To search this blog

Saturday, January 1, 2022

Praying Sri Parthasarathi Emperuman - ஸ்ரீமந்நாரணனே அருமருந்து !!

Another year has fleeted past – and today it is English New year 2022 – We pray our Emperuman for the welfare of us all – for the World becoming a better place to live, rid of Covid and other diseases – all that is possible only by the divine grace of Sriman Narayana, the greatest benefactor – the cure for every trouble !!

 


ஸ்ரீவைணவம் ஓர் எளிய மார்க்கம். அருமருந்து (பெ)- மிகச் சிறந்த மருந்து; effective remedy.  மேலும் அருமையான மருந்து, கிடைத்தற்கரிய மருந்து எனவும் கொள்ளலாம்.  நம் பிணிகளுக்கு எல்லாம் அருமருந்து ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே !  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் மட்டுமே நிரந்தரமானவன் - ஒரு நாளும்   அழிவில்லாதவன். - அவ்வெம்பெருமானை அடைய என்ன செய்ய வேண்டும் ?? 

The World is in crossroads !  From Mar 24, 2020, India went into lockdown and so did most parts of the globe.  By the end of the year, there was some relief, only to peak again in a few months – the world is getting used to living with it but that fragile peace too is lost by another - the Omicron variant of coronavirus has been spreading fast across the world, even becoming the dominant strain in the United States. Since being detected in South Africa on November 24, the strain has spread to more than 100 countries till now.  The situation is particularly bad in Europe, which has been battered by Omicron. It has led to surge in coronavirus disease (Covid-19) infection in countries like the United Kingdom, where one lakh cases were recorded in a day recently. 

Most theories of World coming to an end would point to ‘flood’ or the ‘deluge’ encompassing Nations, killing millions of people.  Floods, cyclones, earthquakes, tsunami, plague, wars, nuclear threat have all been the most feared ones by the mankind.  2020 has added a new threat – the Corona virus, Covid 19 emanating from Wuhan, China.   There are theories that pandemics are striking with greater frequency primarily because of deforestation, environmental degradation, rapid urbanisation, overpopulation, migration and growing animal and human conflict.  

Omicron is the 15th letter of the Greek alphabet.    The Omicron variant is a variant of SARS-CoV-2, the virus that causes COVID-19. As of December 2021, it is the newest variant. It was first reported to the World Health Organization (WHO) from South Africa  in Nov 2021 and WHO designated it as a variant of concern and named it "Omicron."  The variant has an unusually large number of mutations, several of which are novel  and a significant number of which affect the spike protein targeted by most COVID-19 vaccines at the time of the discovery of the Omicron variant. This level of variation has led to concerns regarding its transmissibility, immune system evasion, and vaccine resistance, despite initial reports indicating that the variant causes less serious disease than previous strains. The variant was quickly designated as being "of concern", and travel restrictions were introduced by several countries in an attempt to slow its international spread. 


பொதுவாக மனித இனமும் உலகமும் ஒரு நாள் முழுதும்  அழியும் என்ற பயம் என்றென்றும் உள்ளது.  அதுவே பிரளயம் என பல நம்பிக்கைகள் உள்ளன.   பூலோகம் வெள்ளத்தினால் அழியுமெனவும், பூகம்பம் உள்ளிட்டவையால் அழியும் என்பது அனைவரும் கருதக் கூடியது.  கடல்கோள் ஏற்பட்டு குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.  வெள்ளம், புயல், நெருப்பு, ஆழிப் பேரலை எனும் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் தவிர, போர்கள், அணு ஆயுத தாக்குதல்கள் என மனித இனம் அழியலாம் என சிலர் ஆருடம் கூறினார்.  முன்னாளில் பஞ்சமும், கொள்ளை நோய்களும் மனித இனத்தை தாக்கின.  இப்போது உலகையே அச்சுறுத்துவது 'கொரோனா' எனும் நுண்ணியிரி தாக்கம்.இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலர் நிம்மதியற்று உள்ளனர்.  கொரோனா தீநுண்மி - புதிய ஓமைக்ரோன்  உலகோரை பயமுறுத்தி உள்ளது.  இந்த கடின காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும் !! 

