To search this blog

Showing posts with label Sri Krishna. Show all posts
Showing posts with label Sri Krishna. Show all posts

Tuesday, July 14, 2026

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 


நகரங்களில் பலர் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.  பிரச்னைகள் எனும் பூதம் அவர்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஒருவருக்கும் உண்மையாக இல்லை !  ஏன் தனக்கே கூட !!  சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம். வாழ்க்கையின் பரம பலன் :  அதிகார போதை, ஆத்திரம், தீய எண்ணங்கள் இல்லாமல் - நான் சாதாரணன், நான் பக்தன், எனது பணி எம்பெருமானுக்கு, அவர்தம் அடியாருக்கு பணி செய்வதே என்பதை உணர்ந்து வாழ்தலே !




Today 14th July 2026   is Punarvasu  in the month of  Aani  – masa thirunakshathiram of Kulasekara Azhwar, Swami Mudaliandan & Embar…. Today is Amavasai too.. .. ..

When someone asks you – ‘How are you ?’ – what would be the answer – is it simply ‘fine’ or factual ‘not so fine’.  How willing are you to  genuinely listen to people ? How often would you interrupt to say – what I do, how I would have handled this ! or in my personal experience and .. .. .. 

நம்மில் பலர் பல பிரச்னைகளிடையே உழல்கிறோம்.  மனா நிம்மதி இல்லை.  தினசரி வாழ்க்கையில் எப்போதும் பலப்பல  பிரச்னைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ! சரியான இடமில்லை, நல்ல உடைகளில்லை  (அதாவது எவ்வளவு இருந்தும் போதும் என்ற மனதில்லை); அலுவலக வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை,  மற்றவர்களுக்கு எல்லாமே எளிதில் நடப்பதாகவும் தமக்கு சாதாரண விஷயங்கள் கூட பல இடர்பாடுகள் நேர்வதாகவும் உண்மையாகவோ மனத்திலோ சிந்தனை;  குடும்பங்களில்  பிரச்னை;  பணமுடை; போதாக்குறைக்கு கொரோனா வேறு உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது.   ஒவ்வொரு கால கட்டத்திலும் விதவிதமான பிரச்னைகள்.  அலைகள் எல்லாம் ஓர் நாள் ஓயும். நாம் நிம்மதியாக வேலைகளை துறந்து ஓய்வாக அமைதியான வாழ்க்கை 60 களில் வாழலாம் என நினைக்கிறோம்.  சும்மா இருப்பதும் பெரும் சுமையாகிறது ! நமக்கு வயதாகும் காலகட்டத்தில் புதுப்புது பிரச்னைகள் !! 

Glory, or difficulty – nothing is permanent.  In this World, there have been mighty Kings –  not exactly those  who ruled the entire Universe but many lesser mortals with valour who ruled over a piece of land and were proud -  history has it that they have fallen biting the dust – that what can lesser humans who possess broken pots as their asset dream of …. Alwar directs us to fall at the feet of Lord Sriman Narayana  .. ..

We think, speak and surround ourselves with Self !!  .. .. .. the  ego (Latin for "I") acts according to the reality principle; i.e., it seeks to please the id's drive in realistic ways that, in the long term, bring benefit, rather than grief.  At the same time, Freud concedes that as the ego "attempts to mediate between id and reality, it is often obliged to cloak the unconscious commands of the id with its own preconscious rationalizations, to conceal the id's conflicts with reality, to profess...to be taking notice of reality even when the id has remained rigid and unyielding." The reality principle that operates the ego is a regulating mechanism that enables the individual to delay gratifying immediate needs and function effectively in the real world.  

மனித இனத்தை, எண்ணங்களும், கவலைகளும் - என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும், எவ்வளவு நாட்கள் இவை தொடருமோ போன்ற மனப்பிராந்திகளும் கலக்குகின்றன.  இது போன்ற ஸ்திரமற்ற கலங்கிய நிலைக்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். "அகங்கார மமகாரங்கள்" கவுரவர்கள் அழிவுக்கு காரணமானது ! எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் நான், எனது என்ற  மனநிலையை விலக்க கீதோபதேசம் செய்தார்.  - அது என்ன "அஹங்காரமமகாரம்" -  நான்’ என்ற முனைப்பு அகங்காரம் - 'எனது' என்ற 'பற்று' மமகாரம்.

மமதை என்ற சொல்லுக்கு செருக்கு, ஆணவம், திமிர் போன்ற பொருள்கள் கொள்ளலாம்.  self-conceit, vanity, haughtiness.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

அஹங்காரம் என்பது ஏதோ துர்யோதனனிடம் மட்டுமே இருந்த கெட்ட குணமல்ல.  நமக்கு நம் குணங்கள் அழகானவையாக, நம் மனதில் படலாம் !  ஆனால் நாம் ஒவ்வொருவரிடமும் துர்யோதனாதிகளின் செருக்கு ஆழ்ந்த மனத்தில்  அருவறுப்பான கரையாக படர்ந்துள்ளது.  நமக்கு மற்றவர்கள் பலர் திமிர் பிடித்து நடந்து கொள்வதாக படுகிறது !  .. .. ஆனால்  நம்மிடம் எவ்வளவு பேர் அணுகி தங்களை கஷ்டங்களை, நம் குறைகளை சொல்லிவிட முடியும்.   நாம் நமது அருவறுப்பான பகுதிகளை பார்க்க விரும்புவதில்லை..  நான் என்னும் சொல்லுக்கு இலக்காக இருக்கிற மனிதன் தன்னை மற்றவர்களிடத்திருந்து பிரித்து வைத்துத் தன்னை உயர்ந்தவனாகக் கருதினால் அது அஹங்காரம். நான் என்னும் சொல்லை உபயோகப்படுத்துவதற்கிடையில் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துத் தனிப்பெருமை நாடாதிருந்து பழகினால் அது அஹங்காரமற்ற நிலை.

மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்தினால்தான் உண்டு.

அஹங்காரம்  மமகாரம்  ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம்.  தன்னை பற்றி என்றென்றும் நினைக்காமல் எம்பெருமானையே நினைத்து உள்கசிந்த  ஸ்வாமி நம்மாழ்வாரே - நெடுநாளாக  அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதாபிக்கிறார். நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி அவர் உரைக்கும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :

யானேயென்னை அறியகிலாதே,

யானேயென் தனதே என்று   இருந்தேன்,

யானேநீ  யென்னுடைமையும்  நீயே,

வானேயேத்தும்  எம் வானவரேறே.

விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள நித்யஸூரிநாதனான எம்பெருமானே!  இதுகாறும் என்னை  - நான் எப்படி உனக்கு அடிமைப்பட்டவன், எவ்வாறு எல்லாம் உன் அருளாலே நடைபெறுகிறது என்பதையெல்லாம் அறியமாட்டாமல் 'யானே என் தனதே'  என்று அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து,  அவற்றை தவிர்த்து  நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில் -   எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் என்பதே, என தெள்ளத்தெளிவாக  உரைக்கின்றார் சுவாமி  நம்மாழ்வார்.

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.  நவீன கால இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை  செய்து கொள்கிறார்கள்.  கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  

இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன்  ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வர சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். 

சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை சில, குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள்.   இன்று திருவல்லிக்கேணி எம்பெருமானின் விசேஷ சிகை அலங்காரத்தையும், அதில் சூட்டிக்கொண்ட பூக்களையும், ஆபரணங்களையும் இங்கே கண்டு இன்புறலாம்.

 

தெளிவான மனா நிலையுடன், உடல் உபாதைகள் வியாதிகள் இல்லாமல் - நல்ல மனது, உடல் நிலை ஆரோக்கியத்துடன், எம்பெருமானுக்கு பணி செய்து கிடத்தலே அற்புத வாழ்க்கையாம்! ஏனைய பொருட்செல்வங்கள் செல்வங்களல்ல!!

Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Aani Amavasai purappadu today.   Falling at the feet of Emperuman praying to remove all my ignorance and bless me with a stable mind that is attached to His lotus feet and encourages in doing kainkaryam to Emperuman and His followers

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14th July 2026.
  












Tuesday, June 2, 2026

Thirumylai Sri Madhava Perumal kovil pillar

 


தூவலம் புரியுடைய திருமால் தூயவாயில் குழலோசை வழியே !! ~ Thirumylai Sri Madhava Perumal thirukovil pillar

Friday, May 8, 2026

திருவல்லிக்கேணி திருத்தேர் சிறப்பு 2026

 

திருவல்லிக்கேணி திருத்தேர் சிறப்பு 2026

அற்புத இதிஹாச காவியமான மஹா பாரதம் - தூது சென்றவன் ஏற்றத்தை இயம்புவது.  கிருட்டிணனின் 'தூத க்ருத்யம்' (தூது சென்ற செயல்).  எம்பெருமான் தூது மட்டுமா சென்றான் - பாரத போரில் சாரத்யமும் செய்தருளினான் - அப்போர் தனின் அம்புப்பட்ட காயங்களுடன் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.  

பாரேறு பெரும்பாரம் தீரப் பண்டு

பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத்

தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை

செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை...

திருமங்கை மன்னனின் பெரிய  திருமொழி (2-10-8) பாசுரத்தின் ஒரு வரி. இது, மகாபாரதப் போரில் அர்ஜுனனின் (பார்த்தன்) மணித்தேரில் கிருஷ்ணன் சாரதியாய் அமர்ந்து, பூமியின் பாரத்தை நீக்கிக், கஞ்சன் உள்ளிட்டோரை அழித்த வரலாற்றைக் கூறும் நல்வார்த்தைகள்.  

மகாபாரதத்தில் தேர் என்பது வெறும் போர் வாகனம் மட்டுமல்ல, அது ஒரு போரின் வெற்றி, வீரம் மற்றும் வாழ்க்கைத் தத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.  அர்ஜுனன் என்ற தலை சிறந்த வில்வீரனின் தேர்  மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு  செடிகொடிகள் அதன் மணிகளாகின. செயல், உண்மை, தவநோன்புகள், பொருள் ஆகியன தேரின் கயிறுகளாக்கப்பட்டன. மனமானது அந்தத் தேர் நிற்கும் தரையானது, வாக்கே {பேச்சே} அது செல்லும் தடமானது.  பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.  உயரே பறக்க சிறப்பாக அமைந்து இருந்தது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனின் தேர் மீது கிருஷ்ணர் தேரோட்டியாகவும், அனுமன் கொடியில் காப்பவனாகவும் இருந்தனர்.

 


திருவல்லிக்கேணி சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் ஸ்ரீபார்த்தசாரதி விண்ணை முட்டும் அழகான சிறப்பு திருத்தேரில், நூற்றுக்கணக்கானோர் வடம் பிடிக்க, பல்லாயிரம் பக்தர்கள் தொழுது வணங்க  திருவீதி வலம் வந்தார்.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
7.5.2026

Sunday, April 19, 2026

Kalinga Narthanam ! @ Surendrapuri, Hyderabad

 

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்,

 * நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து,

@ Surendrapuri mythological theme park 

https://youtu.be/cPxN4jmIlW8



Geethopadesam at Surendrapuri, Hyderabad

 

கீதோபதேசம்,Geethopadesam - the profound spiritual discourse delivered by Bhagwan SreeKrishna on the Kurukshetra battlefield, forming the core of the Bhagavad Gita that imparts timeless wisdom on duty,action & devotion.

Surendrapuri, mythological theme park   

https://youtu.be/f66DjszDaxg




Sunday, February 1, 2026

the holy relation of Cows and Lord Krishna

 

"காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி" . .. ...

எம்பெருமான் கண்ணன் கன்றுகள் மேய்த்து வரக் கண்டு இவ்வையகமே மகிழ்ந்தது..

 


 

எம்பெருமான் கண்ணன் ஆநிரை மேய்த்தவன் - கோகுலத்தில் பசுக்களோடு வளர்ந்தவன்.  கோ' என்றால் பசு, 'பாலன்' என்றால் காப்பவன். பசுக்களைப் பராமரித்ததால் அவர் கோபாலன் என்று அழைக்கப்படுகிறார்.  பிருந்தாவனத்தில் தினமும் காலையில் பசுக்களை மேய்க்க அழைத்துச் செல்வதையும், மாலையில் திரும்புவதையும் கண்ணன் பெரும் பாக்கியமாகக் கருதினார். கண்ணன் குழலூதினால், பசுக்கள் அப்படியே மெய்மறந்து புல் மேய்வதைக்கூட நிறுத்திவிட்டு அவனையே சுற்றி நிற்குமாம்...

 

Surreal   !  ~  a few years ago, at Ahobilam, took a picture of Cows returning home in the evening after grazing – with ChatGPT added the image of Lord Krishna besides adding some more cows … and here is the redrawn picture.

 

S. Sampathkumar
1.2.2026

Tuesday, January 27, 2026

நற்சிந்தனை! நல்ல சிந்தனையாளர் !! ~ தீமை தந்திடும் பயமும் தீராத கவலையும்

 

நற்சிந்தனை  என்றால் என்ன ?  நல்ல சிந்தனையாளர் யார் ??  ~  featured in this post  is the Greatest thinker, philosopher of all times !!

 

நற்சிந்தனை (Positive Thinking) என்பது ஒருவரின் மனதில் தோன்றும் நேர்மறையான, ஆக்கபூர்வமான மற்றும் நற்பண்புகள் சார்ந்த எண்ணங்களாகும். இது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அமைதியான, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதிலும், பிறருக்கு உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, இத்தகைய சிந்தனை உடல்நலம் மற்றும் மன அமைதியை மேம்படுத்துகிறது

 

நல்லதை நினை மனமே - கே ஜேசுதாஸின் குரலில் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல். "நல்லதை நினை மனமே" என்பது மிகவும் அழகான மற்றும் வலிமையான வரிகள். நமது எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. நல்லெண்ணங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய பல  சிந்தனைகள் உள்ளன.  நேர்மறையான எண்ணங்கள் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும். மற்றவர்களுக்கு நல்லது நினைப்பதன் மூலம் நம் மனதிற்குள் ஒரு ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது. எப்போதும் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். அது நமக்கும் இந்த உலகிற்கும் நன்மையை தரும். 

A good thinker actively cultivates curiosity, analyzes information critically rather than accepting it at face value, and embraces intellectual humility. They excel at connecting disparate ideas, using frameworks to simplify complexity, and consistently, purposefully reflecting on their own thinking processes (metacognition).  Constantly asking "why," "how," and "what if" to explore different perspectives. 

Sigmund Freud viewed thoughts—both good and bad—as crucial expressions of the unconscious mind that, if understood, could lead to better mental health. He believed in channeling rather than suppressing emotions, argued for radical honesty with oneself to face inner shadows, and believed that "thought is action in rehearsal". Freud believed that being entirely honest with oneself is a "good exercise," encouraging individuals to face their inner demons, insecurities, and shortcomings rather than suppressing them.  However, Sigmund Freud held a generally pessimistic view of human nature, famously noting, "I have found little that is 'good' about human beings on the whole". He believed people are fundamentally driven by aggressive, selfish instincts rather than inherent goodness. Instead of "good," he emphasized honesty, self-awareness, and managing unconscious desires.   

However Max Müller found deep moral insights in the Upanishads and the Vedas, seeing them as a "corrective" to Western perspectives. He used the metaphor that the "odor of good people" travels against the wind, signifying the far-reaching influence of a good person. He described the joy and clarity he found in Vedantic literature.  

Max Müller, a renowned 19th-century orientalist, viewed "good" through a lens of moral accountability, spiritual evolution, and the inherent value of Indian philosophy. He believed in karma—that good deeds eventually bring happiness—and emphasized that true goodness involves cultivating truth, purity, and unselfishness.  

 

நல்லதை நினை மனமே வீணாய்,  பொல்லாததை நினையாதே-நீ

நல்லதை நினை மனமே

 

கணக்கில்லா பொறாமை வைத்து, காலத்தை நீ கழித்தால்

அடக்கமுடியாக்கோபம் அடைந்திடுவாய் -நீ

நல்லதை நினை மனமே

 

தந்தையாம் பொறாமையும் தாயான கோபமும்

தவறாமல் பிறக்க வைக்கும் குழந்தைகள் எது மனமே?!

தீமை தந்திடும் பயமும் தீராத கவலையும்

அதுவே உலகினில் பொல்லாத வாழ்வைத் தரும்!

 

நல்லதை நினை மனமே வீணாய் பொல்லாததை நினையாதே என்ற இந்த  பாடல், அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழியின் புனித நூலில் இடம்பெற்றுள்ள ஒரு பக்திப் பாடலாகும்.

 


You may think of Sigmund Freud or anyone else – but the greatest thinker of all times is certainly Bhagwan Sree Krishna .. .. and here is a beautiful depiction of Lord Krishna in thinking mode, a rare doll found at the collection of Mr MA Narasimhan of Triplicane.  

At the bottom of the doll is written AM Davalingom, Ayyankoilpet.  Searches reveal that Ayyankoilpattu is a village in Villupuram known for type of   traditional, handcrafted clay Golu dolls : These dolls are crafted from clay and, in some cases, with paper pulp (paper-mache) or plaster of Paris, painted in bright, vibrant colors. The dolls represent a wide array of figures, including deities (Krishna, Rama, Siva, Pillaiyar, Ayyappan, Saraswati, Lakshmi), scenes from daily life (Chettiar and Aachi couples), mythological characters, and animals.

 


Interesting !!  Bhagwan Krishna seated on a Chair !!!!
 
Regards – S Sampathkumar
27.1.2026

Saturday, January 24, 2026

Geethopadesam ~ ananya bakthi !

 

अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।

तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्

 

ananyāśhcintayanto mā ye janā paryupāsate |

teā nityābhiyuktānā yoga-khema vahāmyaham ||

 

To those men who   worship Me alone, thinking of no other, to those ever self-controlled, I secure for them that which is not already possessed (YOGA) by them, and preserve for them what they already possess (KSHEMA) . 

In this verse, Krishna emphasizes ananya bhakti—exclusive, unwavering devotion to Him as the sole refuge, transcending rituals or multiple deities. Such devotees, constantly absorbed in His thought, receive divine assurance: yoga (acquisition of needs) and kshema (protection of possessions).   

योगक्षेमं (yoga-kema) in Bhagavad Gita 9.22 refers to the divine assurance where God personally handles devotees' welfare: yoga as acquiring what one lacks (spiritual or material needs), and kema as preserving what one already possesses.

This concept underscores God's personal intervention (vahāmy aham—"I Myself carry") for ananya bhaktas (exclusive devotees), shifting life's burdens from the individual to the Divine. It alleviates devotee anxieties about neglect of duties through surrender, promising comprehensive providence—material support as a byproduct of spiritual progress toward liberation

 


 

Geethopadesam fine depiction – a photo taken at Mylapore, then all other objects around deleted with maroon background added with ChatGPT. 

Photo of chariot taken at  Vyasarpadi Vinayaka Mudaliar Chathiram, located on South Mada Street in Mylapore,  a heritage building and charity (nambagam) inaugurated in 1851.  
 
Regards – S Sampathkumar
24.1.2026

Wednesday, January 7, 2026

Thiruvallikkeni Govardhanagiri 2026

 



Govardhana Giridhara Govinda GokulapAlaka paramAnanda

Shri vatsAnkita Shri Kaustubha dhara pAvaka bhayahara pAhi mukunda!!

7.1.2o26


Sunday, January 4, 2026

Krishnam Vande Jagatgurum ~ Nama sankeerthanam at Triplicane

 

Krishnam vande jagatgurum. (I bow to Krishna, the world teacher)  ~   Nama Sankeerthanam ~  @ Thiruvallikkeni Sri Parthasarathi Swami thirukkovil 

 

वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम्
देवकी परमानन्दं कृष्णं वंदे जगद्गुरुम् ।।

 

vasudevasutam devam kamsacāūramardanam .
devakī paramānandam kṛṣṇam vamde jagadgurum .

 


"Kamsa Chanura Mardanam" (कंसचाणूरमर्दनम्) means "the destroyer of Kamsa and Chanura," a famous epithet for Lord Krishna from the opening lines of the popular Krishna Ashtakam, describing Him as the son of Vasudeva, supreme joy to Devaki, and teacher of the world. It refers to Krishna's divine act of slaying the tyrannical King Kamsa and the wrestler Chanura, liberating his parents and people.
 
: - https://youtu.be/rRVUu3YqeGQ
 
 
Srinivasan Sampathkumar
4.1.2026

Wednesday, December 17, 2025

Universal Friendship Day .. ........ Sudamapuri !!

IMP Pre-scripts :  1)  Today in some ways is ‘Friendship day’.  Friendship Day celebrates the bonds of friendship, officially recognized by the UN on July 30th, but celebrated in countries like India, the US, and Bangladesh on the first Sunday of August (August 3rd in 2025).

 


2. some of you may frown why something on Cricket on this religious post.  In 1932, Indian Cricket team toured England marking their Test debut, a crowd of some 25,000, and a fast pitch, greeted the Indians in their first Test match, an event, we believe, of more than mere cricketing importance. The most famous ground in the world, enriched as it is by long years of high tradition, was looking its best with its own particular atmosphere when the Indians having lost the toss went out to field. And what a series of shocks they gave us Sutcliffe, Holmes, and Woolley out for 19 runs in 20 minutes ! India however lost the Test by 158 runs   

3.  18.12.2019 was a blessed day ~ we visited Porbandar.  Little did we realise the significance of the place  Sudhamapuri ! and more of the day ! .. .. it is our good luck. 

4.  A repost of my 2019 post with some additions / alterations. 

அவல் :  நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

 

Porbandar is known to us all as the birthplace of Mohandas Karamchand Gandhi.  Onshore explorations in and around Porbandar brought to light the remains of a late Harappan settlement dating back to the 16th-14th centuries BCE. There is evidence to suggest that the Harappan legacy of maritime activity continued till the late Harappan period on the Saurashtra coast. The discovery of ancient jetties along the Porbandar creek signifies the importance of Porbandar as an active center of maritime activities in the past.   

Porbandar was the seat of the eponymous princely state in British India. In ancient times Porbandar was known to be Pao Bandar, due to its bread factories that used to export Pao ruti to Arab nations across Arabian sea.  Later the state belonged to the Jethwa clan of Rajputs.  The state was subordinate to the Mughal governor of Gujarat until being overrun by the Marathas in the latter half of the 18th century. After, they came under the authority of the Gaekwad court at Baroda and eventually of the Peshwa. 

All these would pale to insignificance, when we know the important of this place having connection of Lord Sri Krishna and the legend of his friendship.  In Tamil, we know him as Kuchelar – he is Sudama, a Brahmin childhood friend of Sri Krishna.   Sudama was poor ! ~ his father  was Matuka and his mother was Rochana Devi.  His fortune was his friendship with Lord in his early days.  Sri Krishna  the Supreme God later was ruling  the nearby Dwaraka, while Kuchela’s life was entwined to abject poverty.   His wife Niyati reminded him of his friendship with Krishna and egged him to go and meet the Lord for help. Incidentally, the image of  Kuchela perhaps is far different that what is depicted here at Sudamapuri.

 


Sudama was reluctant but eventually went to meet him. In his state of affairs, he could not afford any good gift, but remembered the liking of his bosom friend to - அவல்  - ‘aval’ (poha / beaten rice) – and he took  some aval in a cloth as a present.   Lord Krishna whose manifestation was to prove so many things to this World, seized this opportunity to prove His quality of approving friends, irrespective of their stature.  Krishna & His consort Rukmani  received Sudaama and treated him so royally – with Lord partaking little bit of aval,  all the troubles of Kuchela started vanishing.    When Sudama finally returned to his home, he found  a palatial mansion instead of the hut he had left. He also found  his family dressed in opulent garb and waiting for him. He still lived  an austere life after that, always thankful to the Lord. It is the price of devotion to Lord. 

It is our religion to submit ourselves completely to the Lord without any expectation – it can never be trading of bakthi, seeking some returns.  Sudama, was poor, had nothing, yet offered ‘aval’ with devotion and his life changed forever.  Lord did not reward him because Sudama was a friend – but he was a sincere, astute, religious person – following the duties cast on him.  

Shri Krishna-Sudama is an immortal example of real, non-materialistic friendship. It is a perpetual symbolic definition of real friendship.  At Porbandar  exists a temple for Sudama - constructed in 1902 and 1907 at the centre of the city.   Built with white marble this temple has a number of carved pillars which decorate the temple, open from all sides this temple has a shikhara which is decorated with splendid architecture and carvings. These carvings are also visible above the pillars and the arches which adjoin the pillars. With such architecture this temple is dedicated to the shrine of Sudama which is built in simple structure. There is a beautiful statue of Lord Sri Krishna embracing Sudama.  The temple has a maze within its complex and it is believed that  if a person crosses this maze all his sins  would be forgiven. 

We were delighted to know the real-life story of ‘Krishna Sudama’ friendship and were fortunate to have darshan on ‘Sudama day’ (18.12.2019) at Dwaraka as also at the temple of Sudama.  Below is the story of Sudama  and the value of friendship with Lord himself, beautifully explained by Gurji Gopalavalli dasar, posted with his permission. There was not much of buzz nor any spoke of the day here at these places but social media carried many posts on Kuchela day and the celebrations elsewhere including Guruvayur.

 



The temple at Sudamapuri seen now was renovated and built by : Maharaja Rana Shri Bhavsinhji Madhavsinhji Sahib Bahadur, the Maharaja of Porbandar belonging to Jethwa dynasty, who ascended the throne of princely state of Porbandar in  1900 and ruled till his death in 1908.



 

#மார்கழி #முதல் #புதன்கிழமை ! (#குசேல_தினம்)* 

ஆமாம் ! சனாதன தர்மத்தில் இன்று (இந்த வருடம் 18.12.2019, புதன்கிழமை) நண்பர்கள் தினம் ! ஏனென்றால் துவாரகையின் ராஜனான க்ருஷ்ணனுக்கும், ஏழ்மையில் வாழ்ந்த சுதாமாவுக்கும் இடையில் இருந்த நட்பு தான், மிகச்சிறந்தது.  

*இன்று #குருவாயூரில் #சுதாமா தினம் (#குசேல தினம் என்று சொல்வார்கள்)*. பகவான் கண்ணனை சுதாமா ஒரு *#மார்கழி மாத, முதல் #புதன்கிழமை* துவாரகையில் சந்தித்தார். இந்த விஷயத்திற்கு புராண பிரமாணங்கள் எனக்குத் தெரிந்தவரை இதுவரை கண்டதில்லை. எங்காவது இருக்கலாம், ஒரு நாள் கண்ணன் பிரமாணம் காட்டித்தருவான். எப்படியாயினும் குருவாயூரில் வருஷாவருஷம் இந்த தினத்தை விசேஷமாகக் கொண்டாடுகின்றதால், வேறு பிரமாணம் அவசியமில்லை.

 

*சுதாமாவின் #மனைவியின் பெயர் #சுசிலா !* ஸ்ரீமத்பாகவதத்தில் சுதாமாவிற்க்கு 27 குழந்தைகள் என்று சொல்லப்படவில்லை. சுதாமா ஏழ்மையை ஆசையாய் ஏற்றார். சுசிலாவும் மனதார ஏழ்மையை ஏற்றாள். ஏழ்மை ஒருவனை எல்லா விதத்திலும் பக்குவப்படுத்துகிறது. நம் மனதில் தெய்வ நம்பிக்கையில் குறை காரணமாக, தரித்திரம் கஷ்டம் என தீர்மானித்துவிட்டோம். *#ஏழ்மையில் #வாழ்வில் #நடப்பதெல்லாம் #நாராயணன் #செயல் என்று ஏற்போம் !* பணம், பதவி, அந்தஸ்து வந்துவிட்டால் எல்லாவற்றையும் மாற்றலாம் என்ற மமதை வந்துவிடும்.  

ஆனாலும் பசி மிகப்பெரிய கொடுமை. பிள்ளைகளின் பசி பெற்றோரை பொய் சொல்லவைக்கும், திருடவும் தூண்டும். ஆனால் சுசிலா இதையெல்லாம் செய்யாமல் கண்ணனை சரணடைந்தாள். சுதாமா பெரிய ஞானி. உடல் கவலை, வாழ்க்கை இவையெல்லாம் கண்ணன் இஷ்டம் என்று விட்டுவிட்டவர். அதனால் அவரால் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. *ஏனென்றால் குருகுல வாசத்தில், வேதபுருஷனான கண்ணனோடு வேதம் பயின்றவர். வேதம் கற்று கண்ணனை அடைந்தவர் பலர். ஆனால் #கண்ணனோடு #வேதம் #பயின்றவர் இவர் ஒருவரே !* அப்படிப்பட்டவருக்கு ஏழ்மை வரமன்றோ. நமக்குத்தான் தெய்வம் என்பது ATM கார்ட் மாதிரி, வேண்டியவாறு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பு. *எல்லோரும் குருவை அடைந்து கண்ணனை அனுபவிப்பர். சுதாமாவோ #கண்ணனோடு #குருவிற்கு சேவை செய்தவர்.*  

சுசிலா தாயாயிற்றே. பிள்ளைகளின் பசி எப்படி பொறுப்பாள் ?!? எப்படியாவது தன் கணவரை ஒரே ஒரு முறை துவாரகா அனுப்பினால், எல்லாம் மாறும் என்று திடமாக நம்பினாள். பல நாள் சுதாமாவிடம் துவாரகா போய்வரச் சொன்னாள். சரியென்று ஒரு நாள் கிளம்பினார். கண்ணனுக்குத் தர ஏதேனும் தா என்றார் சுசிலாவிடம். வீட்டில் ஒன்றுமில்லையே. ஆனாலும் சுசிலா கலங்கவில்லை. அவளுக்கு ஊரார் வைத்த பெயர் க்ஷுத்க்ஷாமா, அதாவது பசியால் இளைத்தவள் என்று அர்த்தம். சுதாமாவிற்கும் பட்டப்பெயர் உண்டு, அதுதான் குசேலர். குசேலன் என்றால் கந்தலாடை உடுத்தியவர் என்று அர்த்தம். சுசிலா அருகிலிருந்த சில வீடுகளில் பிச்சையாக வாங்கினாள் அவலை. *#அவள் வாங்கிய #அவல் தான் சுதாமா கண்ணனிடம் கொண்டு சென்றது.* 

ஒருவழியாக துவாரகா வந்து சேர்ந்தார் சுதாமா.  கண்ணனுக்குத் தன்னை ஞாபக்கப்படுத்த அவரிடம் இருந்த ஒரே அடையாளம் குரு மட்டுமே. *#குருவருள் தானே #திருவருள்.* குருதியானத்தோடு துவாரகா வந்தவரை த்வாரகாதீசன் ஆசையாய் வாசல் வந்து வரவேற்றான், பழைய பால்ய சினேகிதனாகவே. அவரைக் கொண்டாடினான். *#வேதமாதாவின் #திருவடியைப் பிடித்த சுதாமாவின் #திருவடிக்கு வேதபுருஷனான கண்ணனே #பூஜை செய்தான்.* எல்லா சுகமும் கேட்பவர், கண்ணணைப் பூஜிக்கின்றனர். ஏதும் கேட்காத சுதாமாவை, கண்ணனே பூஜித்தான். செல்வம் கேட்பவரைக் கண்டால் கலங்கும் லக்ஷ்மிதேவியான ருக்மிணித் தாயார், இவரையே பக்திச்செல்வத்தின் அதிபதியாய் கண்டாள்.  

கண்ணன், இவர் சொல்லவந்த குருகுல நினைவுகளை, அவன் சொன்னான். தான் ஏதும் மறக்கவில்லை என்று புரியவைத்தான் மாயன். சுதாமா நெகிழ்ந்தார். பேச்சுக்கிடையில் எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்றான். உயிரைத்தவிர அவர் உடலில் என்ன உண்டு, என்று ருக்மிணி மனதிற்குள் கண்ணைக் கோபித்தாள். ஆயினும் இவன் மனம் உள்ளபடி யாரறிவார். அவனே சொன்னான் " *பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ! ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மனஹ !!*. அதாவது ஒரு இலையோ, பூவோ, பழமோ ஒரு சொட்டு ஜலமோ, அன்போடு பக்தியாய் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கைநீட்டினான். எல்லோரும் இவனிடம் கைநீட்டி கேட்பர். ஆனால் இவன் கைநீட்டிக் கேட்டது சுதாமாவிடம். ஆனாலும் சுதாமாவிற்கு தயக்கம், இத்தனை பெரிய த்வாரகாதீசனுக்கு இந்த அவலை எப்படிக் கொடுப்பது ?!? ஆனாலும் *அவல் தந்த அவள் மனதால் கண்ணனிடம் சரணடைந்தாள்.* கணவரின் மனமும், போக்கும் மனைவிதானே உள்ளபடி அறிவாள். கண்ணன் அவள் குரல் கேட்டு, இங்கே அவலைப் பறித்தான். எனக்கு மிகவும் பிடித்தது என்றான் அவள் தந்த ஒருபிடி அவலை வாயில் மென்றபடி. இப்படிக் கண்ணனுக்கு சுசிலா தந்த அவலை சுதாமா கண்ணனுக்கு துவாரகையில் தந்த நாளே, மார்கழி முதல் புதன்கிழமை.

 

ஒரு பிடி அவல், அவள் பக்தியால், ஜோராக ருசிக்க, இன்னொரு பிடி எடுக்க, இங்கே இவள் (ருக்மிணி) போதுமென தடுத்தாள். இவர் பக்தியை செல்வத்தால் அழிக்காதே என்றாள், கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள். ஒரு நாள் பொழுது முழுதும் பால்ய குருகுல வாசத்தைப் பேசியே கழித்தான். *ஆனாலும் மனதால் சுசிலாவின் துன்பம் தீர நீங்காத செல்வம் தந்தான். சுதாமாவின் துன்பம் தீர தன்னையே செல்வமாகத் தந்தான்*  

கண்ணன் என்னும் செல்வத்தை சுதாமா பூரணமாக அனுபவித்த தினம் இன்று. கிளம்பும்போது, அவ்வப்போது வா என்றானே ஒழிய கையில் ஒன்றும் தரவில்லை. எல்லாம் மனதாலே தந்துவிட்டானே... கண்ணனை எப்படி தோழனாக அனுபவிப்பது என்று சொல்லிக்கொடுத்தவர் சுதாமா. உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று, சொல்லாமலேயே அருள் செய்த உற்ற தோழன் கண்ணன். 

எல்லோருக்கும் சுதாமா தின வாழ்த்துக்கள். நான் குசேலன் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் கண்ணன் சுதாமா என்றே அழைத்தான். ஊராரைப் பொறுத்தமட்டில் அவர் குசேலன். கண்ணனைப் பொறுத்தவரை அவர் என்றுமே அவனின் பிரியமான சுதாமா தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுதாமா கண்ணனைப் பார்க்க துவாரகா செல்லவில்லை. சென்றால் இன்னும் ஏதேனும் தந்துவிடுவானோ என்ற பயமே காரணம். இன்று நமக்கு இதை அனுபவிக்க ஒரு வாய்ப்பு தந்தான் குருவாயூரப்பன். விடியற்காலை அப்பம், அவல், பழம் என்று தரவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பரவாயில்லை. எப்படியோ மார்கழியில் விடியற்காலையில் குருவாயூரப்பன் தியானம் செய்வது நல்லதுதானே. 

மனதின் எண்ணங்களே அவல். அப்படியே தருவோம். திருக்கோளூர் பெண்பிள்ளை நம் ஸ்வாமி ராமானுஜரிடம் *அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே* என்றாள் ! *நாமும் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ இன்று கண்ணனுக்கு அவல் தருவோமா அவளைப் போலே !*

 

குருஜீ கோபாலவல்லிதாஸர்  (18.12.19, குசேல தினம்)

 

குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி முதல் புதன் கிழமையை குசேலர் தினமாக கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம். அன்று கோயிலில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர். குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர். பக்தர்களும் , குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர். இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
17.12.2025








 

PS  :  1)  ‘Kuselan’ starring Rajnikant was an adaptation, amended to suit Tamil audience by its director P. Vasu. A remake of the Malayalam film Kadha Parayumbol (2007), it had Rajnikanth, Pasupathi, Meena and Vadivelu. The film was simultaneously made in Telugu as Kathanayakudu.  The plot revolves around a villager, who had shared a strong friendship with a popular cinema actor in his youth.

2) The temple at Sudamapuri (Porbandar) was renovated by Rana of Porbandar in 1903.  

Maharaja Rana Shri Bhavsinhji Madhavsinhji Sahib Bahadur (  1867 –  1908) was the Maharaja of Porbandar belonging to Jethwa dynasty, who ascended the throne of princely state of Porbandar on 15 September 1900 and ruled till his death in 1908.    Rana of Porbandar  got  connected to Bhavnagar through marriage to a daughter of HH Maharaja Raol Shri Takhatsinhji Jaswantsinhji of Bhavnagar in 1902. This union, often noted as to Kumari Shri Ramba Sahiba from Bhavnagar's Gohil dynasty, forged ties between the Jethwa rulers of Porbandar and Gohil rulers of Bhavnagar.  

Porbandar and Bhavnagar were key princely states under British India.  The Indian cricket team toured England in the 1932 season under the title of "All-India’ was captained by the Maharaja of Porbandar.   India had just been granted the status of ICC Full Member and they played their inaugural Test match at Lord's in June. It was the only Test arranged on this tour and England won by 158 runs after scoring 259 and 275/8d in the two innings while India were bowled out for 189 and 187. 

Lieutenant-Colonel Maharaja Rana Shri Sir Natwarsinhji Bhavsinhji Sahib Bahadur, KCSI (  1901 –   1979) was the last Maharaja of Porbandar, the only son of Maharaja Rana Shri Bhavsinhji Madhavsinhji Sahib  , Rana Sahib of Porbandar,    was picked to captain the All-India side on their first major tour of England in 1932 when the Maharaja of Patiala had to withdraw through illness. It was considered necessary for a prince to lead the side, and so Porbandar was appointed.  He however did not play in that inaugural test and handed over  the captaincy for India's first Test to C.K. Nayudu.