To search this blog

Wednesday, October 28, 2020

Collector Office being built at Temple land ! ~ sordid truth at Kallakurichi !!

ஆலயங்கள் நாம் வாழ்வில் இன்றியமையாதவை !..  .. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி.  நாட்டை ஆண்ட பல மன்னர்களும், தனவந்தர்களும், நல்லவர்களும் பெரிய கோவில்களை கட்டினர்  ~ காலப்போக்கில் தமிழகத்திலே திருக்கோவில்கள் ஹிந்து அறநிலைய துறை எனும் அரசாங்க கட்டுப்பாட்டினில் வந்தன.  பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்கள் மட்டும் அந்தந்த மதத்தினாராலேயே நிர்வகிக்கப்படும் போது - ஹிந்து திருக்கோவில்கள் மட்டும் ஏன் அரசாங்கத்தின் கையில் ? - மேலும் அதன் நிர்வாகமும் சீர்கெட்டுள்ளது வேதனை, வேதனை !!

ஒருபக்கம் நிர்வாக சீர்கேடு, மறுபக்கம் ஊழல்கள் !!  ..பெரும்பாலான இடங்களில் கோவில் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.  சட்டவிரோதமான குடியேற்றங்கள் எனவும், குத்தகையை கொடுக்காமலும் திருக்கோவில் சொத்துகள் பாழ்படுகின்றன. . கோவில் சொத்தை குத்தகைக்கு எடுப்பவர்கள்  நிறைய பாக்கி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டும் 36,606 திருக்கோவில்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், ஏராளமான மடங்கள், அறக்கட்டளைகள், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வராத நிறைய கோவில் சொத்துக்கள் இருக்கின்றன. பல தனியார் கோவில்களைக்கட்டி தங்கள் சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.  திருக்கோவில்களின் வாசலில் 'வாடகை பாக்கியுள்ளோர்' என வைக்கப்படும் தகவல் அறிவிப்புகள் - அந்த பாக்கி வைத்துள்ளோருக்கு அவமானமாக இல்லையா ! ~ வசூலிக்க தவறிய அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மை அல்லவா !  

கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், சட்ட விரோதமாக கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், நில மாபியாக்கள் மீது சென்னை ஐகோர்ட்டின் கண்டன பார்வை விழுந்துள்ளது. சமீபத்தில் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஒரு வழக்கில், கோவில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களின் ஆக்கிரமிப்பாளர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்கள், நில அபகரிப்பாளர்கள், மாபியாக்கள் போன்ற சட்ட விரோதமாக கோவில் சொத்துக்களை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவர்களை வெளியே அனுப்பி சொத்துக்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, இதுபோன்ற சட்ட விரோத செயல்களை எல்லாம் கண்டறிந்து, அதற்கு துணைபோன அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், இந்துசமய அறநிலையத்துறை இணையதளத்தில் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் பற்றிய விவரம், குத்தகை காலம், அதற்கான குத்தகை மற்றும் வாடகை தொகை எவ்வளவு? என்பதை குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

900 ஆண்டுகளுக்கு முன்,  தனது தந்தை ராஜராஜ சோழனின் அஸ்தியை ராஜேந்திர சோழன் கரைப்பதற்காக கொண்டு சென்றபோது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள ஓர் ஊரில், அஸ்தி மல்லிகைப் பூவானதாம்.  இதையடுத்து,  அந்த ஊரில் ராஜேந்திர சோழன்,  நாரீஸ்வரர் என்ற சிவன் கோயிலை கட்டினார். பின்னர், இந்த ஊருக்கு வீரசோழபுரம் என்ற பெயர் வந்தது.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 8-1-2019 அன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.அதன்பிறகு கடந்த 26-11-2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி வீரசோழபுரம் கிராம எல்லையில் 40.18 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அதில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. .. ..  இது பத்திரிக்கை செய்தி  .. .. இதில் சொல்லப்படாதது என்ன ??

 


The Kalvarayan Hills are a major range of hills situated in the Eastern.  Along with the Pachaimalai, Alavaimalai, Javadi, and Shevaroy hills, they separate the Kaveri River basin to the south from the Palar River basin to the north.   The History of Kalrayan hills with its Jagirdars run back to the time of Krishna Deverayar the Emperor of ‘Vijaya Nagar Kingdom’.  

Kallakurichi District was announced as 33rd district by bifurcating Viluppuram district on the floor of Assembly by Hon’ble Chief Minister in  2019. Later the new Kallakurichi District was created as per a Government order and  the Hon’ble Chief Minister inaugurated Kallakurichi as 34th district (Tenkasi inaugurated as 33rd) on 26.11.2019 in a grand inaugural function. The district consists of 2 Revenue divisions with 6 taluks, consisting of 562 Revenue villages in 24 firkas. The district consists of 9 development blocks covering 412 village panchayats.   It covers 6 taluks namely Kallakurichi, Sankarapuram, Chinnasalem, Ulundurpet, Thirukovilur and Kalvarayanmalai.

This is no post on the District but on how Temple land has been usurped ! .. ..

Veeracholapuram is a village located in Villupuram and is famous for the  Shiva Temple,  known as Veeracholapuram Shiva Temple. Veeracholapuram is also notable for the Brindavana of Satyanatha Tirtha, a   pontiff of Uttaradi Matha of Dvaita Order of Vedanta, who took samadhi in the year in 1674 on the bank of river Dakshina Pinakini in this village.

This temple of Shiva dates back to many centuries but not in great shape now.  Recently when the villagers were renovating they found a culvert  that has 31 lines inscribed on it. It mentions of the era of Kulothunga Chozha I under whom Vanakovaraiyan Suthamallan Mudikondan created Veerachozha nallur and donated few acres of land for the temple maintenance. 

சோழர்காலக் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாண்டியர் காலக் கல்வெட்டு, கி.பி. 13 -14 ஆம் ஆண்டைச் சார்ந்ததாகும். இது கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகரத்தேவரின் 25 ஆம் ஆட்சி ஆண்டு சித்திரை மாதத்தில் பொறிக்கப்பட்டது. 

 

Rather than showing concern about the state of ruin of the Veera Cholapuram Sri Ardhanareeswara temple in Kallakurichi district, the Hindu Religious and Charitable Endowments Department has placed advertisements in newspapers about the intended sale of that shrine's land,  Hindu Munnani, said in a statement.

The government department has invited objections if any to the proposal and office-bearers of the Munnai from Kallakurichi district have forwarded representations to authorities opposing the 'sell-off.'  According to the advertisement, Rs 1.98 crore has been fixed as the price for 35 acres owned by the Shiva temple and the bid to acquire the land is to build a new collectorate complex for Kallakurichi district, State Secretary of the Munnani, T Manoharan said.  The proposed alienation not only went against the intention of the donors of the land, which was to create an endowment to support the temple perpetually for its regular functioning but also a 'betrayal,' he alleged. Even according to the government's guidelines, 35 acre land should fetch about Rs 100 crore and fixing a value of Rs 1.98 crore is "fraud and an illegal move," the Munnani alleged.

"It is illegal for the government to take up construction activities in the site which is yet to become the property of the government. This is condemnable," he alleged. He also urged the people to protest against the endowment department's bid to sell the land belonging to the centuries-old temple. Authorities were not immediately available for comment. Hindu Munnani is fighting the wrongful acquisition of   35 acres of land belonging to   temple to build a collectorate complex for the newly carved out Kallakurichi district.   The property belongs to  Veera Cholapuram Sri Ardhanareeswara temple in Kallakurichi district, but is being taken over by the Govt showing utter disregard to the procedures and more so, to the faith of Hindus and those who donated lands to this temple. 

Sad are the ways of people.  Here the Govt itself is trying to take over the land the administrator HR&CE displays  callous disregard in protecting temple property and in renovating temple. 

Sad.

  

Tuesday, October 27, 2020

Thirumylai Madhava Perumal Sevai ~ மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன !!

Though too early to celebrate, there are some good signs in the Covid 19 front in India.  As per the data released by Ministry of Health and Family Welfare, India on October 26 reported single-day spike of 45,149 new coronavirus cases in the last 24 hours.  Today (26.10.2020)  is the 217th  day since India implemented a nationwide lockdown, to help curb the novel coronavirus pandemic.    India’s recovery rate continues to rise and now stands at 90.2 percent. The no. of recovered patients are also higher. 


Globally, many countries are suffering in what is stated as second wave.  Britain is now recording more Covid-19 deaths each day for the size of its population than the US for the first time since June, data has revealed. Both countries are currently recording around two Covid-19 deaths for every million people — but Britain's rate stands slightly higher at 2.63, compared to 2.4 in the US. The UK suffered far higher daily death counts in the spring, relative to its population. But over the summer, while Britain's outbreak fizzled out, America's failed to improve.   The US currently has the highest cumulative death toll in the world at 228,477. And researchers warned last week that the grim tally could pass half a million by February, in a worst-case scenario.  Britain also posted its highest ever daily number of cases tally last week, registering 26,688 positive tests on Wednesday.  Officials in both nations have been highly criticised for their handling of the crisis. Donald Trump's administration was blamed for 'one of the greatest losses of American life in history' by his presidential election rival Joe Biden, while Boris Johnson was accused of failing to act quickly enough in March.

The Czech Republic is facing a 'catastrophic' Covid-19 outbreak and needs a 'miracle' to avoid new restrictions, its prime minister said last night with its infection rate now the highest of any major country in the world.  Andrej Babis said the current lockdown measures 'are not working yet' after the country's coronavirus deaths doubled in the space of two weeks. Like many countries which escaped lightly from the first wave, the Czech Republic is now seeing record numbers of fatalities.  The country where the virus originated, China reported the highest number of asymptomatic Covid-19 cases in nearly seven months, following a mass infection of an unknown origin in the northwestern Xinjiang region.

The World Health Organization (WHO) is urging people around the world not to give up in the fight against the coronavirus as cases surge once again, stressing the need for mask-wearing, physical distancing and other measures to avoid the kind of full-scale lockdowns that were imposed earlier this year.  WHO chief   told a virtual briefing that he understood the “pandemic fatigue” that some people were feeling but stressed the need to continue measures to contain a virus for which there remains no cure or vaccine.

The Covid-19 pandemic arrived when we were on the threshold of a fourth industrial revolution, based on artificial intelligence. Perhaps this is the right time for another renaissance that the World fights the dreaded virus and eliminates it.

For us, Srivaishnavaites, there is simple remedy.  All our woes will vanish in thin air, when we utter the names of Lord Sriman Narayana.  When we utter ‘Madhava’ – the Lord at the golden walled Thiruvananthapura Nagar, all good things happen.  Those who worship Him with fragrant sandal paste, flower, lamp, incense and fresh lotus petals will attain eternal glory.  


எம்பெருமானுடைய பல்லாயிர திருநாமங்களை ' அச்சுதா, அனந்தா, கோவிந்தா!, மாதவா!, கேசவா!, நாராயணா!, கண்ணா!, மதுசூதனா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, வாசுதேவா"  எனப்பாடி ஆனந்தித்து அவனை அவனுறையும் பல்வேறு கோவில்களில் சென்று சேவித்து, அவனது உத்சவங்களில் வாகன சேவைகளில் கண்டு இன்புறுகிறோம்... .. ஒவ்வொரு திருநாமத்துக்கும் தனி மகிமையும் சிறப்பும் உண்டு.  மாதவா என்பது தேனினும் இனிய சொல் ! .. .. இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவானந்தபுர நகர் பாசுரம்.

 

மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்*

ஏய்ந்த பொன்மதிள்   அனந்தபுரநகர்  எந்தைக்கென்று*

சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள்  நல்ல

ஆய்ந்து  கொண்டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே !.

எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனை மாதவா என்று வாய் நிறைய சொன்னவளவிலே,   பாவங்கள் தானே தொலைந்தொழியும்.  எம்பெருமானுக்கு உகந்த நல்ல மணக்கும் சந்தன தீப தூபங்களையும், தாமரைப் பூக்களையும் சேகரித்துக் கொண்டு சென்று  நாடோறும் துதி செய்ய வல்ல பக்தர்கள்  பொருந்தின பொன்மதினையுடைத்தான திருவனந்தபுரநாதனுக்கென்று ஸங்கல்பித்து அழிவில்லாத புகழை யுடையராவர். அந்த எம்பெருமானை அடைந்தவர்க்கு எந்த கெடுதலும் இல்லாமல் அனைத்து நல்லவைகளும் சிறப்பாக நடக்கும்.  

Mylapore is  a shoppers’ paradise, still seeing crowds amidst Corona too  ~  the  historical place has two MRTS railway stations : Thirumayilai and Sri Mundakakanni amman temple.  In between runs Kutchery road, linking Beach Road with Luz Junction and you would have travelled many a times on this – do you know that one of the bylanes leads to a famous landmark   at Arundale Street  – Sri Peyalwar avatharasthalam.  One would be surprised to find so many temples in small lanes and bylanes of Thirumayilapuri.  As one crosses, the Hamilton Bridge, is the famous  ‘Sri Mylai Madhava Perumal Thirukovil’   and behind this is ‘ Mundagakanni Amman temple’.  At Madhava Perumal temple, the Presiding deity is in a sitting posture hailed as Sri Madhavar and His consort is Amirthavalli.  The Uthsavar idol is extremely beautiful.  

Saturday 24.10.2020 provided great opportunity of darshan at Thirumylai Sri Madhava Perumal thirukovil and here are photos of Sri Madhavar, Sri Amirthavalli thayar, serthi, and Sri Peyalwar.  Exceptionally beautiful sarruppadi by Sri Ashwin Sundararajan Battar swami.

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.10.2020 


Sri Peyazhwar

Sunday, October 25, 2020

Aippaisi Sadayam - Sri Peyazhwar Sarrumurai .. .. avathara sthalam 2020

'நீரின்றி அமையாதது உலகு' என்கிறார் நம் செந்நாப்போதார் [திருவள்ளுவர்]  ..  நீர் - இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான்.  தண்ணீர் நிலத்தில் அடியிலே கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன.  கிணறு என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் ஆழம் வேறுபடும்.  


திருவல்லிக்கேணியில் பெரிய ஆம் என்றழைக்கப்பட்ட அவ்வீட்டில் படிக்கட்டுகளுடன் கொண்ட பெரிய கிணறை பார்த்துள்ளேன்.  தவன  உத்சவ பங்களாவில் பெரிய கிணறு இருந்தது. வசந்த உத்சவ பங்களாவில் 'நடபாவி ' எனும்  படிக்கட்டுகளில் இறங்கி குளிக்கும் வசதி கொண்ட கிணறு இருந்தது.    ~  இப்பதிவின் மையக்கருத்தும் ஒரு கிணறுதான் - தெய்விக கிணறு - தமிழ் தலைவன் பேயாழ்வார் பிறந்த கிணறு  !  

Centuries before the advent of colonialism and the arrival of British East India Company, Madras existed on a scale far smaller.  When East India bought a piece of land and later built a garrison, the fort  was contiguous to it on its northern side. Georgetown was a sparsely populated suburb, occupied by gardens and' garden-houses,'  where  the Company's servants retired for rest and relaxation. The districts to the westward were marked by tiny villages, centres of agricultural

areas held by the Company on precarious grants from the government of the country, while everything south of Triplicane was native territory, over which the British had no dominion.   

HD Love in his Vestiges of Old Madras describes:  two streams flowing from the west and north respectively had a common outlet to the sea about a mile south of the village of Madraspatam. The first, which was' then known as the Triplicane River, and now as the Cooum, followed a winding course through the villages of

Chetput, Nungumbaukum, and Triplicane.  At the time of the founding of Fort St. George, the adjacent village of Triplicane (Tiruvallikkeni) contained an ancient temple, now called Parthasarathi svamin, dating from the Pallava period. No Madras temple is explicitly mentioned in the records until 1652, but some unofficial evidence has been traced, to set forth which it will be convenient to work backwards from what is certain to what is only conjectural.  

Mylapore too finds mention – it was Portugese occupied area.  When the French squadron arrived at San' Thome in June, 1672, an English vessel called the Ruby, belonging to the' sieur Gersey,' was lying in the roadstead. Acting on a hint from Governor Langhorn, who was not on good terms with Mr. Jearsey, the French commander seized the ship. Langhorn subsequently applied, perhaps not very earnestly, for her restoration, but in vain; and she was eventually despatched to France. The seizure caused some irritation among the residents of Fort St. George.  

Mylapore has been a shoppers’ paradise ~  the  historical place has two MRTS railway stations : Thirumayilai and Sri Mundakakanni amman temple.  In between runs Kutchery road, linking Beach Road with Luz Junction and you would have travelled many a times on this – do you know that one of the bylanes leads to a famous landmark with divine connection !  - the Arundale Street .. ..  next time, for sure when you travel on Kutchery road towards beach, you might take a turn and reach this place, if you have not visited this earlier…. at Arundale Street  – otherwise not so noticeable one… that winds its way towards Sri Madhava Perumal Kovil ~ and just a couple of yards in to the Street, lies this famous place with divine connection.  

நாந்தகம் என்ற வார்த்தைதனை  கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  :    சிந்தாமணி நிகண்டில் வாள் (Sword)  என்ற சொல்லிற்கு நிகரான 8 சொற்கள் காணப்படுகின்றன.:  அவை :  ~  உவணி, கட்கம், கடுத்தலை, கிருபாணம், தூவத்தி, பத்திராத்துமசம், பாரோகம்,மற்றும் நாந்தகம்.. நாந்தகம் என்பது ஸ்ரீமன் நாராயணின் வாள்.  வாள்   (sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும்.. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம்.   

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham.   

ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.

  பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து  "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்”,  - என "மூன்றாம் திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார்.   திருமயிலைவாசி ஸ்ரீ பேயாழ்வார்; அவரருளும் சிறப்பான உபாயமாவது ..   "அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்"  ~

ஸ்ரீமன் நாராயணான எம்பெருமானே நமக்கு என்றென்றும் ரக்ஷகன்.

அவனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் ?  ~ இருகை  கூப்பி அவனடியே  சரணம் புகுதல் வேண்டும்.  எவ்வளவு எளிதானது ~ நம் முயற்சி ஒன்றுமே வேண்டாமே !!  நம்முடைய ரக்ஷணத்தில் நாம் முயல்வதை விட்டிட்டு அவனுடைய ரக்ஷகத்வத்திற்கு அவகாசம் கொடுப்போமாகில் அவன்  எக்காலத்திலும் ரக்ஷண ஜாகரூகனாயிருந்தருள்வன் என்பது மயர்வற மதிநலமுடைய பேயாழ்வார் வாக்கு.   இதோ அவரது மூன்றாம் திருவந்தாதியில் இருந்து ஒரு அற்புத பாசுரம் :   

அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,

முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்

ஏதுகதி ஏதுநிலை ஏது பிறப்பென்னாதே,

ஓதுகதி மாயனையே ஓர்த்து.  

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் எத்தகையவன்  !! ~  திருவாழியாழ்வானை வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரனுடைய ஆயுளையும், வலிமையையும் போக்கின மொய்ம்பன் (மிடுக்கையுடையவனுமான பெருமான்) - அவ்வளவு சிறப்பு மிக்கவன் நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில், நம்மிடத்தில் உள்ள எத்தகைய குறைகளையும் கருதாமல்,  நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவேயிருப்பன், நெஞ்சமே இதை நன்றாக அறிந்து கொண்டு, ஆச்சரியமான குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே உபாயமாக புரிந்து கொண்டு, அவனது நாமங்களையே  அநுஸந்தித்துக் கொண்டிரு. என உரைக்கிறார் நம் பேயாழ்வார்.

 
Monday 26th Oct 2020 is Vijayadasami special day – today is also  ‘Sadhayam in the month of Aippasi’ ~ the sarrumurai of Sri Peyalwar.   .. .. some photos of  Sri Peyalwar from Sri Madhava Perumal Thirukovil, Thirumylai and  Alwar avatharasthalam at Arundale street, Mylapore are posted here. 

Among the many things that we miss is Emperuman purappadu – On Peyalwar sarrumurai day – first Sri Peyalwar would come in pallakku to the sannathi – then there will be the short purappadu of Sri Parthasarathi perumal to Peyalwar sannathi – thriumanjanam – thirumozhi goshti, Moonram thiruvanthathi;  in the evening there would be periya mada veethi purappadu ; thiruvaimozhi goshti in peyalwar sannathi and Perumal along with azhwar would return to Thirukovil late in the day.  Next day morning would be ganthapodi uthsavam of Azhwar.  Here are some photos of Azhwar Perumal purappadu in the morning of  20.10.2018.

 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.10.2020.
Gratitude to  Sri Kachi Swami (Sri U Ve PB Annangarachar swami) – www.dravidaveda.org 


Saturday, October 24, 2020

Thirukkadanmallai [Mahabalipuram] - Sri Boothath Azhwar Sarrumurai 2020

தமிழில் இலக்கியமோ, சரித்திரமோ அல்லது குறைந்தபட்சம் கதைகளோ படிக்கும் அனைவரும் இதை படித்திருப்பார்கள்.  இந்த நவீனம் இவ்வாறாக துவங்குகிறது. 

                               "இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு; காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான தவ விரத அனுஷ்டானங்களினாலோ, வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டதனாலோ, அந்தப் புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாகியிருந்தது. அவருடைய முகத் தோற்றமானது அன்பையோ, பக்தியையோ உண்டாக்குவதாயில்லை; ஒருவித அச்சத்தை ஊட்டுவதாயிருந்தது"  

No prize for guessing ! .. ..   இது - "சிவகாமியின் சபதம்,"  12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த  கல்கி இரா கிருஷ்ணமூர்த்தி  எழுதிய சரித்திர கதை.   பல்லவர்களின் தலைநகரான காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்.  தலைப்பு எந்த மன்னர்களின் பெயரும் அல்ல.  கதையில் ஒரு கற்பனை பாத்திரம் - ஒரு சிற்பி. ஆயனர் என்று பெயர் அவருக்கு - அவரது பெண்தான் 'சிவகாமி'.  பதினொன்றாம் பாகத்தில் - ஆயனரின் கலைக்கூடம் விவரிக்கப்படுகிறது.  கடல்மல்லைத் தீவின் தென்பகுதியில் விஸ்தாரமான வெட்டவெளிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன் மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன. 

What is written all around is the place “Mamallapuram” has its origins in the word ‘Mamallan’, the title bestowed on Narasimhavarman II, the great king of the Pallava dynasty that existed between the 3rd and the 9th century. ‘Mamallan’ means ‘great wrestler’.  During the reign of Pallava King Narasimhavarman I (630-668 AD) ,  Hiuen Tsang, the Chinese Buddhist monk-traveller, visited the Pallava capital at Kanchipuram. Narasimhavarman II (c.700-728 AD), also known as Rajasimhan, built on the work of earlier Pallava kings to consolidate maritime mercantile links with southeast Asia.  Most interestingly, as historian Tansen Sen recorded in his 2003 work Buddhism, Diplomacy and Trade: The Realignment of Sino-Indian Relations, 600-1400, Narasimhavarman II sent a mission to the Tang court.   Pleased with the Indian king’s offer to form a coalition against the Arabs and Tibetans, the Chinese emperor bestowed the title of ‘huaide jun’ (the Army that Cherishes Virtue) to Narayansimha II’s troops ! The offer of help by the Pallava ruler, Sen noted, may have had more to do with furthering trade and for the prestige of association with the Chinese emperor.


No historical post this .. .. this place had a beautiful name ‘Kadanmallai’ – the hillocks situate closer to the Sea – and the place that housed the great temple of Lord Sthalasayana Perumal – Emperuman Sriman Narayanan in reclining posture – a Srivaishnava divyadesam and associated to be the birth place of Muthal Azlwar – Sri Boothath Azhwar.

 பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் தாம்  ஆழ்வார்கள்,  ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே தனி தெய்வம் என்று  எம்பெருமானிடத்திலே அடிமை செய்து இருந்தவர்கள், மயர்வற மதிநலம் அருள்பெற்ற ஆழ்வார்கள்.  இவர்களில் பொய்கை, பூதம், பேய் எனும் மூவர் முதல் ஆழ்வார்கள் என போற்றப்படுவர்கள்.  இவர்கள் சம காலத்தவர் ~ மூவரும் மதிட்கோவல்  இடைகழி என திருக்கோவலூரிலே ஒரு மழை காலத்திலே இருந்து, எம்பெருமானது பரம போக்கியதாலே அவனை போற்றி மூன்று திருவந்தாதிகளை நமக்கு அளித்தனர். 

இன்று (25.10.2020) பூதத்தார் அவதரித்த நாள்.  முதலாழ்வார் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர் நம் பூதத்தாழ்வார். இவரும் தொண்டை நாட்டில் பிறந்தவரே. கடல்மல்லை ஸ்தலத்தில்,  குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்களில் அவிட்ட நக்ஷத்திரத்திலே,  எம்பெருமானின்  கதையின் திருவம்சமமாய்  அவதரித்தவர். வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். எம்பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்   பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது.  அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமைசெய்யப்பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும் நம் ஸம்ப்ரதாய பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.This is the photo of His avathara sthalam ~ in all probability, you had been in this vicinity, without ever realizing its significance and greatness~ in case you are not able to identify – for sure you have seen this place and have taken a photo / selfie infront of these magnificent elephants  -   this place was in global news when China’s President Xi Jinping arrived to a lavish welcome in the southern Indian city of Chennai for his second informal summit with Indian Prime Minister on 11.10.2019.  Xi was treated to a performance showcasing the local Tamil traditional dance forms on the runway.  Visiting Chennai for his second informal summit with Prime Minister Narendra Modi on Friday, Chinese President Xi Jinping opted to travel to tourist town Mamallapuram by road instead of a helicopter as Chinese leaders, as matter of policy, shun travel by choppers. 

                      ~  have you had darshan at Thirukkadanmallai (most probably you had visited this place as a tourist); in case, you had darshan, have you travelled to this place with the prime purpose of worshipping Emperuman at this divyadesam  and the Azhwar who was born at this sthalam  ?? Sri Sthalasayana Perumal Thirukovil is at Thirukkadanmallai ~ in case the name does not ring a bell – it is the  more famous  Mahabalipuram (simply Mamallapuram) known for its great architecture.   It is at this divyadesam our Boothathazhwar was born.  Thiruvavathara uthsavam of Bootath Alwar gets celebrated in the month of Aippasi (Oct-Nov).   “Mallai means prosperity. The town got the name because it was enriched by the wealth brought through sea trade”   3 photos above  - Sri Boothathazhwar avatharasthalam   

During the rule of Mahendravarman I, Mahablipuram started to flourish as a centre of art and culture. His patronage helped the creation of a number of the city’s most iconic landmarks. This period of artistic excellence was duly continued by his son Narasimhavarman I  and subsequent Pallava kings. Mahabalipuram was already a thriving sea port on the Bay of Bengal before this time. A significant amount of coins and other artefacts excavated from this region also indicate a pre-existing trade relation with the Romans even before it became a part of the Pallava Empire.   Constructed with formidable finesse by the Great Pallavas in 7th century BC, Mahabalipuram symbolises the confluence of Indian history, geography and ancient Indian economy. Historical relevance of Mahabalipuram dates back to the ancient days of Sangam literature and Bhakti movement that flourished here, eventually contributing to the development of Dravidian architecture in Tamil Nadu. 

Today (25.10.2020) – let us fall at the feet of Sri Boothath Azhwar and reach Emperuman by singing His glories and more specifically his prabandham ‘Irandam thiruvanthathi’ part of Iyarpa  

திறம்பிற்றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை*

திறம்பா  வழி சென்றார்க் கல்லால், - திறம்பாச்*

செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன்வானோர்*

கடிநகர வாசற் கதவு.  

பிறிதொரு தெய்வம் யாவையும் உபாசிக்காமல்தென்னரங்கத்திலே பள்ளிகொண்ட அந்த அரங்கநாதனே கதி என்றிருப்பாருக்கு  -  மிக்க அறணையுடைய  அற்புத மாநகரத்தின் கதவுகள்தாமாகவே திறக்கும் என்கிறார் பூதத்து ஆழ்வார்   

Sri Boothathazhwar guides us the easiest way to reach the abode of Sriman Narayana.  He tells us that to have the strong doors of Sri Vaikundam open, one should relinquish other faiths and fall at the feet of that Lord of Thennarangam – Sri Ranganathar. 3 photos above  Sri Boothathazhwar @ Thiruvallikkeni

Here are some photos of Thirukkandanmallai, Avatharasthalam, Azhwar at this holy place and some photos of Azhwar at Thiruvallikkeni divyadesam in 2017.  

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam !!  

~adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
25.10.2020 

Friday, October 23, 2020

Sri Poigaiyazhwar Sarrumurai ~ ஐப்பசியில் திருவோணம்.

பக்தியோகம் ஒரு எளிய மார்க்கம்.  எம்பெருமானின் தாள் பணிந்து அவனை அடைவதே நம் லட்சியம்.  நற்கதி பெற என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறதா ?    பொய்கை  என்ற  பெயர்ச்சொல் : இயற்கையிலுண்டான நீர்நிலை, குளம், சுனை ஆகியவற்றை குறிக்கும்.  பொய்கை  ஆறு  எங்குள்ளது தெரியுமா ? 


இன்று (24.10.2020) ஐப்பசி மாதத்து திருவோணம்.  ஐப்பசியில்  ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – என ஸ்ரீமணவாளமாமுனிகள் தமது  'உபதேசரத்தினமாலையில்' எடுத்து உரைத்தார். இவை எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' – இவ்வுலகில்  வந்துதித்த நாள்கள்.  பன்னிரு ஆழ்வார்களில்  முதலில் வந்துதித்ததனால் முதல் ஆழ்வார்கள் எனபெருமை பெற்றவர்கள் இவர்கள்.

We live – we pray – we go to temples….. in Sri Vaishnavism, in the various forms of God –   Our great saints – “Azhwars”  have given us  beautiful verses on Sriman Narayana in sweet Tamil, collectively known as “Sri Nalayira Divya Prabandham’…… one must ponder over the greatness of the ‘mayarvara mathinalam arulap perra Azhwargal’ ~ those Azhwars were supreme in their wisdom and were showered specially by God Himself with abundance of knowledge and devotion to thyself…….. to the Azhwars, the transcendental reality was not merely an abstract principle ~ the life was not illusion… to them their very purpose of birth and living and their confinement on earth was for service to Lord Sriman Narayana – serving Him in the most servile manner with all glorious, flawless and auspicious attributes which included floral worship and lyrical – those of verses on Supreme Lord.   

உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே ஏற்பட்டன.   தமிழ்நாட்டில் எப்போதும் வளமாக பாயும் நதிகள் குறைவு.  .  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, மண்ணியாறு, தூரியாறு, பொய்கை ஆறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. .. .. .. இவற்றில் எப்போது வெள்ளப்பெருக்குடன் நீர் ஓடியது என்பது தெரியாது !!   ஆறு நீர்ச் சுழற்சியின் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.  

இது நதி நீர் பற்றியதல்ல !  ஸ்ரீவைணவத்தில் சிறந்த முதல் ஆழ்வார்கள் பற்றியது.  பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகியோரின் பிறந்த  திருநக்ஷத்திரங்கள் - ஐப்பசியில்  'திருவோணம், அவிட்டம், சதயம்'.  இவர்கள் மூவரும் திருக்கோவலூரின் ஒரு மழை நாளில் சந்தித்து, அந்த அற்புத கணத்திலே எம்பெருமானை தரிசித்து அந்தாதி பாடி ஆனந்தித்தனர்.  அப்போதிலிருந்து ஒன்றாகவே தங்கவும், பற்பல திவ்ய தேங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் “ஓடித் திரியும் யோகிகள்“ – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். 

 

Sri Poigaiazhwar at  avatharasthalam with Yathothagari Perumal

முக்தி அளிக்கும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சி மாநகரில் திருவெஃகா எனப்படும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருகூவிலில்  பொற்றாமரைக் குளத்தில்  (பொய்கையில்) ஒரு தாமரை மலரில் திருமாலின் திவ்விய ஆயுதங்களில் ஒன்றான பாஞ்சஜன்யம் எனப்படும் திருச்சங்கின் அவதாரமாக,  சித்தார்த்தி வருடம், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அதவரித்தவர் பொய்கையாழ்வார்.   இவர் உலகியலில் ஈடுபடாமல் ஞானபக்தி வைராக்கியங்களில் ஊன்றி திளைத்து எம்பெருமானுக்கே அடிமை செய்வதில் ஆர்வமுடையவராயிருந்தார். ஒரு நாள் இருந்த இடத்தில் மறுநாள் இல்லாமல் ஊர் ஊராகச் சென்று எம்பெருமானுடைய கல்யாண குணங்களை அனுபவித்துப்பாடி அவனுடைய அழகில் ஈடுபட ஆரம்பித்தார்.

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition   :  - Sri  Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham.   

In the Thondai Naadu,  the land of radiance  and nature's beauty,  is  Thiru Vehkka, nearer the Thiru Kachi Sri Devathirajar temple, also called as "Yadothakaari Sannadhi" [sonna vannam seitha perumal ~ the God who did as ordained by His devotee].  Nearer to the Yadothakari temple, is a Poigai (small pond),  full of beautiful, fresh lotus flowers. In this Pond was born Sri Poigai Azhwar in the month of Aippasi and on Thiruvonam nakshathiram being the amsam of Panchajanyam – the weapon of Lord.   Alwar was extremely devoted and led his life in service to God only, going to several Divyasthalams and doing service to Lord and His followers 
The muthalazhwargal vaibhavam is a very interesting one… the trio came together for the first time at Thirukkovalur on a rainy day when there was lightning accompanied by thunders – in the front passage [idai kazhi] of a house referred as ‘dehali or rezhi’……….. the place being very small – it was good enough for Poigai Azhwar to lie down; when Boothathazhwar joined him, they were able to sit ~ and then came Peyalwar who was invited to their fold saying that ‘one can lie; two can sit while there is sufficient place for all the three to stand’……. They were sharing their peregrinations in their divine journeys, they felt strange pressure in total darkness as there was some one more amidst……  being great sages with total dedication to Lord they lit light ~ how great and mighty in their bakthi they were….  Poigai Azhwar made the Great Earth  as the lamp; Ocean as the oil; the Sun as the light – all to be placed at the Lotus Feet of the Supreme Lord  and he sang 100 verses ~ Muthal Thiruvanthathi.  Sri Boothathalwar followed – making ‘love as the lamp; eagerness as the oil – the endearing thoughts as the wick to the lamp and the lit the lamp of wisdom’ – Sri Peyalwar having had the benefit of these lights rendered his ‘Moondram Thiruvanthathi’.  

முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரை இருவரும் வரவேற்றனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்தபோது, முதலில் பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு  (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார். 

பொய்கையாழ்வாரின் அற்புத நல்லுரை – என்னே ஒரு எளிய நடை – எவ்வளவு சீரியகருத்து.  

நாவாயில் உண்டே*  'நமோநாரணா' என்று,*

ஓவாது உரைக்கும் உரை உண்டே,* - மூவாத-

மாக்கதிக்கண் செல்லும்*  வகை உண்டே,*  என் ஒருவர்-

தீக்கதிக்கண் செல்லும் திறம்?

 

பக்தியோகம் ஒரு எளிய மார்க்கம்.  எம்பெருமானின் தாள் பணிந்து அவனை அடைவதே நம் லட்சியம்.  நற்கதி பெற என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறதா ? 

 
மிக எளிய உபாயம். மிக எளிமையாக  செய்யக்கூடியது. நம்மிடமே இருக்கும் அவயங்களை உபயோகிப்பது!  நாம் உண்பதற்கும், உணர்வதற்கும், உரைப்பதற்கும் உள்ளது நாக்கு.  நாம் சொல்லும் நாமம்  ஓம் நமோ நாராயணா எனும் திருவஷ்டாக்ஷரம். நாம் அறிந்த எளியவன் நாராயணனாகிய எம்பெருமான். இப்படி உயர்வான எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக் கொண்டு  -அவனை மட்டுமே உயர்வாக உரைப்போம்.  மந்தமதிப்புவி மானிடர்கள்,  உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு தங்கள் நாவை உபயோகித்து அநர்த்தப்படுகின்றார்களே! இஃது என்ன ஆச்சரியம்! என்று ஆழ்வார் வியக்கின்றார். உண்ணும்சோறு, பருகும்நீர், சொல்லும்சொல்,  எண்ணும்எண்ணம். எல்லாம் நாராயணனே என்று ஓயாமல் துதிப்போம். களைப்பில்லாமல், வேறுஸ்மரணை இல்லாமல் திரும்பதிரும்ப சொல்வோம் 'நமோநாராயணா ' என்ற நாமம்.  அந்த திருமந்திரம் நம்மை திரும்பப் பிறவாமல்  வைகுண்டத்திற்கு இட்டுச் செல்லும். ~ பொய்கைப்பிரான், முதல்திருவந்தாதி.

 


                         Poigai Azhwar is unable to comprehend the attitude of the residents of this earth.  All have a tongue and know the mantra ‘Om Namo Narayana’ – the purpose of living and simple way of doing yoga is chanting the name of Sriman Narayana with the blessed tongue / mouth – when recitation is the easiest path, some indulge in unnecessary prattle on useless things using one’s own mouth falling into the abyss of evil – why not they too realise and understand the easy path of attaining the heavenly Lord Sriman Narayanan.   

Today 24.10.2020 being ‘Aippasiyil Thiruvonam’ marks the sarrumurai vaibhavam of – Sri Poigai Azhwar. Today assumes added  significance for being  birthday of a great Acharyar – Pillai Logachariyar ~ a person of great wisdom who underwent untold sufferings in ensuring that the primordial Lord Thiruvaranganar is safe.  Today also marks  Vidayarri sarrumurai of Swami Manavala Mamunigal and day 8 of Navarathri uthsavam.    On  28.10.2017  it was Poigaiyar Sarumurai and in the purappadu it was the trio of Sri Poigaippiran, Pillai Ulagariyar and Swami Manavala Mamunigal with Sri Parthasarathi Perumal.   Here are some photos of the purappadu.

 

adiyen Srinivasadhasan.  [ Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
24th Oct 2020.

 


                                        Poigaiyar Pillailogachariyar and Mamunigal Sri Pillailogachar

Swami Manavala Mamunigal