To search this blog

Thursday, August 6, 2020

குருந்தொசித்த கோபாலகன்.- Aadi Sathayam ~ Sri Peyazhwar masa thirunakshathiram 2020

Today  6th Aug 2020   happens to be ‘Sadhayam in the month of Aadi’ ~ the masa thirunakshathiram of  Sri Peyalwar.   


5.8.2020 ஒரு அற்புத நாள்.  சுப முகூர்த்த சுப வேளையில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சங்கல்பிக்க அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அற்புத திருக்கோவில் எழுப்பும் பணி விமர்சையாக துவங்கியுள்ளது.  கண்ணன் பிறந்த மதுரா சென்று இருப்பீர்கள்.  கண்ணபிரான் பிறந்தநாள் முதல் பல சோதனைகள். 

அதீத மழைகொட்டும் ரோஹிணி நன்னாளில் அவதரித்த கண்ணன், ஒருத்தி மகன் ஆக பிறந்து அன்றிரவே வெள்ளப்பெருக்கெடுத்த யமுனை ஆற்றை கடந்து, கோகுலத்தில் மற்றோருவர் மகனாய் கண்வளர்ந்தான்.  அங்கும் அவனுக்கு பலப்பல சோதனைகள் - ஒன்றொன்றாய் அசுரர்களை ஏவி கம்சன் அவனை அழிக்க முயற்சிதான்.  அவற்றுள் ஒன்று குருந்தமொசித்தது.   குருந்த மரம் ஒரு சிறுவகை மரம்.    இங்கே அது காட்டுக்  கொளுஞ்சி, காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படுகிறது.    இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டையான காய்களுள்ள, தண்டில் முள்ளுள்ள எலுமிச்சையைப் போன்ற இன மரமாகும். இதன் இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இம்மரம் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் தலமரமாக உள்ளது.


ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில்  அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.

Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai  Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street  in Mylapore closer to Mylai Sri Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and this street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.




முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர்.   பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு  (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார். பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்;*  .. .. - என "மூன்றாம்திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார். 

His prabandham is in Iyarpa – 100 pasurams known as ‘Moonram Thiruvanthathi’. At Thiruvallikkeni there would be purappadus on almost 200 days of the year – and in 90% (approx.) – it is Sri Peyazhwar’s moonram thiruvanthathi – in Periya mada veethi purappadu, generally around 70-75 pasurams and in siriya mada veethi purappadu around 30 pasurams would be rendered – thus if one learns these alone – one could easily partake in the divyaprabandha goshti at Thiruvallikkeni divyadesam. 

தமிழில் சிறந்து தமிழ்த்தலைவன் என புகழப்பட்ட ஸ்ரீ பேயாழ்வாரின் பாசுரங்களில் ஒன்று இங்கே: இப்பாட்டிலும் எம்பெருமானிருப்பிடங்களைச் சொல்லுகிறார். எம்பெருமான் உறையுமிடம் - திருப்பாற்கடல், திருவேங்கடம்,  திருவனந்தாழ்வான்,  ஸ்ரீவைகுண்டம்,  வேதவேதாங்கங்கள் யோகிகளின் உள்ளக் கமலம் ஆகிய இவற்றை இருப்பிடமாகக் கொண்டவனென்றாராயிற்று. 


பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,

நூற்கடலும்  நுண்ணூல தாமரைமேல், - பாற்பட்டு

இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,

குருந்தொசித்த   கோபாலகன்.

 திருவாயர்பாடியாம் கோகுலத்தில் பல லீலைகள் செய்து வளர்ந்த கண்ணபிரான்,  குருந்த மரத்தை முறித்தொழித்த கோபாலகன் - திருப்பாற்க் கடலையும், திருவேங்கடத்தையும்,  திருவனந்தாழ்வானையும், ஸம்ஸாராதாபங்கள் தட்டாமல்  குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும், கடல்போன்ற சாஸ்த்ரங்களையும், ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும் தனது நித்ய  வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான். அத்தகைய சிறந்த எம்பெருமான் தாள் பற்றினோர்க்கு எந்த குறையும் வாராது.

Today being Sadayam, here are some photos from  Sri PeyAzhwar sarrumurai purappadu that occurred on 20th Oct 2018.  

 adiyen Srinivasa dhasan.

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

06.08.2020







 

 

 

 

 

 

 


Wednesday, August 5, 2020

Boomi Pooja for a grand Temple at Thiru Ayodhya Rama Janmasthan

அருக்கன்  என்றால் -  பகலவன்  அதாவது சூரியன் என்பதை அறிவீர்களா !! 

From 2009, I have been posting on my blog tamil.sampspeak.blogspot.in [tamil.sampspeak.in] – religious posts – primarily of Thiruvallikkeni and other divyadesams laced with photos taken by me.  I have thus far made 1777 articles and today there is one more on Ayodhya Boomi Pooja.  A day of great significance – Nation’s Prime Minister and Chief Minister among other dignitaries offering pooja at Janmasthan and initiating boomi pooja for a very special temple at His Janmasthan.  “5th Aug 2020” will remain etched in golden letters in the annals of History of India.

அயோத்யா நகரம் ஒரு அற்புத நகரம். இக்ஷ்வாகு குல மன்னர்களின் தலைநகரம் மற்றெப்படி இருந்திருக்க முடியும்.  தசரத சக்ரவர்த்தியின் குலத்தோன்றல்களாக நால்வர் - இராம, இலக்குமண, பரத, சத்ருக்கனன் பிறப்பு நாட்டை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. பிறகு இராமபிரானின் அவதார லக்ஷயத்திற்க்காக வனம் ஏகியதும் இராவண வதமும் நடந்தது.  இராமன் பதினான்கு ஆண்டுகள் பிறகு திரும்பியதும் சரயு நதி பிரவாகித்து ஆனந்த்தித்தது  ~ மேலும் இராமர் பட்டாபிஷேகம் என நகரமும் மக்களும் ஆர்ப்பரித்தனர்.  அத்தகைய மனோநிலை தான் இன்றும் நமக்கு உள்ளது. இன்று ஒரு அற்புத நன்னாள்.  பாரத தேசத்தின் அரிய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்,  உத்தரப்பிரதேசத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கியஸ்தர்கள் சூழ இன்று அயோத்தி ஸ்ரீராமர் பிறந்த பூமியில் ஒரு அற்புத திருக்கோவிலுக்கு பூமி பூஜா விமர்சையாக நடைபெற்றது.   கம்பன் அயோத்தியின் ஆனந்தத்தை,  அந்த முடி சூடும் வைபவத்தை,  அழகாக விவரிக்கின்றான்   :

 

வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட

ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்

துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த

தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான்.

  திருப்பாற்க்கடலில் தோன்றிய,  தெளிந்த அழகுடைய இலக்குமியும்,   தெய்வத்தன்மை  மிக்க பூமிப் பிராட்டியும், அணைகின்ற  தோளை உடையவனாகிய இராமபிரான்:  தேர்ந்தெடுத்த   சிறந்த நன்னாளில்,  சிறந்த நல்வேளையில்,  மூன்று உலகமும் மகிழ்ச்சி நிரம்பியவாறு வணங்க -  அசுர குரு சுக்கிரனும், தேவ குரு வியாழனும் போன்ற நல்லோர் விதித்த முறைப்படியே அரச மகுடத்தை  தலையில் சூடிக் கொண்டான்.   அதே போன்று ஒரு அற்புத நாழிகையில்  இன்று திருக்கோவிலுக்கான பூமி பூஜை சிறப்புற நடந்தேறியது.

On 9th Nov 2019, came a happy ending for all and more specially for the devouts in the Ayodhya case by the Supreme Court of India.  The Apex Court ordered the disputed land (2.77 acres) to be handed over to a trust (to be created by Government of India) to build the Ram Janmabhoomi (reverred as the birthplace of Hindu deity, Ram) temple.  

The land in dispute, which was the subject matter of the suit formed part of the village of Kot Rama Chandra or, as it is otherwise called, Ramkot at Ayodhya, in Pargana Haveli Avadh, of Tehsil Sadar in the District of Faizabad. An old structure of a mosque existed at the site until 6 Dec 1992. The site has religious significance for the devotees of Lord Ram, as it is his Janmasthan.  From time immemorial, it has been referred as   ‘ Ram Janmabhumi or Ram Janmasthan.’ The Hindus assert that there existed at the disputed site an ancient temple dedicated to Lord Ram, which was demolished upon the conquest of the Indian sub-continent by Mughal Emperor Babur.  There has been litigation for centuries and decades earelir in 1950, a suit was instituted before the Civil Judge at Faizabad by a Hindu worshipper, Gopal Singh Visharad seeking a declaration that according to his religion and custom, he is entitled to offer prayers at the main Janmabhumi temple near the idols.  

A suit was instituted in 1989 by a next friend on behalf of the deity (Bhagwan Shri Ram Virajman) and the birth-place of Lord Ram (Asthan Shri Ram Janmabhumi). The suit was  founded on the claim that the law recognizes both the idol and the birth-place as juridical entities. The claim is that the place ofbirth is sanctified as an object of worship, personifying the divine spirit of Lord Ram. Hence, like the idol (which the law recognises as a juridical entity), the place of birth of the deity is claimed to be a legal person, or as it is described in legal parlance, to possess a juridical status.  Thiru K Parasaran, learned Senior Counsel appeared on behalf of the 2nd plaintiff [for Lord Rama himself] contending that  that the second plaintiff is a juristic person. He submitted that in Hindu Law the concept of a juridical person is not limited to idols. According to Mr Parasaran, the relevant question is whether prayer is offered to the deity and not the form in which the deity appears. It was contended that ― Asthan Sri Ram Janam Bhoomi is an object of worship and personifies the spirit of the divine. The faith of the devotees regards the land   He urged that there is a distinction between: (i) the land being a deity; (ii) the land being the abode of a deity; and (iii) the land being the property of a deity. It was urged that in the present case, the land constituting the disputed site, is an object of worship and is itself the deity.

 

Thiruvallikkeni Sri Rama Piran


In Nov 2019, Supreme Court verdict was pronounced and we have rejoiced everyday peaking with the boomi pooja today.  To mark the laying of the foundation stone for a temple at Ayodhya's Ram Janmabhoomi site, Prime Minister Shri Narendra Modiji today (5.8.2020) unveiled the plaque of the temple and a commemorative postage stamp on 'Shri Ram Janmabhoomi Mandir'. President of Ram Mandir Trust Mahant Nitya Gopal Das, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath, Governor Anandiben Patel and Rashtriya Swayamsevak Sangh chief Mohan Bhagwat were also present with him. PM Modiji, who arrived in Ayodhya earlier today, took part in the 'bhoomi pujan' at the Ram Janmabhoomi site.


 The devotees, Jeeyars, Mahants and the special invitees sat around the havan fire maintaining social distancing norms while wearing masks in view of the Covid-19 pandemic. Earlier today, PM Modi planted a 'parijat' sapling, a divine plant, in the temple premises, ahead of the foundation stone-laying of the Ram Temple. In Ayodhya, PM Modi's first halt was at Hanuman Garhi temple, marking the first-ever visit by any Prime Minister to this temple. He was the first Prime Minister to visit the Ram Janmabhoomi site. Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat on Wednesday said the 'bhoomi pujan' for the Ram Temple in Ayodhya is a "golden occasion" that has come after years of struggle, fulfilling dreams of thousands who sacrificed their lives for the construction of the temple.

 Today at the Janmasthan, Prime Minister Narendra Modi performed the 'bhoomi pujan' of a Supreme Court-mandated Ram temple in Ayodhya, bringing to fruition the movement for building a glorious at the very same place ‘mandir wahi banayenge’!. After watching live telecast of the event, Rawat said, "The golden occasion has arrived after years of struggle. Thousands of people sacrificed their lives for the construction of a Ram temple in Ayodhya. Their dream is being fulfilled with the ground breaking ceremony of the temple." It will bring peace to the soul of thousands of people who sacrificed their lives for it, he said. Reminiscing about the movement in the 1980s, he said Rs 1.25 was collected as donation from every person and that people in Uttarakhand did not mind walking for miles uphill to bring stones to be used in the construction of the temple. He especially remembered the contributions of RSS Pracharak Moropant Ji Pingle, Ashok Singhal, Mahant Avaidyanath and the Kothari brothers. Rawat said he has spoken to Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and will soon visit Ayodhya for a darshan of Lord Ram. Uttarakhand Governor Baby Rani Maurya also watched the live telecast of the programme and congratulated the prime minister describing it as the fulfilment of a big commitment. "All believers of the Hindu religion had dreamt of this day when the Ram temple in Ayodhya will be on its the way to becoming a reality," she said.

 PM Modi congratulated the nation on the bhumi pujan for the Ayodhya Ram Temple. He said, "The entire country is celebrating today as a centuries-old wait has finally ended. For our Ram Lalla, who has been under a tent for a rather long time, a grand temple will be constructed now." He said, "During our freedom struggle, many generations had devoted their all to the cause. August 15 is the symbol of that sacrifice, that emotion. Similarly, for a Ram temple, generations have struggled and toiled for centuries The Ram temple movement involved, dedication, struggle, sacrifice."On behalf of the entire country, Modi paid his respects to all those who were part of this movement. He said, "Wherever they are, they are watching us, they are emotional, they are blessing everyone. 

History in the form of books, belief and public records of unimpeachable authenticity establish indisputably that there was an ancient Temple of Maharaja Vikramaditya‘s time at Sri Rama Janma Bhumi, Ayodhya. That temple was destroyed partly and an attempt was made to raise a mosque thereat, by the force of arms, by Mir Baqi, a commander of Baber‘s hordes…In 1528 Babar came to Ayodhya and halted there for a week. He destroyed the ancient temple and on its site built a mosque, later known as Babar‘s mosque…

It has a long chequered history of almost 450 years of legal battle. The case before the Supreme Court was not a simple case - wealth of material emerged before the court during the course of the trial. The judgment of Justice Sudhir Agarwal in the High Court copiously tabulates the documentary exhibits of the parties during the course of trial comprising of 533 exhibits  categorized as : (i) Religious texts; (ii) Travelogues; (iii) Gazetteers; (iv) Translations of inscriptions on pillars; (v) Reports of Archaeological excavation; (vi) Photographs prior to demolition; and (vii) Details of artefacts found at the disputed site.

 In Mar 2020,  Uttar Pradesh Chief Minister Yogi Adityanath   participated in a religious ceremony  to shift the idol of infant Lord Ram to a temporary structure in the Ram Janmabhoomi compound in Ayodhya till the construction of a Ram Temple.  The first phase of construction of the grand Ram temple  has commenced, Maryada Purushottam Prabhu sits on a new pedestal from Shri Ram Tripal, ‘Ram lulla’ having arrived to  a temporary structure near Manas Bhawan.  Sooner the construction would begin and we pray that before the next Sree Rama Navami, there would be a new grandiose temple at the Janam Sthan.

 

I had never been to Ayodhya and now am eagerly looking forward to a trip to the holy land of Ayodhya and worshipping Lord Rama at the very place he was born. Today our great PM waxed eloquence and quoted Kamban stating “காலம் தாழ, ஈண்டு, இனும் இருத்தி போலாம்' 

ஆண்டையின், அருக்கன் மைந்தன், 'ஐய! கேள், அரிவை நம்பால்

காண்டலுக்கு எளியள் ஆனாள்' என்றலும், 'காலம் தாழ,

ஈண்டு, இனும் இருத்தி போலாம்' என்றனன்; என்றலோடும்,

தூண் திரண்டனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான்.

 

 ஆண்டையின்அருக்கன் மைந்தன்  (சூரியன் மகன் சுக்கிரீவன்) -  (இராமபிரானை நோக்கி) ஐயனே ! கேட்டருள்வீராக!; பிராட்டி, நாம் நம்மிடம் அழைத்துக் கொணர்தற்கு, எளிய தன்மையில் உள்ளாள் என்று சொன்ன அளவில்;  "காலம் தாழ ஈண்டு இனும் இருத்தி போலாம்" - வீணே காலம் தாமதமாக, இங்கேயே இருக்கின்றாய் போலும் ! என்று சொன்னான்.  அவ்வார்த்தை கேட்டவுடன், ;  தூண் திரண்டிருப்பது போன்ற தோள்களை உடைய சுக்கிரீவன் விரைவில் எழுந்திருந்து கட்டளையிடுபவனானான்.  அது போல உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்த சில மாதங்களிலேயே பூமி பூஜை துவங்கி ஸ்ரீராமனுக்கு அற்புத திருக்கோவில் வானுளாவ அமைய உள்ளது. 

ஜெய் ஸ்ரீராம்.

 

 

the photo at the start and the one above are of Sree Ramachandra Murthi at Thiru Ayodhya in a temple known as “Ammaji mandir”.   Around 100 years earlier, there was a great person by name Yogi Parthasarathi Iyengar and his wife was Yogi Singamma. Sri Yogi Parthasarathi Iyengar in his wisdom created a press for re-publishing on paper edition,  the great granthams of our Vaishnavaite mahans and in this venture established a press and persons to take care known as -  “Saraswathi Bhandram Committee” – saraswathi bhandaram meaning ‘library / treasure house’ of the works of Goddess of Learning Saraswathi. He spent his fortune towards establishing this and on this place built a temple for Sri Nampillai as the rightful person to own this treasure house at what is known at Komutti bungalow at Thiruvallikkeni.   Yogi Singamma, a century ago, built a temple of Sri Rama at the historic Ayodhya, a typical South Indian type temple, which is popularly known as ‘Ammaji Mandir’.  This temple is being maintained by ‘Saraswathi Bhandaram Committee’ – being taken care of by Dr MA Venkatakrishnan Swami.  The photos  of Lord Sri Rama of Ammaji mandir   are  shared by MA Madhusudhanan. 

Feeling happy and look forward to that day when we can have darshan of Lord Sree Rama at His Janmasthan at Ayodhya. 

adiyen Srinivasadhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

5.8.2020.

 

PS: the photos below are of today’s event at Ayodhya from pib.gov.in.










Tuesday, August 4, 2020

Magnificent Temple at Thiru Ayodhya Janmasthan for Ikshvahu Kula Thilakam Lord Sree Rama

We are fortunate to have two great Ithihasams [epics] Sree Ramayana, the undiluted history of Sree Rama and Mahabaratham, the life history and war between Pandavas & Gauravas and how Lord Krishna steered the World.  There is another epic ‘Raghu Vamsa’ written by Mahakavi Kalidasa, that narrates the history of Raghu dynasty from Dileepa.

 

ஆவணி அவிட்டம் போன்ற காலங்களில் சங்கல்பத்தில் 'வைவஸ்வத மன்வந்தரே!' என கேட்டுஉரைத்து இருப்பீர்கள் .. .. !!  அயோத்யா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.  இக்ஷ்வாகு குலத்தென்றல் மர்யாதா புருஷ் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு அவரது பிறந்த இடத்தில் அற்புதமான  திருக்கோவில் எழ உள்ளது.  5.8.2020 அதற்கான ஆரம்ப விழா.

 

இச்வாகு மன்னர் அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டவர். இச்வாகு மன்னரின் வழித்தோன்றல்களில் மிகவும் புகழ்பெற்றவர்கள் திரிசங்கு, அரிச்சந்திரன், பகீரதன், தசரதன், இராமர், லவன் மற்றும் குசன் ஆவர்.

 

மனுவந்தரம் (Manvantaram)  என்பது   காலக் கணக்கின் படி ஒரு மனுவின் ஆட்சிக்காலம். ஒரு மனுவந்திரம் கொண்டது ஒரு இந்திரனின் ஆட்சிக்காலம். பதினான்கு இந்திரர்களும் அதே சமயத்தில் பதினான்கு மனுக்களும் தோன்றி மறைந்த கால அளவு பிரம்மனுக்கு ஒருநாள். பிரம்மனின் ஒரு பகல் ஒரு 'கல்பம்' எனப்படும்.  இவ்வாறு முன்னூற்றறுபது நாட்கள் (கல்பங்கள், பகல்கள்) கொண்டது பிரம்மனுக்கு ஓர் ஆண்டு. பிரம்மனுடைய ஒவ்வொரு பகலுக்கும் அதற்கு சமமான ஓர் இரவு உண்டு.  வைவஸ்வத மனு, என்பவர்   14 மனுக்களில் ஏழவாது மனு ஆவார். இவர்  மச்ச புராணத்தின் படி, வைவஸ்தமனு திராவிட நாட்டு மன்னராக இருந்தார்.  ஒரு முறை   மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆற்றில் வைவஸ்தமனு எனும் சிரத்தாதேவன் கைகளை ஆற்று நீரில் கழுவும் போது,  ஸ்ரீமன் நாரணன்  சிறு மீன் வடிவில் காட்சியளித்தார்.  வைவஸ்தமனுவும், அச்சிறு மீனை சிறு தொட்டியில் வளர்த்தார். மீன் பெரிதாக வளர, வளர அதை கிணற்றிலும், பின் குளத்திலும் வளர்த்தார். பின்னர் மேலும் பெரியதாக மீன் வளர அதை ஒரு பெரும் ஏரியில் வளர்த்தார்.  அம்மீன் மேலும் பெரிதாக வளர பெரிய ஆற்றிலும், பின்னர் பெருங் கடலில் விட்டார்.  அப்பெரும் மீன் வடிவில் இருந்த எம்பெருமான், தன்னை வைவஸ்தமனுவிற்கு வெளிப்படுத்தி, பூலகின் அனைத்து சீவராசிகளையும் அழிக்கும்படியான பெரும் பிரளயம் வரப்போவதைக் குறித்து எச்சரிக்கை செய்தார்.  பிரளயத்திற்கு பின்னர் ஜீவராசிகளின் வழித்தோன்றல்களை தொடர்ந்து காப்பதற்கு, மன்னர் வைவஸ்தமனு பெரும் படகினை கட்டி, அதில் தனது குடும்பத்தினர், சப்த ரிஷிகளின் குடும்பத்தினர், ஒன்பது வகையான விதைகள், மற்றும் விலங்குகளை படகில் ஏற்றினார்.  மீனாய்  திருவவதாரம் எடுத்த எம்பெருமான்  ஆதிசேஷனை கயிறாகக் கொண்டு, படகினை கட்டி இழுத்துக் கொண்டு   பிரளய நீரிலிருந்து காத்தார்.

 

क्व सूर्यप्रभवो वंशः क्व चाल्पविषया मतिः।

तितीर्षुर्दुस्तरं मोहादुडुपेनास्मि सागरम्॥ १-२

kva sūryaprabhavo vaśa kva cālpaviayā mati |

titīrurdustara mohāduupenāsmi sāgaram || 1-2

 

Mahakavi Kalidasa humbly states that it is his folly and ignorance that he inancely tries to state the history of the great dynasty.   Where the dynasty originated from Sun where the meagre intellect of mine with an intellect yet to be edified, am I inanely wishing to go across this unnavigable ocean called the solar dynasty by a small barque called my ersatz education?   Poetic aestheticians have kept their debate pending on the poetic aesthetics used in this verse. Some say that kAvyArtha nidarshana alankAra; while others say it is lalitha alankAra, while some more say it has dR^iSTAnta alankAra.  Udupa is a very small boat built with cane, is it not  sheer folly that  I am bent upon crossing the ocean, though difficult to be passed over, by means of a small raft.

 

Solar dynasty or the Ikshvaku dynasty was founded by the legendary king Ikshvaku. The dynasty is also known as Sūryavaśa  ("Descendants of the Sun")   of the Kshatriya Varna. Sree Rama belonged to the Ikshavaku dynasty.  Dileepan was a  legendary emperor of   Ikshvaku dynasty of Ramayana, said to have been one of the most righteous and chivalrous emperors. Stories about the life and deeds of emperors of Ikshvaku dynasty are recounted in ancient poetic work of Kalidasa called Raghuvaśa.  Raghu   was born to the king Dilīpa and his queen Sudakshina. His name in Sanskrit means the fast one, deriving from Raghu's chariot-driving abilities. So celebrated were the exploits of Raghu, that his dynasty itself came to be known as the Raghuvamsha or the Raghukula after him.  

