To search this blog

Sunday, March 21, 2021

Sri Parthasarathi Thavana uthsavam 2021 : திருவல்லிக்கேணிதனில் ஒரு பங்களாவின் கதை !

Life at a divyadesam is exhilarating !  Thiruvallikkeni divyadesam is replete with uthsavams ~ 2021 began too well – and there have been 2 special Brahmothsavams (Sri Parthasarathi in Feb; followed by Sri Azhagiya singar in Mar) – in between we had Thai poosam, Masi Magam, Ratha Sapthami – and 7 days of Theppothsavam,  concluded on Friday – 20.3 was Panguni Rohini purappadu and from today started Thavana Uthsavam for Sri Parthasarathi Perumal.  This morning around 08.30 am Sri Parthasarathi had purappadu to bungalow; had thirumanjanam, took rest and in the evening had purappadu inside the bungalow – then periya mada veethi / kulakkarai – thirumbukal to sannadhi.  ..  .. .. wonder what the reference to bungalow is about ??





For the many mad Cricket fans - the T20I 1138 was a game to remember – India batting first opened with Rohit Sharma and Virat Kohli .. .. Rohit rained sixers making 64; Kohli steadied to make an unbeaten 80; Suryakumar Yadav strode in like Viv and played like Greenidge making 32; while Hardik Pandya delighted with 39* - the score of 224 for 2 India's total in the series-decider, their highest in the T20I format against England was more than good enough score in ODIs in 1980s. No Cricket post this though reference to Cricket becomes quintessential in this post on Thavana uthsava bungalow at Thiruvallikkeni divaydesam.

More than 4 decades ago,  I was studying in Samarao school ~ evenings would go to Thavana Uthsava bungalow – Cricket match will be on with intense heat – of my age group will not be taken in the team – mostly would watch from the steps of bangala modu !! (the description down below dates back to those days!)







A few days earlier had seen Chepauk Pongal Test [a day at the venue, then in Television ! – and heard the commentary on radio of Anshuman Gaekwad along with Karsan Ghavri  battling it out .. .. Jan 1975 – any  reference to Test No. 752 will flood memories of that  classy knock of Gundappa Viswanath -great bowling of Andy Roberts and the defeat (100 runs at that) suffered by Clive Lloyd against Pataudi led Indians in 1975.  Do you know that Erapalli Prasanna made 0 in both the innings.   Those days Pongal tests were great festivities and tension would build up couple of days before the match – India opening with Eknath Solkar and Farokh Engineer  .. .. .. 

~ Openers were premium – so each one out there getting the opportunity to bat first thought themselves to be Engineers (and an informed person told me that time, that India had a much prolific scoring Opener Sunil Manohar Gavaskar – who did not play at Chepauk due to injury !)  ~ no Cricket post but on that day, when I ran to Bungalow for the match, my favourite  openers of bungalow Cricket team,  were inside the  big well – almost all the players and more had lined up – taking out water in pots – which passed hands, then were poured on the sands, making it cool, preventing dust flying .. .. then those women around started drawing beautiful kolams all around    (there were couple of my classmates from Samarao school  too !) – that evening my mother and my grandfather explained me of Thavana Uthsavam. – why the bungalow had goris (minars) is still a mystery to me !  

அது ஒரு இனிய மாலைப்பொழுது. 1970களில்  நமது  திருவல்லிக்கேணி அனுபவிக்க சிறந்த இடமாக இருந்தது.  மாட வீதிகளில் அவ்வளவாக வண்டிகள் பயணிக்காது.  இந்து உயர்நிலைப்பள்ளி சேர்ந்ததால் பைகிராப்ட்ஸ் சாலையில் பல்லவன் பஸ் வரும் - கவனமாக சாலையை கடக்கவும் என அறிவுரை வழங்குவர்.  சாமராவ் பள்ளி நாள்களிலிருந்தே - பள்ளி முடிந்து மாலையில் பங்களாவுக்கு கிரிக்கெட் விளையாட செல்வேன்.   

பங்களா என்றால் நீங்கள் நினைக்கும் ஒரு பணக்கார வீடல்ல.  இது துளசிங்க பெருமாள் தெருவில் - மேட்டின் மேல் பெரிய  மண்டபமும், நடுவே மேடையும், இரண்டு கோரி எனப்படும் (சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது போன்ற அமைப்பும்)  அக்காலத்தில் இதனுள் நிறைய வௌவ்வால்  இருக்கும் / படபடவென பறக்கும்  எனவே மேலே தைரியமனாவர்கள் மட்டுமே பிரவேசிப்பார்கள்.  மேடை சுற்றி அரளி போன்ற செடிகளும், மணற்பரப்பும், ஒரு பக்க வீடுகளும் என ஒரு அமைப்பு - அந்நாள் கிரிக்கெட் மைதானம்.    சிறுவர்களை டீமில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் எனினும் பக்கத்தில் நின்று, பந்து பொறுக்கி போட்டாலே ஆனந்தமாக இருக்கும்.   

பங்களா மோட்டில் பலர் அமர்ந்த்து பார்க்க விறுவிறுப்பான விளையாட்டு நடக்கும்.  ஒரு பிப்ரவரி மாத நாளில் - விளையாடும் ஆர்வமுடன் உள்ளே சென்றால் - ஒருவரும் விளையாடவில்லை.  அந்நாள் பிரபலங்கள் வரிசையாக நின்றிருக்க - பெரிய கிணற்றில், டீம் ஓபன்னர் - உள்ளே இறங்கி வாளியில் நீர் வார, வரிசையாக கைகள் மாறி - பங்களா மண்ணில் வாசமெழ, அனைவருமே இறை பணியில்.  நீர் வாங்கி மண் தர பளீராக - உடனே செம்மண் மற்றும் கலர் பொடிகள் தூவி வண்ண கோலங்கள் உயிர் பெற்று எங்கள் மைதானம் பக்தி மயமானது.   

பங்களா மேட்டை சுற்றி அரளி செடிகள் புதர்களாய் பரவி செவ்வல்லி மலர்களை விருந்தாக காண்பிக்கும்.  அரளி மொட்டுகள் பறித்து வந்து வீட்டில் தண்ணீரில் போட்டு வைத்தால் மலர்களாய் மலர்வது அந்நாளின் விந்தை !  இனிய நாதஸ்வரம் ஒலிக்க ~ பங்களாவில் நான் தினமும் பார்க்கும்  (அப்பொழுதே 90 வயதோ என வியக்க வைக்கும்) பாட்டி, சிகப்பு அரளி மலர்களை நயத்துடன் தொடுத்துக்கொண்டே ஸ்ரீரங்கநாதனை பாட, திரை விலகி - எங்கள் அற்புத நாயகன் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.  கிரிக்கெட் டீமும் கோலம் போட்ட தாவணி பெண்களும் பெருமிதத்துடன் தொடர தவன உத்சவ பங்களா உள்ளே புறப்பாடு. கிணற்றை ஒட்டி இருந்த வீட்டில் வசித்த "பாட்டு டீச்சர் திருமதி சந்திரா"விடம் பல பெண்கள் கர்நாடக இசை கற்றுக்கொண்ட காலம் அது.  

எனது தாத்தா  ஸ்ரீ அத்திசோழமங்கலம் இராமானுஜ அய்யங்காரிடமும் எனது அம்மாவிடமும் - தவன உத்சவ பங்களா பற்றியும், வருடாந்தர தவன உத்சவம் பற்றியும் பற்பல தகவல்கள்  அறிந்து வியந்தது பின்னர். இன்றும் ஓவ்வொறு தவன உத்சவத்தின் போதும் பல்வேறு வருடங்கள் முன்பு நடந்த சிறுவயது நினைவுகள் வண்ணமாடுவது இயல்பே.    இன்றைய  தவன உத்சவத்தின் போது கூட பங்களாவின் பின் சென்று அன்று கார் ஷேட்டாக இருந்த இடத்தின் அருகே நின்று -அன்று செருகு ஓடுகளுடன் இருந்த (இன்று உருமாறிவிட்ட) வீட்டை உற்று நோக்கினேன்.  எனது அப்பாவின் நெடுநாள் நண்பர் சிம்ப்சன் சீனு இருந்த வீட்டு நினைவலைகள்   அதிக ஞாபகத்துக்கு வந்தன.  பக்கத்துக்கு வீட்டில் திரு ஈக்காடு ராமஸ்வாமி ஐயங்கார் வசித்து வந்தார். கால வெள்ளத்தில் பலர் மாறிவிட்டனர். திரு விஜயன் குடும்பத்தினர் இன்றும் அந்த மூலை வீட்டில் வசித்து வருகின்றனர். எல்லாரும் சொல்வது போல கால ஓட்டத்தில் எல்லாம் மாறி விட்டது, பங்களா ரொம்ப மாறிவிட்டது என அவர்களிடம் அங்கலாய்த்தேன்  !!  உண்மையில் பங்களாவின் தோற்றம் பெரிதாக மாறவில்லை; ஏனெனில் இந்த இடத்தின் முக்கியத்துவமே எம்பெருமானின் தவன உத்சவம் தான் அல்லவா !!   

அந்த காலங்களில் பெருமாள் ஏளுவதற்காக ஓலைப்பந்தல் போடப்படும். நடுவில் சில காலங்கள் இந்த மண்டபம் சரியாக இல்லாமல் இருந்தது. இப்போது நல்ல கட்டிடமாக மேற்கூரையுடன் பரிமளிக்கிறது. பெருமாள் தவன கூராளத்தில் எழுந்து அருளியிருக்கும் அழகு இங்கே :

The month of Masi brings back sweet memories of school days,  Cricket at nearby bungalow maidan  - and my childhood experience is reminisced above.  Thavana Uthsava Bungalow derives its name from the Thavana Uthsavam that occurs for 5 days starting Masi Krithikai. This Bungalow as I could recall from my young days, had a big well with steps inside,  trees of rose Nerium Oleander [Arali] and a differently looking  structure having two ‘goris’ [minars] ~ one can reach the top of the minars through the steps provided one is not afraid of bats.  Enthusiastic residents would draw water from the well, sprinkle on the sands that surround the raised structure,  colourful kolams will be drawn adding to the religious atmosphere.  

During this Uthsavam, Perumal takes rest under the roof made of thavanam – (Tamil: தவனம்) [Artemisia pallens],  an aromatic herb, in genus of small herbs or shrubs, xerophytic in nature.  This herb pervades great aroma and provides coolness. These days a kooralam [roof] made of Dhavanam is set up over the resting place of the Lord.  

Here are some photos of Sri Parthasarathi perumal purappadu inside the  Thavana Uthsava purappadu in the evening of today – day 1 of the Uthsavam 21.3.2021.  

~adiyen Srinivasa dhasan (Mamandur Veeravalli  Srinivasan Sampathkumar) 













  

No comments:

Post a Comment