To search this blog

Saturday, July 4, 2020

Celebrating Thaniyan - "Sri Sailesa thaya pathram' - ஸ்ரீசைலேச திருவவதார வைபவம்


இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலர் நிம்மதியற்று உள்ளனர்.  கொரோனா தீநுண்மி உலகோரை பயமுறுத்தி உள்ளது.  இந்த கடின காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும் !!

ஆயிரம் ஆண்டுகள் முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பொருந்தும்.  நிலை கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர்.  ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.

இன்று ஆனித் திருமூலம்  - ஸ்ரீ வைணவர்களுக்கு ஒரு சீரிய நாள்.

திருவல்லிக்கேணி உட்பட்ட பற்பல திவ்யதேசங்களில் பெருமாளை சேவித்து இருப்பீர்.  எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை தொழும் நமக்கு நலம் தரும் சொல்  'ஓம் நமோ நாராயணா' என்ற திருமந்திரம்.  ஸ்ரீவைணவர்களில் சீர்மையே அருளிச்செயல் எனும் நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களினால் பெருமாளை துதிப்பதுவே !

ஆழ்வார்கள் பாசுரங்களின் தொகுப்பே 'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தம்'.  தேனினும் இனிய சுவைமிக்க திவ்ய பிரபந்த பாசுரங்களை 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ நாதமுனிகள் தொகுத்து வழங்கினார்.  நாம் அனுதினமும் திருக்கோவில்களில், இல்லங்களிலும் திவ்யப்ரபந்தத்தை இசைக்கிறோம்.  இது : முதலாயிரம் (திருப்பல்லாண்டு; பெரியாழ்வார் திருமொழி; திருப்பாவை; நாச்சியார் திருமொழி; பெருமாள் திருமொழி; திருச்சந்த விருத்தம்; திருமாலை; திருப்பள்ளியெழுச்சி; அமலனாதிபிரான்; கண்ணிநுண்சிறுத்தாம்பு உள்ளடக்கியது): இரண்டாமாயிரம்  (கலியனின் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்; திருநெடுந்தாண்டகம்);  மூன்றாமாயிரம் (இயற்பா) [முதல் திருவந்தாதி,  இரண்டாம் திருவந்தாதி; மூன்றாம் திருவந்தாதி; நான்முகன் திருவந்தாதி; திருவிருத்தம்; திருவாசிரியம்; பெரிய திருவந்தாதி; திருவெழுக்கூற்றிருக்கை; சிறிய திருமடல்; பெரிய திருமடல்);  நான்காமாயிரம் (சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி)  ஆகியவையின் தொகுப்பு.   ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார்  அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என மேலாக வழங்கப்படுகிறது.  திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல் தொகுப்பினையும் குறிக்கும்.


திருக்கோவில்களில் கவனித்து இருப்பீர்.  திவ்யப்ரபந்தம் அநுஸந்திக்கும் முன் தனியனை பாடி துவங்குவர்.  புறப்பாடு வேளைகளில் கவனித்து இருக்கலாம்.  பெருமாளின் ஸ்ரீசடகோபம் மரியாதையை  பெற்றுக்கொண்டவுடன் முதல் தீர்த்தக்கார் - தனியனை  ஆரம்பிக்க, அவருடன் மொத கோஷ்டியாரும் சேர்ந்து பிரபந்தம் இசைப்பர்.   தனியன் என்பது பொதுவாக ஆசார்யரைப் பற்றிய புகழ் பாடும்  துதி, அவரது சிஷ்யரால் இயற்றப்படுவது.

இன்று ஆனித் திருமூலம் - "ஸ்ரீசைலேச தயா பாத்ரம் " தனியன் அவதரித்த நன்னாள். இந்த நன்னாளிலே  பெருமை வாய்ந்த திருவரங்கம் திருக்கோவிலிலே பெரிய பெருமாள் திருமுன்பே    ஆசார்ய சார்வபௌமரான அழகிய மணவாள மாமுனிகள் ஓராண்டு திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் சாதித்து பூர்த்தி செய்த நன்னாள்.  அந்த வைபவத்தில் - 'ஆனி மாதம், மூலம் நட்சத்திரம்'  அன்று நம்பெருமாள் சிறுவனாக வந்து, மாமுனிகள் முன்பு  'ஸ்ரீ சைலேச தனியன்' திருவாய் மலர்ந்தருளி -  நமக்கு இந்த அற்புத தனியன் உதித்தது.  எனவே இன்று  ஸ்ரீசைலேச திருவவதார வைபவம்' அதாவது, ஸ்ரீசைலேச மந்த்ரம் பிறந்த நாள்

நம் பூர்வாசார்யர்கள் வாக்கின் படி  ஸ்ரீரங்கநாயகரான பெரிய பெருமாள் மணவாள மாமுனிகளை ஆச்சாரியனாக பெறதிருவுள்ளம் விரும்பி, அர்ச்சகரிடத்தில் 'நமக்கு மணவாள மாமுனியினிடத்திலே திராவிட வேதமான திவ்யபிரபந்த வ்யாக்யானங்கள் (விளக்க உரை) கேட்க வேணும். ஆகையாலே மாமுனியை கருடமண்டபத்திற்கு அழைத்து வரச் செய்வீர் ' என்று ஆணை பிறப்பித்தார். நம்பெருமாளின் ஆணைப்படி கருட மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மாமுனிகளும்  ஸ்ரீவைஷ்ணவ  கோஷ்டியினருக்கு  பெரியவண்குருகூர் நம்பியான நம்மாழ்வாருடைய திருவாய்மொழி பாசுரங்களின் விளக்க உரையை ஈடு முப்பத்தாறாயிரத்தின் அடிப்படையில்அருளினார்.    கலியுகம் 4534 ம் ஆண்டு பிரமாதீச வருடம் ஆனி மாதம்,   பெளர்ணமி திதி, மூல நட்சத்திரம்   நாள் வரை தொடர்ந்து பத்து மாதங்கள் மாமுனிகள் வ்யாக்யானம் செய்ய மிகவும் உகந்து கேட்டு மகிழ்ந்தார் நம்பெருமாள்.

நாம் உகக்கும் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதனாலேயே அருளைப்பெற தனியன் :
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்

( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்.)

ஸ்ரீரங்கநாதன் ஏன் மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் சாதிக்கும் படி நியமித்தான்? ஆளவந்தாரையோ உடயவரையோ ஈட்டின் ஆசிரியரான நம்பிள்ளயையோ சாதிக்கும் படி ஏன் நியமிக்கவில்லை?

இதற்கு முக்யமான காரணம் எந்த ஆசார்யரை சாதிக்கச் சொன்னாலும் அவர்களுக்கு முன்பிருந்த ஆசார்யர்கள் ஸ்ரீசூக்திகளை கொண்டு மட்டும் தான் அனுபவிக்க முடியும். ஆனால் மாமுனிகள் சாதித்தால் தான் குருபரம்பரையில் உள்ள அனைத்து ஆசார்யர்களின் சூக்திகளையும் ஒன்று சேர அனுபவிக்க முடியம் என்பதனால் தான் இந்த மஹாகார்யத்தை மாமுனிகளைக் கொண்டு பூர்த்தி செய்து கொண்டான் அழகிய மணவாளன். இது வெறும் பெருமைக்காக சொல்லும் வார்த்தையோ அல்லது உபசார வார்த்தையோ இல்லை என்பது மாமுனிகளின் வ்யாக்யான ஸ்ரீசூக்திகளை சேவித்தால் நன்கு விளங்கும். ஒரு இடத்தை விவரிக்கும் போது அதன் தொடர்பாக உள்ள அத்தனை ஆசார்யர்களின் ப்ரமாணகளையும் திரட்டி விளக்குவார் மாமுனிகள்.

மிகுந்த புத்தகம் மற்றும் அச்சு சௌகரியங்கள் நிறைந்த இக்காலத்தில் வாழும் நமக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் மாமுனிகள் காலம் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அடியோடு அழிந்திருந்த காலம். எந்த எந்த க்ரந்தத்திற்கு எந்த எந்த ஆசார்யர்கள் உறையிட்டு உள்ளனர் என்றே தெரியாத காலம் அது. மாமுனிகள் தான் கஷ்டப்பட்டு அனைத்து பூர்வாசார்ய வ்யாக்யானங்களையும் கண்டு பிடித்து ஒன்று திரட்டினார். இதை தாமே ஆர்த்திப் ப்ரபந்தத்தில் அருளிச்செய்கிறார் - "பண்டு பல ஆரியரும் பாருலகோர் உய்யப் பரிவுடனே செய்து அருளும் பல்கலைகள் தம்மைக் கண்டு அதெல்லாம் எழுதி அவை கற்று இருந்தும் பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்" என்று. அந்த வ்யாக்யானங்களை கண்டு பிடித்து சேகரித்ததொடு அல்லாமல் அத்தனை விஷயங்களையும் தம் நெஞ்சிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருந்து அதை அனுபவிப்பதையே போது போக்காகக் கொண்டார். அதையும் ஆர்த்திப் ப்ரபந்தத்தில் தெரிவிக்கிறார் "முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப்பெற்றோம் - முழுதம் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம் - பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேறாமல் பெற்றோம் " என்று. அதனால் தான் "ஈட்டுப் பெருக்கர்" என்கிற அசாதாரணமான திருநாமம் மாமுனிகளுக்கு ஏற்ப்பட்டது. ஸ்ரீ ரங்கநாதன் இயற்றிய "ஸ்ரீ சைலேச தயா பாத்ர" தனியன் அவதரித்த இந்நன்னாளில் மாமுனிகளின் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை வணங்கி நிற்போம்.

(இந்த பகுதி முழுவதும் நமது வைணவ உலகுக்கு அரிய தொண்டாற்றிவரும் முனைவர் மண்டயம் அனந்தான்பிள்ளை வேங்கடகிருஷ்ணன் சுவாமி உரை - கீதாச்சார்யன் இதழில் இருந்து மறுபடி பதிவிடப்பட்டுள்ளது)

ஸ்ரீவைஷ்ணவ திருக்கோவிலிற்கு சென்றால் திருத்துழாய், தீர்த்தம் ப்ரசாதங்களுடன், ஸ்ரீசடகோபமும் கிடைத்தல் மிக சிறப்பானது.  சுவாமி மணவாள மாமுனிகளின்"திருவடிநிலைகள்" (திருப்பாதுகைகள்) இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்குஉத்திரவீதியில் உள்ள,மணவாள மாமுனிகளின் மடத்தில் இன்றுவரை உள்ளது.   மாமுனிகள் திருவடிகளின் பெயர் -  “பொன்னடியாம் செங்கமலம்” அவரது பொன்னடி சார்த்திக்கொள்ளுதல் நமக்கு சிறப்பு.

இன்றளவும் அனைத்து தென்னாசார்ய திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களில், மடங்களிலும், இல்லங்களிலும் திவ்யப்ரபந்தம் - ஸ்ரீ சைலேச தயா பாத்திரம் தனியன் சொல்லியே சேவிக்கப்பெறுகின்றது. நமக்கு 'ஸ்ரீசைலேச' தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
'ஆச்சாரியன் திருவடிகளே சரணம்'
'மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் '.

Here is the thaniyan in full @ Thiruvallikkeni divyadesam – video   'Sri Sailesa Thaniyan" courtesy Sri Kanakarajkumar, who has been posting sublime videos of Thiruvallikkeni purappadu.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
திருவல்லிக்கேணி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
4.7.2020

PS : this is adiyen attempt to compile some information on Sri Nalayira divyaprabandham, thaniyan, our Acharya Swami Manavala mamunigal and the glorious thaniyan gotten from Periya Perumal.
Due to my ignorance there could be some errors or the presentation could have been better.  If any such mistakes are brought to my notice, I for sure would have them corrected.
Falling at the feet of our glorious Acaryas,  all Srivaishnavas, kainkaryabarargal and all bagavathas engaged in kainkaryam to our Emperuman.
Place my regards and reverence to Dr MA Venkatakrishnan swami who taught divyaprabantham in ‘santhai murai’ to hundreds of students like us and is now conducting discourses.
Thanks are due to Sri Kanakaraj kumar (Sri Krishnavaibhavam) for the video  so wonderfully made and sent within 15 mins of my asking him. 

Sri Azhagiya Singar Aani Thiruther 2020


உத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது.  அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கும் மக்கள்  வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவர். 
Today  5.7.2020 it should have been the  grand occasion of Thiruther for Sri  Azhagiya Singar Perumal.  Thiruther is most majestic and thousands descend to the divyadesam to have glimpse of Emperuman and the rolling juggernaut.  We worship Sriman Narayana, as  devotees and followers of the Vedic path, we firmly believe that  Lord Krishna descended on this Universe some  5,000 years ago.  His upadesam Srimad Bhagavad Geetha is the greatest treasure trove, rendered in the midst of Mahabaratha, when He offered to drive the chariot of Arjuna and earned the sobriquet ‘Sri Parthasarathi’கம்ப இராமாயணத்தில் இராமன் தேர் ஏறும் படலம் சிறப்பானது.   இந்திரனால் அனுப்பட்ட தேர் சாதாரண தேர் அல்ல :

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,

ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும் என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆகி நனி பூண்டது, பொலந் தேர்.


மிக நெடியதாய் வானை முட்டுமளவுக்கு உயர்ந்து பரந்து இருந்த  அந்தத் தேர்;  இந்திரியங்கள் ஐந்து; நெருப்புகள் ஐந்து; மேலவற்றோடு நான்கு திசைகள்;  ஒருங்கே இணைந்து செயல்பட்ட மூன்று மதில்கள்;  திரிகின்ற பத்து வகைக் காற்றும்;    பெரிய  பகற்காலம்;  எனக் குறிக்கப்பட்ட இவை;  போர்க்குணம் உடைய குதிரைகள் என நன்கு பூணப்பட்ட வண்ணமயமாய் ஒளிரும்  பொன்மயமான தேர் அது.

வண்ணமயமாய் ஒளிரும்  பொன்மயமான தேரை, இந்திரனின் ஆணைப்படி அவனது தேரோட்டி மாதலி கொணர்ந்தனன். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் வாக்கில், "மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன்".  இந்திரனின் தேரோட்டியான  மாதலி பெருமிதத்துடன் தேரை முன்னோக்கி செலுத்த   மாயம் செய்யும் இராவணன் மீது சரமாரி அம்புகள் எய்து, கொடிய ராவணனின்  ஒவ்வொரு தலையாக அறுந்து அறுந்து வீழ போர் செய்த தலைவன் எம்மிராமபிரான்.0ne will realise the grandeur  of rolling juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.  Thiruther is a grand occasion of togetherness of people.  During Brahmothsavam thousands throng Temple and have darshan of Perumal in His veethi purappadu ~ significantly, during Thiruther, thousands partake – they pull, go around, push, offer buttermilk and panakam [jaggery water] to devotees and there is celebrations on the air, clearly visible.    In the goshti, first it was Thiruvezhukkoorirukkai and then  Thirumozhi of Thirumangai Mannan. Could recall that the Thiruther of yore was even bigger ~ in 1980s for a couple of years, there was no Thiruther purappadu as it was under repair – when made again, in tune with times, it got reduced a bit – also now it has steel wheels; the earlier one had wooden wheel… it now runs on concrete cement road.  Thiruther, the chariot, is easily the most grandeur and most attended by bakthas too. Ratha [the chariot] has existed in puranic days, historic days and more.  We have heard of Kings of recent past having had platoons of horse and horse-driven chariots.

On screen too, we have seen many – one got enamoured by the scene of Arjuna wading through the forces in Mahabaratha  - even those chariots were quite attractive.  Ratha is not only fleet-footed mode during war, it symbolizes energy and zeal to move forward.  It was on the chariot steered by Lord Krishna, Geethopadesam occurred to Arjuna, the mighty warrior.  The rath itself according to legend was given by Agni.  The battle formation was unconceivably bigger ~ by some accounts an Akshauhini is described as a formation consisting of 21870 chariots, 21870 elephants, 65160 cavalry and more than a lakh of infantry.

திருமங்கை மன்னனின் திருக்குறுந்தாண்டகம் ஒரு அற்புத பிரபந்தம்.  இறைவனைப் பெருநிதியாக வர்ணித்து மாந்தர்களாகிய நமக்கு எது செல்வம், எது உயர்ந்தது, நாம் என் செய்ய வேண்டும் என போதிப்பது !! ~ இங்கே ஒரு பாசுரம் : 

கேட்கயான் உற்றதுண்டு*  கேழல்ஆய் உலகம் கொண்ட,*
பூக்கெழு வண்ணனாரைப்*  போதரக் கனவில் கண்டு,*
வாக்கினால் கருமம் தன்னால்*  மனத்தினால் சிரத்தை தன்னால்,*
வேட்கை மீதூர வாங்கி*  விழுங்கினேற்கு இனியவாறே.

மனிதர்களுக்கு தேவைகள் : உணவு, உடுப்பு, இருப்பிடம் .. .. இவை கிடைத்தாயின், மேலும் பணம், பொருள், போகம், என தேடல் .. .. .. பண்டைய கால மன்னர்கள் -  தண்ணீர், வெற்றிலைப்பாக்கு, வாசனை திரவியம், மண்,  மாதர், ஆடையாபரணம், சூது சதுரங்கம்  என உல்லாசித்தனர்.  மனிதர்களின் வாய்வெகுவுதலும், பொழுது போக்குதலும்,  இப்பொருள்களிலேயே  மாறிமாறி நடந்தன  !! 
 
ஆயிரம் ஆண்டுகள் முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பொருந்தும்.  நிலை கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர்.  ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.

Here are some photos of Azhagiya Singar thiruther vaibhavam on 29.6.2018.

~ adiyen Srinivasa dhasan (mamandur Veervalli Srinivasan Sampathkumar)
5.7.2020.நீநிலாய வண்ணநின்னை ~ Sri Azhagiya Singar Churnabishekam 2020


எம்பெருமான் எத்தகையவன் ? - கடின காலங்களில் நம்மை காப்பான் எவன் ??


It is the month of Aani which would be celebrated grandly with the Brahmothsavam of Sri Azhagiya Singar at Thiruvallikkeni.  Due to Covid 19 when the World is at a standstill and the Nation is under lockdown,  we are having ‘manaseeka darshan of Aani  Brahmothsavam 2020’ and today (4.7.2020)  ie., day 6 morning  would have been Churnabishekam and golden chapparam.  In the  evening, it would be the majestic golden   ‘Yaanai vahanam’.  In the morning purappadu,  it would be Thiru Chanda Virutham of Thirumazhisai Azhwar.
பல்லாயிரக்கணக்கான வருட சரித்திரத்தில் - மனித இனம் கொள்ளை நோய்கள், பெரும் போர்கள், இயற்கை சீற்றங்கள், விலங்குகளின் தாக்குதல், கடல் கொள்ளுதல், வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற பற்பல பேரழிவுகளை பார்த்துள்ளது.  மற்றும் சாதாரண அசாதாரண மரணங்களும் சம்பவிக்கின்றன !   எனினும் தீநுண்மி,  இந்த சொல் உலகத்தை ஆட்டிப்படைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக தினமும் நாம் கேட்பது இதை பற்றியது தான்.  இன்று உலகமே பயந்து போய் வாழ்க்கை முறையும் மாறி இருப்பதும் இதனால்தான்.  “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”  என்றபடி நமது வாழ்நாள் இன்னபோது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில் எம்பெருமானை வணங்கி வாழ்த்தவேணுமென்று  உபதேசிக்கிறார்  ஸ்வாமி நம்மாழ்வார்.

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற ஸ்ரீமன் நாரணன் மட்டுமே உபாதாந காரணம்;  திருப்பாற்கடலில் சயனித்து இருக்கும்  பரமபுருஷன் மட்டுமே நம்மை காக்கவல்லன்.

ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்.  பைந்தமிழால் எம்பெருமானை பாடியவர்கள்.  ஸ்ரீவைணவர்களாகிய நாமும் அருளிச்செயல் எனும் அற்புத தமிழ் பாடல்களினால் அனுதினமும் ஸ்ரீமன் நாரணனை வணங்கி தொழுகிறோம்.கொஞ்சம் தமிழ் இலக்கணம் இங்கே !  -  திருச்சந்தவிருத்தம்  ஓர் செய்யுள் வகை.  செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது.   செய்யுள்கள் ஒரு இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். யாப்பு’ என்னும் சொல்லுக்குச் செய்யுள் என்பது பொருள். நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் யாக்கப்பட்ட (கட்டப்பட்ட) உடலை யாக்கை என்று வழங்குகிறோம். இதேபோல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றைக் கொண்டு கட்டப்படுவது யாப்பு என்று அழைக்கப்படுகிறது.

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளன; தவிர மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை.  தாழிசை குறைந்த ஓசையுடையது. இது ஆறு வகைப்படும்.  துறை என்னும் பாவினம் நான்கு வகைப்படும்;  விருத்தம் ‘மண்டிலம்’ எனவும் வழங்கப்படும். இது நால்வகைப்படும் : - 1) வெளி விருத்தம்; 2) ஆசிரிய விருத்தம் ; 3) கலி விருத்தம் மற்றும் 4) வஞ்சி விருத்தம்.

ஆசிரிய விருத்தம் என்பது தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த  அடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டு அமையும். மோனை சிறப்பாக வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும். எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது.  திருச்சந்தவிருத்தம்  எண்ணடுக்கி  செய்யுள் வகை.திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் . ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம்.    அன்று காலை அருள்மிகு ஸ்ரீ அழகிய சிங்கர் அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார்.

ஸ்ரீரங்கத்து உலக்கை என்றொரு வழக்காடு உண்டு. ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெருமாளுக்கு அமுது செய்விக்க  மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார்.  வேடிக்கையாக,  யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள், இதோ வருகிறேன் என்று உலக்கையைக் கை மாற்றுவார்கள்  - . மாற்று ஆள் வந்து உலக்கை பிடிக்கும் வரை, சூரிய அஸ்தமன நேரம் வந்தாலும் இடை விடாமல் மாவு இடித்தாக வேண்டுமாம் ! 

உரல்  என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு  இரும்பு பூண் கொண்ட மர  உரலில் உலக்கையைப் பாவித்து குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்.  பொடிக்கு சூர்ணம் என்றொரு பெயருண்டு.

சூர்ணாபிஷேகம் சிறப்பு.:     சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து  அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.  திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டுபெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம்அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப்  புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின்  *திருச்சந்தவிருத்தத்தின்* முதல் பாடல்.

பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்  நின்ற நான்குமாய்*
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்*
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்*
நீநிலாய வண்ணநின்னை யார்  நினைக்க வல்லரே.*

பூமியில் தங்கியிருக்கிற (சப்தம் முதலிய) ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; நீரிலே உள்ள நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; தேஜஸ்ஸிலே உள்ள மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய், [பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்;  புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.; தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.;  காற்றில் - சப்தம், ஸ்பர்சம்]  - பாட்டுக்கு அர்த்தம் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி  உரை  -  [thanks to  www.dravidaveda.org]

We pray our Emperuman for His darshan at the earliest – and perhaps the annual brahmothsavam conducted later .. .. .. On 6th day of Brahmothsavam at Thiruvallikkeni  Divyadesam for Sri Thelliya Singar – it would commence with  ‘Choornabishekam’, and then  Sri Azhagiya Singar  purappadu in ‘AnandaVimanam [Punniya Kodivimanam]’. In the purappadu,   ‘Thiruchanda Virutham’ given to us by Sri Thirumazhisai Azhwaar would be rendered.   These 120 songs fall under the type ‘viruthapaa’ – they are replete with numbers and fall under a specialized category of tamil grammar called ‘ennadukkicheyyul’.  Some photos taken during the morning  purappadu of yesteryears are posted for remembrance

adiyen Srinivasadhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)
4.7.2020.Friday, July 3, 2020

Sri Azhagiya Singar Nachiyar thirukolam & Yoga Narasimha thirukolam 2020


Aesthetics,  is a branch of philosophy that deals with the nature of beauty and taste, as well as the philosophy of art. It examines subjective and sensori-emotional values, or sometimes called judgments of sentiment and taste.


Perhaps there could never be an apt definition of ‘beauty !’ – it is the  quality present in a thing or person that gives intense pleasure or deep satisfaction to the mind, whether arising from sensory manifestations or something else.   Beauty has varied throughout time, various cultures and the vast different perceptions of the world. Beauty has been described and depicted through pictures and concepts penetrating our minds. Beauty has been defined in so many ways.  Beauty is happiness. Beauty is often distorted, misunderstood and shadowed by a wide amount of conflicting pressures.   .. .. beauty is the one that makes you forget everything and feel very blissful, forgetting your surroundings, your present state of affairs and more ! beauty gives tranquility and peace of mind. .. ..        ……….


3rd July 2020 would have been day 5 of Sri Thelliya Singar  Aani brahmothsavam – it has denied us darshan of  the most beautiful  enrapturing Azhagiya Singar   in “Nachiyar Thirukkoalam” – dressed as EzhilmiguThayar in a grand sitting posture.....Srimannarayana- the ever merciful Lord is always our esteemed protector. He is our Rakshak. He is glorified in the Vedas as the Supreme entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing benevolence as exceptionally visible in the Thirumugam [face] of Perumal – Nachiyar.  Day 5 is that day where one would feel this life is not enough – one may feel like being with the Emperuman throughout – those days, the morning purappadu would start around 530 am – mandagappadi at Komutti bungalow; Thavana Uthsava bungalow; Kuthirai vahana mantap;  Nataraja Stores; Gangaikondan mantap; kulakkarai Hanumar temple; Sri Yadugiri Yatiraja mantap;  Krishnan kovil at Sunkuwar; tranquilty at Vasantha uthsava bungalow (its vast expanse mesmerizing); kannadi pallakku mantap; Sri Nammalwar sannathi; Andal Sannathi .. .. and purappadu culminating after South Mada Street – it might take around 6 hours + for completion.
Many would walk with Perumal during the purappadu doing every little kainkaryam; then wait eagerly in the evening for that glorious ‘pathi ulathal’ – this time exquisite Yoga Narasimhar thirukolam.  After being fortunate enough to have more darshan of Him – Azhagiya Singar majestically would enter vahana mantap and around 9pm – grand purappadu in Hanumantha vahanam, by the time Perumal returns from Vahana mantap, it could well be mignight and what a day it would be !


Being day 5, it is Swami Nammalwar’s Thiruvirutham, the essence of Rig veda in the morning purappadu.  Nammalwar experiencing ‘Parankusanayaki’ expresses her attachment to the immortal Sriman Narayana and that perhaps is the reason for Nachiyar thirukolam on this morning purappadu.

.....  the beautiful women of Thiruvallikkeni would circle  around to have darshan of Him, look and envy the best of silk saree tastefully worn (some may debate on the colour / border combination !)  - among the dazzling ornaments could be the  ‘pavalam’[red coral] – simply marvellous. The golden parrot  ensconced above the abhaya hastham of Nachiyar.     More than the ornate style of dressing, it is always His  benevolence [karunyam] showering blessings to His devotees.

ஐந்தாம் நாள் புறப்பாட்டில்  ஸ்ரீ அழகிய சிங்க பெருமாளின் அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. கருத்துக்கு மிக எளியனான அப்பெருமாளின் கருணைமிகுந்த திருக்கோலத்தை காண பக்தர்களுக்கு ஆசை வருவது இயல்பு.  பெருமாள் தனது வாத்சல்யம், சௌலப்யம் போன்ற கல்யாணகுணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிகஅழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து அபயஹஸ்தத்துடன் காட்சிதரும் எழில்மிகு திருக்கோலமே  நாச்சியார்திருக்கோலம்.

திருவல்லிக்கேணியில் எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம்நாள் ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவிருத்தம்' சேவிக்கப்பெறுகிறது. ருக்வேதசாரமான திருவிருத்தம்   100 பாடல்கள் கொண்ட  அந்தாதி;  கட்டளைக் கலித்துறை பாடல்களால்  ஆனது. நம்மாழ்வார் ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையழந்து 'நாயகியாய்' தம்மை பாவித்து பிராட்டி நிலைமையடைந்து ‘பராங்குச நாயகி’யானார்.  நாயகன் ஆன எம்பெருமானின் ரூப வைலக்ஷண்யமுரைத்த பாசுரம் இது:

கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ  அவையே*
வண்ணம் கரியது ஓர் மால்வரை போன்று மதிவிகற்பால்*
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே?

எம்பெருமானுடைய திருக்கண்கள்; திருக்கைகள்;  திருவடி என்னுமுறுப்புகள் ஸாக்ஷாத் தாமரைமலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சனமாமலை போன்றுள்ளது;ஞானத்தில் மேம்பட்ட பரமபதத்து நித்யஸூரிகளும் விவரிக்க  முடியாத அதிரூபசௌந்தர்யம்  எம்பெருமானது திருமேனியழகு. ஐந்தாம் நாள்  காலை பக்தர்களுக்கு அருள்பாலித்த நாச்சியார் திருக்கோலத்தில்  முந்தைய வருடங்களில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கே


Sad – Covid 19 has denied us the opportunity of His darshan on day 5 of Brahmothsavam – here are some photos of yesteryears depicting Nachinary Thirukolam, Yoga Narasimha thirukolam and a photo of Sri Azhagiya Singar Hanumantha vahanam.

 ~ adiyen Srinivasadhasan. 
Mamandur Veeravalli Srinivasa Sampathkumar                                          3rd July 2020.