To search this blog

Monday, March 27, 2023

Sree Ramar Yanai vahanam 2023 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

Sree Ramar Yanai vahanam 2023 - ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே

 


கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வான்  ஒரு பெருங்கவிஞன். அவனுடைய படைப்பில் புவியியல், தொன்மம், வரலாறு, வர்ணனைகள், அரசியல், நிதி, நீதி, சமூகவியல் என பலதுறைகள் விவரிக்கப்படுகின்றன.  கம்ப ராமாயணம் ஸ்ரீராமன் காதையா !  கிருஷ்ணன் பற்றி பாசுரங்கள் உண்டா !! என கேட்டால் என் சொல்வீர் ??

ஜகம் புகழும் புண்ணிய கதை  இராமனின் கதையே !   அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு யாகத்தின் பலனாய் ஸ்ரீராமபிரான் அவதரித்தார்.  அவர் தம் காதை  "ஸ்ரீ இராமாயணம்".  தந்தை சொல் காக்க இராஜ்ஜிய பரிபாலனம் துறந்து, மரவுரி தரித்து,   கொடிய வனம் புகுந்து, கானகம் எல்லாம் திரிந்து, தர்மம் காத்தவன்   ஸ்ரீராமபிரான்.  அந்த யுக புருஷருக்கு  அவர்தம் பிறந்த புண்ணிய மண்ணிலே அற்புத ஆலயம் எழ உள்ளது மிக்க ஆனந்தத்தை தருகிறது.




தொன்மங்கள் என்பது 'பழைமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழைமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது தொன்மங்கள் ஆகும். பழமை என்பதை வடமொழியில் 'புராணம்' என்று   அழைக்கப்படுகிறது.   தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் சான்றுகளாக உள்ளன.  எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது. ~ கம்பராமாயணம் ஒரு அற்புத இலக்கிய விருந்து.  வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு  தமிழின் சுவை கூட்டி  கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்டதாகும். 

கவிச்சக்கரவர்த்தியின்   அற்புத படைப்பில் பால காண்டத்தில் உள்ள பல படலங்களில் ஒன்று -  சந்திரசயிலப் படலம்.  தசரத     மன்னனுடன் சென்ற சேனைகள் சந்திரசயிலம் எனும் மலையைக்  கண்டதுபற்றிக்  கூறும்  பகுதியாக இருப்பதால் இப்பெயர் பெற்றது.   இதில் ஒரு பாடலில்,  தேர்களின்  செயல்கள்   கூறப்பெறுகின்றன.  மகளிர் இளைப்பாறித்   துயில்   கொண்டார்கள்.   மைந்தரும்  மங்கையரும் திரிந்தார்கள்.    பட   மாடங்களில்   வதிந்தார்கள்.   யானைகளும் குதிரைகளும்  வருகின்றன;  ஊற்றுநீர் சுரந்தது; வீரர்கள் மாடத்தினுள் நுழைந்தார்கள்;   யானைகள்   நீரைக்  கலக்கின;  அட்டிலில்  புகை எழுந்தது. சேனைகள் பொலிவுபெற்று விளங்கின.

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தனது  பால்ய பருவத்திலேயே பல லீலைகள் செய்தான் - கம்சன் ஏவிவிட்ட அசுரர்களை அநாயசமாக  அழித்தான்.   ஒரு நாள் யசோதை, தாமரைக் கண்ணனை ஒரு கயிற்றை அவனது இடுப்பைச் சுற்றிப்பூட்டி, அதை ஓர் உரலில் கட்டி விட்டு  தன் பணியில் ஈடுபட்டாள்.  தன்னை விட பெரிதாக காட்சி அளிக்கும் உரலுடன் முற்றத்தை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன், யமலம் மற்றும் அர்ஜுனம் என்ற பெரும் மரங்கள் இருந்த காட்டுக்குச் சென்றான். உரலை அந்த மரங்கள் இரண்டிற்கும் இடையில் வைத்து அவன்  இழுக்கும்போது அர்ஜுனம் மற்றும் யமலம் என்ற அந்த மருத மரங்கள் இரண்டும் தங்கள் கிளைகள் மற்றும் வேர்களுடன் முறிந்து விழுந்தன.

அவ்வாறாக - தன்னைக் கட்டியிருந்த கட்டுத்தறியை இழுத்துக் கொண்டு விரைந்து செல்லுகையில்    அக்   கட்டுத்   தறியால்   இரண்டு    மாமரங்கள் முறிந்துவிழச்   செய்தது   ஒரு   யானை.   இதற்குத்   தன்  தாயால் கட்டப்பட்ட   உரலை    இழுத்துச்  செல்லுகையில்  இரட்டை  மருத மரங்களை முறித்த கண்ணனை உவமையாக்கினார்  கம்பர் தமது - சந்திர சயிலப் படலத்தில்.   

திரண்ட தாள் நெடுஞ் செறி பணை     மருது இடை ஒடியப்

புரண்டு பின் வரும் உரலொடு     போனவன் போல,

உருண்டு கால் தொடர் பிறகிடு     தறியொடும் ஒருங்கே

இரண்டு மாமரம் இடை இற     நடந்தது ஓர் யானை.






இராமபிரானுக்கு அனுமந்த வாஹனம் அமைவு - ஏனைய வாகனங்களிலும் சிறப்பு.  திருவல்லிக்கேணியில் இன்று ஸ்ரீராமபிரானுக்கு வெள்ளி யானை வாகன புறப்பாடு.

At Thiruvallikkeni divyadesam, today was day 6 of ongoing Sree Ramanavami Uthsavam and Sri Ramapiran was on white silver elephant.  It was Thiruvasiriyam and Periya thiruvanthathi in the goshti;  here are some photos taken during today’s purappadu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.03.2023  











Sunday, March 26, 2023

Mangala - the temple elephant of Kumbakonam Sri Adhi Kumbeswarar temple

 கண்ணாரும் அருமணியைக்,  காரோணத் தாரமுதை

நண்ணாதார் புரமெரித்த,   நான்மறையின் பொருளானைப்  .. ..


கண்ணகத்தே நின்று களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த நான்மறை களின் பொருளாக விளங்குபவருமான - ஆதிகும்பேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் திருத்தலத்தில், புண்ணியம் செய்த மங்களா யானை

 


Profile pic of  Sri Adhi Kumbeswarar temple (Kumbakonam) temple elephant  *Mangala*
 
26.3.2023

Thursday, March 23, 2023

Sree Rama Navami Uthsavam 2 - 2023

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராம நவமி உத்சவம் 2 - 2023 



ஆடினர் அரம்பயைர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
ஓடினர்,  உலாவினர்,  உம்பர் முற்றுமே.


 

Kavi Chakravarthi hails the birth of Yuga Purush Sri Ramapiran thus .. the divine dancers danced merrily; mellifluous songs were played in instruments, Devas and others danced celebrating that the evil would vanished once for all ~ there was merriment everywhere celebrating the birth of Sri Rama. It is day 2 of Sri Rama Navami Uthsavam now on  at Thiruvallikkeni and other divyadesangal . .. …. ….. 

யுகங்களின் அற்புத புருஷனான ஸ்ரீ ராமபிரான் பிறப்பை எண்ணி பெறுவகையுற்று, வானுலகத்து நடனப்பெண்கள் -  அரம்பை முதலிய தேவமாதர், மகிழ்ச்சி பொங்கிட ஆடினார்கள்.  கின்னரர்கள் அமுதத்தை ஒத்த இனிய ஏழ் இசைகளைப் பாடினர்;    பலவகை  வாத்தியங்கள்  கொட்டப்பட்டன;  தீய்மை ஒழிந்தது,   தீய  அரக்கர்கள்  அழிந்தனர் என்று தேவர்களும் மற்றையோரும் ஆர்ப்பரித்தனர்.   இவ்வாறு தேவர்பிரானான ஸ்ரீ ராமபிரான் பிறப்பு மூவுலகலித்திலும் எண்ணற்ற ஆனந்தத்தை அளித்தது.  இந்த ஜகம் புகழும் புண்ணிய காதையான 'ஸ்ரீ ராமாயணத்தை'  பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் எல்லா நல்லதும் நடக்கும்.  



 

Today 23.3.2023 is day 2 of Sree Rama Navami Uthsavam – due to some asantharpam in Singarachari Street, the purappadu was curtailed to be chinna mada veethi – and there were so unusual drizzle showers in the month of March .. it was a short purappadu in which Boothathazhwar’s Irandam thiruvanthathi was rendered.

 





Here are some photos of today’s purappadu
 
adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.3.2023 

Wednesday, March 22, 2023

Sree Ramanavami Uthsavam 2023 - Ugadi Subhakankshalu 2023

ஸ்ரீ ராம நவமி உத்சவம் -  Ugadi Subhakankshalu  2023 



“Ugadi Subhakankshalu” -  Today (22.3.2023)  is Ugadi Panchanga Sravanam  – birth of Telugu new year  when the panchangam is read in Temples  . .. .. today is also day 1 of    Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni  & other divyadesangal.  

Azadirachta indica, also known as Neem, is a tree in the mahogany family Meliaceae. It is one of two species in the genus Azadirachta, and is native to India, and parts of Asia, growing in tropical and semi-tropical regions. Neem tree is the official tree of the Sindh Province and is very common in all cities of Sindh.  The neem tree is noted for its drought resistance.  





Yugādi, is the New Year's Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’ will be read.  It is also celebrated as  Gudi Padwa, Ugadi and Cheti Chand inv arious places.  Gudi Padwa is celebrated by Marathi speaking people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is the festival of the Sindhi community.  In Maharashtra, Gudi Padwa has the legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.  

In Andhra, Ugadi pachhadi is a delicacy made on the occasion and shared with all. It  is a specific mixture of six tastes – with neem buds; jaggery; green chilli/pepper; salt; tamarind; unripened mango being its ingredients.   

From today on, it is  9 days of  Sree Ramanavami Uthsavam.  The Thiruvavathara Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.  






மன்னுபுகழ்  கௌசலை  தன் மணி  வயிறு  வாய்த்த சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின்  திருவவதார மகோத்சவம்     ஸ்ரீராம நவமி.    அனைத்து உத்தம குணங்களும் நிரம்பிய அற்புத யுக புருஷன் ஸ்ரீராமபிரான். “இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாசரதி ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-வது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். “இந்த புண்ணிய பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி முதல் எல்லா பிராந்தியங்களில், மக்கள் அனைவரும்  “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனை விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவன்.  அந்த இராமபிரான் சத்யம் காக்க இப்புவியில் அவதரித்தான்.

ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்.  சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு பெருங்கடலை  ஆழமாக்கினான்.  இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.  தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்த அயோத்தி மாநகரம், இது மானவேந்திரனான  மனுவால் கட்டப்பட்டது.    புகழும்  செழிப்பும்  நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி, பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்ததாம்.   

அந்த புண்ணிய பூமியில் வசித்தவர்கள் -  அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப் போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர்.  அங்கே  முழு நிறைவின்றி உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும், இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படவில்லை.  வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும், யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான எவனும் அந்த அயோத்தியில் இல்லவே இல்லை.  வேதம் பயிலும்   தியான சீலர்க கோட்பாட்டுடன் கூடிய மேன்மக்களும் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.  அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ, கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படவில்லை.

அந்த தேசத்தை ஆண்ட தசரத சக்கரவர்த்தி, பல யாகங்களை சிறப்புற நடத்திட,  வேள்வி நெருப்பில்  இருந்து ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ புருஷன்} வெளிப்பட்டு  சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப் போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,  திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத்  மன்னனுக்கு அருளினார்.  மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி,  விரைவில் கர்ப்பந்தரித்தனர்.  [இராமாயண காதை - திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துகளில் இருந்து] 

வால்மீகி முனிவர், நாரதரிடம், மிக மிக சிறந்த  நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில்  உண்மையில் வாழ்கிறாரா என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார்.   தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று  கம்ப ராமாயணம்.  கம்பர்,  அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக கொண்டு இந்நூலை அமைந்துள்ளார்.  மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

Here are some photos of Sree Ramapiran on day 1 of the utsavam at Thiruvallikkeni

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.3.2023 






Tuesday, March 21, 2023

Panguni Amavasai 2023 - Póntos Áxeinos ! நீலக்கடலின் ஓரத்தில் !!

Ever heard of the name -   Póntos Áxeinos – it is a Sea -  a Flashpoint, for long has been a theatre  of competition between Russia and the West, a dynamic supercharged by the Ukraine war. 

Most of the Earth's surface is covered with water -- and most of it is water is not potable. 97 percent of Earth's water is salty sea water which is useless to most land-dwelling plants and animals.  Precipitation supports life on land with salt-free water. 




எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால் “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“  என பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் சாதிக்கிறார். 

The principal Greek name Póntos Áxeinos is stated to be  a rendering of the Iranian word *axšaina- ("dark coloured"). If you had to rank the spots around the globe where the militaries of the United States and Russia could physically run into each other, the Black Sea would probably be near the top of the list. The giant body of water on Europe’s southeastern flank has long been a theatre of international competition between the United States and its European allies on one side and Russia and its sphere of influence on the other, a dynamic that has been supercharged by Russia’s invasion of Ukraine.  

The Black Sea is a marginal mediterranean sea of the Atlantic Ocean lying between Europe and Asia, east of the Balkans, south of the East European Plain, west of the Caucasus, and north of Anatolia. It is bounded by Bulgaria, Georgia, Romania, Russia, Turkey, and Ukraine. The Black Sea is supplied by major rivers, principally the Danube, Dnieper, and Don. Consequently, while six countries have a coastline on the sea, its drainage basin includes parts of 24 countries in Europe.!!   The Black Sea ultimately drains into the Mediterranean Sea, via the Turkish Straits and the Aegean Sea. The Bosporus strait connects it to the small Sea of Marmara which in turn is connected to the Aegean Sea via the strait of the Dardanelles. To the north, the Black Sea is connected to the Sea of Azov by the Kerch Strait.  

A deal allowing the safe Black Sea export of Ukrainian grain was renewed on Saturday for at least 60 days - half the intended period - after Russia warned any further extension beyond mid-May would depend on the removal of some Western sanctions.  The pact was brokered with Russia and Ukraine by the United Nations and Turkey in July and renewed for a further 120 days in November. The aim was to combat a global food crisis that was fueled in part by Russia’s Feb. 24, 2022, invasion of Ukraine and Black Sea blockade.  

The United Nations and Turkey said on Saturday that the deal had been extended, but did not specify for how long. Ukraine said it had been extended for 120 days. But Russia’s cooperation is needed and Moscow only agreed to renew the pact for 60 days.  “The Black Sea Grain Initiative, alongside the Memorandum of Understanding on promoting Russian food products and fertilizers to the world markets, are critical for global food security, especially for developing countries,” U.N. spokesman   said in a statement. Russia and Ukraine are key global suppliers of food commodities and Russia is also a top exporter of fertilizer.  

பூமிப் பந்தில் 71 சதவீதத்துக்குக் கடல் சூழ்ந்திருக்கிறது. பெருவெடிப்பில் சூரியனில் இருந்து பூமிப் பந்து பிரிந்துவந்தபோது, வளிமண்டலத்தில் இருந்து வந்த நீராவி, பாறைகளில் இருந்து வெளியான தண்ணீர் மூலம்தான் பெருங்கடல்கள் உருவாகின. கடலின் நிறம் நீலம் என்று நாம் நினைக்கிறோம் !   கடல் நீர் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களைச் சூரியஒளியில் இருந்து கிரகித்துக் கொள்கிறது. நிறமாலையில் உள்ள நீல வண்ணத்தை மட்டுமே தண்ணீர் மூலக்கூறுகள் பிரதிபலிக்கின்றன.  

நீலக்கடலின் ஓரத்தில் என நாம் பாடினாலும், செங்கடல், சாக்கடல், கருங்கடல் உலகத்தில் உள்ளன.   செங்கடல் சிவப்பாக இருப்பதற்குக் காரணம், சிவப்பு நிற ஆல்கே எனப்படும் கடல்பாசிகள் அதன் மேல்மட்ட நீரில் அதிகம் இருப்பதே. கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல்.   அது இருண்ட நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த கடலை சிறப்பானதாக மாற்றும் பண்புகளில் ஒன்று, அதன் இருண்ட நிறம், சுமார் 100 மீட்டர் தொலைவில் எதையும் பார்க்க இயலாது. இதற்கு இந்த இருண்ட நிறம் இருப்பதற்கான காரணம் கீழே நிறைய தாவரங்கள் மற்றும் கருப்பு மண் உள்ளது.    





இவற்றில் இருந்து விலகி  நாம் பேயாழ்வார் கருங்கடல் நீருள்ளான் எனும் எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்வோம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம் இங்கே:

அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,

உவர்க்கும் கருங்கடல்  நீருள்ளான், துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்  பூணாரம்,

திகழும் திருமார்வன் தான்.

எம்பெருமான் எத்தகையவன் !  உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய், சிவந்த பவளம் போன்ற வாயையுடையளான பிராட்டியும், பல் வகையான ரத்னங்கள்  சேர்ந்த  திருவாபரணங்களும், ரத்ன  ஹாரங்களும்  விளங்கப்பெற்ற  திருமார்பையுடையனான எம்பிரான் - உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.  அவ்வளவு சிறந்த  எம்பெருமானுக்கு நான் அடிமைப்பட்டேன் என்கிறார் பேயாழ்வார்.  

இன்று பங்குனி மாச அமாவாசை - திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.3.2023