To search this blog

Tuesday, February 27, 2018

Sri Parthasarathi Thavana Uthsavam day 5 : 2018


ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே


சில ஆண்டுகள் முன்பு வரை வீடுகளில் எல்லாரும் சேர்ந்து பேசி களித்து இருக்க நிறைய நேரம் இருந்ததாம் ! ~  வீடுகளில் குழந்தைகளை ஓன்றாக அமர வைத்து,  பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நிறைய நீதிக் கதைகள் சொல்லுவார்கள். இவ்வாறு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியவுடன் இரவு நேரம் ஆகிவிட்டால் குழந்தைகள் தாமாகவே அவர்களிடம் செல்லுவர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நல்ல பாடல்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுப்பர்.   ராமாயண மஹாபாரத கிளை கதைகள் ஆர்வத்துடன் கேட்கப்பட்டன.

சுமார் 50 வருடங்கள் முன்பு பல புராண படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்து, வசூல் சாதனைகளும் படைத்தன.   லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ் நடித்திருந்தார்.  தமிழில் மருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதி இருந்தார்.    ** ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே**  என்ற பாடல் ஒரு அற்புத பாடல் ~ செவி மடுக்கும்போதெல்லாம் இன்பம் தரும்.

26th Feb 2018 ~ Masi Punarvasu - the Thiruavathara thirunaal of Sri Kulasekhara Azhwaar.  I had posted in detail of purappadu at Thiruvallikkeni.  Kulasekara alwar was immersed in his bakthi to Sri Ramapiran.

The day was the concluding day of Thavana Uthsavam at Thiruvallikkeni divyadesam – and here are photos of Sri Parthasarathi ulpurappadu at thavana uthsava bungalow.

Adiyen Srinivasa dhasan.
Monday, February 26, 2018

Thiru Kulasekara Azhwar Sarrumurai 2018


Bharathappuzha ("River of Bhārata"), also known as the River Nila, is a river in Kerala. With a length of 209 km, it is the second-longest river in Kerala, after the Periyar River. The word "Nila" indicates the culture more than just a river.

On the banks of the river lies this beautiful divyadesam  - the divyadesa Emperuman is ‘Abhya Prathan’ ~ the one who protects His devotees – one who appeared for Ambareekshan, who was a great baktha. Ambareesha was extremely devoted, did penance and gave 60 cows after Ekadasi and attained moksham here. Kulasekarar has sung 10 pasurams on this divyadesam.  The divyadesam Vithuvakkodu, sung by Alwar  is nearer Shoranoor on the Kallikottai route.  By train one has to get down at Pattambi Station.  By road, from Pallakad, Ottapalem – Kulapulli – IOC petrol bunk – Cheruthuruty, Desamangalam – this divyadesam is locally known at Mittakudi ~ Thirumittakode [Thiruvithuvakodu in the words of Alwar].  Many temples in Kerala have significance attached with Pandavas.  Legend has it that Pandavas spent sometime here – Sriman Narayana idol was installed by Arjuna, the one in the middle  by Dharmar, on Southern side by mighty Bhima and by Nakula Sakadevar.  The temple was later built by a Pandiya king.  The entrance is somewhat different as it is partly closed.  There is shrine of Mahadeva too in a prime place.

above  photo taken earlier (rest all taken today)

Today,  26th Feb 2018   - is ‘Punarvasu (punarpoosam) nakshathiram’ in the month of ‘Maasi’ – the Thiruavathara thirunaal of Sri Kulasekhara Azhwaar.  He was the amsam of ‘kausthubam’ – the jewel adorning Sriman Narayana.  He was born at Thiruvanjikulam as son of King Thiruviradhan and ruled the Chera Empire.  He was greatly devoted to Rama and ‘Ramayana’ and reverred Sri Vaishnavaites with devotion. Kulasekarar was born at Thiruvanjikalam.  On NH 17, few kms away on the south of Kodungallur lies Thiruvanjikulam, locally known more aptly as ‘Thiru Kulasekhara puram.’  Kodungallor can be reached from Irinjalakuda or Kochi on the Chennai- Thiruvanathapuram railway line.His contribution in ‘Sri Naalayira Divya Prabandham’  is 105 songs titled ‘Perumal Thirumozhi’.  In the 4th chapter – he sings about his various wishes of the forms that he would like to take for doing service to the Lord Balaji at Thirumala.  In one of these songs, he says ‘he would eternally  be waiting as the step before the Lord, as he could continuously have darshan of Lord Thiruvengadavan’ all the time.  After these beautiful words, the padi (doorstep) at Thirumalai is known as ‘Kulasekara Padi’.


