To search this blog

Wednesday, October 22, 2025

ஸ்ரீ பார்த்தசாரதி - அருங்கல உருவின் ஆயர் பெருமான் !!

 

கன்றுகள் மேய்த்து தம் தோழரோடு வலம் வந்த மாயோன் கண்ணபிரான்.  அருங்கல உருவின் ஆயர் பெருமான்  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் 'ஆயர் குலத்தில்வந்து உதித்தவராக – சாட்டை (கோல்),  தண்டம்,  தலைப்பாகை,   என அணிந்து- இன்று 22.10.2025    திருவல்லிக்கேணியில் அன்னக்கூட உத்சவத்தில்  மிக அழகாக சேவை சாதித்தார்.   

 


"சீலை குதம்பை ஒரு காது, ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ" என கண்ணன் கன்றுகள் மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்ந்ததை பெரியாழ்வார் அனுபவித்த வண்ணம், ஸ்ரீபார்த்தசாரதி தனது காதுகளில் 'ஓலை மற்றும் பூ' போன்ற திருவாபரணங்களை அணிந்து கொண்டு அழகான பட்டு உடுத்தி, கைகளில் வளைகள் அணிந்து சேவை சாதித்தது – அற்புதமானது,  கிடைத்தற்கரியது. 

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.  

No comments:

Post a Comment