Today’s subject matter is a depiction on the Temple Gopuram at Sri Varadharaja Perumal thirukkovil at Arcot.
அங்கப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பெருமான் பெருமை - பக்தனுக்காக உடனடியாக ஓடி வந்த நரசிங்கம். இரணியனது ஆகம் கீண்டதை கம்ப நாட்டாழ்வார் வரிகளில் :
‘ஆயவன் தன்னை, மாயன், அந்தியின், அவன் பொன்
கோயில் வாயிலில், மணிக் கவான்மேல், வயிர வாள் உகிரின்
வாயின், மீ எழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீ எழப் பிளந்து நீக்கி, தேவர்தம் இடுக்கண் தீர்த்தான்.
ஆச்சரியப்படத்தக்க செயல்களை எல்லா சமயங்களிலும் செய்யும் ஆற்றல் படைத்த மாயனான ஸ்ரீமந்நாரணன், பல தவறுகள் இழைத்த அரக்கனாயினும், இரணியன் பெற்ற வரங்களிடையே முரண்பாடின்றி வதைபுரிய - இரவிலும் பகலிலும் சாகக் கூடாது; வீட்டுக்குள்ளும், வெளியேயும் சாகக் கூடாது; விண்ணிலும் மண்ணிலும் சாகக்கூடாது; பறவை, விலங்கு, மனிதர், தேவர், அரக்கர்களால் சாகக்கூடாது, எந்தப்டைக் கலத்தாலும் சாகக் கூடாது என்று பிரமனிடம் வரம்கேட்டுப் பெற்றவன் இரணியனை - அந்தி மாலைப் பொழுதில், வாயிற் படியில் கிடத்தி சிங்க உருவும் மனித உருவும் கூடின, நரசிங்கப் பெருமான் நகத்தால் உடலைப் பிளந்து இரணியனைக் கொன்று, தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தார்.
ஆயவன் இரணியனை; மாலைப் பொழுதிலே; அவன் அழகிய அரண்மனையின் வாயிலிலே; தனது அழகிய மடியின் மீது (கிடத்தி); உறுதியுடைய ஒளி பொருந்திய தனது கை நகத்தின் முனையாலே; இரணியன் உடலிலிருந்து இரத்தம் மேலெழுந்து பொங்கிவர; ஒளியைப் பரப்பும் அவ்விரணியனது வைரம் பாய்ந்த மார்பினை; நெருப்பெழும்படி இருபிளவாகப் பிளந்து இரணியனைக் கொன்று; தேவர்கள் அதுவரை பட்ட துன்பத்தை மாயைகள் பல வல்ல திருமால் போக்கினான்.
Arcot (natively spelt as Ārkāḍu) is a town and urban area of Ranipet district. Located on the southern banks of Palar River, the city straddles a trade route between Chennai and Bangalore or Salem, between the Mysore Ghat and the Javadi Hills (Javvadhu malai). It is a Tri-City with the adjacent municipalities of Walajapet and Ranipet. The siege of Arcot took place in 1751 – fought between forces of the British East India Company led by Robert Clive who allied with Muhammad Ali Khan Wallajah and forces of Nawab of the Carnatic, Chanda Sahib, who allied with the French East India Company. It was part of the Second Carnatic War.
The temple on the
banks of Palar river is - Sri Perundevi
Thaayar Samedha Sri Varadharaja Perumal Temple, likely to be more than 1000
years old built during the Pallava
period.
Depiction
of Iraniya vatham by Lord Narasimha on the gopuram of the temple.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.4.2025
No comments:
Post a Comment