To search this blog

Friday, March 5, 2021

Sri Azhagiya Singar Surya Prabhai 2021

ஏக காலத்தில் ஆயிரஞாயிறு உதித்தாற்போல் கண்கொண்டு காணவொண்ணாதபடி ஜ்வலியாநின்ற கிரீடத்தையுடையவனாய் மஹாநுபாவனான சக்கரவர்த்தித் திருமகன் எழுந்தருளியிருக்குமிடம் யாது?




Compared with the billions of other stars in the Universe,  it  is remarkable.  It is infact  a ball of gas (92.1 percent hydrogen and 7.8 percent helium) held together by its own gravity. It is  4,500,000,000 years old!  That's a lot of zeroes. That’s four and a half billion.  Going by what others do, i.e., burning  for about nine or 10 billion years – it can be said tobe halfway through its life. So no worries, it still has about 5,000,000,000—five billion (500 crores !)—years to go.  It is the SUN.

சென்னையில் வெய்யில் ஆரம்பித்து விட்டது.  கோடை காலத்தில், சுட்டெரிக்கும் சூரியனை குறிக்க   நிறையவே சொற்கள் உள்ளன.  நாம்  அனுதினமும் கண்களாலே பார்த்து சேவிக்க வல்லவன் - சூரிய பகவான்.  சூரியனுக்கு, : ஆதவன், ஆதித்யன், கதிரவன், ஞாயிறு, பகலவன், கனலி,  வெய்யோன், பானு, சித்திரபானு, வெஞ்சுடரோன், செங்கதிரோன்,      திவாகரன்,  தினகரன், தினமணி, பரிதி, பாற்கரன்,   மித்திரன்,   அனலி,  அலரி,   பகலோன்,   கிரணமாலி, - - - என பற்பல  பெயர்கள் உண்டு.   ஞாயிறு என்றவுடன் நமக்கு வார விடுமுறையான கிழமை ஞாபகம் வரலாம்.  சூரியன்  என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும்.   கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது.

Science is very interesting !  - When those five billion years are up, the Sun will become a red giant. That means the Sun will get bigger and cooler at the same time. When that happens, it will be different than the Sun we know today. As a red giant, our Sun will become about 2,000 times brighter than it is now!   In what is being considered a particularly rare event, scientists are projecting that the Sun will be an unusually cool customer by the year 2050. Earth is bound to become a dry, scorched rock, as our sun becomes a red giant star. What’s more, as the Milky Way and Andromeda galaxies collide, our sun and Earth (and the rest of our solar system) are expected to be hurled outward, away from the galactic center, to the outskirts of a new large galaxy created in the collision.

Science keeps throwing newer facts and changing facts !  -  the  source of potentially hazardous solar particles, released from the Sun at high speed during storms in its outer atmosphere, has been located for the first time by researchers at UCL and George Mason University, Virginia, USA.  These particles are highly charged and, if they reach Earth’s atmosphere, can potentially disrupt satellites and electronic infrastructure, as well as pose a radiation risk to astronauts and people in airplanes. In 1859, during what’s known as the Carrington Event, a large solar storm caused telegraphic systems across Europe and America to fail. With the modern world so reliant on electronic infrastructure, the potential for harm is much greater. To minimize the danger, scientists are seeking to understand how these streams of particles are produced so they can better predict when they might affect Earth. In the new study, published in Science Advances, researchers analyzed the composition of solar energetic particles heading towards Earth, and found they had the same “fingerprint” as plasma located low in the Sun’s corona, close to the middle region of the Sun’s atmosphere, the chromosphere.

Moving away from all the melee – are you intending to search the abode of Chakravarthi Thirumagan Maryadha purush Sri Ramachandra Murthi of  peerless fame and a tall crown that shines like the light of a thousand suns?  Here is what Periyazhwar tells us :

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் துஷ்ட சக்திகளை களைந்து, நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக திருவவதாரங்கள் எடுத்து அருளினார்.  மச்ச கூர்மமாய், கிருஷ்ணனாய்  இராமபிரானாய்  அவதரித்ததும் நரஸிம்ஹமாய் அவதரித்துமெல்லாம் ஒரே   ஈச்வர வ்யக்தியேயென்று  விஷ்ணுசித்தர் அறுதியிட்டு உரைக்கின்றார் தமது பெரியாழ்வார் திருமொழியில்.: 

கதிராயிரமிரவி கலந்தெரித்தால்   ஒத்த  நீள்முடியன்

எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்

அதிரும் கழற்பொருதோள் இரணியனாகம் பிளந்து  அரியாய்

உதிரமளைந்த  கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர். 

சூரியன் தங்கமென பளபளக்கும் எண்ணிறந்த  கிரணங்களையுடையவன்  - அத்தகைய  ஆதித்யர்கள் ஆயிரம் பேர்  ஜ்வலித்தாற்போல்  நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான  இராமபிரான்  எழுந்தருளியிருக்குமிடத்தை  தேடுகிறீர்களாகில்; அவ்வெம்பெருமானை  நினைத்து, உருகி, பணி செய்ய விருப்பம் உள்ளோர்க்கு,  அவ்விடத்தை சொல்லுகின்றேன் .. .. கல் கல் என்று அதிரும் வீரக்கழலையும் போர்செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய ஹிரண்யாஸுரனுடைய மார்பை நரஸிம்ஹருபியாய்க்கொண்டு, பிளந்து, அதனாலுண்டான  ரத்தத்தை அளைந்த கைகளோடு கூடி இருந்தானை, அத்தகைய சீற்றந்தோற்றத்துடன்  எழுந்தருளியிருந்த நிலைமையில் - அவ்வெம்பெருமானை உள்ளபடி  ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.  இந்த அவதாரங்களையெல்லாம் எடுத்த நம் ஸ்ரீமன் நாராயணன், பாற்கடலில் துயிலும் அவன்,  பக்தர்களை காக்க திருவவதாரங்கள் எடுத்தும்,  அர்ச்சை மூர்த்தியாக, திவ்யதேசங்களிலும் நமக்காக சேவை சாதிக்கிறான்.  அந்த பரிபூர்ண எம்பெருமான் இன்று திருவல்லிக்கேணியில் - ஸ்ரீ தெள்ளியசிங்கனாய் சூர்யா பிரபையில் சேவை சாதித்தான்.  

Today 5.3.2-21  is a glorious day – it is day 4 of Special Brahmothsavam at Thiruvallikkeni and it was grand Surya Prabhai purappadu in the morning  ~  and, in the evening it would be  the  real cool Chandra Prabhai that of moon. Here are some photos of  Sri Azhagiya Singar Emperuman purappadu at Thiruvallikkeni divyadesam this morning. 

adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
5.3.2021.
 

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.   

 




















  

2 comments:

  1. 🙏 நேரில் தரிசிப்பது போல் இருக்கிறது.

    ReplyDelete