After acceding to the throne, he expanded his kingdom in all four directions. Later, on the instruction of his Guru Vashistha, he performed Vishwajit Yajna and gave all his wealth as Dāna. .. ..

 

Raghuvamsha  narrates, in 19 sargas (cantos), the stories related to the Raghu dynasty, namely the family of Dileepa and his descendants up to Agnivarna, who include Raghu, Dasharatha and Rama. The earliest surviving commentary written on the work is that of the 10th-century Kashmiri scholar Vallabhadeva. The most popular and widely available commentary, however, is the Sanjivani, written by Mallinatha (ca.1350-1450).

 

All that is past history ~ now the present happenings which are historic themselves – the golden moments leading to the construction of the Temple at Ayodhya at Janmasthan.  The Vedic rituals continued for the second day today  at Ram Janmabhoomi where the foundation will be laid for the construction of Ram temple by Prime Minister Narendra Modi. Simultaneous Vedic rituals began at Hanuman Garhi temple. The three-day Vedic rituals which began on Monday will end with bhoomi poojan on Wednesday. PM Modi will perform the pooja at around 12.15 pm.   “Lord Hanuman is considered to be protector of Ayodhya. So, before construction of Ram Mandir begins, we are performing this puja at Hanuman Garhi to seek his (Lord Hanuman) permission to start construction work of Ram Mandir,” said Anil Mishra, member of Sri Ram Janmabhoomi Tirath Kshetra Trust.   

 

At Ram Janmabhoomi, 21 priests started Vedic rituals at around 9 am for Ramacharya puja. Several other Vedic rituals will also be performed on Tuesday.

Eight priests from Ayodhya, five each from Varanasi and Delhi and three from   Tamil Nadu are performing the rituals at Ram Janmabhoomi for the construction of the temple. The city of Ayodhya is decked up for the August 5 event when religious leaders and other dignitaries will gather for the ceremony. However, in the wake of the coronavirus pandemic, limited number of people have been invited for the event.

 




The design was modified after the Supreme Court verdict in Nov 2019. The Supreme Court said the site would be handed over for a Ram temple.  Architect Chandrakant Sompura, who comes from a family of temple architects, was asked around 30 years ago to design the Ram temple. His father Prabhashankar Sompura designed and oversaw the reconstruction of the Somnath temple. The design of the planned Ram Temple in Ayodhya was released by the government today, a day before the groundbreaking ceremony by Prime Minister Narendra Modi and other top leaders. A series of images showed a grand three-storey stone structure on a raised platform with multiple turrets, pillars and domes. The temple will be 161 feet tall and almost double the size of what was originally planned, according to its architect. The interiors show a high dome with intricate carvings.

The temple will be almost double the size of what was originally planned. The design has been tweaked to have five domes instead of two to accommodate more devotees. A shikhara or tower will be built over the sanctum sanctorum.

 



After the ''bhoomi pujan'' or ground-breaking ceremony featuring PM Shri Narendra Modiji, Chief Minister Yogi Adityanath and Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat apart from 175 spiritual leaders, the construction will begin. It will take around three years to build the temple, said the architect.

 

Celebrating the Temple construction and worshipping Sree Rama, here are some photos of Sri Rama Pattabisheka thirukolam at Thiruvallikkeni – theppothsava purappadu in 2016.

 

Jai Shree Ram .. .. ..

 

Adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

4.8.2020.




 

 

 


Monday, August 3, 2020

Aadi thiruvonam ~ Yajur Upakarma 2020


எந்த கடின இடர் காலத்திலும் நாம் ஸ்ரீமன் நாரணனையே வணங்கி தொழுவோம் ! - ஸ்ரீமந்நாரயணனே பரதேவதையாகில், பலரும் பரதேவதை யென்று மயங்கும் படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்? அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான் செயல்களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்?



Today is Aadi Thiruvonam ~ pournami day – Gajendra Moksham and Yajur Upakarma too .. … the first photo here is of Pavithrothsavam (see Perumal wearing yagnopaveetham) – the 2nd Thirumanjanam at Eekkadu (see Golden yagnopaveetham) – rest of the photos are from Avani Avittam (pournami) purappadu of 2015


இன்று ஆவணி அவிட்டம் .. பொதுவாக 'பூணூல் மாற்றும் நாள்" - இன்று யஜுர் வேதிகளின் உபாகர்மா.  உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேத  உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது.  இது வருடா வருடம்  வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக  கருதப்படுகிறது. இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.  நித்யானுஷ்டான கர்மங்களை விடாமல் செய்யவேண்டும்.   மகரிஷி வேத வியாசரிடமிருந்து வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்த நான்கு முக்கியமான சீடர்களில் ஒருவர் வைசம்பாயனர்.  இவர் யஜூர் வேதத்தை கசடறக் கற்றவர். யஜூர் வேதத்தை இந்த மகான் 86 சாகைகளாக மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார். இவரது பல சீடர்களில் ஒருவர் "யாக்ஞவல்கியர்' ஆவார். 



Vaishampayana, narrates the Ithihasam Mahabaratham.   Vaisampayana was a great sage who was the original teacher of the Krishna Yajur-Veda. Sage VaismapAyanA sets the context here as a Pouranika to King Janamejaya, as he narrated the epic Mahabaratham.  Janamajeyan was the son of Parikshithu, grandson of Arjuna.  Janamejayan performed penance seeking to eliminate the serpent race as it had caused death of his father.   Takshaka survives and is aved by Sage Astika. King Janamajeyan gets to hear Mahabarath from Vaisampayanar.  Sage Vaisampayana had many pupils, of whom Yajnavalkya was one.

Upakarma is a Vedic ritual celebrated every year generally on the full Moon day of the Lunar Month Sravana that falls during August–September months of English calendar which also coincides with the monsoon season.  Upakarma means beginning or ārambham, i.e., to begin the study of the Veda (Veda Adhyayanam). Today is such beginning for those following Yajur vedam.   Have heard that in  the not too distant a past, Veda Adhyayanam was performed only during the period Avani to Thai – in the rest other shastras were learnt.  Spiritually,  one atones for not having performed the Utsarjanam – on this day, “kāmo’karshīt…” japam is performed and new yagnopaveetham is worn. The main purpose of the Upakarma function is to offer prayers and express our gratitude to those rishis who gave us the Vedas — the rishis through whom the Vedic mantras were revealed. These rishis are known as “kaanda rishis”.   The sankalpam is mainly taken for performing the Upakarma Homam.  Yagna means sacred ritual and Upaveetham means covering. Yagnopaveetham is hence the sacred covering of the body. Without the Yagnopaveetham, a Yagna/sacred ritual cannot be performed. It is known as “Poonal” in Tamil; Jandhyam in Telugu; Janivara in Kannada – but colloquially referred in English as ‘sacred thread’.  The yagnopaveetham that is worn is sacred, best among those that purify, bestows life and prominence, is clean and unsoiled and confers on its wearer knowledge and power. 



பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன் இருக்க, பற்பல தேவதைகளும், அவற்றை வணங்குவதும் எதனால் ? - என்ற கேள்விக்கு முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கைப்பிரான் அமுத  வாக்கு.

திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
திசையும்  கருமங்கள்   எல்லாம் - அசைவில்சீர்க்
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த,
காரோத வண்ணன் படைத்த மயக்கு.


திசைகள் உடன் கூடிய உலகங்களும்,  அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும், 
அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும் ஆகிய இவையெல்லாம், *அசைவு இல்சீர்* -  கேடில்லாத [நித்யமான] குணங்களையுடைய ஸ்ரீகிருஷ்ணனாக  அவதரித்த,  மிகப் பெருமையையுடையவனாய் இருந்த போதிலும்,  சரணா கதர்களுக்காக உடல் நோவக் கடல் கடைந்தவனாய், மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவையுடையவனான எம்பெருமான் - படைத்த தன்னிடம் வந்து பணியமாட்டாதவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கிவைத்த  அறிவை மயக்கும் பொருள்களாம் என உரைக்கின்றார் ஸ்ரீ பொய்கை ஆழ்வார். 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.8.2020.