Thiruvallikkeni
Andal Kanu purappadu 2026
மார்கழி மாதம் கண்ணனுக்கு பிடித்த மாதம். தனுர் மாதம் என கொண்டாடப்படும் இம்மாதத்தின் எல்லா நாட்களிலும் ஸ்ரீஆண்டாளின் திருப்பாவை சேவிக்கப் பெறுகிறது.
மார்கழியில் ஆண்டாள்
நீராட்ட உத்சவம் ஒன்பது நாட்கள் சிறப்புற நடைபெறுகிறது. போகி அன்று திருக்கல்யாணமும்,
சங்கராந்தி அன்று ஊர்கோல உத்சவமும், மறுநாள் காலை கனு புறப்பாடும் ஆண்டாளுக்கு விமர்சையாக
நடைபெறுகிறது. காலை ஸ்ரீஆண்டாள் நீராட்ட மண்டபத்தில் திருப்பாவை சாற்றுமுறை
நடந்து, பிரசாதங்களுக்கு பின் ஹம்ச வாகனத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார்.
பொங்கல் முடிந்த மறு நாள் கனுப்பண்டிகை
கொண்டாடி, பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலனை வேண்டி புள்ளினங்களுக்கு விருந்து
வைக்கும் வழக்கம் உள்ளது. நம் பாரதத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகள் உறவுகள் சிறக்க
செய்யும் வழிப்பாட்டு முறைகள்.
16.1.2026
Excellent Writeup Swami.
ReplyDeleteB Venkatakrishnan
ThiruvallikkeNi