To search this blog

Tuesday, January 16, 2018

Thai Amavasai purappadu 2018 ~ திருவல்லிக்கேணி தை அமாவாசை புறப்பாடு

எது நல்லது ? எது கெட்டது ?  எது உண்மை ? எது பொய் ? யாவர் நல்லவர் ? யார் கேட்டவர் ? -எவை செய்ய வேண்டியவை ? எவை செய்யக்கூடாதவை ?  - கேள்விகள் மேலும் கேள்விகள் - ஸ்ரீவைணவர்களுக்கு இது போன்ற ஐயங்கள் எழுவதில்லை. இங்கே நம் தமிழ் தலைவன் மயிலை பிறந்த ஸ்ரீ பேயாழ்வாரின் அமுத வாக்கு. 


தை மாதம் பிறந்து விட்டது.  இன்று அம்மாவாசை நாள்.  தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும்.  சூரியன் மகர இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 27 நாடி, 16 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

தை மாதப் பிறப்பு,  தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.  அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.    உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட நம் நாட்டில் ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து, ஆறுமாதம் கழித்து அறுவடை முடித்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வணங்குவர். 


இன்று திருவல்லிக்கேணியிலே தை அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.அதுநன்று   இது   தீதென்று  அய்யப்படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.

பேயாழ்வார் நமக்கு வழங்கும் அமுத அறிவுரை :  எது நல்லது, எது கெட்டது, எதை செய்ய வேண்டும் என்றெல்லாம்   ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்,  தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய (ஸ்ரீமன் நாராயணனுடைய) பொற்றாமரை மலர்ப்பதங்களையே தொழுவீராக !  அப்படி தொழும் அனைவருக்கும், எல்லா ஜென்மங்களில் செய்த பாவங்களும், உருமாய்ந்து விட்டு நீங்கி ஓடி விடும். 

Today 16th Jan 2018 is Amavasai in the month of Thai.  Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu today and here are some photos of the purappadu.


~ adiyen Srinivasa dhasan.
Monday, January 15, 2018

Devotees protest blasphemy against Godapiratti ~ Andal devouts @ Chepauk 2018

To the famous MA Chidambaram stadium at Chepuak there are 2 ends – the pavilion end and Pattabhiraman gate end.  There had been crowds waiting patiently in queue to buy tickets especially for Pongal Tests; today 15.1.2018 – there were tens of thousands of them – but much calmer having assembled for a different purpose.

"தனுர் மாதமான"  மார்கழி ஒரு அற்புதமான காலம்.  அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களிலும் அதி காலையில் ஆண்டாள் அருளிய  "திருப்பாவை"   சேவிக்கப்பெரும்.  திருப்பாவை பாவை நோன்பின் உயர்வை பறை சாற்றுவது.  முதல் பாட்டில் ஆய்ப்பாடி சிறுமிகளை அழைத்ததற்கு ஏற்ப கூடிய கோபிகைகளின் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து வையத்து வாழ்வீர்காள்!” என்று ஆச்சரியப்பட்டு அழைத்து நாம் செய்ய வேண்டிய நோன்பிற்கு செய்யவேண்டிய கிரியைகளை கேளுங்கள் என்கிறாள். 

Thinking of Sriman Narayana and surrendering at the Lotus feet of Lord Narayana only will lead to us salvation. In 30 beautiful pasurams, Andal eulogies Lord Sriman Narayana showing us the way to get near the lotus feet of Lord.   

We are in a melancholic mood ~ instead of spending our time doing kainkaryam, we are forced to protest ~ the blasphemy of an ordinary mortal who ekes out life writing songs to tunes.  He chose to speak badly of our Godha piratti and to us the sinister design is too well seen.  Here are some interesting Qs
o   The so called rationalists (!) - question only Hinduism
o   When thousands of bakthi literary research works are available, the song writer chose to quote an oblique reference
o   That too proves to be fault as there is no such reference material in the US University cited
o   It turns out to be a paper read in an ordinary institution (with red leaning) with its author going on record that he has no authentic proof of what he wrote
o   The song writer and his son too defend and then he says, it was not intentional
o   And ~ once famed Tamil daily Dinamani provides a platform for such a talk, prints it too – in the month of Margazhi, in every temple and in so many forums, there are Thiruppavai upanyasams.  A child upanyakasar would have spoke thousand times better than this ‘dandanakka’ poettu.

There have been spontaneous demonstrations – all in a civil way with only decent expressions, demanding that the song writer apologise and today opp to Pattabhiraman gate of famous MA Chidambaram stadium, a peaceful (absolutely peaceful) demonstration was arranged for.  Close to 3 hours, more than 10000 grouped up, chanting slokas and listening to many Jeeyars, and learned persons.  Those on the podium spoke about the factual position, how the bakthas felt hurt by the unscrupulous comments and demanded that the utterer apologise before Sri Andal. 

Hope wisdom dawns !!

Sri Andal thiruvadigale saranam. 

Here are some photos  (the crowd was so much that it occupied one side of the road and it was not possible to photograph dignitaries from closer angles)  ~ one group showing those who visited, while the other is of the elite speakers that included :

·         His Holiness Sri Perumpudur Appan Parakala Ramanuja Embar Jeeyar Swami.  (aged 95+)
·         Sri Manavalamamunigal jeeyar, Sri Villiputhur
·         Sri Vathikesari Azhagiya Manavala Jeeyar, Thirukachi
·         Sri Chendalangara Jeeyar, Rajamannargudi
·         Veerathuravi Sri Ramagopalan (90 +)
·         Sri Appan Swami
·         Sri Anantha Padmanabachar Swami
·         Sri MA Venkatakrishnan Swami
·         Sri Nagai Mukundan
·         Thiru Visu
·         Thiru S Ve Sekhar
·         Sri TR Ramesh
·         Sri RBVS Manian
·         Sri Vedantham
·         Sri Aravindha lochanan
·         Sri Guruji Gopalavilli dasar
·         Sri Sivacharyar
·         Sri Andal P Chockalingam
·         Tmt Mangaiyarkarasi
·         Tmt Kutti Padmini
·         Tmt Booma Venkatakrishnan


~ and many more respected devotees. [sorry at this late  hour with sleep catching up, some names could go missing !]  .. .. .. random photos .. more at FB page of adiyenSri Andal Kanu purappadu 2018

At Thiruvallikkeni and in all other divyadesams, in the month of Margazhi it is Dhanur vizha every day there is rendering of Sri Andals thiruppavai (there are discourses too on Thiruppavai and so many places by learned people).  In this month occurs the 9 day Neeratta uthsavam and on Bhogi there is Thirukalyana mahotsav of Andal with Namperumal and the next Sankranthi day, there is Urgola uthsavam.


Today (15.1.2018) the day after Pongal, there is Kanu purappadu of Andal in the morning and Kanu parvettai purappadu of Sri Parthasarathi in the evening. Here are some photos of morning purappadu.

மார்கழி மாதம் கண்ணனுக்கு பிடித்த மாதம்தனுர் மாதம் என கொண்டாடப்படும் இம்மாதத்தின் எல்லா நாட்களிலும் ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை சேவிக்கப்பெறுகிறது. மேலும் திருப்பாவையின் உரை உபன்யாசங்களும் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பெறுகின்றன

மார்கழியில்  ஆண்டாள் நீராட்ட உத்சவம் ஒன்பது நாட்கள் சிறப்புற நடைபெறுகிறதுபோகி அன்று திருக்கல்யாணமும், சங்கராந்தி அன்று ஊர்கோல உத்சவமும், மறுநாள் காலை கனு புறப்பாடும் ஆண்டாளுக்கு விமர்சையாக நடைபெறுகிறதுஇன்று காலை ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட மண்டபத்தில் திருப்பாவை சாற்றுமுறை நடந்துபிரசாதங்களுக்கு பின் ஆண்டாள் ஹம்சா வாகனத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.

பொங்கல் முடிந்த மறு நாள்  கனுப்பண்டிகை கொண்டாடி, பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலனை வேண்டி புள்ளினங்களுக்கு  விருந்து வைக்கும் வழக்கம் உள்ளது. நம் பாரதத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகள் உறவுகள் சிறக்க செய்யும் வழிப்பாட்டு முறைகள்.

அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.


~ adiyen Srinivasadhasan.