To search this blog

Sunday, June 13, 2021

Praying Emperuman ~ ஆயர் கொழுந்தாய் .. .. தூய அமுதைப் பருகிப்பருகி,

Till 2020, We had not heard about this word – Corona, Covid 19 – and the world now has been shaken badly by the dreaded virus.  Dealing with the unexpected is a lot more difficult because, by definition, you are confronted with an unfamiliar situation for which there has been no preparation.   People, strategists, planners were frightened as it confronted and killed humanity, keeping people under the wraps .. .. the World was lost for a solution – even now, one would not know when this would end and how the new World would take shape.  



Tamil Nadu government on Friday extended the state-wide lockdown till June 21 and announced some relaxations in Covid-19 curbs, including allowing the sale of liquor in 27 districts. Chief Minister, while making the announcement, underscored the need for adherence to norms like using thermal screening and hand sanitisers in retail shops and not using air conditioners ! – on a positive note, though TN is reeling under pressure,  Chennai’s recovery rate jumped to nearly 97% on Saturday when more than 1,893 patients were discharged. The state average is 92%. There were 989 fresh Covid-19 cases in Chennai, dropping below the 1,000-mark after 73 days.  

"Green shoots" is a term used to describe signs of economic recovery or positive data during an economic downturn. The term "green shoots" is a reference to plant growth and recovery, when plants start to show signs of health and life, and, therefore, has been employed as a metaphor for a recovering economy.

கொழுந்து  .. .. என்றால் என்ன .. .. சிறுவயதில் - அறிவுக்கொழுந்து, உலக்கை கொழுந்து போன்ற செல்ல வசவுகளை செவி மடுத்து இருப்பீர்கள் !!  .. .. இன்று நம் வீடுகளில் உலக்கையே கிடையாது !! ?

 உரலில் அரிசி மற்றும் தானியங்களை இடித்து மாவாக பெறப்பட்டு வந்தது.  அரிசி மற்றும் பல தானியங்களில் இருந்து உமியை பிரித்து எடுத்து உணவு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் வேலைகளுக்கு தேவையானவை உரலும் உலக்கையும்.  உலக்கை உலர்ந்துபோன மரத்தால் செய்யப்படுவது. பட்டையும் பசையும் அற்ற அது தளிர்ப்பது எப்படி? கொழுந்து விடுவதுதான் எப்படி? நடக்கக் கூடியதன்று. வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தாலும் உலக்கை தளிர்க்கப்போவதில்லை !  .. ..பின் என்ன - உலக்கை கொழுந்து!' 

கொழுந்து  என்றால் மென்மை; மெல்லிய இளந்தளிர்; நெருப்பு ஜூவாலை.  வேப்பிலை கொழுந்து மிக அழகாக இளம்சிவப்பு நிறத்தில் மிளிரும்.  கொழுந்து  மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது.  அறிவுக்கொழுந்து என்றால்... அறிவிலி, முட்டாள், புத்தியில்லாதவன் மந்தபுத்தியுடைவர் என்று பொருள்.இது ஒரு வஞ்சப்புகழ்ச்சி சொல். வித்துவான்கள் பிறரது    கல்வி அறிவின்மையை சுட்டிக்காட்ட ’முஸலகிஸலயம்’ (உலக்கை கொழுந்து)  என்று பரிகாசம் செய்தார்களாம்.  



இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு ..  .. .. "ஆயர் கொழுந்து' - எம்பெருமான் கண்ணனை ஆழ்வார்கள் தம் பாசுரங்களிலே புகழ்ந்தது.  கண்ணபிரான் ஆயர்குலத்துக்கே மாணிக்கமாய் அற்புத திருவவதாரம் பண்ணினவன்.  கொழுந்து, மென்மையானது, சிறப்பானது, பளிச்சென்று வெளியே தெரிவது.  கொழுந்து வாடினால் வேர் வாடாது. ஆனால், வேர் வாடினால் கொழுந்து வாடிவிடும்... எம்பெருமானின்  காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் நம் சம்பிரதாய பெரியோர்கள். இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் அற்புத திருவாய்மொழி பாசுரம்.:-

ஆயர் கொழுந்தாய்   அவரால் புடையுண்ணும்,

மாயப் பிரானை  என் மாணிக்கச் சோதியை,

தூய அமுதைப் பருகிப்பருகி, என்

மாயப் பிறவி மயர்வறுத்தேனே.

இடையர் தலைவானான கோபாலக்ருஷ்ணனாகிய கண்ணபிரான், அவ்விடையர்களாலே  வெண்ணெய்க் களவு முதலியவற்றிற்றாக  ஆய்ச்சிமார்களிடம்  அடிவாங்கி வலிப்பதை போன்ற மாயங்கள் செய்யவல்லனுமாய் , எனக்கு விதேயனும், மாணிக்கம்போல் ஒளி பெற்ற வடிவையுடையவனும், பரிசுத்தமான அம்ருதம் போன்றவனுமான எம்பெருமானை இடையறாமல் அநுபவித்து  என்னுடைய பிறப்பின்  காரியமாய் வருகின்ற பிறவியினாலுண்டானதாகிய அஜ்ஞானத்தை போக்கிக் கொண்டேன். மேலும் மேலும் கண்ணனை நினைக்க, அவனது லீலைகளை பருகி அவன் மீது மையல் பெருக - அஞ்ஞானங்கள் நீங்கி உண்மையான அறிவு வளர்கிறது - அவனிடத்தில் ஈடுபாடு அதிகரிக்கின்றது என்கிறார் காரிமாறன் சடகோபன்.

Let us fall at the feet of the “Aayar kozhunthu” Sri Kanna piran and pray to Him for relief and peace.  Here are some photos of  the most beautiful thirumeni of  Sri Parthasarathi  Perumal taken during the 9th day of  special brahmothsavam at Thiruvallikkeni divaydesam on 11.2.2021  

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13th June 2021. 










1 comment: