How rich are you ? – does that correspond to how much of money you own ? or is it what are the resources available at your disposal. Wealth measures the value of all the assets of worth owned by a person!
இது வணிக உலகம் - பொருளாதாரத்தில் - பணம், பொருட்களின் மதிப்பு அதிமுக்கியமாக கருதப்படுகிறது. பொருளியலில் பணத்தின் முதன்மை பயன்பாடுகளாக பரிமாற்றத்திற்கான ஊடகம், கணக்கிற்கான அலகு மற்றும் சேமிப்பு மதிப்பு என வரையறுக்கப்படுகிறது. மாந்தர்கள் பணத்தின் பின்னால் இரவு பகலாக ஓடுகின்றனர். இவ்வாறாக சேர்க்கப்பட்ட நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்கவொட்டாது; எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று தூங்க விடாது !!
இது எல்லாம் பொருட்செல்வத்திற்க்கு மட்டுமே ! கல்வி போன்ற ஞானம் தீ, திருட்டு எதனாலும் அழியாது.
இதற்கும் மேலான நிதி தான் நம் எம்பெருமான் - இந்த சிறந்த செல்வம் நிலத்தில் புதைப்பதல்ல
!;ஆழ் நெஞ்சினிலே அழகாக வைத்து ஆள வேண்டிய வைத்தமாநிதி.
An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations, generally referred to by its shortened title The Wealth of Nations, is the magnum opus of the Scottish economist and moral philosopher Adam Smith. First published in 1776, the book offers one of the world's first collected descriptions of what builds nations' wealth, and is today a fundamental work in classical economics. By reflecting upon the economics at the beginning of the Industrial Revolution, the book touches upon such broad topics as the division of labour, productivity, and free markets.
Wealth is the abundance of valuable financial assets or physical possessions which can be converted into a form that can be used for transactions. The modern concept of wealth is of significance in all areas of economics, and clearly so for growth economics and development economics, yet the meaning of wealth is context-dependent. An individual possessing a substantial net worth is known as wealthy. Net worth is defined as the current value of one's assets less liabilities.
At the most general level, economists may define wealth as "anything of value" that captures both the subjective nature of the idea and the idea that it is not a fixed or static concept. Various definitions and concepts of wealth have been asserted by various individuals and in different contexts. The United Nations definition of inclusive wealth is a monetary measure which includes the sum of natural, human, and physical assets. infrastructure.
The Wealth of Nations has many themes – first
is : regulations on commerce are
ill-founded and counter-productive. The prevailing view was that gold and
silver was wealth, and that countries should boost exports and resist imports
in order to maximize this metal wealth.
Another central theme is that this productive capacity rests on the
division of labour and the accumulation of capital that it makes possible. Then there is theme that a country’s future income depends upon this
capital accumulation. Yet another propagation is that this system is automatic. Where things
are scarce, people are prepared to pay more for them: there is more profit in
supplying them, so producers invest more capital to produce them. Where there
is a glut, prices and profits are low, producers switch their capital and
enterprise elsewhere. Industry thus remains focused on the nation’s most
important needs, without the need for central direction.
திருமங்கையாழ்வாரின் அர்த்தம் செரிந்த அற்புதப் பாசுரம் 'நிதியினை பவளதூணை" !! திருமங்கைமன்னன் பற்பல திவ்யதேசங்கள் சென்று மங்களாசாசனம் செய்தவர். அவர் அருளிய பாசுரங்கள் : பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்); திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்); திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்); திருவெழுக்கூற்றிருக்கை ( 1 பாசுரம்); சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல்.
தாண்டகம் என்பது (தமிழில்) ஒரு பிரபந்த வகை. குறுந்தாண்டகம்;அறுசீர் கொண்ட அளவொத்த நான்கு அடிகளால் ஆகியது. இதில் ஒவ்வோர் அடிதோறும் மெய்யெழுத்துகள் உட்படப் பதினைந்து எழுத்துகளுக்குக் குறையாமலும், இருபத்தாறு எழுத்துகளுக்கு மேற்படாமலும் இருக்கும். நாலுகவிப் பெருமாள் எனப்படும் இவ்வாழ்வாரின் கவித்திறனை இப்பிரபந்தம் வெளிப்படுத்துகிறது.
நிதியினைப் பவளத் தூணை, நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக், கண்டுமுன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி, வணங்கிஎன் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட, தொண்டனேன் விடுகிலேனே!!
தன் பக்தர்களுக்கு மிக மதிப்புள்ள நிதி போன்றவனும், பவளம்போல் இனியேனும், தூண் போல் தாரகனும், ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்லவர்களுக்குப் பரமகதியாயிருப்பவனும், முன்பு கம்ஸன் முடிந்து போகும்படி, உலகங்களை ரக்ஷித்தருளினவனும், தன்னடியார்களை எப்போதும் நினைத்துக் கொண்டேயிருப்பவனும், தன்னடியார் திறத்திலே எப்போதும் பாசமே வடிவெடுத்தவனும், நான் தாள் பணிந்து, வாழ்த்திவணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை ஸேவிக்கப்பெற்ற தொண்டனான அடியேன் - அவ்வெம்பெருமானை இனி ஒருநாளும் விடமாட்டேன் என்று அறுதியிட்டு உரைக்கின்றார், நம் கலியன். .
இத்தகைய சிறப்பு வாய்ந்த எம்பெருமானை தாள் பணிந்து வணங்குவோம். அவனடி
சேர்ந்து அவனருள் பெற்றவர்க்கு எந்த குறையுமே இராது !
Reminiscing
the glorious past, here are some photos from Sri Azhagiya Singar Brahmothsavam
2019 – porvai kalaithal vaibhavam.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28th Dec 2021.
Very nice.
ReplyDelete