To search this blog

Sunday, March 7, 2021

Sri Azhagiya Singar Yanai vahanam 2021

In the ongoing special brahmothsavam of Sri Thelliya Singar – 7.3.2021 was special – it was Yanai vahana purappadu  ~ the one  at Thiruvallikkeni  is in sitting posture with  golden hue.




Elephants always attract me.  An adult African elephant's trunk is about seven feet (two meters) long! It's actually an elongated nose and upper lip. Like most noses, trunks are for smelling. When an elephant drinks, it sucks as much as 2 gallons (7.5 liters) of water into its trunk at a time. Then it curls its trunk under, sticks the tip of its trunk into its mouth, and blows. Out comes the water, right down the elephant's throat.  An elephant's trunk is a fusion of its upper lip and its nose. Filled with more than 100,000 muscles, this huge appendage is both powerful and extremely dexterous. An elephant can use its trunk to rip a limb from a tree or to pick up a single blade of grass.

African elephants are the largest land animals on Earth. They are slightly larger than their Asian cousins and can be identified by their larger ears that look somewhat like the continent of Africa. (Asian elephants have smaller, rounded ears.)  Although they were long grouped together as one species, scientists have determined that there are actually two species of African elephants—and that both are at risk of extinction. Savanna elephants are larger animals that roam the plains of sub-Saharan Africa, while forest elephants are smaller animals that live in the forests of Central and West Africa. The International Union for the Conservation of Nature lists savanna elephants as endangered and forest elephants as critically endangered.

Because elephants typically eat up to 440 pounds of food a day, they have to be able to forage and eat small vegetation. Elephants can eat even small grains by forming a joint with their trunk to pile up grains. They crush the grains so hard that it molds into a form that they are then able to pick up and eat.  With such a big trunk, you might think an elephant has a great sense of smell, and you'd be right. Elephants have one of the most acute senses of smell among animals. According to LiveScience, "In a study of 13 mammals, African elephants were found to be superior sniffers, possessing the largest number of genes associated with smell — five times as many as humans and more than twice that of dogs."

Lucania was an ancient area of Southern Italy. It was the land of the Lucani, an Oscan people. It extended from the Tyrrhenian Sea to the Gulf of Taranto. ‘Luca bos’   :  Lūca (“a city in Etruria”) + bōs (“cow”), literally Lucanian cow to mean elephant because the Romans first saw elephants in Lucania as part of Pyrrhus of Epirus's arm.

                           திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் தெள்ளியசிங்கர் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பு பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.   யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.  





ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். தமிழ் சங்க இலக்கியங்களில் யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா,  வாரணம், குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு என பல்வேறு பெயர்களால் அறியப்பட்டனவாம்.  யானை தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன.  

சற்று இலக்கணம் அறிவோம்.  சங்க நூல்களில் - ஐங்குறுநூறு என்பது  எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.  வேழம் என்பதை இணையத்தில் தேடிய போது அறிந்த சில தகவல்கள் இங்கே :

தமிழ் மொழியில் பல சொற்களுக்கு இரண்டு அல்லது மேற்பட்ட பொருள்கள் உண்டு.  வேழம் என்பது யானையைக் குறிக்கும்.  வேழம் என்பது கரும்பு, ஒரு புல்வகையும் கூட.   பாணன் மன்னனிடம் சென்று பாடி பரிசு பெற்று வந்து தம் மனைவியிடம் பெருமிதத்துடன், 'வேழம் கிடைத்தது' என்று சொல்ல,  புலமையும் நகைச்சுவையும் வாய்ந்த மனைவியோ - அதை கடித்து தின்பதற்கு  பற்கள்  வேண்டுமே என இயம்பினாராம். 

உடலறிவு மட்டும் கொண்ட உயிரினத்தை  இலக்கணப் புலவர் தொல்காப்பியர் புல் என்றும் மரம் என்றும் இரு வகையாகப் பாகுபடுத்தியுள்ளார்.  வேழம் தாவர இயலில் ஒருவகையான புல் (நாணற்புல்) ஆகும்.  புல் என்பது உள்ளீடு இல்லாமல் உள்ளே துளை கொண்ட தாவரம்.  வேழம்  எனும் சொல் வேழப்புல்லையும், அப்புல்லை விரும்பி உண்ணும் யானையையும் குறிக்கும். மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று வேழம் எனக் குறிக்கப்படும் வேழக் கரும்பு. இவ்வேழக் கரும்பு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி- ஐங்குறுநூற்றில்  வேழப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.  பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று.  யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது. 

திவ்ய பிரபந்தத்தில் யானை பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது.   நம்மைக் காக்கும் எம்பெருமான் , கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடிசேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார்,  திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை -  அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை  என்றென்றும் துதித்து வணங்குமாம்.     "வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு" - என்கிறார்.

இந்த வருடம் நடந்து வரும் சிறப்பு ப்ரஹ்மோத்சவத்தில் ஆறாம் நாள் 7.3.2021  அன்று எடுக்கப்பட்ட  சில படங்கள் இங்கே :   கஷ்டங்கள் எல்லாம் விலகி எவ்வெப்போதும் அவரது அருளால் அவரை தினமும் சேவிக்கப்பெறும் பாக்கியத்துடன், இது போன்ற அற்புத உத்சவங்களில் பங்கு கொண்டு எம்பெருமானுக்கு அவர்தம் அடியார்க்கும் கைங்கர்யங்கள் செய்யும் வாய்ப்புகளை தடையில்லாமல் தர ஸ்ரீஅழகியசிங்கர்  எம்பெருமானை வேண்டி அவரது   திருவடித்தாள்களில் பிரார்த்திப்போம். 

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
7.03.2021.


















Written on left side - Her Highness Sri Maharaja Kumari Kasavabha of Vijayanagaram.   (right)-  Sri Appalakandiyamba Deva Devi Maharani of Madogadirvanetu vari dharmam
Translated by friend Y Venkatrao.

2 comments: