Kanchipuram, Tamil Nadu dated 20th May 2012.   


The Archaeological Survey of India  Notification of 13th Jan 2004 : S.O. 79(E) states that Central Govt is of the opinion that the ancient monument, Sthalasayana Perumal Temple is of national importance and in exercise of the powers conferred by the Ancient Monuments & Archaeological Sites & Remains Act 1958, the Central Govt gives notice of its intention to declare the said ancient monument to be of national importance. 

Understand that once it comes within the control of  Archaeological Survey of India, it would become more of a monumental place rather than the Temple of worship.  It is stated that once any place becomes a protected monument under the Act, the place shall not be used for any purpose inconsistent with its character.    Where a part is still used for religious worship, the Collector is to make due provisions for protection from pollution or desecration.  Here it is not a part, but the whole of the temple and it should be ensured that any of the Authorities do not indulge or hinder with the customary religious practices being followed.    The Act also forbades that the monuments should not be used for the purposes of holding any meeting, reception conference or entertainment – ‘these should not in any way stop congregation of devotees and temple related activities – is what our concern is’. 

Whilst one would feel only too happy that Temples are cared for and are maintained, will such notification making the Temple a protected monument, affect the way our daily rituals are followed   ?  Will the Temple become more of an monument than the place of worship – which was intended to be  ??    - The fears arise from the way the Vaikunda Natha Perumal Kovil  at Kanchipuram [Parameswara Vinnagaram]  is presently  placed; though there are Archagars and reportedly some rituals are being followed, it no longer has the festivities that go with the Devaraja Perumal Kovil or any other sannadhi in the vicinity like Ashapujagara Perumal Kovil or Yathothagari sannathi.


The Gazette notification makes it clear that any person having objection to this will have to express the same to the Archeology Department, Chennai Circle within two months from 20.5.2012.  Here is the link to the notification which can be downloaded :  

Request you to all to bestow your personal attention, that one of the Divyadesams, continue to be ‘the place of worship’ and it is our duty to ensure that we properly protect our Sampradhayam and places of worship.

Posted more out of concern and it my fears are unfounded, would be too happy !   If there are factual errors, I am prepared to have them corrected immediately, when pointed out.

Adiyen Srinivasa dhasan. 




திவ்யதேச எம்பெருமான்களை சென்று சேவிப்பது, ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்.   சென்னையில் இருந்து சுமார் அறுபது கி மீ தூரமுள்ள மகாபலிபுரத்துக்கு சென்று அங்குள்ள சிற்பங்களையும், குடைவரைக்கோவில்களின்  அழகையும் ரசித்து இருப்பீர்.  கோயில்கள் நிறைந்த தொண்டை மண்டலத்தில், அலைகள் தவழும் அழகிய கடற்கரை ஓரத்தில் உள்ள கோவில் பற்றி தெரியுமா  சுற்றுலா  பயணிகள்  குழுமும் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் பற்றி தெரியுமா  திருக்கடல்மலை எனும் திவ்ய தேசத்து எம்பெருமானை சேவித்து இருக்கிறீர்களா ?  'புலங்கொள் நிதிக்குவையோடு புழைக்கைமா களிற்றினமும்....     கலங்கள் இயங்கும் மல்லை, கடல்மல்லைத் தலசயனம்'   என சிறந்த பொற்குவியல்களையும், நவமணிகளையும் அளவு மீறி தாங்கியதால், சாய்ந்த மரக்கலங்கள் நிறைந்த துறைமுகமாக இவ்வூரை பாடியுள்ளார் திருமங்கைமன்னன். 