எம்பெருமானை அடைய என் செய்ய வேண்டும் ?  காரிமாறன் சடகோபன் சுவாமி நம்மாழ்வார் நமக்கு பல அருமருந்துகளை உரைத்துள்ளார்.  இயற்பாவில், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி அவர் அருளியவை.  பெரிய திருவந்தாதி எண்பத்தேழு நேரிசை வெண்பாக்களைக் கொண்ட கவிதை. இதில் நம்மாழ்வார் தம் நெஞ்சோடு பேசுகிறார். மனதின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் ஒருவன் ஆன்ம சாதனையிலும் பக்தியிலும் சிறந்து விளங்க முடியும். எனவே நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் நெஞ்சமே நெஞ்சமே என பல பாசுரங்களில் மனதை விளித்து  எம்பெருமானின்  பாத கமலங்களைப் பற்ற விழைகின்றார்.  பெரிய திருவந்தாதி அதர்வணவேத சாரமாகப்பாடப்பட்டது என்கிறார்கள். பாப விமோசனத்துக்கான பல பாசுரங்கள் இத்திருவந்தாதியில் உள்ளன.   இதோ இங்கே ஒரு பெரிய திருவந்தாதி பாசுரம் : 

காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,

நாணப் படுமன்றே நாம்பேசில்?  -  மாணி

உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,

திருவாகம் தீண்டிற்றுச் சென்று.

 

பற்றுதல் என்றால் - பிடிப்பு; பற்று;-  attachment, bonding  என கொள்ளலாம். எம்பெருமானை அடைதலும் ஒரு பற்றுதலே !  எம்பெருமான் மீது பற்றுதல் இருவகைப்படும்.  எம்பெருமானை நாம்சென்று பற்றுகிறது, அவனே நம்மை பற்றுவது !!   நாம் அவனை அடைய முயற்சியினால் அவனடி சேர்தல் -  ஸ்வதஸ்வீகார மெனப்படும். அவன்தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகதஸ்வீகாரமெனப்படும் இவ்விரண்டுள், எம்பெருமான்தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்ததென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம். 


பிள்ளைலோகாசிரியர்  ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்; ‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன்தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி பார்த்திருக்கையன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தமது கிரந்தத்தில் விளக்குகிறார். இப்பாசுரத்திலே ஸ்வாமி  நம்மாழ்வார் அருளிச்செய்தபடி,  எம்பெருமானை நாம் காணப்புகுவதும் பேசப்புகுவதும் வெட்கப்படத்தக்க விஷயமன்றோ. ஏனென்றால், எம்பெருமான் குறட்பிரமசாரியாகி மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்ற காலத்துத் தானே தனது திருமேனியைக் கொண்டு இவ்வுலகத்தையெல்லாம் தீண்டினான் ஆகையாலே நம்மை வந்து தீண்டிக் கைக் கொள்வதற்கு அவன்தானே ஸித்தனாயிருக்க, அதற்கு மாறாக அவனை நாம் காணப்புகுவதும் பேசப்புகுவதும் தகாத காரியமன்றோ. நம்முடைய முயற்சி நாணத்தக்கதன்றோ என்கிறார். 

We fall at the lotus feet of Sriman Narayana, seeking all goodthings for our community, our World, for our Society, for our Nation.  Here are some photos of our beautiful Sri Parthasarathi Emperuman oozing beauty and compassion.  We pray at his lotus feet. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan  Sampathkumar
1st Jan 2022.
 
பாசுர விளக்கம் :  கச்சி ஸ்வாமி ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் உரை - ஒப்புயர்வற்ற கலை களஞ்சியம் dravidaveda.org  ல் இருந்து. 

1 comment: