பண்டி என்ற
பெயர்ச்சொல்லுக்கு அர்த்தம் அறிவீரா ?
தமிழில்
ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ள சொற்கள் உள்ளன. பண்டி என்ற பெயர்ச்சொல்லுக்கு : வண்டி; உரோகிணி. ( பெருங்குமிழ்); உடல்; யானை
என பல அர்த்தங்கள் உண்டு. பண்டியெனும் வயிற்றை பெரும்பதியாக்குவதாவது கிடைப்பதை எல்லாம் தின்று ஏற்றச்சால்போலே வயிற்றை
வளர்ப்பதாம்.
The
lion (Panthera leo) is one of the five big cats in the genus Panthera and a
member of the family Felidae. For all of their roaring, growling,
and ferociousness, lions are family animals and truly social – however, from
time immemorial they are known for their strength and power. The
powerfully built Lion, belong to cat family Felidae! Lions are most
active at night and live in a variety of habitats. They
usually live in groups of 15 or more animals called prides. Prides can be as
small as 3 or as big as 40 animals. In a pride, lions hunt prey, raise cubs,
and defend their territory together.
Kumaragupta I was a great Emperor, son of Chandragupta II
and queen Dhruvadevi, his territory extended
from Gujarat in the west to Bengal region in the east. Kumaragupta bore the titles Maharajadhiraja,
Parama-bhattaraka, and Paramadvaita. He also adopted the title Mahendraditya,
and his coins call him by several variants of this name, this coin depicting
King killing a lion is famous.
By I, PHGCOM, CC BY-SA
3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2237619
Taming
a lion or hunting it is considered a virtue all along. Lion represents
power and domineering it – humans considers valorous. At Thiruvallikkeni
divyadesam, in the ongoing special Brahmothsavamn of Sri Azhagiya Singar,
today it was Simha vahanam.
நமது புண்ணிய பூமிக்கு
" பாரதம்" எனும் பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின்
முதல் சக்ரவர்த்தியான பரதன். இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் ஆதலால் அவனுக்கு சர்வதமனன் என்ற பெயரும் உண்டு. பாரதியார் தமது தேசிய
கீதங்களில் ** சகுந்தலை
பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத் தட்டி விளையாடி – நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரதராணி, ஒளியுறப் பெற்ற பிள்ளை* என உயர்வு படுத்தி பாடி உள்ளார் . தமிழில்
ஆண்சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்று கூறுவது வழக்கம். சிங்கம் மிகவும் பலம் பொருந்தியது.
In the
evening of day 2 [3.3.2021] ] at Thiruvallikkeni, it was the
majestic Simha [lion] as vahanam. The most beautiful,
powerful, gracious Sri Azhagiyasingar had purappadu atop ‘simham’
and gave darshan to devotees.
இதோ
இங்கே நம் பூதத்தாழ்வாரின் அற்புத வரிகள் :
பண்டிப் பெரும்பதியையாக்கி பழிபாவம்*
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும் *
பேர்த்தகரம்
நான்குடையான் பேரோதிப் பேதைகாள் *
தீர்த்தகரர்
ஆமின் திரிந்து.
பூதத்தாழ்வாரின் அற்புதமான போதனை :
இவ்வுலகில் வாழும் சம்சாரிகளை, சாதாரணமான மானுடர்களை உயர்த்தி பேசி பாடி, பணம்
பெற்று தங்கள் வயிற்றை வளர்க்கும் மதியில்லா மூடர்காள் - வயிற்றை
பெரிய ஊர்போலக் கண்டதையுங் கொண்டு, தின்று, நிரம்பச் செய்து வளர்த்து தெரியாமல் விளையுங் குற்றங்களையும்
தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு இவ்வுலகில் வாழ்கின்ற
ஸம்ஸாரிகளை புகழ்ந்து பேசுகை தவிருங்கள். நீங்கள் செய்ய வேண்டியதுதான் என்ன ? உலகளந்த காலத்தில் எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்போடும்படி விம்மி
வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களை இடைவிடாது சொல்லிக்கொண்டு,
திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து, உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும் பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள். எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் புகழ் பாடுங்கோள் என நமக்கு உரைக்கிறார் பூதத்தாழ்வார்.
BoothathAzhwaar
says ~: Oh foolish people living in this
earthly World – don’t spend your time in pleasing ordinary mortals and making
your stomach the veritable place for all and sundry food – don’t waste time
speaking on the useless people and more so of their sins. Without
wandering, recite the names of Lord whose four
arms stretched into the eight Quarters.
Serve HIM become the propagators of the Holy Sriman Narayana.
Here
are some photos of today’s Simha vahana purappadu.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.3.2021
Very nice with nice photos.
ReplyDelete