                                           இன்று  ஸ்ரீவைணவர்களுக்கு சீரிய நாள்.  'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய சேரலர் கோன்' குலசேகராழ்வார்' அவதரித்த  நந்நாள்.  குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்களத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார். 

வைணவர்கள் மீது இவருக்கு இருந்த அபிமானம் விவரிக்க முடியாதது.  இவர் திருமால் மீது கொண்ட பக்தியால் அவரது அடியார்களுக்குத் தொண்டு செய்தே காலத்தைக் கழித்து வந்ததால்,  அவரின் மந்திரிகள் ஒரு  தவறான திட்டம் போட்டு,  குலசேகரரின் திருவாராதனப் பெருமானின் விலைமதிக்க முடியாத நவமணி மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அதனை யாரோ ஒரு திருமாலடியார்தான் திருடிச்சென்று விட்டார் என்று அவரிடம் சொல்லினர். திருமாலடியார்கள் ஒரு போதும் இழிச்செயல் செய்யார்  என, நச்சு பாம்புகள் நிறைந்த குடத்தில் கையிட்டு நிலை நாட்டினவர்  இவர்.

ஆழ்வாரின்  பக்தி அபரிமிதமானது.  ஸ்ரீராமாயண உபன்யாசம் கேட்கும் போது, ஸ்ரீராமபிரான் போரிட செல்கிறான் எனக்கேட்டவுடன், குலசேகரன் தன்னை முற்றிலும் மறந்து, ராமபிரானுக்கு உதவ தன் சேனையுடன் ஆயத்தமானார் ! பின்பு சக்கரவர்த்தி திருமகன் தானாகவே கரன், தூஷணன் போன்ற அரக்கர்களை அழித்ததையும், இராவணனை கொன்று பட்டாபிஷேகம் நடந்ததையும் கேட்டு ஆனந்தமுற்றார். 
திருவேங்கடமுடையான் மீது கொண்ட  அபார பக்தியினால் இவர் அருளிச்செய்தது 'பெருமாள் திருமொழி" எனும் அற்புத  பிரபந்தம் -  (105)  பாடல்கள் கொண்ட அற்புதமான களஞ்சியம். ராமகாதையை பத்துப் பாசுரங்களில் இயற்றி, திருசித்ரகூடப் பெருமானுக்கு (சிதம்பரம்) அர்ப்பணித்தார்.   "ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்'என தொடங்கும் பதிகத்தில், 'திருமலை திருப்பதியில்' என்னென்னவாக எல்லாம் இருந்து திருவேங்கடவனுக்கு கைங்கர்யங்கள் செய்து வேங்கடவனையே தரிசிக்கும் பேறு பெற தமக்கு உள்ள எண்ணங்களை அழகாக 'செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்,எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே !" - என்கிறார்.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  இன்று  ஸ்ரீ பார்த்தசாரதி தவன உத்சவம் - பெருமாளுடன்  குலசேகர ஆழ்வார்  புறப்பாடு கண்டு அருளி திருமஞ்சனமும் கண்டருளினார்.மாசி புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் - கொல்லி நகர் கோன் குலசேகரன் பிறப்பால்நல்லவர்கள் கொண்டாடிய சீரிய நந்நாள்,இந்நாள் !! குலசேகர ஆழ்வார் வாய் மொழியான சீரார்ந்த தமிழ் மாலை வல்லவர்தீ நெறிக்கண் செல்லார் என்பது திண்ணம். 
சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே  !!


~adiyen Srinivasa dhasan (Mamandur Srinivasan Sampathkumar) 

Sunday, February 25, 2018

Sri Parthasarathi thavana Uthsavam (4) - 2018


At Thiruvallikkeni, today is day 4 of Thavana Uthsavam and this morning Sri Parthasarathi had purappadu to thavana uthsava bungalow.

இன்று திருவல்லிக்கேணி தவன உத்சவத்தில் நான்காம் நாள்.  இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளினார். ஒற்றை மாலையுடன் காட்சியளித்த அவனது அழகு அளப்பரியது.  கண்ட வினாடியே தேவர் தலைமன்னனாம் அமரர்கள் அதிபதி நம் உளம் கவர்ந்தான்.


மஹாபாரதம் ஒரு வாழ்வியல் இலக்கியம். பாரதப்போர் வெறும் யுத்த காலமல்ல.  சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன் ஜெயத்ரதன்  மிக்க வீரமானவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன் அவனக்காக்க வரம் பெற்றிருந்தான்.  அபிமன்யு   சக்கர வியூகத்தை  உடைத்து உல் நுழைந்து, எதிரிகளை பந்தாடிய போது  கௌரவர் பக்கல் உள்ள அணைத்து வீரர்களும் சிறுவனிடம் யூத தர்மங்களை கடந்து தாக்குகின்றனர்.   அபிமன்யுவைப் பின் தொடர்ந்த நான்கு பாண்டவர்களையும் ஜெயத்ரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான்.  கடும் போராட்டத்துக்குப் பிறகு, அபிமன்யு  வீழ்த்திக் கொல்லப்படுகிறான். அப்போரையும் தர்மமற்ற முறையில் அவன் கொல்லப்பட்டதையும் கேட்டு வெகுண்ட  அருச்சுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான். 

ஜயத்திரதனை  துரோணர், கர்ணன் உள்ளிட்ட அனைவரும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.  கதிரவன் மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்திரதனைக் காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர்.அப்போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைக்க ஜயத்திரதன் வெற்றிக்களிப்புடன் வெளிப்படுகிறான். கிருஷ்ணர் சக்கரத்தை இப்போது விலக்கி கொள்ள பகல்பொழுது மீள்கிறது. சவ்யசாசி அர்ஜுனன்  விட்ட அம்பு ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது.  எல்லாம் வல்ல கண்ணன் இல்லாமல் அர்ஜுனனின் சபதம் தோற்றிருக்கும். 
திருமழிசைப்பிரான் தமது நான்முகன் திருவந்தாதியில் :

நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமே  மாற்றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்  மறைய
தேராழியால்    மறைத்தாரால்.

மஹாபாரதயுத்தம் நடந்த அக்காலத்தில்,  தேவாதிதேவனான கண்ணபிரான் தானே  பாண்டவர் பக்கலும் - அவர்தம் எதிரிகளுக்கு எதிரியாகவும் பல மன்னர்களை, குருக்ஷேத்திர யுத்த களத்திலே வதைக்க காரணமாய் இருந்தான்.  அர்ஜுனனுக்காக - ஒளிகொண்ட சூரியனையே அகாலத்தில்  அஸ்தமிக்கும் படியாகவும்,  பூ மண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும் - தேர் ஆழியால் (சக்கராயுதத்தினால்) மறைத்த ஸ்ரீ பார்த்தசாரதியான கண்ணபிரானையே எனது மனம் என்றென்றும் சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது ~ என நமக்கு வழிகாட்டுகிறார் நம் திருமழிசைப்பிரான்.

In today’s purappadu it is Nanmukhan Thiruvanthathi and Sri Thirumazhisai Alwar guides us to reach to that Lord who by His divine act of holding high His Sudarshana chakra, caused temporary eclipse of Sun.  Enjoying the false sense of security concluding that the Sun has set for the day, Jayadrada came out.  Arjuna who had vowed to eliminate him before sunset, thereby utilized the opportunity to avenge the killing of his valiant son Abhimanyu. 

Thirumangai Mannan guides us to take refuge in that Lord who by His divine grace ensured victory of Pandavas thereby ensuring victory of good over evil. In today’s Thavana Uthsava purappadu, there is rendering of Nanmukhan thiruvanthathi.
Here are some photos of our Supreme Sri Parthasarathi taken during the morning purappadu to Thavana Uthsava bungalow.

adiyen Srinivasa dhasan.
25th Feb 2018.

Saturday, February 24, 2018

Thirukachi Nambigal Sarrumurai 2018 : 'மாசி மிருகசீர்ஷம்'


ஆலவட்டம் :  துணிபனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,
வட்டமான பெருவிசிறி

Thirukachi nambigal at Avathara sthalam Poonamallee above and
at Thiruvallikkeni below


இன்று 'மாசி மிருகசீர்ஷம்'  - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள்.   திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார்.  இவர் சௌம்ய வருஷம்,  1009 ஆம் ஆண்டு, வைசிய குல திலகரான வீரராகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.  சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்,திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது.   இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால்,  பூவிருந்தவல்லி எனும் பெயர் பெற்றது.  பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு மிக  அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள் சம்பந்தப்பட்டது.  புராதானமான  இக்கோவிலில்,திருக்கச்சி  வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார்.  திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு  2009ஆம் ஆண்டு  விமர்சையாய் கொண்டாடப்பட்டது.

                                             Thirukachi nambigal  sannathi  and Nambigal at Avathara sthalam Poonamallee

Poonamallee the place on way to Sriperumpudur, Kanchi, Bangalore, Thirumazhisai, Thiruvallur, Tirupathi is too well known to travellers. Near the main bus stand at Poonamallee  is the temple of Lord Varadharaja whose consort is Pushpakavalli, who gave this place the name ~ and this place is more significant to us for its attachment to our Acharyar who lived 1000 years ago and who had a great role in the life of our Greatest Acharyar Sri Ramanujar.

Acharyar Thirukachi Nambigal was born in ‘masi mirugaseerusham’  at this place to Sri Veeraghavachettiyar  and Kamalai.  He was the disciple of Aalavanthar and had association with Thirukoshtiyur Nambigal too.  Thirukachi Nambigal is reverred for his devoted committed service of  ‘thiruaalavatta kainkaryam **– (service of providing air by handfan) to Devathirajar, the Lord at Thirukachi.  Nambigal is reverred as acharyan of Swami Ramanujar.  In the Kaliyuga, Nambigal was blessed that Sri Perarulalar spoke to Nambigal in person and through him, Devathirajar gave message of ‘Six words’ to Ramanuja – of which ‘Aham Eva ParamThatvam’ – Lord Sriman Narayana is Supreme is the first message.  ‘Upayam prapthi’ – accept ME as the sole refuge is another.

This temple dates back to 10th century of Paranthaka Chozha with inscriptions mentioning it as ‘puliyurkottampoonthamallee’.   It is from here, Nambigal visited Lord DEvathiraja of Thirukachi doing floral and ‘aalavattam’ service. Thirukachi nambigal was also known as Kachipurnar and Gajendra dasar.. our Emperumanar upon returning abruptly from Varanasi (escaping the attempt on his life) became attached to Thirukachi nambigal, a disciple of Alavandhar.  Udayavar wanted to become his disciple of the great person who conversed with Devathirajar. 

ஸ்ரீ ஆளவந்தாருடைய  சிஷ்யரான இவருக்கு "பார்க்கவப்ரியர்"  என்பது இயற்பெயர். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், "பேரருளாள தாஸர்" என்பதாகும்.  காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்) கைங்கர்யம் செய்துவந்தவர். தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டி,  இவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம்.   இளையாழ்வார்  (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம்.  அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன.  "அஹமேவ பரம் தத்வம்" -என்பது முதல் வார்த்தை.  'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்'என்பது ஆகும்.  நாம் "இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நம் வாழ்வின் சிறப்பு"என்பதை உணர வேண்டும்.  எம்பெருமானிடம் மட்டுமே ஈடு கொள்ளல் வேண்டும்;அவன் மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புகலிடம் தர வல்லன்.

         திருக்கச்சிநம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு  சமீபத்தில், 2009ம்  ஆண்டு விமர்சையாய்கொண்டாடப்பட்டது. 
Thirukachi Nambigal at Thiruvallikkeni (all but first 4)
the last 2 were taken during evening purappaduToday had the fortune of worshipping Thirukachi Nambigal at Thiruvallikkeni as he had purappadu with Sri Parthasarathi thavana uthsavam and then proceeded to Poovirunthavalli, had darshan of Nambigal at Sri Varadharajar thirukovil at Poonamallee and went to his avatharasthalam too. More photos would follow later. 

adiyen Srinivasadhasan
24th Feb 2018.