To search this blog

Saturday, February 14, 2026

Ekkattuthangal Thiruvooral Uthsava purappadu 2026

 

மண்டகப்படி  என்ற வார்த்தையை கேள்வியுற்று இருக்கிறீர்களா ?   .. .. ..  for sure,  thousands  of devotees come from various places in the city to have darshan of Sri Parthasarathi Emperuman.  .. .. and on a special day, Sri Parthasarathi soujourns long winding trip to give feasty divine darshan to his bakths.



Moving away,  How often do you venture out in the midnight or early hours ! not by car, not on any vehicle  but or by walk and what would be your reaction, when  a group of fiery street mongrels  start barking and worser still, if they chase you !  .. .. Contrary to the notion that Cows and many other animals sleep standing – cattle   typically lie down to sleep or simply to rest, usually leaning forward on their chest and forelimbs or lying completely on their sides. Cows need their sleep to stay healthy; just as other animals do – so at 1.30 am  (yes  half past One O clock in the morning)    when cows doze  at Thiruvallikkeni streets,   the Temple area  becomes  busy  with  purappadu at midnight (early morning to be precise!)  

நான் ரொம்ப 'பிசி' என்று சொல்லிக்கொள்ளும் பலரும் ஒரு நாளில் என்னவெல்லாம் உருப்படியாக செய்கிறோம் ? - ஒரு நாள் திடீரென 'எவ்வளவு பயனற்ற வாழ்வு ' கழித்துள்ளோம் என்பது புரியும்.  பக்த சிரேஷ்டரான பொய்கையாழ்வார் அருளிச்செய்கிறார். :

பழுதே பலபகலும்*  போயினவென்று *  அஞ்சி-

அழுதேன்*  அரவணைமேல் கண்டு தொழுதேன்*

பழுது : பயனின்மை  ~   so may precious days in life have goneby wasted – I lament and cry for that .. .. .. to my fortune I saw the ocean-hued red-eyed Lord reclining on the serpent bed, -his feet caressed by lapping waves -and offered worship to him; and I realize that is the meaning of life. 

திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உத்சவம்".  அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டைக்கு  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் எழுந்து அருள்கிறார். திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காடுத்தாங்கல்  உத்சவம்".  கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது. இது அடையாறு ஆற்றங்கரையில் உள்ளது.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் இங்கு எழுந்து அருள்கிறார்.  தை / மாசி மாதம்  மற்ற சிறப்பு உத்சவங்கள் ஏதுவும் இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமை இவ்வுத்சவம் நடைபெறுகிறது.   இவ்வருடம் இவ்வுத்சவம்  15.2.2026  அன்று  சிறப்புற நடைபெற்றது.





ஈக்காட்டுத் தாங்கல் உத்சவத்திலே, ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் நேராக எழுந்தருளாமல் வழியில் பல இடங்களில் இளைப்பாறுகிறார்.  திருக்கோவில்கள், சில நிறுவனங்கள், தனியாரின் வீடுகள் சில இந்த வரிசையில் உண்டு.  பல வருடங்களாக இவ்விடங்களில் பெருமாளுக்கு 'மண்டகப்படி' உண்டு.  பெருமாள் இவ்விடங்களில் எழுந்து அருளி, காத்து இருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  அதிகாலை 1.30  மணியளவில் திருக்கோவிலில் இருந்து துவங்கிய புறப்பாடு   முதலில் தவன உத்சவ பங்களா, வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு ஸ்ரீபார்த்தசாரதி சபா, அருகில் விஜய் அவென்யு, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் திருபராசரன் இல்லம், திருமயிலை மாதவப்பெருமாள் திருக்கோவில், திருகேசவப்பெருமாள் திருக்கோவில் என திருமயிலை, ஆள்வார்ப்பேட்டை, தியாகராயநகர், நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் வழியாக, பல இடங்களில் மண்டகப்படிகள் கண்டருளி ஈக்காட்டுத்தாங்கலில் தனது நிலத்திற்கு எழுந்தருள்கிறார்.  இவ்விடத்தில் இப்போது அருமையான மண்டபம் அமைந்துள்ளது.  ஒரு காலத்தில் அடையாறு ஆற்றங்கரையில் சோலை நடுவில் குளுமையான சூழலில் இந்த உத்சவம் நடந்து இருக்கும்.  இப்போது இவ்விடம் ஒரு தொழிற்பேட்டை.

Chennaites will never forget Dec 2015 when torrential rains swamped the city and water flowed over the bridge across Saidapet, inundating many places with transportation coming to a standstill.   The river Adyaru emanates from  Malaipattu  tank at  Manimangalam Village and traverses 42.5 km, flowing into Bay of Bengal.   On that fateful day when it flowed over bridges, it was reported that it was  carrying more than one lakh cusecs of water on December 2 and 3, much more than the official account. 

On the banks of ‘Adayaru’ lies Ekkattuthangal, now an industrial belt and at Ekkadu there is a piece of land owned by Perumal.  Sri Parthasarathi Emperuman  visits this place once an year and has thirumanjanam – this sojourn starts  @ 1.30 am,  Sri Parthasarathi perumal has purappadu in palanquin – traversing through the city, halting at many a places ;  reaches His land at around 12 noon  has thirumanjanam at around 12.30 noon, again starts around 3 pm, purappadu at Saidapet, reaches back Thiruvallikkeni in the night.

                     இன்று ஈக்காடு தாங்கல் உத்சவம்  (15.2.2026) அதிகாலை 1.30 மணியளவில் திருவல்லிக்கேணி திருக்கோவிலில்   இருந்து கிளம்பி - தவன உத்சவ பங்களா, வெங்கடரங்கம் தெரு விஜய் அவென்யு, ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் வழியாக ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் எழுந்தருளி, சுமார் 12.00 மணியளவில் ஈக்காடு மண்டபம் வந்தருளி திருமஞ்சனம்  கண்டருள்கிறார்.




At such designated places, devotees wait  – the places are  bedecked beautifully with kolams, floral settings as they stand  with flowers and fruit offerings for Emperuman.  So many would be  lucky to have darshan of fleeting  Sri Parthasarathi perumal having this special purappadu.  The 25 km odd soujourn is  a tough and demanding one  for the kainkaryabarars of Thiruvallikkeni – the sripadhamthangigal, Battar, Adhyapakas, various others engaged in doing service to Emperuman –  a long journey crisscrossing the city.  One needs to witness the difficulties posed – yet how those sripadhamthangigal and other kainkaryabarargal  remain cheerful throughout the journey  is to be seen to be belived – they literally run carrying the pallakku unmindful of the road conditions – and that is revelation of exemplary  commitment and the spirit of kainkaryam of the youngsters of Thiruvallikkeni.  

Here is an extract schedule (timings are subject to change) :  Perumal purappadu from Temple @ 1.30 am of 15.2.2026 – Thavana Uthsava Bungalow; Sri Parthasarathi Swami Sabha/  Vijay Avenue at Venkatrangam St (around 2.20 am); Dr Radhakrishnan Salai (Sri Parasaran) 3.00; Thirumylai Sri Madhavaperuma thirukkovil 3.45; Chithiraikulam Sri Adhi Kesavaperumal – Peyalwar mangalasasanam 4.15; purappadu from Thirumylai around 5 am; Venkateswara Agraharam, Abhiramapuram, Eldams Road, Teynampet, GRT Grand 6 am; Thirumalai Pillai Road – Padma Seshadri school 6.40; Mahalingapuram;  North Usman Road, Barathi Nagar,  Raghavaiah road, Vyasar salai, North Boag Road, GRT 8.30;  Nallis, KUmaran Silks, Kumaran Stores,  Duraisamy subway, Thambaiah reddy road, Vivekanandapuram,  Arya Gowda road Sri Prasanna Venkatesa Perumal kovil 10.55; LIC colony, Ashok Nagar,  Kasi theatre bridge, Leo Industries, Ekkadu mandapam at 12 noon and mandapa thirumanjanam at 12.30.  Starting from the mandapam at 3.30 noon.

Here are some photos of yesteryears and a video of 2020 taken near Eldams road junction.  If you are living around these areas, you can plan to have darshan of Emperuman in His purappadu.   

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.

Friday, February 13, 2026

Sri Parthasarathi Masi Masapirappu 2026

 



Masi Krishnapaksha Ekadasi – Masapravesam 

Sri Parthasarathi Emperuman purappadu @ Thiruvallikkeni


Thiruvallikkeni Ther mallari 2021

 


தேர் மல்லாரி... ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்

சிறிய திருத்தேருக்கு (வெட்டிவேர் சப்பரம்) எழுந்து அருளல்

A small clip.  -  Feb2021:  https://youtube.com/shorts/g21iqm352GI



Wednesday, February 11, 2026

Sri Parthasarathi Emperuman purappadu to thiruther 2021

 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருத்தேர்  புறப்பாடு  Feb 9, 2021

 

 


அதிகாலை 4.15 மணியளவில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்

திருத்தேருக்கு எழுந்து அருளல்

: https://www.youtube.com/shorts/eGy1ExXUkdc

Tuesday, February 10, 2026

Thiruvallikkeni Thiruther chakkaram

 

Thiruvallikkeni Thiruther chakkaram


Embar Sarrumurai goshti 2025

 

Embar Sarrumurai goshti 2025


Sri Parthasarathi Perumal Kuthirai vahana Oyyali 2021

 

Sri Parthasarathi perumal oyyali ~ savari pagai for Kuthirai vahanam- Special Brahmothsavam 2021.

 


That was a very happy occasion as our Acharyar Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Singarachaar Swamy (Cholasimhapuram Doddaiyachar swami) was present and seen in this video taken by me on Feb 10, 2021

 

Sadly, a few months later our Acaryan attained Emperuman thiruvadi @ 12.15 am on 23.5.2021. [midnight of 22.5.2021]:  https://youtube.com/shorts/eaz4q8VwxRQ

 

Monday, February 9, 2026

Sri Parthasarathi thiruther thirumbukal purappadu 2021


திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி தேர் திரும்புகால் புறப்பாடு  Feb 9, 2021

 


On very few occasions  Thiruvallikkeni  Sri Parthasarathi Perumal has purappadu outside mada veethigal. As could be seen ~ this is junction of Sunkuwar St / Beach road (Eastern arch)...   https://youtube.com/shorts/DcKYe2BEBwM

Saturday, February 7, 2026

Swami Udayavar Guru Pushyam purappadu 2026

 

Swami Emperumanar Ramanujar Surya Prabhai purappadu

at Boothapuri Sriperumpudur


Guru Pushya uthsavam on 1.2.2026

https://youtu.be/O4JaoEJLZRM

Friday, February 6, 2026

Sri Mahalakshmi - Thanjavur painting

 

Sri Mahalakshmi - Thanjavur painting

 


 

Tanjore painting  is a classical South Indian art form originating from the town of Thanjavur – famed for its surface richness and compact composition.  These beaufitul paintings are traditionally crafted on wooden planks, earning them the local name Palagai Padam.   

Extensive use of 22-carat gold foil and semi-precious stones (like Jaipur stones or glass beads) provides a shimmering, three-dimensional effect.  The process involves gesso work (using chalk powder and gum) to create a raised/embossed effect before applying gold and colours.  These are authentically framed in Chettinad teak wood or "mani" frames, which protect the gold leaf and prevent fading.  

The art form evolved through various patrons, from the Chola dynasty to the Vijayanagara and Nayaka rulers, but it reached its current form under the Maratha court of Thanjavur in the 17th and 18th centuries. It has been awarded a Geographical Indication (GI) tag by the Government of India to protect its authentic production by skilled artisans.  

A beautiful Mahalakshmi pictured at Artisans exhibition now on at Kalaivanar Arangam, Chennai.

6.2.2026

Thaiyil Makam ... .. Swami Koorathazhvaan Sarrumurai 2026

 



இன்று (6.2.2026)  தை ஹஸ்தம் - ஸ்வாமி கூரத்தாழ்வான் சாற்றுமுறை

அவதாரஸ்தலத்திலே சேவை சாதித்தபடி


Thursday, February 5, 2026

dancing Nataraja

 

கரண வியாபாரமுடைய ஒவ்வொரு பிராணியும் துக்க நீக்கத்தினையும் சுகப் பேற்றினையும் விரும்புவது இயல்பாயிருத்தலின், மெய், வாய், கண், மூக்குச் செவியென்னும் ஐம்புலவுணர்வோடு மனவுணர்வையும் உடைய மக்கள் துக்க நீக்கத்தினையும், சுகப்பேற்றினையும் விரும்பாதிரார் என்பது அனுபவத்தினால் விளங்குதலின், துக்க நீக்கத்தினையும் சுகப்பேற்றினையும் கருதி ஶ்ரீநடராஜ மூர்த்தியினது திருவடிகளைத் தஞ்சமாக  அடைந்து அன்புமிக்குச் சேவித்தலே  சிவனடியார்களின்  முக்கியக் கடமையாகும்.

 


Beautiful dancing Nataraja  - not of any Temple – found in front of Kalaivanar Arangam entrance on the occasion of Artisans Exhibition today.

 

Wednesday, February 4, 2026

Sripadham kainkaryam - Ekkadu Uthsavam

 

Ekkattuthangal Thiruvural Uthsavam this year on Sunday8,  15th Feb 2026

 


How often one would walk 25 to 30 kms ! – that too on a circuitous route, starting early morning at 1.30 am .. .. reaching the destination by around 11.15 am ! – nay, no simple walk, carrying the heavy Pallakku. To put it simply as arduous or gruelling may not reveal the reality !

Thiruvallikkeni Thennacharya Sripathamthangigal – they carry Sri Parthasarathi Emperuman gleefully – energetically with purpose – perfect harmony !!

Poliga, poliga, poliga – the great kainkaryabarargal of Allikkeni – pic of this day 2024  

 4.2.2026

 

 

Allikkeni arumaiyana kolam

 



Sri Parthasarathi Perumal Sesha vahana purappadu

~ kolam in front of Gangai kondan mandapam

This day Feb 2021  (4.2.2026)


Tuesday, February 3, 2026

Thirumazhisai Azhwar kumba harathi 2026

 


Thaiyil Magam 2026 – Thirumazhisaipiran sarrumurai

Kumba harathi @ Thiruvallikkeni divyadessam

: https://youtu.be/xYuUW1Zho68



Thirumazhisai Alwar purappadu at Avathara sthalam 2026

 

Today is Magam in the month of Thai – Thirumazhisai Azhwar sarrumurai 

இன்று தையில் மகம் - திருமழிசை பிரான் அவதரித்த திருநாள் 

Day 8  Mazhisaippiran  Mohini alankara purappadu @ avathara sthalam Thirumazhisai on 1.2.2026 

https://youtu.be/W2rJkuxyd7U?si=kbbhRXakN3aqz16r



Monday, February 2, 2026

Allikkeni arulicheyal goshti 2020 Ratha sapthami purappadu

 Allikkeni arulicheyal goshti 2020 Ratha sapthami purappadu


1st Feb 2020 was Ratha Sapthami.  Triplicane and the globe were not aware of the calamity that was to befell.  On the evening of 24 March 2020, Government of India ordered a nationwide lockdown for 21 days, limiting the movement of the entire 1.38 billion (138 crores) population of India as a preventive measure against the COVID-19 pandemic in India.

 

For an year or two the World lived in constant fear and so many lives were lost in that dreaded Corona virus era. 


Thiruvallikkeni Thai Poosam - Kathir aruthal 2026

 

எல்லா நாகரீகங்களிலும்  அறுவடை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்தவர்களாய்  தமிழர்களின் சிறப்பு கூறப்படுகிறது.    

 


At Thiruvallikkeni divyadesam, traditionally on Thaipusam day [1.2.2026 – this year], Sri Parthasarathi perumal  visits Big Street overseeing and receiving  the bountiful harvest from His field. (kadhir aruthal).:  https://youtu.be/Q_D89MyD0sE

Sunday, February 1, 2026

the holy relation of Cows and Lord Krishna

 

"காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி" . .. ...

எம்பெருமான் கண்ணன் கன்றுகள் மேய்த்து வரக் கண்டு இவ்வையகமே மகிழ்ந்தது..

 


 

எம்பெருமான் கண்ணன் ஆநிரை மேய்த்தவன் - கோகுலத்தில் பசுக்களோடு வளர்ந்தவன்.  கோ' என்றால் பசு, 'பாலன்' என்றால் காப்பவன். பசுக்களைப் பராமரித்ததால் அவர் கோபாலன் என்று அழைக்கப்படுகிறார்.  பிருந்தாவனத்தில் தினமும் காலையில் பசுக்களை மேய்க்க அழைத்துச் செல்வதையும், மாலையில் திரும்புவதையும் கண்ணன் பெரும் பாக்கியமாகக் கருதினார். கண்ணன் குழலூதினால், பசுக்கள் அப்படியே மெய்மறந்து புல் மேய்வதைக்கூட நிறுத்திவிட்டு அவனையே சுற்றி நிற்குமாம்...

 

Surreal   !  ~  a few years ago, at Ahobilam, took a picture of Cows returning home in the evening after grazing – with ChatGPT added the image of Lord Krishna besides adding some more cows … and here is the redrawn picture.

 

S. Sampathkumar
1.2.2026

Embar 1000 ........ at Madhuramangalam

 

Thousands descended at the village – Madhuramangalam, famous being the  avatara sthalam of Swamy Embar.  This place is around 18 kms from Sriperumpudur and  around 50/52  from Chennai, capital city of Tamilnadu.

 


Punarvasu nakshathiram in the month of Thai 31.1.2026 marks the 1000th (yes you are reading it right 1000) birthday of  Acharyar Swami Embar.  The vaibhavam was very grandly celebrated at his Avatharasthalam and in all divyadesangal.

 

Here is a photo of Swami Embar with garlands and another with all divyadesa maryathai / bahumanam including one from Swami Ramanujar Sriperumpudur, taken this morning (1.2.2026) at Madhuramangalam 

 


 நம் எம்பெருமானாராகிய உடையவரிடத்திலே - அவரது பாத நீழல் (இராமானுஜ பதச்சாயா) என கைங்கர்யம் பண்ணின 'எம்பார்' சாற்றுமுறை தை மாத புனர்வசு திருநக்ஷத்திரம் இன்று [31.1.2026].

Thiruvallikkeni Thirumanjanakudam

 

 

Thiruvallikkeni Thirumanjanakudam 

 

This morning around 5.50 am was standing at Peyalwar Koil Street – was fortunate to have darshan of Thirumanjanakudam

 

In this video one could see kainkaryabarar Palappur Murali (65+ with some health issues) carrying the kudam filled with water for purification; Prakash playing Nadaswaram and Nagaraj on thavil – with couple of vehicles without patience trying to nudge over !!

 


Mind reminisced those days of 1970s – when as a young kid, I used to go to MAV house for divyaprabantha santhai  - those days the thirumanjana kudam procession would be far too grand – carried on Azhwan the majestic elephant of the temple from Kairavini pushkarini.

 

Life has changed !!!  [1.2.2026]

Saturday, January 31, 2026

Embar 1000 Sarrumurai purappadu @ Triplicane

 


Sri Parthasarathi Perumal purappadu @ Thiruvallikkeni

Embar  1000  - sarrumurai 31.1.2026

Mangalagiri Sri Narasimhar Gopuram

 



Raja gopuram of Mangalagiri Sri Lakshmi Narasimha temple

as zoomed from Sri Panakala Narasimha swami gudi .. ..- Mangalagiri, Guntur.

file picture 


Friday, January 30, 2026

Chennai Arulmigu Kandhakottam Murugan thiruveethi Ula

சென்னை  அருள்மிகு  கந்த கோட்டம் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.

தை பிரமோற்சவம்  2026

 

தமிழகத்தின் தலைநகரான சென்னையம்பதியிலுள்ள திருக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ கந்தஸ்வாமி கோயிலென வழங்கபெறும் கந்தகோட்டம்.:  https://youtu.be/j5f4OvNO9DA

 


The original temple was constructed by Maari Chettiar in the 1670s.  It has seen many renovations and is considered to be one of the finest in the neighbourhood. The area covered by the temple is about eight acres.  The temple tank is 'Saravana Poigai' and the Sthala Viruksham (tree) is Magizham tree.


Sri Sankatahara Mangala Maruthi thirukkovil

 



Sri Sankatahara Mangala Maruthi Devasthanam

(Sri Mangala Maruthi Anjeneyar Temple)

Thiruvonamangalam, near Alangudi/Kumbakonam in the Tiruvarur district



Sri Rajagopalaswamy Thirukkovil - Raja Mannargudi "Dakshina Dwaraka"

 


Sri Rajagopalaswamy Thirukkovil  - Raja Mannargudi   "Dakshina Dwaraka"


Thursday, January 29, 2026

Thiruvallikkeni Thai Shukla paksha Ekadasi 2026

 

Thiruvallikkeni Thai Shukla paksha Ekadasi 2026

Sri Parthasarathi Emperuman and thiruvanthikappu




Thai Rohini 2026 - நட்பு, வாழ்க்கை நெறி ~ நட்பிற்கு வீற்றிருக்கை

 

learnings from Ithihasa puranas - Thai Rohini 2026 - நட்பு, வாழ்க்கை நெறி

 


நட்பு, தோழமை , சினேகம் என்பது மனிதர்களிடையே ஏற்படும் ஓர் உறவாகும். மனித உணர்வுகளில் நட்பு மிகவும் அழகானது.  சிலருக்கு குடும்ப உறவுகளை விட நட்பே முக்கியமானதாக இருக்கும்.   உண்மையான நட்பு எதிர்பார்ப்பு அற்றது. நட்பில் ஒப்பனையும் இருக்கக்கூடாது. ஒளிவு மறைவும் கூடாது.    மன ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கையின் மேன்மைக்கும் நட்பின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.  நட்பு பல இடங்களில், பல காரணங்களால் துளிர்க்கலாம்.  ஒரே பேருந்து, ஒரே ரயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள், ஒரே மாதிரி நினைப்பவர்கள், உணர்வு உடையவர்கள் - என்பதை எல்லாம் தாண்டி, காணாமலே - பேனா நண்பர்கள்; முகநூல் நண்பர்கள் என பற்பல.  

1990ல் பிரபலமான படம் தளபதி.  சிறுவயதிலேயே தாயாரால் அனாதையாக விடப்பட்ட  சூர்யா (ரஜினிகாந்த்) அடிதடி அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் (மம்முட்டி). உடன் சந்தர்ப்ப சூழ்நிலையில் முதலில் மோதி, பின் கொள்ளும் நட்பே கதைக்கரு.  இன்று இப்படம் பலருக்கு அபத்தமாக படலாம்.  அன்று படம் வருமுன்னரே ஒரே ஹேஷ்யங்கள்.  மகாபாரதக் கதையைச் சமகாலக் கதையாக மாற்றியுள்ளார் மணிரத்னம் என்ற செய்தி முன்பே வெளியானது. ரஜினி கர்ணன் என்றும், மம்மூட்டி துரியோதனன் என்றும், அரவிந்தசுவாமி அர்ஜுனன் என்றும் அபத்த வாதங்கள் பரப்பப்பட்டன.   ரஜினி முதல்முதலாக இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார் என்றும் தகவல்கள் வெளியாயின. 

மஹாபாரத மகா காவ்யத்தின் நாயகன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களிடமும், அனைத்து ஜீவராசிகளிடமும் கொண்ட அன்போ, ஏன் கர்ணன் - துர்யோதநாதிகளின் நட்போ - இம்மாதிரி படங்களோடு ஒப்பீட்டு செய்து சிறுமைப்படுத்தாதீர்கள். !!  

இதிஹாச காலம் முதல் மனிதன் பிறரிடம் நட்பும் பகைமையும் கட்டியுள்ளான்.  மனித சமுதாயத்தின் நாகரீகங்கள் வளர வளர, மனித குலத்திற்குத் தேவைகளும் அதிகரித்துக்கொண்டே வந்தன.   அவற்றைச் சமுதாய மக்கள் அனைவருமே ஆங்காங்கே உற்பத்தி செய்து, பலரும் பல நாட்டவரும் பங்கிட்டுக் கொண்டுதான் வாழ வேண்டிய நிலை.  நல்ல சமுதாயங்களில், மனிதர்கள் நட்பு பாராட்டி, பகை நீக்கி  , வெறுப்பு, பிணக்கு இவை எழாமல் இன்புற வாழ்ந்தனர்.  எனினும் மனித குலத்தின் வரலாறு பல பெரும் போர்களை கண்டுள்ளது.  போன நூற்றாண்டில் கூட நன்கு படித்த மனிதர்கள் - இரண்டு உலகப்போர்கள் செய்து, தம் குலத்தையே அழித்து ஆனந்தித்தினர்.  காலங்கள் செல்லச்செல்ல, நண்பன் பகைவன்  ஆகலாம் பகைவனும்   நண்பன் ஆகலாம். இதோ நட்பு பற்றிய திருவள்ளுவர் வாக்கில் ஒரு திருக்குறள் :  

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.  

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். நண்பர்கள், ஒப்பீடு செய்யாமல், வித்தியாசம் பாராட்டாமல், ஒருவருக்கொருவர் எப்போதும் உதவிகள் செய்யவேண்டாம்.  அதே சமயம் பகைவரிடம் நட்பு கொள்ளலாகுமா ? என கேள்வி எழும். இதோ இங்கே கூடாநட்பு பற்றி வள்ளுவர் வாய்மொழி. 

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான். 

வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.  

அரசன் எவ்வாறு ஆட்செய்ய வேண்டும் ! - நாட்டை சுற்றி பகைவர்கள் இருந்தால், நிச்சயம் ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரையும் எதிர்ப்பது நல்லதல்ல ! - அவர்களிடம் உறவு கொள்ளலாமா ? - இது பற்றி ஒரு மஹாபாரத கதை இங்கே :  ஸ்ரீமஹாபாரத வினா விடை - மயிலாப்பூர் பி எஸ் உயர்நிலை பள்ளி உதவி போதகராக இருந்த ஆர் சி கஸ்தூரி அய்யங்கார் என்பவர் 1933ல்  எழுதி வெளியிட்ட நூலில் இருந்து, ஒரு கதை இங்கே :  

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.  அதன் கிளையில் பல பறவைகளும், விலங்கினங்களும் வசித்து வந்தன - ஒரு பூனையும், மரத்தடி பொந்தில் ஒரு எலியும் கூட.  ஓர்நாள், வேடன் ஒருவன் - மரத்தடியில் வலையை விரித்து, சில மாமிச துண்டுகளை தூவினான்.  அவற்றுக்கு ஆசைப்பட்ட பல பறவைகள், கீழே இறங்கி அந்த வலையில் சிக்கின.  இது சில நாள் தொடர்ந்தது.  முட்டாள் பறவைகள் தினமும், ஆசையில் தம் உயிரை மாய்த்துக்கொண்டன !   

ஒரு நாள் பூனை பசியில், அந்த மாம்ச துண்டுகளை சாப்பிட ஆசைப்பட்டு, வலையில் சிக்கிக்கொண்டது.  வலையில் பிடிபட்ட பூனையின் மீது, எலி ஏறி குதித்து விளையாடியது.  எலிக்கான நேரம் .. . .. அதிக நாழிகை செல்லவில்லை - மரத்தில் இருந்து ஒரு ஆந்தையும், கீரிப்பிள்ளையும் - எலியை புசிக்க வந்தன.  எலிக்கு இப்போது பயம், நிலைமை உணர்ந்தது.  பூனை வாயிலா, கீரியின் வாயிலா அல்லது ஆந்தைக்கு உணவாகவா ! - உயிர் போய்விடும் பட்சத்தில், ஏதாயின் என் ?  

பரம வைரியான பூனையிடம் தன்னை காக்குமாறு கெஞ்சியது.  நான் இந்த கால்களிடையே ஒளிந்து கொள்கிறேன், என்னைக் காப்பாற்று ! - பின்னர், வலையை கடித்து, உன்னை காப்பாற்றுகிறேன் என ஒப்பந்தம் பேசியது.  தப்பிக்கும் ஆசையில் பூனை இதற்கு இசைந்தது.  எலி பூனையின் கால்களிடையே ஒளிந்து கொள்ள, சற்று நேரத்தில் கீரியும் ஆந்தையும் விலகின.  வெளியே வந்த எலி - இரண்டொரு கயிற்றை மட்டும் கடித்து, வாளாவிருந்தது.  பூனை, மற்றைய கயிற்றையும் கடித்து தன்னை விடுவிக்க வேண்டியது.   

புத்திகூர்மை உள்ள எலி உரைத்தது :  நீ எம் குலத்திற்கு பரம விரோதி.  விடுவித்த உடனே, என்னை கொன்று விடுவாய் !  - நான் என் வாக்கையும் காப்பாற்றப்போகிறேன்.  வேடன் அருகாமையில் கண்ணில் தெரியும்போது, உன்னை விடிவுக்கறேன்.  அவ்வமயம், நீ தப்பிக்க முயற்சிப்பாயே தவிர, என்ன கொல்லமாட்டாய் என்றது.  மறுநாள் வேடன் அருகில் வர, தன் வாக்கின் படி, எலி, வலையில் இருந்து பூனையை விடுவித்தது.  ஆபத்தை உணர்ந்த பூனை, மரத்தின் கிளை மீது தாவி மறைந்தது - எலியும் தனது வளைக்குள் சென்றது.   

பின்னர் பூனையை எலியிடம் - நாம் ஒருவரை ஒருவர் காப்பாற்றினோம் - இனி நண்பர்களாகவே இருப்போம் என பகர்ந்தது.  அறிவுக்கூர்மை கொண்ட எலி மறுபடி, நம் இனங்கள் விரோதிகள் - ஆபத்தில் ஏதோ ஒன்றாக செயல்பட்டாலும், நாம் கூடி இருத்தல் சாத்தியமல்ல, எனக்கு பாதகமே !! -  நான் என்னை காப்பாற்றிக்கொள்ள இனி உன்னிடம் அணுக மாட்டேன் என ஓடி மறைந்தது.  இது போல அநேக விரோதிகளுக்கு இடையே இருக்கும் அரசன், அபாயத்தில் இருக்கும் ஒரு பலவானான விரோதியிடம் சேர்ந்து கொண்டு, பரஸ்பர உபகாரத்துடன் மற்ற எதிரிகளை எதிர் கொள்ளலாம் - எனினும் தன் இராஜ்ஜியத்தை சீர் கொண்ட பின்னர், அந்த உதவிய எதிரியினிடம் இருந்தும் விலகிட வேண்டும்.  அதுவே சரியான வாழ்க்கை நெறி.   

வேதங்களே நமக்கு பிரமாணங்கள்  ..இதிஹாசங்கள் பல அற்புத உண்மைகளையும், சீரிய வாழ்க்கை முறைகளையும் நமக்கு அளித்தன.  நமது கலாச்சாரத்தையும் சனாதன தர்மத்தையும் போற்றி பாதுகாப்போம். 



நாற்பால வேதத்தான் விண்ணோர் முடி தோயும்  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பாதம் பணிவோம்.  

Falling at the feet of  Bhagwan Krishna who taught us the ideals of life and showed us the way to live and also gave us Srimad Bhagwat Geetha – here are some photos of Sri Parthasarathi emperuman taken during Thai Rohini purappadu at Thiruvallikkeni divaydesam on 28.1.2026. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar