To search this blog

Wednesday, January 21, 2026

Thiruvallikkeni Masi Maga purappadu 1994 - Thanjai Moorthi video

 

திருவல்லிக்கேணியில் நடைபெறும் வருடாந்திர உத்சவங்களில் சிறப்பான ஒன்று - காலை ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கருடவாகனத்தில் வங்கக்கடலுக்கு புறப்பாடு கண்டருள்கிறார். . மாலை சேஷ  வாகனத்தில் பெரிய மாடவீதி புறப்பாடு.  

At Thiruvallikkeni divyadesam – there are many purappadus around the year – there are some annual uthsavams – one significant and grand one is ~ Masi Magam – a day on which the Ocean (Bay of Bengal) becomes much happier – for Sri Parthasarathi Emperuman visits bay of Bengal at Marina beach.   .. ..  Masi Magam is very grandly celebrated in many places .. ..  in the morning Sri Parthasarathi Perumal has purappadu on Garuda Sevai in His sojourn to the beach and in the evening it is periya mada veethi purappadu in Sesha vahanam. 

மாசிமகம் என்பது மாசிமாத பௌர்ணமியுடன் கூடிவரும் மகநட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும்விழா என்று கொண்டாடப்படுகிறது.  சில இடங்களில் பெருமாள் திருக்குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு எழுந்து அருள்வதும் உண்டு.  இந்நன்னாளில் எம்பெருமான் கூடச்சென்று தீர்த்தவாரி முடிந்தவுடன் - கடல், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தீர்த்தமாடுவது சிறந்தது.  

சமீப காலகட்டத்தில், பெருமாள் புறப்பாடுகள் பலராலும் புகைப்படம், மற்றும் காணொளி என வலைத்தளங்களில் வலம் வருகின்றன.  முந்தைய நூற்றாண்டின் திருவல்லிக்கேணி புகைப்பட கலைஞர்களில் திரு தஞ்சை மூர்த்தி பிரபலமானவர்.  கைரவிணி திருக்குளத்தின் வடக்கு குளக்கரை தெருவில் இவரது புகைப்பட ஸ்டூடியோ அமைந்து இருந்தது.

 


1994 வருடத்திய மாசிமக கருட சேவை புறப்பாட்டை மிக அருமையாக வீடியோ எடுத்து இருந்தார். இன்று திருவல்லிக்கேணி சின்னமுறை ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி பட்டர் ஸ்வாமி அடியேனிடன் பகிர்ந்ததுடன், இதை வலைத்தளத்தில் பகிர்வது பற்றி திரு தஞ்சை மூர்த்தியிடம் கேட்டபோது - அவர்   அநேகம் பேர் பார்த்தால் மிகவும் சந்தோஷமே என்றும் அதைவிட பெரும் பாக்கியம் ஏது. அனைவருக்கும் பார்த்தசாரதியின் அனுக்ரஹம் கிடைக்கட்டும் என்று ஆவலுடன் கூறியதை பகிர்ந்தார். இந்த காணொளியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, மற்றும்  ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி தீர்த்தவாரி முடிந்து திரும்பும் போது எழும்பூர் ஸ்ரீநிவாஸ பெருமாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வதையும் காணலாம். 

https://youtu.be/LJfnHxyeSOk

படைப்பாளி திரு தஞ்சை மூர்த்தி மற்றும் பகிர்ந்த திரு கிருஷ்ணஸ்வாமி பட்டர் மற்றும் திருக்கோவில் கைங்கர்யபரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும், என் மரியாதையையும் பதிவிடுகிறேன்.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar. 

No comments:

Post a Comment