To search this blog

Monday, November 23, 2020

Karthigai Sadayam ~ Sri Peyalwar thirumanjanam at Thirumylai

நம் பாவங்கள் அகல என்ன செய்ய வேணும் !!  - நம் மனதில் அடிக்கடி எழும் கேள்வி அல்லவா !!  ஆழ்வார் நமக்கு அளித்த எளிய பதில்   "முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து"  – எம்பெருமானை தொழவேணுமென்று மனதில் எண்ணம் எழுந்த மாத்திரமே,  கொடிய பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும்.  முடிந்து‘ என்றதனால் அப்பாவங்கள் வேறொருவரிடத்திற் போய்ச் சேர்வதற்கில்லாமே உருமாய்ந்து ஒழியுமென்பது  புலப்படும்.


Today 23.11.2020 is ‘Sadaya nakshathiram’ in the month of Karthigai – last month ie., Aippaisi Sadayam we celebrated the birth anniversary of Sri Peyazhwar. Azhwar’s birth place is in Arundale Street, near Thirumylai Sri Madhava Perumal thirukovil.  At Thiruvallikkeni divyadesam – the street lying north of the Temple (leading to Barathiyar illam from theradi / Swami Nammalwar sannathi) is named as “Peyalwar Koil Street – as there is a beautiful temple dedicated to Azhwar here. 

 
எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனுக்கு பூ மாலைகளும், பொன் மாலைகளுடன்  கூட - அருந்தமிழ் சொல்மாலையும் அழகு சேர்க்கின்றன - எனவேதான் ஒவ்வொரு புறப்பாட்டின் போதும் - பெருமாள் முன்பே  ஆழ்வார்களின் பைந்தமிழ் ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தம் சேவிக்கப்பெறுகிறது.  தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ்.   

யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள்.    அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் விவரிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.  

நம் நாலாயிர திவ்யப்ரபந்தத்திலே - இசைப்பா, இயற்பா எனப் பிரித்து, இசைப்பாக்களை மூன்று பகுதிகளாகவும், இயற்பாக்களை ஒருபகுதியாகவும் ஸ்ரீமன் நாதமுனிகள் வகுத்தருளினார். அவற்றில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா, இயலாகச் சேவிக்கத்தக்கது எனும் பொருளில் அவ்வாறு பெயர்பெற்றது.  முதலாவார் மூவரே என பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரின் படைப்புகளும் தான் இயற்பாவின் ஆரம்பம்.  திருக்கோவலூரிலே ஒரு இடைகழியிலே, ஒரு மழை நாளிலே, மூவரும் சந்தித்த போது - அவர்கள் அடைந்த ஆனந்த அனுபவமே இப்பாடல்கள்.  இவை அந்தாதிப்பாடல்கள் - முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்ததிகள்.  

ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.   ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து  "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்”,  - என "மூன்றாம் திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார்,   திருமயிலைவாசி ஸ்ரீ பேயாழ்வார்;

தமிழ் தலைவன் என்ற புகழ் பெற்ற ஸ்ரீபேயாழ்வார் நமக்கு உரைக்கும் பாசுரம்.  ஏ, உலகத்தார்களே !  .. ..   ‘எது நல்லது, எது தீயது‘ என சஞ்சலத்துடன் விவாதித்துக்கொண்டே  வாழ்க்கையை வீணாக்காதீர் !!  எம்பெருமானிடத்தில் ஈடுபடுவது நன்று !  ஸம்ஸாரத்தில் ஆசை கொண்டிருப்பது தீது' என அறிந்து எம்பெருமானின் தாள் பணியுங்கொள் என உரைக்கின்றார் பேயாழ்வார்.  இதோ இங்கே மூன்றாம் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் : 

அதுநன்று  இதுதீதென்று   அய்யப்படாதே,

மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற

பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள்

முன்னங் கழலும் முடிந்து.  

அது நல்லதோ? இது கெட்டதோ? - எது சரியானது, என சந்தேகத்துடன் விவாதங்கள் செய்து, மனத் தெளிவு இல்லமால், கவலைப்படுவதை நிறுத்திவிட்டு,  தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த  எம்பிரான் ஸ்ரீமந்நாரணனின் ஸர்வஜந ஸாதாரணமான விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே  வணங்குவீராக !  அப்படி வணங்குபவர்க்கு,  எம்பெருமானின், திருப்பாத கமலங்களை நினைத்த க்ஷணமே, முழு வினைகளும், செய்த பல பாவங்களும், உருமாய்ந்து  ஒடி சென்று நம்மை விட்டு அகலும்.  

The photos at the start depict,   Sri Peyalwar sannathi at Thiruvallikkeni and Azhwar at this divyadesam.  The last few photos (standing posture) are Thirumanjana avasaram and photos of Sri Peyalwar at Thirumylai Sri Madhava Perumal Thirukovil taken on earlier occasion.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.11.2020.1 comment: