To search this blog

Tuesday, June 24, 2025

Thiruvallikkeni Raja Gopuram

 


அதிகாலை அனுதினமும் கோவிந்த நாமம் பாடுவோம் ~ அவனருள் பெறுவோம். திருவல்லிக்கேணி திவ்யதேச கோபுர தர்சனம்

Sunday, June 22, 2025

Welcoming KKCP Doddayachar swami 2025

 

Welcoming Acaryar with poornakumbha maryathai



Shri U Ve Koil Kanthaadai chandamarutham Yoga Nrusimha swami.

@ Triplicane today (22.6.2025)

Sri Azhagiya Singar Garuda sevai 2021 ~

 

Sri Azhagiya Singar Garuda sevai   2021 ~



Please see the Garudan  on the  right

[Dhavana uthsava bungalow entrance]

 

Saturday, June 21, 2025

Emperuman is everywhere !!

 



We see Perumal everywhere - not in a Temple –

in the conference hall of TN Secretariat – (taken a few years ago!)

Observe Varahar; Sanku Chakram .. ..

 


Wednesday, June 18, 2025

Temple in OMR Chennai

   


Sri Ponniamman temple - Sholinganallur, taken from moving vehicle.

Thiruvallikkeni Aani masapravesam 2025

 

Thiruvallikkeni Aani Thiruvonam purappadu 2025 –

ஆழி - எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி


 

Sunday, June 15, 2025 was day 1 of Tamil month of Aani – masapirappu.  It was Thiruvonam too.  Heralding masapravesam and Thiruvona nakshathiram, Sri Parthasarathi Emperuman had siriya mada veethi purappadu. 

ஆழி -  எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். இதற்கு :  கடல்; கடற்கரை; அரசனின் ஆணைச் சக்கரம் ;   மோதிரம்; சக்கரம்; வட்டம்; கட்டளை என பல அர்த்தங்கள் உண்டு.  ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது முதன்மை  பொருள்.  இதனாலேயே   கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது.  திருவாரூரில் உள்ள திருத்தேர்  அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்கதுவாகும்.    பண்டைக்காலத்தில் திருவாரூர் தியாகேசப் பெருமான் தேருக்கு எழுந்தருளும்போது பொன்பூ, வெள்ளிப்பூக்களை வாரி இறைப்பதாகக் கூறுவர். பொன்பரப்பிய திருவீதி என்று ஒரு வீதிக்கு உள்ள பெயரை வைத்து இதனை உணரலாம். அடிக்கோராயிரம் பொன் சின்னங்கள் கூற அளிப்பார் என்று திருவாரூர்க் கோவையும், உய்யும்படி பசும்பொன் ஓராயிரம் உகந்து பெய்யும் தியாகப்பெருமானே என்று திருவாரூர் உலாவும் இதன் சிறப்பைக் கூறுகின்றன.  பெரிய தேரை இழுக்க 12,000 தேவைப்பட்டனர் என குறிப்புகள் உள்ளன. 




ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,

தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம்மான்  தன்னை

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,

நாளும் பிறப்பிடை தோறு எம்மையாளுடை நாதரே.  

ஆள்கின்ற பரம புருஷனாகவும் ஸ்ரீகிருஷ்ணனாகவும்  திருவாழியாழ்வானையுடைய  உபகாரகனாயும்,  ஒப்பற்ற நான்கு புஜங்களையுடையவனாயும்  பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தை  உடையவனாயுமிருக்கின்ற எம்பெருமானை, தாளும் தடக்கையும் கூப்பி  வணங்குகின்றவர்கள்  - எல்லா ஜென்மங்களிலும்,  தினந்தோறும் எங்களை ஆட்கொள்ளும் அடிகளாவர் என திருமாலடியார் தம் சிறப்பை உரைக்கின்றார் நம்மாழ்வார்.  

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே பார்த்தனுக்கு சாரதியாக பணி புரிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் - ஸ்ரீபார்த்தசாரதியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.  இதோ இங்கே நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளின் அற்புத திருக்கோலம் - ஆனி திருவோணம் புறப்பாடு 15.6.2025  அன்று  எடுக்கப்பட்ட சில படங்கள்

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
18/6/2025  







 

Saturday, June 14, 2025

Allikkeni Arulicheyal goshti

 

திருவல்லிக்கேணி அருளிச்செயல் கோஷ்டி –

ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை புறப்பாடு

file pic of 2022

 


கோதை குலமுனிவன் கூறிய  நூலோதி

– வீதி வாழியென வரும்திரளை வாழ்த்துவார்தம்

மலரடி  என் சென்னிக்கு மலர்ந்த பூவே.

Friday, June 13, 2025

thiruveedhi valam at mystic Triplicane

 

A street view of an occasion frozen on frame

 


At mystic Thiruvallikkeni devotion mingles & overflows  in every activity of its residents.  - Yet another grand day (this time Acaryan Swami Manavala Mamunigal sarrumurai 2022) 

A causal click depicting beautiful kolam spreading the road  entirely, devotees waiting for darshan, vadhyam and group of enthusiastic photographers !!

Chennapatnam koil prakaram

 

Pattnam Kovil  - Sri Adhi Kesava Perumal thirukkovil prakaram

-no flash photo


Thursday, June 12, 2025

Thiruvallikkeniyil Yaanai !

 



Elephant at Triplicane – a few years ago !  - accompanying 

Thirumylai Sri Adhi Kesava Perumal


Thiruvallikkeni Sri Andal Thiruvadipura purappadu 2015

 


Sri Andal Sri Parthasarathi Thiruvadipura purappadu 2015

-         Only now observed Sri Venkatakrishnan moolavar inside the kedayam frame

Sree Kodandarama Swami Temple, Vontimitta

Sree   Kodandarama  Swami  Temple,   at Vontimitta - Vijayanagara architectural style,  located at a distance of 25 kilometres (16 mi) from Kadapa, is close to Rajampet, Andhra Prades.  In the olden days Kadapa was also called "Hiranyanagaram".

 



Night view of Gopuram & Vimanam  and dwajasthambam taken in Jan 2021.


Wednesday, June 11, 2025

Swami Nammalwar sarrumurai 2025 - Vaikasi Visakham

 

Swami Nammalwar sarrumurai 2025 - Vaikasi Visakham



As we travel from Thirunelveli towards Tiruchendur – approx. 25 km away – on the banks of Tamirabarani, is this beautiful divyadesam  Thiru Kurugur. 

Train number 56036 is a passenger train that runs daily   between Tirunelveli (TEN) and Tiruchendur (TCN).  This is a century old railway line, inaugurated by Tinnevelly District Board of British Raj in the year 1923 to ferry men and materials, including salt the region is famous for. The 70km meter gauge line was dismantled in 2006 for gauge conversion and the broad gauge line was inaugurated in 2009.  The total distance of 61 KMs is covered in 1 hour 40 mins, passing through 12 stations:  Thirunelveli Jn; Palaykottai; Seydunganallur; Thathankulam; Sri Vaikundam; Azhwar Thirunagari; Nazareth, Kachchanavilai; Kurumbur; Arumuganeri; Kayalpattinam & Thiruchendur.  The trains in this line earlier were diesel loco but now replaced by electric locomotives.

For Srivaishnavaites, Thiru Kurugur is Azhwar Thirunagari, the thiruvavathara sthalam of Swami Nammalwar.  The temple is ‘Aathinadhar Azhwar Thirukovil’. It was one of the largest towns of Pandya dynasty.  The presiding deity is Aathippiran and Utsavar is PolinthuNinraPiran.  Thayar is Aathinaayaki and ThirukurugurNayaki. 

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ*

திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ*

ஒருபார் தனில் ஒக்குமூர்** 

Great words of our Acharyar Sri Manavala Maamunigal when hailing the birth of Swami Nammazhwar.   Acharyan Manavalamaamunigal in his ‘Upadesa Rathinamalai’ says :   there is no other day matching Vaikasi Visakam; there is none matching Sadagopar; there is nothing equivalent to ‘Thiruvaimozhi’ and there is no place on earth which can be treated on par to Thirukurugai – the birthplace of Swami Nammalwar.  Today 9th June 2025    [Vaikasi 26] is a great day – ‘Vaikasi Visakham’ ~ celebrating the birth of Swami Nammalwar.  

" ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தை ஏகமூர்த்திக்கே" ~ என   ஸர்வேச்வரானாயும், ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாயும், அந்தத் தன்மையினால் என்னை யீடுபடுத்திக் கொண்டவனாயும் அத்விதீயமான திருமேனியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்  திருவுள்ளம் பற்றுவதே!  என நமக்கு உபதேசித்த அற்புத ஆசார்யர் ஆழ்வார் ஸ்வாமி  நம்மாழ்வார்  அவதரித்த நன்னாள் இந்நாள்! 
 

திருக்கச்சியிலே ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதிக்கு தேவப்பெருமாள் எழுந்து அருள்வது விசேஷம்.  நம் திருவல்லிக்கேணியில் ஆழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாளுடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும்.   ஆயினும் ஆழ்வார் உத்சவம்  ஸ்ரீஅழகிய சிங்கர் ப்ரஹ்மோத்சவத்தில் வரும் போது  ஆழ்வார் அழகியசிங்கருடன் புறப்பட்டு கண்டு அருள்வார்.  சென்ற 2019 வருஷம் இரண்டாம் நாள் இரவு சிம்ம வாஹனம்.  ஒரு அசந்தர்ப்பத்தாலே திருவீதி புறப்பாடு நடைபெறவில்லை.   ஸ்ரீதெள்ளியசிங்கர் நம்மாழ்வார் சன்னதியிலேயே இரவு முழுதும் தங்கி இருந்து திருவாய்மொழி சாற்றியவருடன் உசாவி இருந்தார்.   மறுநாள்  அவருடனேயே திருமஞ்சனம்  கண்டருளி அருளிச்செயல் இசைக்கப்பெற்று, சாயங்காலம் 4 மணி அளவில் கருடசேவை புறப்பாட்டிலே உடன் செல்லும் பிரபாவம்.  திருவல்லிக்கேணியில் அப்படி ஒரு திவ்யசேவை.    



Of the Nava Thirupathi divyadesams, ThirukKurugoor is hailed as “AzhwarThirunagari”- as this is the Avatharasthalam of  Swami Nammalwar.   Madura Kavigal saw the leading light from Thiru Ayodhya, travelled all the way to Kurugoor, identified  Nammazhwar in the Puliyamaram [tamarind tree].  Mathurakavigal was so attached to Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to Nammazhwaar. 

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்காபுளிய மரம் பூக்கும்காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.   

The Greatest among Alwars preached to us – “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,” – that when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master.    Swami Nammazhwaar was born on the auspicious poornima day of Tamil Vaikasi month in Visakha nakshathiram at Thirukurugur, now famously known as ‘Azhwar Thirunagari’.  He was born to Kari and Udayanangai. Nammazhwaar has greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses), Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87) 

வைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும்  (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம்.  சடம் என்றால் காற்று.  வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம்.  இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார்.  

ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் – நவதிருப்பதிகளில் ஒன்றான அழகான திவ்யதேசம்.   நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் 'ஸ்ரீமன் நாராயணனையே பற்றுதல்பற்றி அறுதியிட்டு மங்களாசாசனம் செய்து உள்ளார். 

திருவாய்மொழி தனியனில்:- “திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,”  -  என பாண்டியநாட்டு தாமிரபரணிநதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.   இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமானதால் “ஆழ்வார்திருநகரி”  என்றழைக்கப்படுகிறது.  திருவாய்மொழி திராவிட வேதசாகரம் என போற்றப்படுகிறது.  ஸ்ரீமன் நாராயணனின்  பரத்வத்தையும் அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்ய  வேண்டியதையும் மிக   சிறப்பாக  அழுத்தமாக   ஆழ்வார்  நிலை  நாட்டியுள்ளார்.    இதோ இங்கே ஒரு துளி     :    

கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*

வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும்   புலவீர்காள்,*

கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,என்*

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 

குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய  அற்பரைக் குறித்து, வள்ளல்  என்றும்  உயர்ந்தவன் என்றும் போற்றுவதால்  நீங்கள்  பெறும் பலன் சிறிதுமில்லை. உங்கள்  வாய்மையை  இழப்பதை தவிர;  நீங்கள்  பாடுகிற துதிமொழிகளுக்கு மிகப்பொருத்தமானவன் -  பக்தர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும்  எவ்வித குறைகளும் இல்லாதவன்  ஆன மிக சிறப்பான நீலமணிவண்ணனுமான மணிவண்ணன் மட்டுமே;  நம் நா அவனை மட்டுமே  எவ்வெப்பொதும் துதிபாட வேண்டும் ! 

ஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே !!

ஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே !!

ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே !!

இலகு திருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே !!

வானணியும்மாமாடக் குருகைமன்னன் வாழியே !!

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !!

சேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே !!

திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே.  !!

 

Blessed are We to be born as Srivaishnavas, singing the glory of Alwars, Acaryas and Emperuman.  Glory to the feet of Swami Nammalwar and Sri Adhipiran.  Some photos of Swami Nammazvar at Thiruvallikkeni and his purappadu with Sri Parthasarathi Emperuman on his sarrumurai day when it rained during purappadu.

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.6.2025
 











Thiruvallikkeni Vasanthothsava Bungalow ~ representative image

 


Thiruvallikkeni Vasantha Uthsava Bungalow as it existed earlier !!!

(AI generated image based on a line drawing of Narasimhan Sampathkumar)


Tuesday, June 10, 2025

Passiflora !! ~ குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் - Krishna Kamalam

Passiflora, (passion vines), is a genus of about 550 species of flowering plants, the type genus of the family Passifloraceae.  They are mostly tendril-bearing vines, with some being shrubs or trees. They can be woody or herbaceous.  Passion flowers produce regular and usually showy flowers with a distinctive corona. There can be as many as eight concentric coronal series, as in the case of P. xiikzodz.  The flower is pentamerous (except for a few Southeast Asian species) and ripens into an indehiscent fruit with numerous seeds. 

Ever seen them !?  Flowers are beautiful  . .. .. they pervade fragrance and happiness.  Imagine walking in a beautiful garden -  sweet scent would waft  through the air.  In a Temple they pervade divinity.  The blooming and fragrance is perhaps  part of a strategy that helps flowering plants reproduce themselves and spread their species.  

When we think of flowers – Lotus, Roses, Jasmine, Mullai, Sampanki, Kanakambaram, Pavalamalli, Parijatham,  Mano ranjitham, vrutchi, Shenbagam, Samanthi, Hibiscus and more come to mind  -  then there is “Krishna Kamalam”. 



Krishna Kamalam, also known as Passion Flower or Passiflora, is a flowering plant with unique blooms and a significant role in Hindu  religious beliefs. The flower's structure is believed to represent characters and events from the Mahabharata, with specific elements symbolizing the Pandavas, Kauravas, and Draupadi.  The five yellow stamens in the center are said to represent the five Pandavas, while the numerous blue petals surrounding them are believed to represent the 100 Kauravas.   

The Krishna Kamalam flower is also associated with Lord Krishna, specifically his weapon, the Sudarshan Chakra, which is believed to be represented by the radial elements in the flower's center. 



பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !  எம்பெருமானுக்கு பலர் நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர்.  பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ  - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.  திருக்கண்ணங்குடி எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் பாடும்போது : 

குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி

திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே ~ என 

கருநெய்தற்பூக்கள்;  பெரிய தாமரைப் பூக்கள்;  ஆம்பல்; செங்கழுநீர்; நெய்தல்   ஆகிய இவற்றாலே அழகுபெற்ற கழனிகளையுடையதும் பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்,  சிறந்த ரத்னமயமான திருமதிளையுடையதுமான திருக்கண்ணங்குடியுள், நின்ற எம்பெருமான் என புகழ்ந்து பாடுகிறார்.           பூக்கள் என்றால் நமது நினைவில் வருவன : தாமரை; அல்லி; ரோஜா; மல்லிகை; முல்லை; சாமந்தி; கதம்பம் .. .. போன்றன. தமிழ் இலக்கியத்தில் நாம் காணும் பூக்கள் :  செங்காந்தள்,  ஆம்பல்,  அனிச்சம்,  குவளை,  குறிஞ்சி,  வெட்சி, வடவனம்,  வாகை,   கருவிளை,  குரவம்,  வகுளம்,    வள்ளி,  நெய்தல்,   தளவம்,  ஞாழல் மௌவல்  என பல பல.  மல்லிக்கும் முல்லைக்கும்  வித்தியாசம் காண தெரியாத என் போன்றோர்க்கு எத்துணை முறை தெரிந்தவர்களிடம் கேட்டாலும் புரிவதில்லை.  என் போன்றோர்க்கு - அவை அழகானவை, எம்பெருமானுக்கு சிறப்பானவை !!



On 8.6.2025, for Swathi purappadu a devotee (Athanki swami thirumaligai) offered a solitary ‘Krishnakamalam’ flower.  Here are photos of Sri Azhagiya Singar, the flower, and the flower at the lotus feet of Emperuman.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.6.2025