To search this blog

Monday, June 7, 2021

Only Lord Sriman Narayana can bestow immortality ~ உள்ளநோய்கள் தீர்மருந்து வானவர்க்களித்த

உயிரிகளுக்கு உன்னதமான ரசம் - 'அம்ருதம்'  இது மரணமே இல்லமால்  அமரத்துவத்தை தர வல்லது. இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்று பல்வேறு பெயர்கள் உண்டு.மரணமில்லாப் பெருவாழ்வு தரும் அமிர்தத்தை அடைய வேண்டிப் பாற்கடலைக் கடைய தேவர்களும் அசுரர்களும் கூடி முடிவெடுத்தார்கள். வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் மந்திரமலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைய முடிவெடுத்தார்கள்.

மலைக்கு அடியில் ஆதாரமாக ஸ்ரீமன் நாராயணனே கூர்மாவதாரம் எடுத்து மலையைத் தாங்கிக்கொண்டார். அசுரர்கள் பாம்பின் வாலைப் பிடிப்பது தங்களுக்குக் கௌரவக் குறைச்சல் என்று தலையைத்தான் பிடித்துக்கொள்வோம் என்றனர். கடையத் தொடங்கியபோது வாசுகியிடமிருந்து வெளிப்பட்ட தீ ஜுவாலைகள் அசுரரைப் பொசுக்கின. வலி தாங்காமல் வாசுகியின் வாயிலிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது.  தொடர்ந்து பாற்கடலைக் கடைய காமதேனு, வெண்குதிரை, ஐராவதம் என்னும் வெள்ளை நிற யானை, பாரிஜாத மரம் அனைத்தும் வெளிப்பட்டன.  கடைசியாக அமிர்தம் வந்தது.  In Greek mythology – ‘ambrosia’ - is the food of the Greek gods, often depicted as conferring longevity or immortality upon whoever consumed it.  It was brought to the gods in Olympus by doves and served by either Hebe or Ganymede at the heavenly feast. Ambrosia is sometimes depicted in ancient art as distributed by a nymph labeled with that name and a nurse of Dionysus.

An elixir is a sweet liquid used for medical purposes, to be taken orally and intended to cure one's illness.  When used as a pharmaceutical preparation, an elixir contains at least one active ingredient designed to be taken orally.  The elixir of life, also known as elixir of immortality and sometimes equated with the name philosopher's stone, is a potion that supposedly grants the drinker eternal life and/or eternal youth. This elixir was also said to cure all diseases. Alchemists in various ages and cultures sought the means of formulating the elixir.  

The Epic of Gilgamesh is an epic poem from ancient Mesopotamia, regarded as among  the earliest surviving notable literature.  Gilgamesh  was a major hero in ancient Mesopotamian mythology and the protagonist of the Epic of Gilgamesh, an epic poem written in Akkadian during the late 2nd millennium BC. He was likely a historical king of the Sumerian city-state of Uruk, who was posthumously deified.  Tales of Gilgamesh's legendary exploits are narrated in five surviving Sumerian poems.   In the second half of the epic, distress causes Gilgamesh to undertake a long and perilous journey to discover the secret of eternal life.

Amirtham, Amrut, Amrit, Sudha and more    literally means "immortality" and is often referred to in ancient Indian texts as nectar, ambrosia  and carries the same meaning.  Its first occurrence is in the Rigveda, where it is considered one of several synonyms for soma, the drink of the devas.  
கொரோனாவோ வேறு கொடிய நோய்களோ, மனிதனை தாக்கும் எந்த கொடியவையோ ! - மரண பயமோ, முடக்கும் தீச்செயல்களோ - அனைத்துக்கும் அருமருந்து எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மட்டுமே.  இதோ இங்கே நம் திருமழிசைப்பிரான் அருளிச்செய்த  அற்புதமான திருச்சந்தவிருத்த பாசுரம் ஒன்று : 

வெள்ளைவேலை வெற்பு  நாட்டி வெள்ளெயிற்று   அராவளாய்

அள்ளலாக்  கடைந்தவன்று   அருவரைக்கொர்  ஆமையாய்

உள்ளநோய்கள் தீர்மருந்து வானவர்க்களித்த  எம்

வள்ளலாரையன்றி  மற்றொர் தெய்வம்  நான்  மதிப்பனே.  

எம்பெருமான் சயனித்திருக்கும் அற்புதமான வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே,  மந்தரமலையை நாட்டி, வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை கடைகயிறாகக்  கொண்டு,  சுற்றி, அலைகள் செறியும்படி, கடலைக்  கடைந்தருளின காலத்திலே தாங்க முடியாததான அம்மலைக்கு - தானே தாரகமாக கூர்ம உருவில் ஓர் ஆமையாகி வடிவெடுத்து,  தேவதைகளுக்கு ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை அக்கடலினை கடைந்து எடுத்து கடைந்தெடுத்து) அருளின உதாரனான எம்பெருமானை தவிர வேறொரு தேவதையை நான் ஒரு  பொருட்டாக   மதிப்பனோ ? - என வினவுகிறார் நம் திருமழிசைப்பிரான் தமது   திருச்சந்தவிருத்தத்தில். 

The only God capable of ameliorating, reducing, eliminating all our stress, fear and difficulties is Sriman Narayana, one who provided amrut to Devas.  In these difficult times, let us pray to Sriman Narayana for eradication of  dreaded Corona and all other evils from the society.

Here are some photos from the Amavasai purappadu of Sri Parthasarathi perumal at Thiruvallikkeni on 12.1.2021.  Looking forward and praying Emperuman for revival of happy days – of purappadu, darshan of Perumal and kainkaryam.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7th June 2021. 
1 comment: