Covid 19 has raised
anxiety levels and many people live in constant fear. Fear, is but common in life. Fear
is a vital response to physical and emotional danger that has been pivotal
throughout human evolution, more so when things are murky and humanity faced
life-or-death situations. Civilizations have
been under constant threat of wars, epidemics, poverty, nature’s fury and more
but this threat of Corona virus appears far too different challenge for the
humanity.
வாழ்க்கையில் பல கேள்விகள் பதிலற்றவை. அவற்றில் மிக முக்கியமான ஒன்று... மரணம். இத்தனை விஞ்ஞான வளர்ச்சிக்குப் பின்னும், ‘மரணத்துக்குப் பிறகு நாம் என்னவாகிறோம்’ என்பது கேள்வியாகவே இருக்கிறது. மரணத்தை விட மரண பயம் கொடுமையானது !! வெளிப்படையாகச் சொன்னால் நாம் அனைவரும் இறப்புக்கு பயந்தவர்களே ! ‘சாவைப் பார்த்து எனக்கு பயம் இல்லை... என்னைப் பார்த்து அந்த சாவுதான் பயப்படணும்’ என்பதெல்லாம் சினிமாவில் ஹீரோ பஞ்ச் டயலாக் ஆக பேசலாம். உளவியல்ரீதியாக உள்ளுக்குள் எல்லோருக்கும் சாவைப் பற்றிய பயம் உண்டு. இதுதான் மருத்துவப் பார்வை.
Many people experience
occasional bouts of fear or “nerves” before a flight, first challenge in life
or any other important circumstance in life.
But when someone’s fear is persistent and specific to certain threat,
and impairs one’s everyday life, that
person might have what’s known as a specific phobia. If all these are real and
day affairs, night times can be worser still.
Nightmares are dreams that are scary or disturbing. The themes of
nightmares vary widely from person-to-person, but common themes include being
chased, falling, or feeling lost or trapped.
While fears affect
conscious mind, there could threats in unconscious mind too as analysed Sigmund
Freud. He believed that each part of the mind plays an important role in
influencing behaviour. Freud noted that a major drive for people is the
reduction of tension and the major cause of tension was anxiety. He identified three types of anxiety; reality
anxiety, neurotic anxiety, and moral anxiety. Do animals also have fear sense
? Some argue that “fear” is a
psychological construct rather than discoverable through scientific
investigation. Others argue that the term “fear” cannot properly be applied to
animals because we cannot know whether they feel afraid. Studies in rodents
show that there are highly specific brain circuits for fear, whereas findings
from human neuroimaging seem to make the opposite claim.
Fear is real, and we these
days constantly fear the Covid and its effects, having seen its devastating
effects on the society at close proximity.
For us Srivaishnavaites, the real relief from all suffering is ‘mukthi’ – and while living, to live without fear, fall
at the feet of Sriman Narayana, surrender unto Him, devote oneself completely to
the Lord and do all possible kainkaryams to the Lord and to His devotees.
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? மானிடர் உலகத்துக்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம் இடைவெளி உள்ளதாம். யமதர்ம ராஜன் ஒவ்வொருவர் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படி யம தூதர்கள் மூவகையினரை அனுப்பி வைப்பான். அந்த யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டிப்பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைந்து யமலோகம் கொண்டு செல்வர். அங்கு யமனுக்கு எதிரில் ஆவியுருவச் சீவர்களை அவிழ்த்து நிறுத்தி அவர்கள் ஆணைப்படி நடக்கச் சித்தமாக இருப்பதாகக் கூறுவர். தமிழ் சினிமா காட்சிகளில் யம கிங்கரர்கள் காமெடி பாத்திரமாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளனர். சரம தசையில் கருமங் களுக்கேற்றவாறு யமகிங்கரர்கள் தன்னை நலியும்போது அந்த வருத்தத்தினால் எம்பெருமான் திருவடிகளை நினைக்கவும் என்று ஆழ்வார்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
சொர்க்கம் நரகம் என்ற பெயரில் பல்லாண்டுகள் முன் ஒரு தமிழ் படம் வந்ததாக ஞாபகம். வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் ஒவ்வொருவரும் மற்றவரை வீழ்த்தி வெற்றி பெற முயலுகிறோம். வெற்றிக்கு பின் ? - பணம், புகழ், செல்வம், சேர்ந்தால் - மனா நிம்மதி போகலாம். நம்மை வீழ்த்த உடனிருப்பவர்களே முயற்சிக்கிறார்கள் என்கிற எண்ணம்; நம்மை சுற்றியிருக்கும் யாரும் உண்மையாக இல்லை’ என்கிற நினைப்பு நாளுக்கு நாள் வலுக்குமாம். . இத்தகைய அந்த சந்தேகங்கள் மனதளவில் வீழ்ந்துபோகச் செய்து துக்கத்தை அளிக்கவல்லன. கோபம், பொறாமை, எரிச்சல், பதற்றம், ஆத்திரம், சந்தேகம், பயம் இவற்றால் ஆளப்படும்போது, ஒருவர் கொடிய நரகத்தில் இருப்பார்கள் ! அன்பு, ஆனந்தம், பரவசம், அமைதி, போன்ற செல்வங்களை அனுபவிக்கையில் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள். சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போலாகுமா? .. .. என வினவுவது நமக்கு எது சிறந்தது என நாம் நம்பும் மனநிலை.
வைகுண்ட ஏகாதசி சமயம் வைணவ திருக்கோவில்கள் சென்று சொர்க வாசல் வழி வந்து இருப்பீர்கள் ! .. அது பரமபத வாசல் ஆனால் சாதாரணமாக மக்கள் கூறுவது - ‘சொர்க்க வாசல் திறப்பு!’. சொர்க்கம் என்பது ஒரு சிறந்த உலகம், தேவலோகம். பரமபதம் என்பது மோட்சம். சொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம் . பூமியில் மனிதர்கள் வாழும் போது செய்த புண்ணியத்தால், இறந்த பின் அடையப்படும் இடம். முடிவற்ற இன்பம், சுதந்திரம் அதுவே சொர்க்கம்.
இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத
பாசுரம் :
தலைப்பெய் காலம் நமன்தமர்
பாசம்விட்டால்,
அலைப்பூணுண்ணும் அவ்வல்லல்
எல்லாம் அகல,
கலைப்பல் ஞானத்தென்
கண்ணனைக் கண்டுகொண்டு,
நிலைப் பெற்றென்னெஞ்சம் பெற்றது நீடுயிரே.
யமபடர்கள் வந்து கிட்டுங்காலம், அவர்கள் அழைத்துச்செல்ல தம் காலபாசத்தை வீசினால், அவ்வமயத்து அலைச்சல் படுகையாகிற அந்தத் துயரமெல்லாம் நீங்க, பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களாலே அறியத்தக்க எனது கண்ணபிரானை காணப்பெற்று என் நெஞ்சமானது நிலைநிற்கப்பெற்று ஆத்மாவும் நீடு பெற்று நித்யத்வத்தைப் பெற்றதாயிற்று. எனவே காலானது தூதுவர்கள் தேடி வரும் வரை காத்திருக்க வேண்டாமே ! - நல்ல உடல்நிலையுடன் இருக்கும்போதே, எம்பெருமான் கண்ணபிரானை நினைத்து, அவனது திருவடி தாமரைகளை பற்றி நற்கதி அடைவோமாக ! கண்ணனை அடைந்தோர்க்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த வித கவலையும், பயமும் இல்லை அல்லவா!!
2021 did
start well with purappadu of Emperuman at Thiruvallikkeni on regular basis and
we had two Special brahmothsavams too – we see the present gloom as temporary
as Sriman Narayana will provide us the best things in life. Let us worship and
pray to Lord Sri Parthasarathi at Thiruvallikkeni for providing us all a long
healthy life, meaningful and in service to him.
Here are some photos of Thavana Uthsavam day 1 of Sri Parthasarathi
perumal at Thiruvallikkeni on 21.3.2021.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17th June 2021.
Very nice.
ReplyDelete