To search this blog

Monday, March 8, 2021

Sri Azhagiya Singar ther thirumbukal 2021 ~ முது வேத முதல்வனுக்கு ** எதுவேதென்பணி

வினை என்றால் என்னஎதிர்வினை என்றால் என்ன !! - நாம் நற்செயல்கள் செய்யவேண்டியதின் அவசியம் தான் யாது ??



Destiny, sometimes referred to as fate (from Latin fatum "decree, prediction, destiny, fate"), is a predetermined course of events.  It may be conceived as a predetermined future, whether in general or of an individual.   The word ‘karma’ could refer to the spiritual principle of cause and effect,   wherein intent and actions of an individual (cause) influence the future of that individual (effect): good intent and good deeds contribute to good karma and happier rebirths !  .. in Srivaishnavism the ultimate aim to get rid of births and be associated with Sriman Narayana at His Heavenly abode.

எந்த ஒரு செயலும் செய்யப்படுவதானால் ஒரு விளைவு ஏற்படுகிறது. அதுவே விதி. அது செயலுக்கான எதிர்வினை.   ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் கருமம் அல்லது வினைப்பயன் என்பர்.  இளங்கோவடிகள் தமது  சிலப்பதிகாரத்தில்  அறிவுறுத்திய நற்கூற்றுக்கள் :  அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.  இந்த வினய் :  நல்வினை தீவினை என இருவகைப்படும். மேலும்  தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை என பல உண்டு !!

இதனின்று விலகி சற்று தமிழ் இலக்கணம் அறிய முற்படுவோமாயின் பெயர்ச்சொல்லின் தொழிலைக் காட்டுவது வினைச்சொல் ஆகும். வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பது மட்டுமில்லாமல் அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவகைப்படுகிறது.  தமிழ் வினையடிச் சொற்களை அவை ஏற்கும் கால இடைநிலைகளின் அடிப்படையில் மெல்வினை, இடைவினை, வல்வினை என மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றன.

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை சரணடைந்தால் எல்லா கொடுவினைகளைகளும் நீங்கி நன்மையே பயக்கும்.   எம்பெருமானுக்கு இடுவதற்கு இன்னபொருள்தானென்கிற நியதியில்லை.  அது போலவே,   எம்பெருமானுக்கு எது பணி? என் பணி எது?  என ஆராய வேண்டியதில்லை.  திவ்யதேச புறப்பாடுகளின் பொது எம்பெருமான் கூடவே நடந்து சென்றாலே, எத்தகைய கைங்கர்யங்கள் செய்யலாம் என்பது புலப்படும். ..

 




Till the time of its acquisition by the British in 17th century, Triplicane was a  village along with adjacent village of Pudupakkam.  Its history is closely linked to the iconic Sri Parthasarathi swami temple.  After Triplicane passed into the East India company’s hands in 1676 by a firman of Sultan of Golconda, the company leased it to its chief merchant Kasi Veeranna.  Triplicane figured prominently during the invasion of the Carnatic in 1740.  In Sept 1746, when the French Commander La Bourdannais attacked Madras, a body of French troops encamped on the east side of the temple.  In a rough sketch plan of Madras about 1746 the grand Pagoda of Triplicane, the temple tank and French embankments have all been marked writes Ranganadham Chetty in History of Triplicane book compiled in 1948.

In the latter half of 1749, Madras was finally handed over to the English.  Triplicane, thereafter became the residential  suburb of English merchants who built several garden houses along or near  the south bank of the Cooum, then called as Triplicane river. The modern day Triplicane (the temple) has four arches on each direction.  Sri Parthasarathi visits these arches on some occasions – He passes through the North arch at Nalla thambi St on Masi magam day; Southern arch – during Ekkattuthangal, Kodai Uthsava sarrumurai .. on thiruther (Sri Parthasarathi & Sri Narasimhar on 7th day evening of their respective Brahmothsavams) visit the arch on the Eastern side i.e., on beach road.   

மதுவார் தண்ணந் துழாயான்*  முது  வேத முதல்வனுக்கு **

எதுவேதென்பணி என்னாது  - அதுவே ஆட்செய்யும்  ஈடே **

 

அழகிய  தேன் ஒழுகுகின்ற  குளிர்ந்த  திருத்துழாய்மாலையை அணிந்துள்ளவனும். மிக உயர்ந்த,  தொன்மையான,   வேதங்களால் முழுமுதற்கடவுளாகச் சொல்லப்பட்டவனுமான பெருமானுக்கு தகுதியாகச் செய்யக் கூடிய  கைங்கரியம் ஏது? - அவற்றில்,  நான் செய்யக் கூடிய கைங்கரியம் ஏது?  .. ..என்றெல்லாம் சிந்தித்து, பொழுது கழிக்காமல் கைங்கர்யங்கள் அடிமையாய் செய்வதே உகப்பு என்கிறார் ஸ்வாமி குருகூர் சடகோபன் எனும் நம்மாழ்வார்.  

On the day of thiruther,  Sri Azhagiya Singa Perumal (as also Sri Parthasarathi on day 7)  (today)    remain in the Thiruther  till evening during which time Bakthas can ascend and have darshan.  In the evening occurs the usual ‘pathi ulavuthal’ and purappadu, after which ‘thotta thirumanjanam’ would take place.  This used to happen in the cool Vasantha Mantapam situate in Venkata Rangam Street – unfortunately, this is no longer there and thirumanjanam takes place inside  the Andal neeratta mantapam now a days for Sri Parthasarathi and at the western maha mandapam for Sri Thelliyasingar .

Here are some photos of Thiruther thirumbukal purappadu at Thiruvallikkeni divyadesam this evening. 


adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
08.03. 2021 

















No comments:

Post a Comment