To search this blog

Monday, June 28, 2021

பல்வகையாலும் பவித்திரனே ! ~ Temples reopen today - darshan of Sri Parthasarathi Perumal

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் பால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவைணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது 'திருப்பல்லாண்டு'.  ஸ்ரீமன் நாராயணன் அளவிடமுடியாத பெருமைக்குரியவர்.  அவரை கண்டவுடன், தொழுது தமக்கு வேண்டியவை வேண்டமால், எம்பெருமானுக்கே எந்த  அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு, பல்லாண்டு  ‘பல்லாயிரத்தாண்டு’’   ‘‘பலகோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என பாடியவர் பெரியாழ்வார்.  நாம் வேண்டுவது எல்லாம் - எம்பெருமானை அவன் உறையும் அற்புத திருத்தலங்களில், கோவில்களில் சென்று சேவிக்கும்படி  நல்ல மனநிலையையும், உடல்நிலையையும், - எம்பெருமான் நமக்கு அளிக்க வேண்டும் என்பதே !



நாம் நினைத்துப்பார்க்கவும் இயலாத விஷயம் ஒன்று நடந்தேறியது.  கொரோனா எனும் தீநுண்மி தாக்கி, அகிலத்தையே அச்சுறுத்தி முடக்கியது.  திருக்கோவில்கள் கூட மூடப்பட்டன.  எம்பெருமானை சேவிக்கவும் இயலவில்லை ! 

3 months ago it was Masi Magam - 27.2.2021 - a day on which the Ocean (Bay of Bengal) becomes much happier – for Sri Parthasarathi Emperuman visits bay of Bengal at Marina beach.   .. ..  could not forget remembering the past –  the year before -  Masi magam purappadu for Sri Parthasarathi occurred on  9.3.2020; then there was Gajendra varadhar thavanothsavam, Sri Azhagiya Singar thavanothsavam (3 days)    15.3.2020   –   then Corona struck .. .. for  296 days there was no purappadu. 

2021 dawned better – there was purappadu of Sri Andal neeratta uthsavam, followed by many including 2 Brahmothsavams – then on   Apr 9, 2021, Udayavar had purappadu in the morning and  evening – on day 1 of His Thiruvavathara uthsavam and .. .. after that no purappadu.  From 26.4.2021, Temples  were  closed to devotees too  and we are not in a position to have darshan of Emperuman.  It was painful  !!




Today  Monday, 28th of June 2021 is a grand day – “Avittam in the month of Aani” – masa thirunakshathiram of Sri Boothathazhwar.  More than anything else, devotees are happy that temples are open and we had darshan of Sri Venkatakrishnan (moolavar) [Sri Parthasarathi] as also Sri Ramar, Sri Mannathar, Vedavalli Thayar, Sri Varadharajar, Sri Azhagiya Singar and Andal at Thiruvallikkeni divyadesam in their sannithies.  

According to newspaper reports, around 3,000 temples in and around Chennai  have reopened today following the government decision to relax lockdown conditions.  Celebrating the reopening and occasion to have darshan with a pasuram of Sri Periyazhwar.  இதோ இங்கே நம் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாசுரம் : 

அல்வழக்கொன்றுமில்லா அணி கோட்டியர் கோன்* அபிமானதுங்கன்

செல்வனைப் போலத்   திருமாலே  நானும் உனக்குப் பழவடியேன்

நல்வகையால்  நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி

பல்வகையாலும் பவித்திரனே  உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 

இந்த மண்ணில் மறையும் தேகத்தை நிரந்தரமான ஆத்மாவென்று நினைப்பது, பகவானுக்கு சேஷமாய்ப் பரதந்த்ரமான ஆத்மாவை ஸ்வதந்த்ரமென்று நினைப்பது, தேவதாந்தரங்களைப் பரதெய்வமாக நினைப்பது, எம்பெருமானிடத்தில் க்ஷுத்ர பலன்களை அபேக்ஷிப்பது, மோக்ஷத்துக்காகவும் கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களை அநுஷ்டிப்பது இவை முதலானவை அல்வழக்குகள்  !  

எம்பெருமானே !  அத்தகைய  அல்வழக்கான  அநீதிகள் ஒன்றுமில்லாமலிருக்கிற  அழகிய திருக்கோட்டியூரில் உள்ளவர்களுக்குத் தலைவரும்  ஸ்ரீவைஷ்ணவ  அபிமாநத்தினால் சிறந்தவருமான செல்வநம்பியைப் போலவே நானும் தேவரீருக்கு முதிர்ந்த  தாஸனாய்விட்டேன்!  எல்லாவிதங்களாலும் பரிசுத்தனான எம்பெருமானே, அடியேனுக்கு நன்மையுண்டாகும்படி  நமோ நாராயணா என்று  திருமந்திரத்தை அநுஸந்தித்து, தேவரீருடைய அனேக திருநாமங்களைச் சொல்லியேத்தி உமக்கே பல்லாண்டு, பல்லாண்டு   என  தேவரீருக்கு மங்களாசாஸநம் பண்ணுவேன், என பக்தி செலுத்தி வேண்டுகிறார் விஷ்ணுசித்தர். 

On this happy day, remembering those golden days when we had daily darshan of Sri Parthasarathi and those golden purappadus that occurred regularly.  Here are some photos of Sri Parthasarathi Perumal during periya mada veethi purappadu on the occasion of ‘Kaisika Dwadasi’ on 14.12.2013.   It was our fortune that varthamana Acaryar Swami Mudaliandan Swami embellished the divyaprabandha goshti.

 

adiyen srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28th June 2021. 








1 comment: