To search this blog

Sunday, March 28, 2010

THIRUVALLIKKENI SRI MANNATHAR PALLAVA UTHSAVAMதிருவல்லிக்கேணியில் இப்போது பல்லவ உத்சவம் நடக்கிறது.  ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு கண்டு அருளுகிறார்.

திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால் , இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு  உள்ளது.  சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர்.    தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம்விளங்கியது.  தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை  ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.  இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றிப் பாரசீகம்,  ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். தந்திவர்மன் (கி.பி 775-825) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன்  ஆவர் .  இவன் இரண்டாம் நரசிம்மவர்மனின் மகன்.  இவரது கால கல் வெட்டு திருகோவிலில் உள்ளது.

தமிழ் கோப்பில் சில அர்த்தங்கள் தேடினபோது :
****   பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம் 
****   ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.
****    பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.
****     பஞ்சி ஒளிர்விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க,  செஞ் செவிய கஞ்சம் நிகர்சீறடியள் ஆகி,  -  கம்ப   ராமாயணம்.  
****  சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம்  மிக்க  செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை.

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. இந்த பல்லவ உத்சவம் என்பது பல்லவர்கள் சம்பந்தபட்டதல்ல !  பல்லவம் என்பது காலம். பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீ  ரங்கநாதர்  திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கபடுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளு  முன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கல்பூர ஆர்த்தி கண்டு  அருள்வார்.  தினமும் ஸ்ரீ ரங்கநாதர் பெரிய வீதி புறப்பாடு கண்டு அருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருட  சேவையும் பிறகு ஸ்ரீ ரங்கநாதர்  ஸ்ரீ வேதவல்லி தாயார் திரு கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.  மூன்றாம்  நாள் புறப்பாட்டின் போது எடுத்த  சில படங்கள்  இங்கே : பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.  

அடியேன்  ஸ்ரீனிவாச தாசன்


Wednesday, March 24, 2010

ஸ்ரீ ராம நவமி சிறப்பு

உன்னதமான அவதார புருஷர் இராமர் அவதரித்த நாள் இந்நன்னாள் 

சார்ங்கம் என்னும் வில்லும், வளைந்துள்ள வலம்புரியும், கொல்ல வல்ல சக்கரமும், கதையும், நாந்தகம் என்னும் வாளும், காற்றைப் போன்ற விரைவையுடைய கருடனும் ஆகிய இவையெல்லாம் ஒரு சேர பெற்ற மகான் ஸ்ரீராமபிரான். 
ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.: ஓர் இல் - ஒரு மனைவி, ஒரு சொல்வாக்குத்தவறாமைஒரு வில் - குறி தவறாத ராமசரம். 'ராமன்' என்றாலே தானும் ஆனந்தமாக இருந்து மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனைவிதமான துக்கங்கள் வந்தபோதிலும் மனத்தைத் தளரவிடாமல், தர்மத்தையே ஆனந்தமாக அனுசரித்துவந்தவர் ஸ்ரீராமபிரான் 
சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனத்தின் சஞ்சலங்கள் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இதனால் மனத்தில் எப்போதும் ஆனந்தம் லேசாக இருக்கும். ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது மிகவும் முக்கியம். அது இறைவனாகவே இருந்தாலும், அவன் மனித உருவில் வந்தாலும் என்பதைத்தான் ராமாயணம் வலியுறுத்துகிறது. 
வானகமும் வானவரும் வாழவும், நானிலமும் நானில மக்கள் வாழவும், துன்பம் துயரம் அயர்வு ஆகியன நீங்கி நலம் பெருகித் தொண்டர்கள் மனமகிழவும், இந்நன்நாளில் ஸ்ரீ ராம பிரானின் பெயரை உச்சரித்து அவரது தாள்களை நாடினால் நலம் பெறுவது திண்ணம்

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்


Sunday, March 21, 2010

THIRUVALLIKKENI SRI RAMANAVAMI 5TH AND 6TH DAY PURAPPADU

திருவல்லிக்கேணியில் ஐந்தாம் நாள் நாச்சியார் கோலத்தில் ஸ்ரீ ராமர் அருள் பாலித்தார்.
இன்று   ஆறாம் நாள் -  சாரங்கபாணி அழகான வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு கண்டு  அருளினார்இந்த உத்சவத்தில் ஸ்ரீ ராமர் தவன உத்சவ பங்களாவில் மண்டகப்படி கண்டு அருள்கிறார். 

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் 

Thursday, March 18, 2010

SREE RAMANAVAMI - GARUDA SEVAI TODAYLord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. His life is the subject of The Ramayana. Rama lived the life of perfection and responsibility. Maryadha Purush Sree Rama is the important incarnation of Lord Vishnu. Ramayana is the greatest Ithihasa detailing the life and journey of the immortal Perfect man’s adherence to dharma despite harsh tests of life and time. Lord Rama is the epitome of all virtues and the perfect heman being who abandoned the throne and served exile in the forest for the sake of honour of his beloved father.

He is a Suryavanshi (descendant of SUN). Vishnupurana mentions Brahma creating Daksha, Aditi the mother of Sun was the daughter of Daksha. From Sun was born Manu, Ishwaku and ……….. Rama. Sage Valmiki was a contemporary of Rama and has penned an authentic historical account of Ramayana, the story of Maryadha Purush.

Sri Rama Navami is a great day for all devotees as Lord Rama was born on the Navami thithi of Shukla Paksha of Chaitra masa (i.e., 9th day of the increasing phase of the moon in the lunar month of Chaitra). Astrologers say that at the time of Rama’s birth, the nakshatra was Punarvasu, and Sun, Mars, Saturn, Jupiter and Venus were in Aries, Capricorn, Libra, Cancer and Pisces respectively. Lagna was Cancer and Jupiter & Moon were shining together. -- Ramayana 1.18.8,9. it is firmly believed that such configuration of constellations occurred in 5114 BC.

The appearance of Lord Rama on earth is a day of great of celebration. Navami or nine day festivals mark the occasion and the festivities start nine days prior to the day of Sri Rama Navami. The celebrations are on and today marks the third day. This morning Lord Rama on Garuda vahanam gave darshan at Triplicane and here are some photos of the Utsavam.
It will give immense punyam not only in the present world but would also help in the other world also, whenever we think and utter the name ‘Rama’.

Regards – Sampathkumar S
Sunday, March 14, 2010

திருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள்
திருமலையில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரதான மடம் 'பெரிய ஜீயர் மடம்'.  இது சுவாமி எம்பெருமானாரால் ஏற்படுத்தப்பட்டது.  இந்த மடாதிபதி ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால்,  "பெரிய கேள்வி அப்பன்" என்ற தூய தமிழ்ப் பெயர்! 


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக பொறுப்பு செய்யும் சிறப்பு பெற்றது இந்த மடம்.   இம்மடத்தின் பெரிய ஜீயர் திருவேங்கட ராமானுஜ சுவாமிகள் இன்று காலை திருநாடு அலங்கரித்தார் . அவருக்கு வயது 86.   வேத விற்பன்னரான ராமானுஜ   சுவாமிகள், 45 ஆண்டுகளுக்கு முன் தனது திருப்பணியை திருப்பதி ஆலயத்தில் துவக்கினார். 1988ம் ஆண்டு இளைய ஜீயர் பட்டம் பெற்று  1995ம் ஆண்டில் பெரிய ஜீயரானார்.

திவ்ய பிரபந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களும் பன்னிரு திருமண் தரிக்க வேண்டும் என்பதில் பற்று கொண்டவர். திருப்பாவை உபன்யாசங்களும் திவ்ய பிரபந்தங்களும் எல்லா இடத்திலும் ஒலிக்க வேண்டும் என்பது இவரது உள்ள கிடக்கை.   திருமலையில் திருமலை அனந்தான் பிள்ளை நந்தவனத்தை பொலிவு பெற செய்து அங்கே வருடம் தோறும் உத்சவம் நடத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து திருமலைதிருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இன்று காலை சுவாமி மறைந்தது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு பெரிய இழப்பு ஆகும்.

அனந்தான் பிள்ளை மகிழ மரம் முன் - இவ்வருடம் 21/02/10
*********************
Sri Rangaramanuja Periya Jeeyar Swamy (86), the senior pontiff of the TTD temples passed away at Tirupati on Sunday after a brief illness. A scholar in Divya Prabhandha, Pancharathragama and Upayuktha Veda Bhagas, he had the unique distinction of ascending the Peetham of the TTD temples, after serving the TTD in different capacities -- Archana Kaikaryam in Tirumala temple, Divya Prabandham teacher in the S.V. Veda Pathasala followed by Principalship for 18 years in the same college.

A native of Perur village near Tirupati, he took Sanyasam (celibacy) on May 3, 1995 and became the TTD's Chinna Jeeyar. He was anointed the Pedda Jeeyar in February, 2004 following the demise of the then senior pontiff.

Jeeyar Swami was well versed in Divyaprabandham and all Sri Vaishnavaite sampradhayam.  Some of the landmark achievements of his tenure were, renovation of ‘Sri Bhashyakarla' Sannadhi located on the foot-path and Rajagopuram of Nammalwar temple at Alwar Theertham in Tirupati. He propogated wearing of “Dwadasa urdhwa pundram (pannirandu thiruman) , making it  compulsory for all the Archakas and other Vaishnavite ‘paricharakas' engaged in the services of the TTD temples.
He was conferred the title, “Srinivasa Seva Kainkarya Nirvahaka Sarvabhouma'.  He was instrumental in reviving and celebrating the “Thirumalai Ananthanpillai Thirunakshathiram” in the nandavanam where Ananthanpillai swami once served Thiruvengadamudayan.  The place now looks so good and annually celebrated with much acclaim.

In his passing away, Srivaishnavism has lost a great scholar and a great pontiff.

Monday, March 8, 2010

அழகிய சிங்கர் தவன உத்சவ புறப்பாடு -[Ashagiya Singar Thavana Uthsavam]

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கொண்டாடும் உத்சவங்களில் தவன உத்சவம் முக்கியமான ஒன்று. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் தவன உத்சவ பங்களா அமைந்து உள்ளது.ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மாசி கிருத்திகை தொடங்கி ஐந்து நாட்களும், வரதருக்கு மாசி ஹஸ்ததன்றும் அழகிய சிங்கருக்கு மாசி சுவாதி விசாகம் அனுஷம் மூன்று நாட்களும் தவன உத்சவம் சிறப்ப நடக்கிறது. தினம் காலை பெருமாள் பங்களாவுக்கு எழுந்தருளி திருமஞ்சனமான பிறகு சாயங்காலம் பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருள்வார்.

திருவல்லிக்கேணியில் மூன்று பங்களாக்கள் உண்டு. தவன உத்சவ பங்களா, கோமுட்டி பங்களா மற்றும் வசந்த உத்சவ பங்களா என்பவை இவை.

கோமுட்டி பங்களா கோவிலுக்கு பக்கத்தில் பேயாழ்வார் தெருவில் உள்ளது. வேங்கடரங்கம் பிள்ளை தெருவில் மிக அழகானதொரு இடமாக கோமுட்டி பங்களா இருந்தது. பெருமாள் வசந்தம் மற்றும் கோடை உத்சவ காலங்களில் புறப்பட்டு கண்டு அருளி இங்கே எழுந்தருள்வர். அழகான மத்ய மண்டபமும் இரு பக்கங்களில் தடாகைகளும் ஏராளமான மரங்களும் பூச்செடிகளும் நடை பாவி கிணறுமாக மனம் கமழ்ந்த இவ்விடத்தில் ரம்யமாக திருமஞ்சனம் நடக்கும். இந்த உற்சவங்கள் தவிர பிரம்மோத்சவ காலங்களில், ஐந்தாம் நாள் காலையும் திருத்தேர் அன்று இரவும் பெருமாள் இங்கே எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது. கடந்த பத்து வருடங்கள் மேலாக இது தடைப்பட்டு தற்சமயம் பெருமாள் இப்போது இங்கே ஏள்வது தடைப்பட்டு போனது வருத்தமே !

தவன உத்சவ பங்களா நடுவில் மண்டபமும், பெரிய திண்ணையும் நிறைய மணல் பரப்புமாக இருந்தது. இங்கும் ஒரு பெரிய கிணறு உண்டு. கோரி என்றுஅழைக்கபட்ட இரண்டு மாடங்கள் இருந்ததன. வட்ட படிக்கட்டுகள் ஏறி செல்ல இயலும். மேலே நிறைய வவ்வால்களுடன் பயம் தரும் இடமாக இருக்கும். கால போக்கில் இந்த கோரிகள் சரிந்து சிதிலமாகின. சமீபத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு இப்போது மண்டபம் நன்றாக உள்ளது. ஸ்ரீ பார்த்தர், அழகிய சிங்கர், வரதர் தவன உத்சவம் நடக்கும். தவிர பிரம்மோத்சவ காலங்களில், ஐந்தாம் நாள் காலையும் ஈக்காடு தாங்கல் திருஊறல் உத்சவம், ராம நவமி உத்சவம் காலங்களில் பெருமாள் இங்கே எழுந்து அருளுகிறார்.
முன்பு பெருமாள் எழுந்து அருளும் காலங்களில் நீர் இறைத்து சுத்தம் பண்ணி கோலங்கள் போட்டு பரிமளிக்கும்.

தவனம் என்பது வாசனை அளிக்கும் நறுமண பயிர். ஒரு காலத்தில் இந்த இடத்தில தவனம் மண்டி இருந்து இருக்கலாம். தற்போது தவனத்தால் மேற் கூறாளம் அமைக்கப்பட்டு பெருமாளுக்கு நறுமணம் கமழும்.

நேற்று நடந்த அழகிய சிங்கர் தவன உத்சவ மூன்றாம் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகை படங்கள் இங்கே

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

கோவில் வாசலில்

திவ்ய பிரபந்த கோஷ்டி ஆரம்பம்

புறப்பாடு கண்டு அருளும் பெருமாள்

தவன உத்சவ பங்களாவில்

தவன கூராளம்