திருக்கடல்மல்லை திவ்யதேசம்  அழகான கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஸ்தலம்.   அந்தத் தலத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு.  முதலாழ்வார்கள் மூவரில் இரண்டாமவரான பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்பது.  பொதுவாக வைணவத் தலங்களில், ஸ்ரீமந் நாராயணனின் மூன்று நிலைகளான, நின்றான், இருந்தான், கிடந்தான் என்றபடி, சில தலங்களில் நின்றபடி காட்சியளிப்பான். சில தலங்களில் வீற்றிருப்பான். சில தலங்களில் பகவான் பள்ளி கொண்டிருப்பான்.  திருவரங்கத்திலே துயில்கின்ற அரங்கப்பெருமான், பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருவான். ஆதிசேஷனான அரவின் மீது அரிதுயில்கின்ற கோலத்தில் காட்சியளிப்பான்; இந்தத் தலத்தில் மட்டும் அப்படி இல்லாமல் வெறும் தலத்தில் துயில்கொண்டுள்ளான். எனவே இந்தத் தலத்தை தல சயனம் என்று அழைக்கிறார்கள்.

 நண்ணாத வாளவுணரிடைப்புக்கு, வானவரைப் *
பெண்ணாகி  அமுதூட்டும் பெருமானார், மருவினிய *
தண்ணார்ந்த கடல் மல்லைத் தலசயனத்து உறைவாரை* 
எண்ணாதே யிருப்பாரை இறைப்பொழுதும்  எண்ணோமே.
 [திருமங்கை மன்னனின் பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி]  -   திருக்கடல்மல்லைத் ஸ்தலசயனத்துறைவாரைச் பற்றி சிந்தனை செய்யாதவர்களை  ஒரு பொருளாகவே மதிக்கமாட்டேனென்கிறார் ஆழ்வார்.  

இவ்வாறு சிறப்பு மிகுந்த 'ஸ்தலசயனத்து உறையவர்' திருக்கோவிலை, இந்திய தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.   இவ்வாறு அறிவிக்கப்பட்டு, திருக்கோவில் தொல்பொருள் ஆய்வியல் துறை வசம் இருந்தால், திருக்கோவிலின் சம்பிரதாய வழிபாட்டு முறைகள் பாதிக்கப்படலாம் என்ற பயத்தில் எழுதியுள்ள இடுகை இது.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 

Monday, May 14, 2012

Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - Day 9 Eve - Kannadi Pallakku


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பிரம்மோத்சவம் -  கண்ணாடி பல்லக்கு

Ninth day evening it was – Kannadi Pallakku.  Can recall that till a decade or so ago, there was a big  eye capturing palanquin made of glass – rather with glasses fitted all over and with chandelier like things suspended on its arms – overall it presented a magnificent sight.  Slowly it faded into oblivion as it was not maintained properly and glass pieces started falling as it was not maintained in the best manner.

A couple of years thereafter, there was no ‘kannadi pallakku’ instead Perumal had purappadu on ‘punniyakodi vimana chapparam’.  Then a newly made one – looking differently than the earlier one was submitted to temple by Shri NC Sridhar and this one is now kept inside the temple premises itself.  On Saturday evening Sri Parthasarathi alongwith his consorts had purappadu on this ‘palanquin made of glasses’.  It was a grand purappadu replete with crackers, 8 nadaswaram, thavils and fanfare.

12/05/2012 அன்று ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார்.  கைரவிணி குளக்கரையினிலே, தெற்கு குளக்கரை தெருவில் ஒரு மண்டபம் உள்ளது.  இது கண்ணாடி பல்லக்கு அறை என்றே வழங்கப்படுகிறது.  பல வருடங்கள் இங்கே 'அழகான கண்ணாடி பல்லக்கு' வைக்கப்பட்டு இருந்தது.  பெரிய பல்லக்கு - முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருந்தது இது.  உத்சவத்துக்கு சில மணி நேரங்கள் முன்பு, இந்த மண்டபத்தில் இருந்து படோபடமாக ஏளப்பண்ணப்பட்டு  கோவில் வாகன மண்டபத்தை வந்து சேரும்.  காலப்போக்கில் கண்ணாடிகள் உதிர்ந்து, இந்த புறப்பாடு நின்று போனது.  பெருமாள் ஒன்பதாம் உத்சவம் இரவு, புண்ணியகோடி  விமானத்தின், விமானம் இல்லாமல் சப்பரம் மட்டும் உள்ள அமைப்பில், சில வருடங்கள் ஏளினார்.  இந்த மண்டபம்  அலுவலக அதிகாரிகள் கார் நிற்கும் இடமாக மாறிப்போனது வருத்தமே. சில வருடங்கள் முன் ஒரு பக்தர்      (திரு என் சி ஸ்ரீதர்) மற்றொரு கண்ணாடி பல்லக்கு புதிதாக சமர்ப்பித்தார்.  

