To search this blog

Tuesday, May 30, 2023

Sri Vardharajar Vaikasi Hastham 2023 – kodi sampanki !!

Sri  Vardharajar Vaikasi Hastham 2023 – kodi sampanki !!




Carl Linnaeus [ 1707 –  1778]   was a Swedish botanist, zoologist, taxonomist, and physician who formalised binomial nomenclature, the modern system of naming organisms. He is known as the "father of modern taxonomy". Many of his writings were in Latin.

மல்லிகை கமழ்தென்றல் ஈருமாலோ! - வண்குறிஞ்சியிசை தவழு மாலோ,

செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ; செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ, 

ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம்.   மலர்ந்த, அழகிய தாமரைபோன்ற கண்களையுடைய எம்பெருமான், ஆயர்களின் சிங்கம், ஆண் சிங்கம், எங்கள் மாயோன் கண்ணபிரானுக்கு பற்பல நறுமலர்கள் சாற்றப்படுகின்றன.  அத்தகைய மல்லிகை மணம் கமழும் தென்றல் அறுக்கிறது, இனிமையான குறிஞ்சி இசை  காதைத் துளைக்கிறது, சூரியன் மறையும் மாலை மயக்குகிறது, செக்கர் வானத்தில் நல்ல மேகங்கள் சிதைக்கின்றன. 




இன்று 30.5.2023 மாலை திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே கருமேகங்கள் சூழ்ந்து அதிகமான காற்றோடு மழை கொட்டும் என தோன்றியது.  இன்று வைகாசி மாதத்தில் ஹஸ்த நக்ஷத்திரம் - ஸ்ரீவரதராஜர் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.   புறப்பாடு முடிந்தபோது திரு பிரபாகர் பட்டர் வரதருக்கு சாற்றிய மலர்களை அளித்தது மிகுதி சந்தோஷத்தை அளித்தது.  அவ்வாறு எம்பெருமான் பிரசாதமாக கிடைத்தது - கொடி சம்பங்கி மாலை !!   

Agave amica, formerly Polianthes tuberosa, the tuberose, is a perennial plant in the family Asparagaceae, subfamily Agavoideae, extracts of which are used as a note in perfumery. Now widely grown as an ornamental plant, the species was originally native to Mexico. The species was first described for science by Carl Linnaeus in 1753, as Polianthes tuberosa.  In 1790, Friedrich Kasimir Medikus moved the species to the genus Tuberosa as Tuberosa amica.  Both morphological and molecular phylogenetic studies have shown that Polianthes is embedded within the larger genus Agave, and the genus is now included in a broadly circumscribed Agave.    In 2001, Thiede and Eggli published a replacement name (nomen novum), "Agave polianthes".  

சம்பங்கிபூ சாகுபடி சமீப காலங்களில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது !   ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால் விலை ஏற்ற இறக்கங்கள் சமன் செய்யப்பட்டு உத்தரவாதமான லாபம் கிடைத்து விடும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு.  

சம்பங்கி நீலக்கற்றாழையை ஒத்திருக்கும். இதன் சாறு நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.   வீங்கிய வேர்களையுடையதால் இலத்தின் மொழியில் tuberosa என்றும் அழைக்கப்பட்டது. Polianthes என்பதற்கு கிரேக்க மொழியில் "பல மலர்கள்" என்று பொருள். மெக்சிகன்,   இந்தியாவில் ரஜினிகாந்தா என அழைக்கப்படுகிறது. இதற்கு 'இரவில் மணம்' என்று பொருள்.  

சம்பங்கி வேறு கொடி சம்பங்கி வேறு !  மிகுந்த மணத்தை உடைய கொடி சம்பங்கி பூக்கள் அளவில் சிறியன;  இது கொடி வகையைச் சார்ந்தது. கொடி இரண்டு மீட்டர் முதல் ஐந்து மீட்டர் உயரம் வரை கூட வளரும். விதை அல்லது பதியன் மூலமாக செடிகளைப் பெறலாம். வளமான மண்ணும், நல்ல சூரியவெளிச்சமும் உள்ள இடங்களில் நன்றாக செழித்து வளரும். இதய வடிவிலான இலைகளையும் ,கூர்மையான இலை நுனியையும் உடையது.   

பூக்கள் கொத்துகளாய் மலரும். ஒரு கொத்தில் பத்திலிருந்து இருபது பூக்கள் வரை மலரும். மலரும்போது பச்சை நிறத்தில் இருக்கும் இப்பூக்கள் ஓரிரு நாட்களில் மஞ்சள் நிறத்தினை அடைந்துவிடும். அதிக நறுமணம் கொண்டவை. ஐந்து இதழ்களை உடையது.  

Here are some photos of Sri Varadharajar taken during Hastham purappadu this evening.  From tomorrow starts Sri Devathirajar brahmothsavam at Kachi and other divyadesams including Thiruvallikkeni.  

adieyn Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.5.2023    








No comments:

Post a Comment