To search this blog

Thursday, January 13, 2022

Vaikunda Ekadasi 2022 - Paramapada sobhana padam !

இன்று   13.1.2022   வைகுண்ட ஏகாதசி நன்னாள்.   ஸ்ரீவைஷ்ணவ உலகம் கொண்டாடும் ஓர் அற்புத நாள். இன்று முதல் பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான்,  சடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம்  திருவாய்மொழியை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும் நிகழ்வில் காரிமாறனை திரும்ப அளித்து நமக்கு அருள் செய்வான்.  பத்து நாட்கள் பகல் பத்து உத்சவம் முடிந்து, இன்று முதல் இராப்பத்து.

அருகாஷன் என்ற பெயர் ஞாபகம் உள்ளதா ?? 

திருமங்கை ஆழ்வார் ஏற்படுத்திய இந்த அத்யயன  உத்சவத்தை, நாம் இன்று குறையில்லாமல் அனுபவிக்க முக்கியமான காரணம் நம் ஆசார்யர் ஸ்வாமி மணவாள மாமுனிகளே! .. அத்யயன உத்சவத்தின் சிறப்பு - எம்பெருமான் முன்பே அனைத்து ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்தருளப்பண்ணி அருளிச்செயல் சேவை சாதிப்பதே.

The universe  is all of space and time and their contents,  including planets, stars, galaxies, and all other forms of matter and energy. The Big Bang theory is the prevailing cosmological description of the development of the universe. According to estimation of this theory, space and time emerged together 13.8  billion years ago, and the universe has been expanding ever since. While the spatial size of the entire universe is unknown, the cosmic inflation equation tells us that it must have a minimum diameter of 23 trillion light years, and it is possible to measure the size of the observable universe, which is approximately 93 billion light-years in diameter at the present day.

It's one of the most compelling questions you could possibly ask, one that humanity has been asking since basically the beginning of time: What's beyond the known limits? What's past the edge of our maps? The ultimate version of this question is, what lies outside the boundary of the universe? The answer is …  not a straight one but very complex compounding one.  Perhaps the first requirement is to define ‘what is Universe’.  It could mean  all the things that could possibly exist in all of space and time, then there can't be anything outside the universe.  

The universe is everything. It includes all of space, and all the matter and energy that space contains. It even includes time itself and, of course, it includes you. Earth and the Moon are part of the universe, as are the other planets and their many dozens of moons. Along with asteroids and comets, the planets orbit the Sun. The Sun is one among hundreds of billions of stars in the Milky Way galaxy, and most of those stars have their own planets, known as exoplanets.

Sri Paramapadha Nadhan is the form in which Emperuman Sriman Narayana is seated at Paramapadham beyond Universe to which we humans aspire to go after leaving this earthly World !

 


On the day of Vaikunda Ekadasi in the morning @ around 04.30am  Sri Parthasarathi bedecked in precious jewels entered Paramapada vassal  -   ‘Vedha vinnappam’ was rendered by goshti. Sadly at Thiruvallikkeni and at other temples, devotees were not allowed to worship  Emperuman on this occasion. 


ஸ்ரீவைகுந்தத்தின் எம்பெருமான் வீற்றிருக்கும் பரமபதத்தில் நிலவும்  இன்பம் எப்படி இருக்கும் ?   இவ்வையகமே  நிலையற்றது.  ஸ்ரீவைணவர்கள் விரும்புவது என்ன ~ 'வீடு பேறு' - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உறையும்  இடமான பரமபதம் சென்று, பரமபதநாதன் வீற்று இருக்குமிடத்திலே அத்தாணி சேவைகள் செய்வதே !.   பூலோகத்துக்கு அப்பாற்பட்ட பரமபதம் எனும் திருப்பதியிலே - எம்பெருமான் பரமபத நாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் , பெரிய பிராட்டியுடன்  அநந்தாங்க விமான நிழலில் சேவை சாதிப்பார்.  இந்த க்ஷேத்திரத்தின்  நதி, விரஜா நதி என்பர்.  அனந்தன், கருடன், விஷ்வக்சேனர், முதலான நித்ய சூரிகளும், முக்தர்களும் இங்கே கைங்கர்யங்கள் செய்வார்கள்.   எம்பெருமானுடைய ஐந்து நிலைகளில் - பர; வ்யூஹ; விபவ; அர்ச்சை ;  அந்தர்யாமி நிலைகளில் பரத்வம் நிறைந்து நிற்குமிடம் 'திருபரமபதம்".  

 


முன்னொரு காலத்தில், பெரியவர், சிறியவர் என வீட்டில் உள்ள பலரும் கலந்து விளயாடுவர்கள் - வைகுண்ட ஏகாதசியன்று 'பரமபத சோபன படம்' எனும் அட்டையை வாங்கி, அழகான தாயக்கட்டைகளை உருட்டி விளையாடி மகிழ்வர். 

Though it predominantly had Snakes and Ladders, it cannot simple termed as ‘Snakes & Ladder’ game of rolling dices !  it has  morality overtures where devotion and hardwork would lead to prosperity- many evils like greed, avarice, bad intentions, indulgence and disobedience would lead to poverty. 


பரமபத சோபனம் விளையாடிய அனைவரும் பயந்தது கட்டம் 106 -  இந்த கட்டத்தை அடைந்தால் 'அருகாஷன் ' என்ற பாம்பின் வாயில் சிக்கி முதல் கட்டம் (குரங்கு) சென்றடைவோம் !  மனிதன் தோன்றுவதற்கு பன்னெடுங்காலத்துக்கு முன்தோன்றியவை பாம்புகள். இத்தனை யுகங்கள் கடந்த பிறகும் பாம்புகள் மீதான பயம் மட்டும் மனிதர்களுக்கு நீங்கவே இல்லை.   உலகளவில் 3,458 வகை பாம்பு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனவாம். இதில் 600 வகை பாம்புகளே நஞ்சுள்ளவை. அதிலும் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதனை கொல்லும் அளவுக்கு விஷமுள்ளவை என படித்தாலும் பயம் போகாது ! 

'அபிதான சிந்தாமணி' எட்டு பெரிய நாகங்களைக் குறிப்பிடுகிறது. அனந்தன், வாசுகி, தக்கன், கார்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகள் என்பவை அவை. பிறிதொரு இடத்தில படித்தது, பாதாளத்திலிருந்து வந்த தனஞ்செயன் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவன்ஆதிசேஷன்.   மஹாபாரதத்திலே  சௌதி சொன்னார், "ஓ தவத்தை செல்வமாய்க் கொண்டவரே! {சௌனகரே},  . அனைத்துப் பாம்புகளின் பெயர்களையும் என்னால் குறிப்பிட இயலாது. முக்கியமானவர்களின் பெயர்களை மட்டும் நான் விவரிக்கிறேன். கேட்பீராக.!! 

சேஷன் முதலில் பிறந்தான், அதன்பிறகு வாசுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காலகேயன் {காளியன்}, மணி {மணிநாகன்} என்ற பாம்பு, பூரணன் {ஆபூரணன்}, பிஞ்சரகன், ஏலாபத்ரன், வாமனன், நீலன், அநீலன், கல்மாஷன், சபலன், ஆர்யகன், உக்கிரன் {உக்கிரகன்} {சதிகன்}, கலசபோதகன்{சலபோதகன்}, சூரமுகன் {சுமனோமுகன்}, ததிமுகன், விமலபிண்டகன், .. ..  நஹுஷன், பிங்களன், பாஹ்யகர்ணன், ஹஸ்திபதன், முத்கரபிண்டகன், கம்பலன், அசுவதரன், காளீயகன், விருத்தன், சம்வர்த்தகன், பத்மன், மஹாபத்மன், சங்கமுகன், கூச்மாண்டகன், .. .. .. ..  குஞ்சரன், குமுதன், குமதாக்ஷன், தித்திரி, ஹலிகன், கர்த்தமன், பகுமூலகன், கர்க்கரன், அகர்க்கரன், குண்டோதரன் மற்றும் மகோதரன் ஆகியோர் பிறந்தனர். [பாம்பு பெயர்கள் :  நன்றி திரு அருள்செல்வ பேரரசன் - மஹாபாரதம் - ஆதி பர்வம்] 

நமது சம்ப்ரதாயத்திலே - எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீ பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது. பரவாசு  தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும்,உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம்.பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் (சோபிக்கும்) படம். 


ஒன்று முதல் 132 கட்டங்கள் கொண்ட விளையாட்டு அட்டையில் நிறைய சின்ன பாம்புகள் மிகப்பெரிய பாம்புகல் சிலவும் இருக்கும். அனைத்தையும்  தாண்டி விட்டால்   நாம் செய்த புண்ணியங்களின் மூலம் பாம்பின் வாயில் கடிபடாமல் தப்பித்து பரமபதத்தின் இறுதி நிலையான வைகுண்ட வாசலை அடையலாம் என்பதை உணர்த்துகிறது இந்த விளையாட்டு.  

இதில் ஒரே சமயத்தில் பல பேர் விளையாடமுடியும்.  தாயக்கட்டையை உருட்டி  (முதலில் ஒரு தாயத்துடன் தான் துவங்க வேண்டும்) - நமது காய் சென்று நிற்கும் கட்டத்தில், என்ன இருக்கிறதோ - அதன் வழி செல்ல வேண்டும்.  ஏணியில் மேலே ஏறி, பாம்பில் கீழே இறங்கி விடாமுயற்சியுடன் ஒருவழியாக மேலே ஏறி, பரமபதத்தை - அதாவது இறைவனின் திருவடியை அடைவதை விளக்குவதே இந்த விளையாட்டு. சோபனம் என்ற சொல்லுக்குப் படிக்கட்டு என்று பொருள் உண்டாம். . இறைவனை அடைவதற்கு ஒவ்வொரு படிக்கட்டாக ஏற முயல வேண்டும். அம்முயற்சியில் நம்மை மேலே ஏற்றும் ஏணியைப் போன்ற நிகழ்வுகளும் - நபர்களும் உண்டு; கடித்துக் குதறிக் கீழே இறக்கிவிடும் பாம்பைப் போன்ற நிகழ்வுகளும் - நபர்களும் உண்டு.   நம் குணங்கள், செயல்களில் ஈடுபடத் தூண்டுகின்றன. செயல்கள் நல்லதாக இருந்தால், உயர்வும்; செயல்கள் தீயவையாக இருந்தால் தாழ்வும் உண்டாகின்றன.  , நம்முடைய துவேஷம் நம்மைக் கீழே இறக்கிவிடும் என்பதை விளக்கவே, 26-ம் எண்ணுள்ள கட்டத்தில் பாம்பின் தலை இடம் பெற்றிருப்பதோடு, துவேஷம் என்ற சொல்லும், 47 க்ரோதம், 59 மோகம், 97 பொறாமை என  இடம் பெற்றிருக்கிறது.   

இன்று பரமபதம் விளையாடினீர்களா ? - எம்பெருமானிடத்தே செல்ல மனமார வேண்டினீர்களா ?  எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என நம் உயர்குரு மணவாள மாமுனிகள் விளம்பியபடி - அர்ச்சாவதாரம் மிக்க சிறப்பு வாய்ந்தது.  ஒரு சமயம்,  நஞ்சீயர் - நம்பிள்ளைக்கு  ‘அர்ச்சாவதாரத்திற்கு பரத்வமுண்டென்று அறிந்த அளவில்’  அதாவது  அர்ச்சை சொரூபம் (விக்ரஹரூபம்) எல்லாவற்றையும் விட சிறந்தது, மேன்மையானது என உபதேசித்தாராம்.  அவ்வளவில் இன்று நம் ஜெகத்ரக்ஷகனான ஸ்ரீ பார்த்தசாரதி திவ்ய மங்கள ஸ்வரூபத்தை சேவித்தவர்கள், அவனிடத்திலே என்றென்றும் ஆட்பட்டு இருப்பர். 

The divine Thirumamani mandapam is representative of the abode of Sriman Narayana, the holy  “Sri Vaikuntam” itself.  For Sri Vaishanavaites, the ultimate in life is attainment of moksha [salvation] by reaching Vaikuntam, the ultimate destination, the abode of Lord Himself.  This is ‘The place’ of no return and the human soul is free from the ills of the World and gets the supreme opportunity of nithya kainkaryam [daily service] to Lord. 

Here are some photos of yesteryears Vaikunda Ekadasi

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13th Jan 2022. 

No comments:

Post a Comment