கண்ணாடி பல்லக்கில்  பெருமாள், எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்க,     வா வேடிக்கைகளுடன்,  விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது.  புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்   







Saturday, May 12, 2012

Thiruvallikkeni Brahmothsavam - day 9 Morning - Porvai Kalaithal


12th May 2012 – Today is the 9th day of Sri Parthasarathi Brahmothsavam – Theerthavari.  This morning Sri Parthasarathi had purappadu in “Aaal mael pallakku” – a palanquin made with four men holding the pallakku on their shoulders. 

In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Parthasarathi with no floral garlands – then many flowers adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted. 

ஒன்பதாம் உத்சவம் - காலை "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு மோதிரத்தை தொலைப்பதாகவும்,  பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்" என  கொண்டாடப்படுகிறது

கலியன் ஏளி பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு சுற்றி சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார்.  திருக்கோவிலை சென்றடைந்ததும்  'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்'  - எனப்படும் பிணக்கு - பெருமாள் எழுந்து அருளும் போது,  உபய நாச்சிமார்  திருக்கதவை, சாற்றி விட, பெருமாள் மறுபடி மறுபடி திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ  ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.  பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.   

இன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :   அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 









Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - Kuthirai Vahanam


11th May 2012 was the 8th day of Sri Parthasarathi Brahmothsavam.  Morning it was ‘Vennaithazhi Krishnan”.  In the evening there was the purappadu in Kuthirai vahanam..  this is very special – not only for the ‘aesal (oyyali)’ that occurs at Car Street but more so for the ‘Thirumangai Mannan Vaibhavam’. 

Kaliyan comes chasing on his ‘adalma’.  Neelan, kaliyan – known by various other names was a local chieftain’ who used to feed thousands everyday.  Not finding enough resources he had to resort to robbery and Sriman Narayanan in his various Leelas chose to play with him, by getting robbed, making him realize his folly and turning him to his trusted devotee.  Kaliyan understanding the significance became Thirumangai Azhwaar and rendered Periya Thirumozhi;  in Naalayira Divyaprabandham, Thirumangai mannan has contributed  1137 hymns. 

This divine act is recalled and as stated in the ‘sthala puranam of Thiruvallikkeni’ – Perumal and those accompanying Him lose their valuables.  The entire act is read out in a sanctimonious rite called ‘pattolai’ (literally the verses in palm leaves covered with silk) – which is rendered by Dr M.A. Venkatakrishnan Swami.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பிரம்மோத்சவத்தில்  எட்டாம் திருநாள் [11th May 2012]  ஒரு சிறப்பு நாள் -   காலை 'வெண்ணை தாழி கிருஷ்ணன் திருக்கோலம்'.  மாலை குதிரை வாஹனம்.  மற்ற வாகனங்களுக்கு இல்லாத சிறப்பு குதிரைக்கு மட்டும் என்ன ?

கருட, யானை, குதிரை வாகனங்களில் ஏளும் நாட்களில் ஏசல் (ஒய்யாளி) உண்டு.  குதிரை வாகன ஏசல், தேரடித் தெருவில் நடக்கும்.  குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார மகிமையை விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  கலியன், நீலன் என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர். தினமும்  1008 பெருமாள் அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் திருடி அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார். அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, "திருமங்கையாழ்வார்' என்று பெயர்பெற்றார்.   திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு  புறப்பாடு காண்கிறார்.  

பெருமாளுடன் வரும் கொத்து பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார்.   ஸ்ரீமான் நாராயணன்ஆலி நாடரை கலியனாக ஆட்கொண்டு  "ஓம் நமோ நாராயணா" என்னும்  அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்அருள் பெற்ற ஆழ்வாரும்,  "திருமொழி"பாசுரங்களை "வாடினேன் வாடி வருந்தினேன்" என தொடங்குகிறார்.  

ஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடைபெறுகிறது.   பெருமாள் பரிவட்டத்துடன் ஸ்ரீ உ.வே. வேங்கட கிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார்.அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர்.  இந்த புராணத்தில், எம்பெருமான்,பிராட்டியார் மற்றும் அவருடன் வந்த கொத்து பரிசனங்களும் மங்கை மன்னனிடம் தங்கள் தங்க நகைகளை இழந்தனர். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்படுகின்றன. அந்த ஊரின் தலையாரி தலைவன், பெருமாளை வணங்கி, குற்றம் புரிந்த ஆலி நாடனை துரத்தி சென்று பிடித்து, தண்டனை வழங்குவதாக தல புராணத்தில் உள்ளது.

ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம்.  பெரிய திருமொழிதிருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்  என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார்.  சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக உருவகித்த நிலையில் அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.

திருமாலடியார்களுக்கும் அவர் தமக்கு தொண்டு செய்பவர்களுக்கும், என்றென்றும் சகலவிதமான செல்வங்களும் பெருகும்; அவர்களுக்கு எல்லா நன்மையையும் நடக்கும்.  நாம் செய்ய வேண்டியது எல்லாம் - ஸ்ரீமான் நாராயணன் திருவடிகளில் ஈடுபாடு கொண்டு, அவனது அடியார்களுக்கு எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டியது மட்டுமே! திருமங்கை மன்னனின் 'பெரிய திருமொழி - முதற்பத்து - முதல் திருமொழியில்' உள்ள இப்பாடல் நம் இல்லங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும்.
  
குலந்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் *
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் *அருளோடு பெருநிலமளிக்கும் *
வலந்தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் * நாராயணா என்னும் நாமம். 

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது.

 அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 






 Kaliyan on his 'aadal maa'
 Dr MAV - pattolai

Friday, May 11, 2012

Sri Parthasarathi Brahmothsavam - Day 8 Morning


Today on the 8th day of  Brahmothsvam, Sri Parthasarathi gave darshan as “Vennai thazhik Kannan”  - in its early days, child would crawl and this pose is known as தவழுதல்”.  Today’s thirukolam was manifest of  the deeds of young Krishna at Gokulam where, possessing mighty powers to kill Asuras,  He still enthused all those around with his child plays,  took pots of butter breaking the pots holding them,  was tied to the trees and other objects by Yasodha  and showed as if He was frightened by the act of Yasodha. 

திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில்  இன்று எட்டாம் நாள்  - காலை 'வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம்'.  ஸ்ரீ பார்த்தசாரதி, கண்ணனாக,  கண்ணன் சிறு வயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான 'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' - தவழும் கண்ணனாக,  வெண்ணை தாழியுடன் அழகாக சாற்றுப்படியுடன் பல்லக்கில்  புறப்பாடு கண்டு அருளினார். உபய நாச்சிமார் தனியாக பல்லக்கிலும், அவர்களுக்கு காவலாக சேனை முதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.  

பெரியாழ்வார் அருளிச்செய்த 'பெரியாழ்வார் திருமொழியில்' கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கி பாடியுள்ளார்.   "கும்மாயத்தோடு  வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி,  பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்" -  என அவரது பாடல்.    குழந்தை கண்ணன் -  "குழையச்சமைத்த பருப்பையும்,  வெண்ணெயையும், விழுங்கி விட்டு - குடத்தில் நிறைந்த தயிரை  (அந்தக் குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டு, அசுரரை அழித்தவன்.   அத்தைகைய கண்ணன் "பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்" - யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப்பதாக எடுக்க, பயத்தை காண்பித்தவாறு  தவழ்ந்து ஓடினானம் !".  பிறிதொரு இடத்தில்  "தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* -  என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார். 

இவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும் விதமாக, இன்று திருவல்லிக்கேணியில், ஸ்ரீ பார்த்தசாரதி,  வெண்ணை  தாழிக் கண்ணன் திருக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 







Thursday, May 10, 2012

Thiruvallikkeni Thiruther Today - Car Festival at Triplicane


Sri Parthasarathi Brahmothsavam - Day 7 -  Thiruther

இன்று ஏழாம் நாள் உத்சவம் -  காலை திருத்தேர்.  On the 7th day of Uthsavam is Car Festival (Thiruther).  Early Morning Sri Parthasarathi with his consorts ascended the Thiruther.  The purappadu began at around 07.31 am and concluded around 09.30 am. 

தேர் என்றால் பிரம்மாண்டம் - மேலும் தேர் திருவிழா நடக்க ஊர் மக்கள் ஒன்று கூட வேண்டும்- 'ஊர் கூடி தேர் இழுத்தல்' என்பது மரபு.  மரபு, பண்பாடு கடைபிடிக்கப்பட்டு வரும் கிராமங்களில் இன்றும், தேர் அன்று ஆண்கள் எவரும் ஊரை விட்டு போகமாட்டார்கள்.  அனைவரும் ஒன்று கூடி, தேர் திருவிழாவை சிறப்பிக்கச் செய்வர். 

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருத்தேர் அழகானது. மிகப் பெரியது என்று சொல்லமுடியாது எனினும் அது உருண்டு ஓடி வரும் கொள்ளைகொள்ளும் அழகு பிரமிக்க வைக்கும்.  இதனது சக்கரங்கள், இரும்பாலானவை.   மாட வீதிகள் தார் ரோடுகள் ஆனதால் சுமார் இரண்டு மணி நேரத்தில் புறப்பாடு முடிந்து விடும்.  ஏராளமான மக்கள் கூடி தேர் இழுப்பர்.  தேர் வடம் சில ஊர்களில் தாம்புக் கயிற்றினால் ஆனதாக இருக்கும்; சில இடங்களில் இரும்பு.  திருவல்லிக்கேணியில் - இரும்பு.  
the wheels

இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் வேத கோஷத்துடன் அதிகாலை 03.15 மணியளவில் திருதேருக்கு எழுந்து அருளினார்.   07.31 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, புறப்பாடு  ஆரம்பித்து 09.30 மணியளவில் தேர் நிலை திரும்பியது.  இன்று சாயந்திரம் வரை பக்தர்கள், திருத்தேர் மீது ஏறி பெருமாள் சேவிக்கலாம்.  முன்பு திருத்தேர் முடிந்து, பெருமாள் இளைப்பாற வசந்த பங்களா எழுந்து அருளி, திருமஞ்சனம் கண்டுஅருளி வந்தார்.  இப்போது புறப்பாடும் திருமஞ்சனமும் நடை பெறுகிறது.

இன்றைய திருத்தேர் படங்கள் இங்கே. 

the crowds at Triplicane today for the festivity 


the wooden wedges used to steer and stop
and those putting wedge from inside the moving thiruther 

View of  Sri Parthasarathi inside the Thiruther

providing momentum to the ther from  behind (spud bar principle)



Some accidents during Car festival and HRCE Guidelines


அசைந்து ஆடி கட கடவென உருண்டு ஓடி வரும் தேர் தனி அழகு.  துரதிஷ்ட வசமாக சமீபத்தில் தேர் விபத்து பற்றி செய்திகள் வந்தன.  தேர் திருவிழாவை, சரியாக நடைமுறை படுத்த ஹிந்து அறநிலையத் துறை கோவில்களுக்கு  அனுப்பிய   சுற்றறிக்கை விவரம் இங்கே : (நன்றி தினமலர் நாளிதழ்)
photos of Thiruther at Thiruvallikkeni above and Srirangam Chithirai Thiruther below

****************************************
அடுத்தடுத்து நடந்த தேர் விபத்துகள், முறையான விதிகளை பின்பற்றாததால் ஏற்பட்டதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். விழாக்காலம் தொடர்வதால், அடுத்து பல கோவில்களில் தேரோட்டம் நடக்க உள்ளது. இந்த கோவில்களில், விதிகளை முறையாக பின்பற்றி தேர் ஓட்டம் நடத்த வேண்டும் என்று, அறநிலையத்துறை கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி அவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.

விபத்துக் காப்பீடு: *ஒவ்வொரு கோவிலிலும் தேருக்கு விபத்துக் காப்பீடு, மூன்றாம் நபர் காப்பீடு செய்யப்பட வேண்டும்.
* தேர் மரச்சக்கரங்கள் அனைத்தும் இரும்புச் சக்கரங்களாக மாற்றப்பட வேண்டும்.
* ஹைடிராலிக் பிரேக் எனப்படும் நீராற்றலால் நிறுத்தப்படும் இயக்கிகளைப் பொருத்த வேண்டும்.
*தேர் ஓடும் பாதையில், சாலை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உரிய ஆய்வு மூலம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
*தேர் ஓடும் பாதையில், குறுக்கிடும் மின் கம்பிகளில் மின் ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்.

அதிக வேகம் ஆபத்து: அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (பொது) தனபால் கூறுகையில்,"தேர் விபத்துகளுக்கு புதிதாக போடப்பட்ட சாலைகள், அதிகளவில் கூடும் மக்கள், அவர்கள் ஒன்று சேர்ந்து இழுக்கும் போது அதிகரிக்கும் இழுவைத் திறன் போன்றவை முக்கிய காரணங்கள். புதிதாக போடப்பட்ட சாலைகளில், அளவுக்கு அதிகமான வேகத்துடன் தேர் இழுக்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவக்குமார் கூறுகையில், "இப்போதெல்லாம் தேர்கள் மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் இழுக்கப்படுகின்றன. அவ்வளவு வேகத்தில் செல்லும் அளவுக்கு அவற்றின் வடிவமைப்பு இல்லை. பெரும்பாலும், சிறிய தேர்கள் தான் விபத்துக்குள்ளாகின்றன. பக்தர்களுக்கு இதில் கடமைகள் உள்ளன. தேருக்கு அருகே நிற்க கூடாது. தேவையான நபர்களுக்கு அதிகமாக வடத்தில் நிற்க கூடாது. இவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றார்.

கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் : 
* தேரோட்டத்திற்கான நாள், ஆகம விதிகளை கற்றுணர்ந்தவர்கள் மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
* தேர்ச் சக்கரம், அச்சு உள்ளிட்ட பாகங்களை தேர் ஸ்தபதி மூலம் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
* "பெல் நிறுவனம் மூலம் இரும்புச் சக்கரங்கள், ஹைடராலிக் பிரேக் பொருத்த வேண்டும்.
* இரும்புச் சக்கரம் என்றால் அவை சரியாக சுழல்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* தேர் நிலை பற்றிய சான்று, பொதுப்பணித் துறையிடம் பெற வேண்டும்.
* வளைவுகள், திருப்பங்களில் தேரின் வேகம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
* தேருக்கு முன்னும் பின்னும், 25 அடி இடைவெளி விடப்பட வேண்டும். பக்கவாட்டில், 7 அடி இடைவெளியில் பக்தர்கள் எவரும் வராமல் பாதுகாக்க வேண்டும்.
* தேரின் முன்புறச் சக்கரங்களில் யாரும் விழுந்து விடாமல் இருக்க, பாதுகாப்பு அமைப்பினை (கார்டு) வடிவமைத்து இணைக்க வேண்டும்.
* புதிய தேர்களில், உட்புறம் சக்கரங்கள் இருக்கும்படி வடிவமைக்கப்பட வேண்டும். பழைய தேரைப் புதுப்பிக்கும் போது, உட்சக்கரத்தை அகற்றக் கூடாது.
* தேரோடும் பாதையில், தற்காலிக மின் தடைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
* இந்த நடவடிக்கைகளை தேரோட்ட விழாவிற்கு, 6 மாதங்களுக்கு முன்பாகவே துவக்கி, முறைப்படுத்திய பின் தேரோட்டம் நடத்த வேண்டும்.

சென்னையில், கோவில்களில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கையாக இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விதிகள், கடந்த 2007 ம் ஆண்டே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.