To search this blog

Tuesday, April 9, 2024

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி நெற்றிச்சுட்டி

                    நெற்றிச்சுட்டி  என்பது ஓர் அழகு அணிகலன்.  மகளிரும் குழந்தைகளும்   தலையில், நெற்றியின் மேற்புறத்தில் அணியும் அணிகலன்.

எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வடிவழகை எவ்வாறு அனுபவிப்பீர் ?  கேசாதி பாதம், பாதாதி கேசம் சேவிக்கும்போது உங்களை அதிகம் ஈர்ப்பது எது ? எம்பெருமான் காருண்ய திருக்கண்களா ? புஜ வலிமையா ! திருக்கையில் கொண்டுள்ள கோதண்டமா ! அவர் அணிந்துள்ள அணிகலன்களா ! நறுமலர் மாலைகளா !  

பெரியாழ்வார் தமது பாசுரத்தில் கண்ணன் வளரும் பருவத்தில், யசோதா அன்னை நிலவினை நோக்கி அழைக்கும் பாசுரத்தில் " தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்"  என குட்டிக் கண்ணன் தவழும் போது, நெற்றியில் உள்ள சுட்டி வேகமாய் ஆடும்  அழகைப் பாரடா’, என்று கூறுகிறாள்.

 



இன்று திருவல்லிக்கேணி  ஸ்ரீராமநவமி உத்சவத்தில் முதல் நாள் ஸ்ரீ ராமர் நெற்றிச்சுட்டி அழகை சேவியுங்கோள் !!!  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

9.4.2024


No comments:

Post a Comment