To search this blog

Friday, February 24, 2017

Masi Thiruvonam 2017 purappadu at Thiruvallikkeni

Today  24th Feb 2017 is  Masi Thiruvonam.  On every Thiruvonam day, at Thiruvallikkeni there will chinna mada veethi purappadu of Sri Parthasarathi.  Here are some photos taken during today’s purappadu.


திருவோணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார் எளிமையான வார்த்தைகளில் நாம் எம்பெருமானை அடைய அளித்த அற்புத வரிகள் :

எளிதில் இரண்டு அடியும்  காண்பதற்கு*, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.

நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரயணன் -  அஹங்காரத்தாலே அடிபணியாதிருந்த இரணியனை தொலைத்து, தனது பக்தன் ப்ரஹ்லாதனுக்கு அருள்புரிந்தவன்.  அவ்வாறு சிறப்பு வாய்ந்த அவனது உபய பாதங்களை அடைவதற்கு எளிதான உபாயம் - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய திருநாமங்களை, கலக்கம் இல்லாமல் உள்ளம் தெளிந்து - எப்போதும் அவற்றை எண்ணி உச்சரிப்பதே !!


Poigaialwar shows the easy way of reaching the Lotus feet of Sriman Naryaana by advising us :

0 Heart, don’t ever have any confusion ! – Sriman Narayana killed the pride-ridden Hiranya, for the sake of devout Prahalada.  Think of that Lord who took form of Narasimha to get rid of the enemy of Baktha Prahlada; chant thy name always – and there is no other easier recipe for reaching the most benevolent Lord Sriman Narayana.

After the purappadu,  Sri Poigai Azhwar, Sri Kaliyan, Pillai Logachar and Sri Vedanthachar were seated near Sri Parthasarathi and there was goshti of ‘Muthal thiruvanthathi’ given to us by Poigaippiran. 


Adiyen Srinivasa dhasan.Sunday, February 19, 2017

நாகத்தணையரங்கம் பேரன்பில்: Thiruvanbil Sri Sundararaja Perumal Thirukovil

Thiruvanbil Sri Sundararaja Perumal Thirukovil

கங்கையில் புனிதமாய் காவிரி நடுவிலே உள்ள அற்புத திவ்யதேசம் திருவரங்கம்.  பொன்னி எனப்படும் காவேரி ஆறு பாயும் பகுதிகள் எல்லாம் வளமாக இருந்தவை.  பொன்னிப்படுகையிலே வளர்ந்த சோழ நாடு வலிமையுடன் திகழ்ந்தது.  சோழர்களின் கொடி புலிக்கொடி; . சோழர்களின்  மலர் ஆத்தி.  "சோழ வளநாடு சோறுடைத்து !"  : என்றார் ஒளவையார்;  சோறு என்பதை அறிவுவளம் என்றும் கூறுவர். பிற்காலங்களில் பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது.  நிற்க !! இது சரித்திர பதிவல்லவே !!

கோவில் என்றாலே நம் திருவரங்கம் ~ இங்கே பள்ளிகொண்டு அருள்பாலிக்கும் திருவரங்கனை சேவித்தபின், அருகிலுள்ள திருவெள்ளறை, திருக்கோழி (உறையூர்); திரு அன்பில், திருப்பேர்நகர் (கோவிலடி, அப்பகூடத்தான்) திவ்யதேசங்களையும்; குணசீலம் போன்ற அபிமான ஸ்தலங்களையும்  சேவிப்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் இயல்பு.

ஸ்ரீரங்கத்தில் இருந்து லால்குடி மார்கத்தில் இருக்கும் 'திரு அன்பில்' ஒரு அற்புத திவ்யதேசம்.  இந்நாளில் சிறிய ஊராக காணப்படும் அன்பிலில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் நூற்றாண்டுகள் முன்பு, பெரிய கோவிலாக, நிறைய சுற்றுக்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது.  இன்றைய நிலையில், பல திருக்கோவில்கள் போலவே, நிறைய நிலங்கள் சொத்துக்கள் இருந்தும், கோவிலுக்கு பெரிய வருமானம் இல்லாததாகவும், இதனாலே, பிரம்மோத்சவம் போன்ற சிறப்பு உத்சவங்கள் நடைபெற இயலாததாகவும் அறிகிறோம்.  திருமழிசைப்பிரான்  - 'நான்முகன் திருவந்தாதியில் : 

நாகத்தணைக்  குடந்தை  வெஃகா  திருவெவ்வுள்*,
நாகத்தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்  பாற்கடல்  கிடைக்கும் ஆதி  நெடுமால்*,
அணைப்பார் கருத்தனாவான்.  :  -  என மங்களாசாசனம் செய்துள்ளார்
எம்பெருமான் - திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சில :  திருக்குடந்தை,  திருவெஃகா, திருவெவ்வுள் (திருவள்ளூர்), தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில் நாகத்தணையிலே கிடந்தருள்வது அவர்தம் பக்தர்கள் இதயத்திலே புகுவதற்க்காக  *  அணைப்பார் கருத்தனாவான் – “ என்பது : எப்போதும் எம்பெருமானோடு அணைந்தேயிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர், அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்திலே), பரம சௌலப்யனான ஸ்ரீமன் நாராயணன் எப்போதும்  பொருந்தினவானாக, ஆவான். (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில் இருந்து)

Kaliyan says of the Lord reclining on the serpent (Adisesha) in Thirukudanthai,  Thiruvekka, Thiru Evvul (Thiruvallur); the holy Thiruvarangam, Thiruppernagar (koviladi aka Appakudathan); Thiru Anbil and Thirupparkadal ~ Sriman Narayana happily reclines on Adisesha in the eternal Ocean of Milk ~ the timeless, limitless, eternally bountiful Lord is reclining only to easily get into the heart of His devotees.   – at ThiruVanbil, He gives darshan as the most beautiful Sundara Rajar (Vadivu Azhagiya Nambi).

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருக்கோவிலிலே ரூபராஜன் எனும் வடிவழகிய நம்பியான சுந்தர்ராஜனை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.  கோவிலில் நுழைந்ததும் திரு ஆராவமுதன் பட்டர் வரவேற்று கணீர் குரலில் திருத்தலப்பெருமைகளை விளக்கி, சயனித்த திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளின் பாதரவிந்தங்களையும், தல வரலாற்றில் ப்ரம்மாவின் செருக்கை போக்கியதையும், மண்டூக மகரிஷி விமோச்சனம், வால்மீகி முனிவருக்கு அருளியது, ஆழ்வாரின் பாடல், என அனைத்தையும்  - இனிமையாக விளக்கினார்.  இத்திருத்தலத்தில் உத்சவர் சுந்தரராஜ பெருமாள், உபயநாச்சிமார், அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் ஆண்டாள் சேவை சாதிக்கிறார். சயனித்துள்ள பெருமாளின் திருவடிகளிலே ஸ்ரீதேவி, பூமாதேவி பிராட்டியரும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும், உள்ளனர். சுந்தரவல்லி நாச்சியாருக்கு தனி சன்னதி உள்ளது.

18.2.2017 அன்று பெருமாளுக்கு தங்க கருட சேவை நடை பெற உள்ளதால், திருக்கோவில் கோபுரங்கள், மின்விளக்குகளுடன் பரிமளித்தன. இக்கோவில் குறித்து பல கல்வெட்டுகள் உள்ளனவாம்.  திவ்யதேசங்களில் (இந்த ஆராவமுதன் போன்ற) பட்டர்கள், கைங்கர்யபரர்களின் உகந்த கைங்கர்யத்தால், பழமையும் பெருமையும் வாய்ந்த திருக்கோவில்களில் நித்ய ஆராதனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதுபோன்ற கைங்கர்யங்களில் ஈடுபட்டு உள்ளவர்களை ஆதரித்தால் (அவர்களை நம்மால் முடிந்த அளவு சிறப்பாக) நம் சம்ப்ரதாயம் மேலும் சிறப்புற விளங்கும்.  இது ஒவ்வொரு ஸ்ரீ வைணவனின் கடமையாகும்.

From Srirangam divyadesam, one travels around 45 minutes in Lalgudi route to reach Anbil divyadesam.  One can also reach through Kallanai, proceed on route Thirukattupalli – reach Thiruppernagar, have darshan at divyadesam, cross Kollidam river (now there is a new broad bridge) and reach Anbil. 

Anbil is a village near Lalgudi, located on the banks of the Kollidam river, in Tiruchirappalli district. Anbil has had its share in the politics of Tamil Nadu and has temples (besides the divyadesam) of  Mariamman and Sathyavageeswarar. Anbil is considered as three separate villages by the Government of India as of the 2011 Census, namely Jangamarajapuram, Mangammalpuram and Keelanbil.

The beautiful Srivaishnava shrine, in its present form appears a small one – understand that it earlier had many rounds of fortification and had so much of landed property, which like many other temples are not yielding the revenue.  The temple is believed to have been built by the Medieval Cholas of the late 8th century AD, with later contributions from Vijayanagar kings and Madurai Nayaks. The copper plate inscriptions from Anbil indicate generous contribution by the Chola kings to the temple. The rajagopuram, the temple's gateway tower, is east facing and has a 3-tier structure.

Later day  King Sundara chola was a devotee and upon his war victories,  donated immense wealth to this temple. His prime minister Anirudha Brahmarayar is believed to be from Anbil.   The temple is located on the Northern bank of the river Kollidam, at a distance of 25 km (16 mi) from Trichy.

The presiding deity as sung by Thirumazhisai Alwar is in reclining posture on Adisesha.  Inside the sanctum sanctorum, His consort  Sridevi and Bhoomadevi are doing service at His thiruvadi while  Brahma is present from his Thirunabi.  The Uthsavar is the Smiling beautiful Ruparajar – Vaidvu Azhagiya Nambi – Sundara Raja perumal.  Besides the ubayanachimar, there is Andal in seated posture.  Thayar is Sundaravalli thayar in a separate sannathi.

Legend has it that Sage Durvasa once came to meet Mandaka Rishi but had to wait long as the latter was in deep meditation, under the river. Durvasa, who is known for his instant anger, cursed Mandaka Rishi turning him into a frog.  Mandaga’s curse was cured by Sri Sundararajar and this place is also known as Mandaka(Frog) Puri.

At every divyadesam, the antiquity, sampradhayam and rituals are taken care by the few exceptionally devoted people who live and do kainkaryam to Lord without thinking of any recompense.  Here it is Anbil Aravamudha battar who does great kainkaryam and it is the duty of all Srivaishnavaites to support people like him and ensure that our tradition is preserved.  Understand that for lack of revenue, annual Brahmothsavam has stopped for years and the battar is striving hard to make that happen.

Here are some photos of the divyadesam.

Adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]
19th Feb 2017.

Sri Sundraraja perumal photos credit : Sri Aravamudhan battar

Nachiyar Thirukovil at Uraiyur - avathara sthalam of ThirupPanazhwaar 2017

கங்கையில் புனிதமாய காவிரி நடுவுபாட்டு;
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்

River Cauvery is considered most sacred ~ in the words of Thondaradipodi Azhwar – ‘more sacred than the Sacred Ganges’…. ~ and in that beautiful island formed by Cauvery [Kaveri and Kollidam] reclines Lord Ranganathar.  Azhwars, many sages and saints have left a rich treasure for posterity, in the form of classics containing all information about God and how He is ready to respond to the devotees' sincere pleas. 

The sacred Cauvery flowing across enriched all areas on its banks ~ the Chozha empire flourished due to that.  Historically, Uraiyur [also spelt Woraiyoor] was  the capital of the Empire at some point time  – it  had big palatial buildings and bigger choultries feeding the poor all the time.   Woraiyur figures prominently in the Sangam works like Pattinapalai and Purananuru. According to the former, Karikala Cholan beautified its fortifications, gateways, tall mansions and temples.  Uraiyur over the period is known by various names such as ‘Thirukkozhi, Nikalaapuri, Uranthai, and Kozhiyur’. The word Urayur in Tamil literally means "the residence" ~ perhaps meant to be the abode of the Lord Himself.  Legend has it that ‘cock attacked the elephant of the king’ and realizing the valour, the place came to be known as ‘Kozhiyoor’ too.  

 view of the Gopura vasal

For Sri Vaishnavaites, this places assumes significance for this is a Divyadesam ~ more so as every year Lord Num Perumal from Thiruvarangam visits this place.  The presiding deity here is Azhagiya Manavaalan in  standing posture possessing ‘Conch [Thiruvazhi] and Chakra in His hands.  The Thayar is Kamalavalli Nachiyar ~ who is in the main sannathi itself alongwith Perumal.   The moolavar Kamalavalli Nachiyar is in sitting posture of the bride [Thirukalyana thirukolam]. Thiru Kalyana uthsavam is celebrated on Panguni  Pooram day when NumPerumal from Thiruvarangam comes here for marriage.   Lord Ranganatha here is ‘Azhagiya Mana Vaalan’ ~ there is no Uthsavar idol for Perumal.  There are separate sannathies for Swami Nammalwar; Sri Ramanujar and ThiruPanazhvaar.   Thirumangai mannan sings about this place as :

Moolalvar [Azhagiya Manavalar and Thayar - Kamalavalli Thayar]

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே  ஒப்பர் குன்றமன்ன*
பாழியும் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்*
வாழியரோவிவர்  வண்ணமெண்ணில் மாகடல் போன்றுளர் கையில்வெய்ய*
ஆழியொன்று ஏந்தி ஒர் சங்கு பற்றி  அச்சோவொருவர் அழகியவா.**

திருமங்கை மன்னன் தமது திருமொழியில் மங்களாசாசனம். " உறையூரையும், தென் மதுரையையும் இருப்பிடமாகவுடைய கோபாலக்ருஷ்ணன் போல இருக்கும் இவர் பெரிய கடல் போன்றும்; மலை போன்ற வலிமை பொருந்திய அழகிய நான்கு திருத்தோள்களையும் உடையவராய் இருக்கிறார் ~ அத்தகைய பெருந்தகையோன் -  பல்லாண்டு பல்லாண்டு  வாழ்ந்திடுக.

This place has added significance of being the avathara sthalam of Thirup Paan Azhwar for whom there is a separate sannathi.  The prakaram is not big and on the left side of the corridor is the sannidhi of Thirupanar. 

Thirupanalwar used to come to the banks of Cauvery, deeply imbued in bakthi he would sing with deep anubhavam about the kalyana gunams of the Lord every morning. In the divine Naalayira Divya prabandham, his contribution is Amalanadhipiraan – ten in number. His prabhandham is different from the rest in a way that it does not contain any upadesams or anything else but only hymns in praise of Lord Ranganatha alone. Those well versed in sampradhaya state that they are aanandha-lahari (limitless outpourings of the bliss of aanandham) at the anubhavam of the Soundharyam of Arangar.

Here is  one of his immortal verses:
அமலனாதிபிரான் அடியார்க்கென்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்*
திருக்கமலபாதம் வந்து  என்கண்ணினுள்ளன ஓக்கின்றதே.

Azhwar totally immersed with bakthi, refers to the Lord as Vimalan, glorifying His blemishlessness and magnanimity.  The immaculate  Lord Ranganatha [Arangathamman]  cleanses the massive dirt of ignorance of the worshippers and imparts purity to them. Indeed He is the purest of the pure and the most auspicious among the auspicious.   The Lord “Nimalan” is the one who bestows boons on his devotees even unasked and unsolicited, enhancing His greatness still further. And when someone thinks of such magnanimous Lord – the Lotus feet – the very thought gets ingrained in the eyes of Azhwar who could see nothing else and melts with the benevolence of Lord Ranganatha. 

As starts the thaniyan ~ ஆபாதசூடம்  ~ from the feet to the crown, perhaps was his resolve when he started singing, but he cannot take his eyes off the Thiruvadi.   Such was his bakthi.  Sri Thirup Paanazhwar’s  thirunakshathiram falls on “ Rohini in Karthigai month.” The Azhwar,  an amsam - Sri Vatsa of Sriman Narayana sang mellifluous paeans in praise of Lord.  Such was his blemishless devotion to Lord Aranganathar that he claimed that he does not want to see anything else with his eyes that saw the most benevolent Lord Arangar. ~ அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள்  மற்றொன்றினைக் காணாவே.

 entrance of Alwar sannathi and Perumal sannathi view from outside


Had the fortune of darshan at this holy place recently.  On Friday (17.2.17) had Suprabatha darshan.  Now the “Pagal pathu” uthsavam is on at this divyadesam, the culimination of which would be reenactment of  entering Paramapada vassal on Wednesday 22nd Feb 2017.  On 18.2.2017, it was Muthayira sarrumurai by Adhyapaks ~ and ‘Arayar Sevai’ – the Arayars from Thiruvarangam singing the pasurams to the accompaniment of ‘punn’ – music.   It was indeed a great fortune to be part of goshti and have darshan of Thayar hearing divyaprabandham with Thiruppanar, Swami Nammalwar and Sri Ramanujar seated in front, facing Thayar.

Here are some photos taken at the divyadesam.


Adiyen Srinivasa dhasan.

mandapam for Thayar

 Thiruppanar ~ Swami Nammalwar and Sri  Udayavar - Pagal pathu


Sri Kamalavalli Thayar
Emperumanaar and Uthsava pathrikai 


Sunday, February 12, 2017

Thirumazhisai Aazhwaar Sarrumurai ~ Prasadam to his Acharyan - 2017


தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
என நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள்  இந்நாள். தை மாதத்தில் மக  நக்ஷத்திரத்தில், , விஷ்ணுவானவர் தன் திருக்கையில் ஏந்தியுள்ள திவ்ய ஆயுதமான சக்கரத்தின் அம்சமாக, பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக மஹீசாரபுரம் என்னும் திவ்யக்ஷேத்திரத்தில் திருமழிசைப்பிரான் அவதரித்தார்.திருமழிசை ஆழ்வார்   இவ்வுலகத்தில்   இருந்தது 4700 ஆண்டுகள்.  அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக  வாழ்ந்திருக்கிறார் என்று வைணவ ஆசாரியர்கள் அருளிச்செய்த "பன்னீராயிரப்படி" வியாக்யானம் தெரிவிக்கிறது.   தனது காலத்திலே, ஆழ்வார்  சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று, அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார். 

"சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்" என்று உரைத்தார்.

சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல், பின்னர் பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 -  நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார். 

இன்று இவரது சாற்று முறை மஹோத்சவத்தில் - திருவல்லிக்கேணியிலே - ஆழ்வார்  ஸ்ரீ தேவப்பெருமாளுடன் புறப்பாடு கண்டு அருளினார்.  வீதியில் இராமானுச நூற்றந்தாதி சேவிக்கப்பெற்றது.  திருவாய்மொழி பத்தாம் பத்து சாற்றுமுறை முன்பு - பெருமாள் அமுது செய்த பிரசாதம், அவரது ஆச்சார்யனான  பேயாள்வார் சந்நிதிக்கு குடை, திருச்சின்ன மரியாதையுடன் ஏளப்பண்ணப்  பெற்று, பேயாழ்வார் சுவீகரித்த பின்பு மழிசைப்பிரானுக்கும், அவரது பக்தர்களுக்கும் வழங்க பெற்றது.A post on the greatness of  Sri Bakthisarar, hailed as Thirumazhisai Alwar is posted separately.  On the day commemorating his birth ‘Magam Nakshathiram in the month of Thai’ – there was purappadu of Alwar with Sri Varadharajar at Thiruvallikkeni Divyadesam. 

Bakthisarar learnt and mastered many religions including Buddhism, Jainism and practised Saivism for some time too.  In this phase, he was made to understand the supremacy of Sriman Narayana and brought back to Srivaishnava fold by Sri Peyalwar.  

At Thiruvallikkeni divyadesam, on sarrumurai day, after Periya maada veethi purappadu, the Prasadam offered to Lord Devathirajar was thence taken with all paraphernalia to the sannathi of Sri Peyalwar, considered the Acharyar of Mazhisaippiran and after submission of Peyalwar was brought to Thirumazhi alwar and thence distributed to all Sri Vaishnavas – here are couple of photos of prasadam being taken to the sannathi of Sri Peyalwar.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

11th Feb 2017.

Special thanks to Sri Nallan Chakravarthi Rangarajan Swami. [Sri Pachadi Rangarajan Swami]