To search this blog

Wednesday, November 11, 2020

Doing good to mankind .. acts of Dharma .. பாவமே செய்து பாவியானேன்

திருமங்கை மன்னன் தமது திருமொழி பாசுரத்தில் - பாவமே செய்து பாவியானேன் எனும் போது பாபம் செய்தால் புண்ணியம் கிட்டுமா என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது.

In life, we see good things and bad things.  Our Dharma teaches us to think, act, do good.  We have learnt about goodness and dharma from our Ithihasa puranas. Even in those saintly days, even highly learned dharmic persons became slaves of circumstances – sometimes acts did in good faith, done with the intent of performing good turned out to be evil things and things not good for the society.



Vilyuchinsk is a closed town in Kamchatka Krai, Russia, located on the Kamchatka Peninsula about 20 kilometers (12 mi) across Avacha Bay from Petropavlovsk-Kamchatsky.  The Pacific Ocean and the Sea of Okhotsk make up the peninsula's eastern and western coastlines, respectively.  The Kamchatka peninsula contains the volcanoes of Kamchatka, a UNESCO World Heritage Site.  This place was in news for wrong reasons – a  mother bear and her cub were shot and killed while trying to board a nuclear submarine in Russia, according to news reports.

The submarine had been  docked near the village of Rybachiy in Russia's far-eastern Kamchatka Peninsula, which has served as a submarine construction base since the 1960s. In a video shared on social media on Nov. 8, crewmembers aboard the sub watch as the two bears swim up from the adjacent bay and climb aboard the vessel's deck. According to the Moscow Times, naval personnel called a local hunting instructor to dispatch the bears with a "specialized hunting weapon." In an unedited version of the video, a shotgun blast rings out before the bear cub falls from the sub's deck and into the bay. The bears boarded the sub after swimming across the nearby bay, military officials said.

Why the bears were heart-set on becoming submariners is anyone's guess, but the Russian military has already been barraged with social media scrutiny for killing the creatures, seemingly without cause. A spokesperson from the Russian Navy's Pacific Fleet told the Russian news agency Interfax that the bears had been seen several times in recent days, and posed a threat to villagers. An estimated 24,000 wild bears inhabit the Kamchatka Peninsula, according to BBC News. If the mother and cub were searching for food, as the Russian Navy spokesperson suggested, then they are hardly the first of their kind to venture into human territory in search of sustenance.  This time it is bear and some are voicing – mankind has been mercilessly killing so many animals – in the past week or so, millions of Minks have been killed – exterminated for the fear of mutation of corona virus. 


தசரத சக்ரவர்த்தி அஸத்யவசநமாகிற பாவத்துக்கு அஞ்சி, சொன்னவண்ணம் செய்கையாகிற புண்யத்தைப் பண்ணிவைத்தும், ஸாக்ஷாத் வடிவெடுத்து வந்த புண்யமான இராமபிரானை இழந்து ஆபாஸதர்மத்தில் நிலைநின்றானென்ற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமாகவே ஆயிற்று.  பாண்டவர்களிடையே "தருமர்' என்ற தன் பெயருக்கு ஏற்ப நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லவற்றையே செய்து வந்த தருமர் சூதாடுதல் தீங்கு பயக்கும் என்று தெரிந்திருந்தும்  சூதாடினார்.

பாவ புண்ணியங்கள் நாம் மனா எண்ணம், செயல்களை பொறுத்து அமைய வல்லன.  கர்ம பலன்கள் புரிந்துகொள்வது கடினம்.  நமது இதிஹாச புராணங்கள் மிக சிறந்த வாழ்க்கை நெறிமுறை நூல்கள்.  மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டி  அனைவருக்கும் புரிய வைத்தார். 

சந்தனு மஹாராஜாவுக்கு  மனைவி கங்கை மூலம் பிறந்தவர்  தேவவிரதன்.    கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிட,  சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை கேட்கிறார்.  மூத்த மகன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார். இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.  மஹாபாரத இதிகாசத்தில் கங்கைமன்னர் பீஷ்மர் மிக முக்கிய பாத்திரம்.  ஹஸ்தினாபுர அரண்மனையை காப்பாற்ற சூளுரைத்து பீஷ்மர் அரியணையில் அமரும் அரசர்களை காப்பாற்ற பிணைக்கப்பெற்றதால் துர்யோதனாதிகளின் பக்கல் நின்று போரிடுகிறார்.  இது நியாயமே ! தர்மமே !  .. .. எனினும் தவறு !!

இதோ இங்கே திருமங்கை மன்னனின் ஒரு அற்புத பாசுரம் - திருமலை வேங்கடவனை மங்களாசாசனம் செய்து துதிக்கும் பாசுரம் :

பற்றேலொன்றுமிலேன் பாவமே செய்து  பாவியானேன்,

மற்றேலொன்றறியேன் மாயனே!  எங்கள்  மாதவனே!,

கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை  வேங்கடவா!,

அற்றேன் வந்தடைந்தேன்  அடியேனை  ஆட்கொண்டருளே.

ஆச்சரியமான கல்யாண குணங்களையுடையவனே!, எங்கள் மாதவனே; எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே!  மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திருமலையிலே வாழ்பவனே!  ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய் பாவங்களையே செய்து பாபிஷ்டனாய்  ஒரு உபாயமுமறியாதவனான அடியேன்,  உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு உன்னையே வந்து அடைந்தேன்; அடியேனை ஆள் கொண்டருள்வாயாக !!.

For those of us living at Divyadesam – it is such a blissful feeling that we are closer to Emperuman and had the fortune of worshipping Him at Thirukkovil and during veedhi purappadu.  Here are some photos of our Sri Parthasarathi Emperuman a decade ago, Thai Thiruvonam purappadu on 16th Jan 2010.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11.11.2020.

நன்றி:  கட்டற்ற அற்புத சம்பிரதாய களஞ்சியம் : திராவிட வேதா இணையம் ; கச்சி ஸ்வாமிகள் - திரு உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி விளக்க உரை. 






1 comment: