To search this blog

Sunday, November 1, 2020

Vijayadasami parvettai ~ Virada paruvam

Vijayadasami Paarvettai purappadu at Thiruvallikkeni  2020    

  "விஜயதசமி"  

 

மகாஜனபதம்  என்பது பண்டைய  இந்தியாவில் கோலோச்சிய  16 அரசுகளைக் குறிக்கும்.   வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளில் மத்சய நாடு என அறியப்பட்ட விராட நாடும் ஒன்றாகும்.    

Today is Sri Peyalwar sarrumurai ~ today is Vijayadasami – due to Corona there is no purappadu of Sri Parthasarthi Perumal.  Those regular would have had darshan of Emperuman in kuthirai vahanam in vijayadasami parvettai.  In the past few years regulars to Thiruvallikkeni Sri Parthasarathi Temple would have seen and wondered  a sudden tree in the middle of their way at the 36 pillared mantap.  That was significant !

 


 


மகாபாரதத்தின் 18 பருவங்களுள் நான்காவது விராட பருவம். இப்பருவத்தில், 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, பாண்டவர்கள், மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில், தலைமறைவாக வேலைக்காரர்களாக வாழ்கின்றனர்.  தருமர்  மன்னருடன் சொக்கட்டான் ஆடும் நண்பனாக கங்கன் எனும் பெயரிலும்,  திரௌபதி, விராட இராணி சுதேஷ்ணையின் சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்னாக சைரந்திரி என்ற பெயரிலும், பீமன் விராட அரண்மனை சமையல் கலைஞராக வல்லபன் எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராக பிருகன்னளை எனும் பெயரிலும், நகுலன் அரண்மனை குதிரைகளை பராமரிக்கும் கிரந்திகன் எனும் பெயரிலும், சகாதேவன் அரண்மனை பசுக்களை பராமரிக்கும் தந்திரிபாலன் எனும் பெயரிலும் வாழ்ந்தனர். 

மகா பராக்கிரம் பொருந்திய பாண்டவர்கள் ஐவரும் ஒளிந்து வாழ்வது எளிதல்லவே !  அவர்கள் விராட நகருக்குள் நுழையுமுன், , ருருவின் மகன் (யுதிஷ்டிரன்) அர்ஜுனனிடம், “நகரத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நமது ஆயுதங்களை எங்கே வைப்பது? ஆயுதங்களுடன் நுழைந்தால், நாம் நிச்சயம் குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவோம். மேலும், மிகப்பெரிய வில்லான காண்டீவத்தை மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். அதனால், சந்தேகமற, விரைவில் மக்கள் நம்மை அடையாளம் காண்பார்கள். நம்மில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டாலும், {நமது} வாக்குறுதியின் படி, நாம் மேலும் பன்னிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்க நேரிடும்" என்றான்  

அர்ஜுனன்  சொன்னான் :  -   “அடைய முடியா சிகரத்தின் அருகில் இருக்கும், அதோ அந்தக் கடுமை நிறைந்த மயானத்தில், விலங்குகளும் பாம்புகளும் நிறைந்த காட்டுக்குச் செல்லும் வழியை விட்டு விலகியிருக்கும்  இடத்தில, ஒரு பெரும் வன்னி மரம், ஏறுவதற்குக் கடினமானதாகவும், பெரும் கிளைகளை விரிந்து பரப்பியிருப்பியபடியும்  இருக்கிறது. நாம் நமது ஆயுதங்களை அந்த இடத்தில்  பாதுகாப்பாக வைத்துவிட்டு,  நகரத்திற்குச் சென்று துயரத்தில் இருந்து விடுபட்டு வாழலாம்" என்றான்.   நகுலன் அந்த மரத்தில் ஏறி விற்களையும் பிற ஆயுதங்களையும் அதில் வைத்தான்  அந்த மரத்தில் உடையாத பகுதி என்றும், மழையும் ஊடுருவாத பகுதி என்றும் தான்  நினைத்த பகுதியில் அவற்றை {அந்த ஆயுதங்களை} இறுக்கமாகக் கட்டினான்.  

மிக அந்நியாயமாக பாண்டவர்களை அனுப்பிய வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடியும் தருவாயும் வந்தது.  துரியோதனன் கலக்கம் அடைந்தான்.எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம் அனுப்பி விடலாம் என எண்ணினான். மறைந்த சூரியன்போல் பாண்டவர்கள் திரும்பி எழுந்து வருவார்கள்..'என்றார் பீஷ்மர். அப்போது ஒற்றர்களால்  விராட நகரில், கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என வந்த செய்தி கௌரவர்களுக்கு சந்தோசம் அளித்தது.  விராட நாட்டு மன்னனை முற்றுகையிட்டால், அவனைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள்; அவர்களை வெளிக்கொணரலாம் மேலும்  விராடனிடம் கொண்ட பழைய பகமையைத் தீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என எண்ணிய .திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா அவர்கள் உதவிக்கு வந்தான்.  முதலில் பசுக்கூட்டத்தை கவர்வது அவன் திட்டம்.அப்போது பசுக்களைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள் என்பது அவன் கணிப்பு. போர் தொடங்கியது.

 
A couple of years or so ago, news reports suggested that a huge more-than-a-century-old Jammi tree that stood  in the middle of the road in the non-descript Khambampadu village was fortunate enough not to face the axe during road widening, as the residents who were sentimentally attached to it, protested. Nobody in this environment-conscious village, about 75 km from the district headquarters, considers it as hindrance in their path. “We understand the impact of global warming and the severe biodiversity loss on our lives,” said the  group of people in the village in the drought-prone Prakasam district in Andhra Pradesh. The residents nurture the tree, which faced several testing times, including the devastating Diviseema cyclone that caused havoc in 1977.  Several avenue trees elsewhere faced the axe be it for the expansion of the Chennai-Kolkata highway or for the four-laning of the Ongole-Chirala highway.

 

When  Google India marked the 45th  anniversary of the Chipko movement with a doodle, it was a refreshing flashback to forest communities sacrificing their lives to protect trees from being felled for timber use. One of the first such recorded community protests was at Khejarli village in present-day Rajasthan. In this village, around the year 1730, about 300 Bishnois led by Amrita Devi are said to have sacrificed their lives to protect Khejri trees. The Bishnois, particularly the women in the community, considered Khejri trees (Prosopis cineraria) sacred because of their multi-use benefits.

                                On September 11, 1730, over 360 people of the Bishnoi tribe were killed in Khejarli (Rajasthan) ~ and they fell objecting felling of Khejri trees by the king of Jodhpur.  .. .. that way not many of us knew of Bishnoi community before Salman Khan made headlines for his role in the blackbuck killing case of 1998?   The term Bishnoi translates to the number 29.   29 is the number of tenets laid down by the founder of the Bishnoi sect almost 500 years ago. Of the 6 tenets that focus on protecting nature, the two most thoughtful ones are: Jeev Daya Palani–Be compassionate to all living beings and Runkh Lila Nahi Ghave– Do not cut green trees. The principles were not only tailored to conserve the biodiversity of the area but also ensured an eco-friendly social life.   

Thousands of years ago humans lived in jungles that sustained them, providing both food and shelter. They lived in harmony with the wildlife, respecting their space. They neither hunted for sport, poached, burnt, nor cut down huge swathes of forest land. They venerated nature, because they realised the grave importance of forests, and worshipped trees and animals. In the core of the forests, they nurtured sacred groves — groves of trees that have religious importance. Many of these sacred groves exist even today.   For the Bishnois, conservation of nature and wildlife is their religion. In the arid regions of Rajasthan, they manage sacred groves called orans where there are forests of Khejri trees and large populations of antelopes like the blackbucks and chinkara roam.    

In 1730 AD, when men from Maharaja Abhay Singh’s army started cutting down the Bishnoi’s sacred khejri (Prosopis cineraria) trees in the village of Khejarli, a woman named Amrita Devi stepped forward and claimed that cutting off her head was cheaper than felling a tree. She was decapitated, along with her three daughters who voluntarily took her place, followed by 363 other Bishnoi men, women and children who stepped forward until the massacre was finally called to the attention of the king.

                                  “Banni Kodtine, Bangara haagali” — is a popular greeting during Dussehra in Karnataka, meaning “Let me give you leaves of Banni tree, and let them bring gold to you”.   Banni tree, considered a symbol of courage, peace and prosperity, is the State Tree of Rajasthan and newly formed Telangana. The bark of vanni  tree is useful in treating piles, worm infestation, muscular and joint pains. Used as antidote for snake or scorpion-bite poisoning. Paste of flowers with sugar is given to prevent unexpected abortions. The leaves and fruits are used to cure nervous disorders. The smoke by burning leaves exposed in case of eye complaints ~ and that tree symbolically planted in the mantap at Thiruvallikkeni was ‘vanni tree’.  

In the month of Purattasi is celebrated the nine day festival of Navarathri.  In all these days, there occurs  grand purappadu of Vedavalli Thayar inside the temple premises.  ‘Siriya Thirumadal’ is recited  during the purappadu.  The last day is celebrated as Saraswathi Pooja, the day of reverence to the Lord of Learning.  The next day is Vijayadasami ~ the day considered most auspicious for starting learning.  Children are put in schools and taught the first syllable known as “Aksharabyasam”.   Today   26th Oct 2020     is * Vijayadasami *.   On Vijayadasami day, takes place  ‘paarvettai purappadu’  of Lord Parthasarathi on ‘kuthirai vahanam’.  

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவதுபல்வேறு சிறப்புகளை உடைய வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.  வன்னி மரம்  சோழ மன்னர்களின் குல மரம் எனும் சிறப்பு உடையது.  

‘Prosopis cineraria’  is a species of flowering tree in the pea family, Fabaceae. Common names include Khejri or "Loong Tree"; Janty; Vanni (Tamil); Jammi (Telugu); and Sami.  A large and well-known example of the species is the Tree of Life in Bahrain – approximately 400 years old and growing in a desert devoid of any obvious sources of water.  

In the epic Mahabaratha, during their exile Pandavas had to spend a year without revealing their identities.  This period was spent on Virada desam.  This is explained in detail in Virada parvam of Mahabaratha.  On Vijayadasami day which coincided with completion of their one year in exile,  in the war to protect Virada kingdom, Arjuna took back his bows and arrows hitherto hidden in a ‘vanni tree’ on the Vijaya dasami day and defeated the Gauravas. On Vijaya Dasami day at Thiruvallikkeni, ‘vanni mara parvettai’ is enacted every year.   This now-a-days  is symbolically celebrated at the entrance of the temple itself ; in olden days [till two decades ago]  this significant event  called ‘paarvettai’ took place in Vasantha bungalow situate in Venkatrangam Street.  Now that picturesque bungalow is gone, this is celebrated symbolically at the entrance of the temple.  Leaves of vanni  are  symbolically placed and the Lord comes near the tree ~ after aarathi, couple of  leaves get plucked by the battar representing the Perumal.  In the purappadu, it is  ‘Sthothra Padam’ goshti ~ Thadi Panchakam [Dhati panchagam] and Sthothra Rathnam  rendering in goshti.  Perumal had kulakkarai purappadu – TP kovil 2nd street, Bandala Venugopala Street and then from South Mada St Junction and periya mada veethi.  

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். வன்னி மரம், பல்வேறு சிறப்புகளை உடைய மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.  வன்னி மரம்  சோழ மன்னர்களின் குல மரம் எனும் சிறப்பு உடையது. வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக் கூடியதாம்.  மிக சிறந்த இதிகாசமான மகாபாரதத்தில் விராட பர்வம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.   இந்த கால கட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும்போது, தங்கள் போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கின்றது. வன்னி மரம் புனிதமாக கருதப்படுகிறது. மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்ததாக ஏட்டில் உள்ளது.    

"பார் எல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி,

அவர் பார்த்தனுக்கு தேர் ஓட்டும் சாரதி,

எங்கள் சாரதிபார்த்தசாரதி எங்கள் சாரதி !! பார்த்த சாரதி" ……   

என ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளை புகழ்ந்து பாராட்டிதிருவல்லிக்கேணி திருக்கோவிலில் நடக்கும் வருடாந்தர உத்சவங்கள் எல்லாவற்றையும் பற்றிய பாடல் மிக பிரபலமானது. மறைந்த திரு கே வீரமணி அவர்கள் கணீர் குரலில் பாடிய அந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உத்சாகமும் தைரியமும் தரவல்லது. அதில் புரட்டாசி மாத உத்சவங்கள் பற்றி சில வரிகள் இங்கே :  

வன்னி மர பார்வேட்டை கண்டு அருள வலம் வரவே !

மன்னவனும் எழுந்து அருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்

 

விஜயதசமி அன்று ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பார்வேட்டை புறப்பாடு கண்டு அருள்வார். பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருளி வன்னி மரத்தில் அம்பு எய்யும் வைபவம் சமீப சில வருஷங்களில் வசந்த  பங்களா இல்லாதபடியால் பார்வேட்டை வைபவம் கோவில் வாசலிலேயே நடக்கிறது. புறப்பாட்டில் தாடி பஞ்சகம் மற்றும் ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னம் சேவிக்கபடுகிறது. திருவல்லிகேணியில் 11.10.2016 அன்று   நடந்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.10.2020.  

PS 1:  in  a bid to distinguish itself from its newly formed neighbour, the Andhra Pradesh government  declared new state symbols to replace the ones held by Telangana after it was created. The rose-ringed parrot has been chosen as the state bird and the jasmine is the new state flower.  Neem is declared as the State tree   The four icons of the State are :

•          State Bird - Palapitta (Indian Roller or Blue Jay).

•          State Animal - Jinka (Deer).

•          State Tree - Jammi Chettu (Prosopis Cineraria).

•          State Flower - Tangedu (Tanner’s Cassia).

Ps 2: நூறாண்டுகளுக்கு முன்பு  மும்பையில் தயாரான, "ஹரிச்சந்திரா" போன்ற புராணப் படங்கள்  சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைபடங்கள் பெற்ற வரவேற்புகளின் காரணத்தினால், மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார், கீழ்ப்பாக்கத்தில், "இந்தியா பிலிம் கம்பெனி" என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916 இல், "கீசக வதம்" என்ற சலனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான். விராட பருவம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். யு. கிருஷ்ணப்பா, சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்து இருந்தனர்.  

1 comment: