To search this blog

Tuesday, April 23, 2024

Sri Parthasarathi - Divine Flautist : திருமால் , தூய வாயிற் குழல்-ஓசை வழியே

 

Today 23.4.2024  – is Full Moon day (Pournami in Tamil) – it is full moon day in the month of Chithirai – with special significance as ‘Chitra Pournami’ – a unique festival observed on the full moon day (Pournami – Poornima) in the month of Chithirai.  Some associate this day with Chitragupta, the official keeper of deeds in the abode of Yama.  In most temple towns, today is celebrated with people going to temples and eating on the banks of rivers.   It is believed that bathing in holy rivers and temple ponds on this day will wash away the sins committed.

 


இன்று 23.4.2024  சித்திரா பௌர்ணமி.  சித்திரையில் சித்திரை - மதுரகவிகள் சாற்றுமறை.  இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக புன்னை கிளை வாகனத்தில் புறப்பாடு கண்டருளினார்.  எம்பெருமான் வாஹன மண்டபத்துக்கு பத்தி உலாவி எழுந்தருளிய போது எடுக்கப்பட்ட படங்கள் சில இங்கே.

 


 உப்புக்கடல், கருப்புக்கடல், கள்ளுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நீர்க்கடல் என்ற ஏழுகடல்களாலுஞ் சூழப்பட்ட எழுதீவுகளுக்கு, முறையே ஜம்பூத்வீபமென்றும், பலக்ஷத்வீப மென்றும், சால்மலத்வீப மென்றும், குசத்வீப மென்றும், குரெளஞ்சத்வீப மென்றும், சாகத்வீபமென்றும், புஷ்காத்வீப மென்றும் பெயர். இவற்றுள் ஜம்பூத்வீகம் மற்ற எல்லாத்தீவுகளுக்கும் நடுவிலுள்ளது; அதன் நடுவில், மேரு என்னும் பொன் மலையுள்ளது; அதனைச் சுற்றியுள்ள இளாவருக வருஷத்தில் ஸ்ருஷ்டிக்கப் பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு மரங்களுள்ளன; அவற்றிலொன்றாகிய நாவல் மரம்-ஜம்பூத்வீப மென்று இத்தீவின் பெயர் வழங்குதற்குக் காரணமாயிற்றென்று புராணங்கூறும். [ஜம்பூ என்றால் நாவல் பழம் ]  

நமது சரித்திரத்தில் ஜம்புத் தீவு பிரகடனம்  முக்கிய இடம் பெற்றது. தென்னிந்தியாவில்  கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரி திரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினர். முத்து வடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக்காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டது. 

18-ம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் ஆக இருந்த முகம்மது அலி-க்கும் அவரது சகோதரியை மணந்த சந்தாசாகிப்  என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, முகம்மது அலி ஆங்கிலேயர்களின் ஆதரவை நாடினார். சந்தாசாகிப் பிரான்ஸ்-ன் ஆதரவை நாடினார். இந்தப் போரில் முகம்மது அலி வெற்றி பெற்றதை அடுத்து, அவர் ஆற்காடு கோட்டையையும், திருச்சி கோட்டையையும் கைப்பற்றினார்.  போரில் வெற்றி பெற உதவிய ஆங்கிலேயர்களுக்கு அதாவது வங்கத்தில் ஆளுநராக இருந்த ராபர்ட் கிளைவுக்கு, பாளையங்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை தானமளித்தார் முகம்மது அலி. இதையடுத்து ஆங்கிலேயர்கள் வரி வசூலில் ஈடுபடத் தொடங்கினர். இதனை எதிர்த்த மருதுபாண்டியர்கள், ஆங்கிலேயர்களை நாட்டில் இருந்து விரட்ட திட்டமிட்டனர்.  இதற்கானபிரகடனமே   "ஜம்புத்தீவு" பிரகடனம் என்று அழைக்கப்பட்டது. 

ஜம்புத் தீவு பிரகடனத்தில், அகண்ட பாரதம் என்ற உன்னத நோக்கத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தனர் மருது சகோதரர்கள். அதில், ‘ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நவாப் முகமது அலி, முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார்.  ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.  இந்த ஈனர்கள் ஆளும் பகுதிகளிலெல்லாம், மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. துன்பப்படுவது தெரிந்திருந்தும் எதனால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். 

ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் ஜம்புத்தீவு வாசிகள்  ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும். இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். ஆதலால், மீசை வைத்த அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், இந்த ஈனர்களை அழித்து விடவேண்டும். இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்கிபவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்.  என மருது பாண்டியர்கள் அறிவித்தனராம்.

 


இந்த நாவலம் தீவு பெரியாழ்வார் திருமொழியில் கூறப்படுகிறது.  கண்ணனது வேய்ங்குழல் ஓசை சிறப்பை பரவசமாக கூறும் பட்டர்பிரான் பாசுரம் இவ்வாறு தொடங்குகிறது.

 

நாவலம் பெரிய தீவினில் வாழும்,       நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர்

தூ வலம்புரி உடைய திருமால் ,       தூய வாயிற் குழல்-ஓசை வழியே

 

இணையத்தில் மேலும் தேடியதில், ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவு, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமய அண்டவியல் கோட்பாடுகளில் மனிதர்களும், மற்ற சீவராசிகளும் வாழும் உலகத்தைக் குறிக்கிறது.  ஐரோப்பா கண்டத்தினர் இந்திய துணைக்கண்டத்தைக் கைப்பற்றி அதற்கு இந்தியா என்ற பெயரை வைத்து அது பயன்பாட்டுக்கு வரும் வரை உள்ளூர் மக்களாலும் அருகில் உள்ள இலங்கை போன்ற தீவு மக்களாலும் தீபகற்ப இந்தியாவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட ஒரு பெயராகும். சமணம் மற்றும் இந்து சமய புராண அண்டவியல் வரைபடங்களின் படி, அண்டம் ஏழு பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; ஜம்புத் தீவு, இலட்சத் தீவு, சல்மாலி தீவு, குசத் தீவு, கிரவுஞ்சத் தீவு, சகத் தீவு மற்றும் புஷ்கரத் தீவு ஆகும். இந்த ஏழு தீவுக்கண்டங்களிடையே உள்ள பெருங்கடல்கள் உப்பு நீர், கரும்புச் சாறு, திராட்சை ரசம், நெய், தயிர், பால் மற்றும் நன்னீர் ஆகியவைகளால் நிரம்பியுள்ளன. 

இந்த ஏழு கண்டங்களில் சுதர்சணத்தீவு என்றும் அழைக்கப்படும் ஜம்புத் தீவு முழுவதும் ஜம்பு ஆறு நிறைந்து பாய்கிறது. ஜம்புத் தீவு ஒன்பது மண்டலங்களும், எட்டு பெரு மலைகளும் கொண்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் ஜம்பு என்பதற்கு நாவல் மரம் ஆகும். எனவே தமிழில் ஜம்புத் தீவினை நாவலந் தீவு என தமிழ் இலக்கியங்களில் குறிப்பர். சூரிய சித்தாந்த சோதிடச் சாத்திரங்கள், வட துருவத்தை ஜம்புத் தீவு என்றும்; தென் துருவத்தை பாதாளம் அல்லது பாதள உலகம் என்றும் குறிப்பர். கடலடியில் உள்ள பாதாள உலகில் நாகர்கள் வாழ்வதாக இந்து, சமணச் சாத்திரங்கள் கூறுகின்றன.

 




சித்திரா பௌர்ணமி அன்று கண்ட அழகு நிலாவும், அதை விட அற்புத அழகு படைத்த ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளின் புல்லாங்குழலோடு சேவை சாதிக்கும் சிறப்பு திருக்கோலமும் - சில படங்கள் இங்கே

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.4.2024

No comments:

Post a Comment