To search this blog

Monday, April 15, 2024

Attractive linear drawing of a kid - Thiruvallikkeni devotion

உங்கள் திறமை என்ன !  - தரையில் மாவு கொண்டு அழகாக கோடுகள் வரைய இயலுமா !

 


கோடுகள்  - வடிவவியலில் கோடு (அல்லது நேர்கோடு) (Line) என்பது கணக்கிடமுடியாத அளவுக்கு (தோராயமாக முடிவிலிக்குச் சமமாக) மிகச் சன்னமானதும் மிக நீளமானதுமான ஒரு வடிவவியல் உருவம்.  அதாவது நீளமானதும் நேரானதுமான வளைகோடு, நேர் கோடு ஆகும். ஒரு நேர்கோட்டை வரையறுக்க இரண்டு புள்ளிகள் தேவை. அந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான குறைந்த பட்ச தூரத்தின் பாதையில் நேர்கோடு அமையும். இரு கோடுகள் அதிக பட்சம் ஒரு புள்ளியில் தான் வெட்டி கொள்ள முடியும். இரு தளங்கள் அதிக பட்சம் ஒரு நேர்கோட்டில் தான் வெட்டி கொள்ள முடியும் 

A is a  a straight set of points that extend in opposite directions. It has no ends in both directions (infinite); it has no thickness; it is one-dimensional.  In Geometry, a straight line, usually abbreviated line, is an infinitely long object with no width, depth, or curvature, an idealization of such physical objects as a straightedge, a taut string, or a ray of light. Lines are spaces of dimension one, which may be embedded in spaces of dimension two, three, or higher. The word line may also refer, in everyday life, to a line segment, which is a part of a line delimited by two points (its endpoints). 

The adjective ‘Linear’ means :  arranged in or extending along a straight or nearly straight line.  Lines are used in a particular way to create depth and perspective on a flat surface to portray a three-dimensional scene. 

In Mathematics, a linear equation is an equation that may be put in the form   where there are variables (or unknowns), and the coefficients, which are often real numbers. The coefficients may be considered as parameters of the equation and may be arbitrary expressions, provided they do not contain any of the variables.  Linear programming (LP), also called linear optimization, is a method to achieve the best outcome (such as maximum profit or lowest cost) in a mathematical model whose requirements and objective are represented by linear relationships.  Well, no post on Maths or Science but on kolam. 

இப்படி கோடுகளையோ அல்லது புள்ளிகளையோ அழகாக ஒருங்கிணைத்து கோலங்கள் வரைவார்கள். திருவல்லிக்கேணி மற்றும் ஏனைய திருத்தலங்களில் எம்பெருமான் திருவீதி புறப்பாடு கண்டருள்வார்.  அவ்வமயம் பக்தர்கள் அவரவர் வீடுகளின் முன்னர் நீர் தெளித்து சுத்தம் செய்து அழகாக மாக்கோலங்கள் இட்டு பெருமாளை வரவேற்பார்கள். 

கோலம் வீட்டு முகப்பின் அழகினை அதிகரிக்கச்செய்யும் ஒரு எளிய உத்தி. தினமும் வகை வகையான கோலம் போடுதல் இந்த அழகினை இன்னும் மேம்படுத்தும்.இந்தியாவின் பல்வேறு மக்களை ஒன்றினைக்கும் பல விஷயங்களில் கோலமும் ஒன்று.  பழக்கம் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளது.  கோலம் என்பது வெறும் பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல ஒவ்வொரு கோலத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் மறைந்து கிடக்கிறது. 

திருவல்லிக்கேணியின் பெருமைகளில்  ஒன்று பக்தர்கள் தம் அர்ப்பணிப்பு.  இந்த சின்ன குழந்தை,  தான் கோலம் போட்டே தீருவேன் என செல்லமாக அடம் பிடித்து ஸ்ரீராமர் புறப்பாட்டின் போது இட்ட மிக அழகிய தீற்றல்கள் இங்கே.

 





பொலிக, பொலிக, பொலிக !  - இத்தகைய குழந்தைகளும் அவர்தம் பெற்றோர்களும்.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.4.2024. 

No comments:

Post a Comment