To search this blog

Thursday, November 26, 2020

Kaisika Ekadasi - Kaisika Pun ... Thirukkurungudi divyadesam

Today 26.11.2020  is Karthigai Revathi ; day 7 of Kaliyan uthsavam ~ today is Ekadasi too – a very special one at that – “Kaisika Ekadasi”.  Sure you would have heard and admired that great song “Thirupparkadalil Palli kondaye – Sriman Narayana ” !!  

Ekadasi is an all important day ~  and today  assumes greater significance being  Kaisika Ekadasi.  On days of Ekadasi – fasting, worshipping Sriman Narayana and listening to religious discourses are all valued.  Upavavasa could mean ‘remaining by the side of the Lord’ – and on these days, we should eat only food that is offered to Perumal, medidate, recite and think of Sriman Narayana all the time.  I have been writing about “Kaisika Mahatmiyam” and the story of Nampaduvaan.  Of the many Ekadasis, the one occurring in the Shukla paksha of Karthigai month is very important.  Kaisika is ‘Punn’ [raga / tune] – the legend of Kaisika puranam is associated with Numpaduvan at Thirukurungudi – which I am posting in detail separately.  

கைசிகப் பண் பாடிய ஏகாதசி கைசிக ஏகாதசி.

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும்  ஒரு நாள்.    இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை (பௌர்ணமி, முழு நிலவு) நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும்.   30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும்.    

நாம் அறிந்த உலகம் பொருளாதார மயமானது !!  - மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் எனும் அரிய  பக்தன். பெருமாளைப் பண்களால்  பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன், வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள். இந்த திவ்யசரிதை தான் கைசிக புராணம்.

கைசிகம் என்பது ஒருவகைப் பண் ஆகும். வராக அவதாரத்தின்போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் (எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்) இதை அருளியதாக வராக புராணம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று பாணர் குலதிலகம் நம்பாடுவான் கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்றும் அழைப்பர்,. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடிக் கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாள் மீது பக்திகொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தரின் இறைப்பற்றைக் கூறுவதுதான் கைசிக புராணம். 

Western Ghats, very rich in bio-diversity,  is older than the Himalayan mountain range. The  forests of the wide ranging region include some of the best representatives of non-equatorial tropical evergreen forests in the world. A UNESCO World Heritage site, the Western Ghats has a significant impact on the monsoon weather pattern in the country.  At least 325 globally threatened (IUCN Red Data List) species occur in the Western Ghats. It possesses rich varieties of  flora and fauna and some of the critically endangered ones thrive here. Howsoever interesting it be otherwise, for us – this mountain range is most important to Srivaishnavaites for the great divyadesam  

 


It is “ThirukKurungudi” divyadesam  located on the  foot of the Mahendra Hill on the Western Ghat. From Chennai, one can take the Kanyakumari/Ananthapuri Express to Valliyur. From here, one can reach Thirukkurungkudi (10 km) in 20 minutes by boarding the Papanasam bound bus.   At this divine place, stands the most majestic Azhagiya Nambirayar Temple ~ sung by Periyazhwar,  Thirumazhisaippiran, Thirumangai Azhwar and Swami Nammazhwar.   The famous ‘Kaisika puranam’ is associated with this temple and is read on ‘shukla paksha’ dwadasi of the month of Karthigai, known as ‘Kaisika Dwadasi’ and enacted in drama form too .. .. ..  here is Swami Nammalwar’s pasuram on this divyadesam : 


எங்ஙனேயோ அன்னை மீர்காள்!   என்னை முனிவது நீர்?,

நங்கள்கோலத்   திருக்குறுங்குடி நம்பியை நான்  கண்டபின்,

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களொடும்,

செங்கனிவாய்   ஒன்றினொடும் செல்கின்றது  என்நெஞ்சமே.

 

நம்மாழ்வார் நாயகி பாவத்திலே  எம்பெருமானிடம் ஆழ்ந்த மையல் கொள்கிறார்.  அவர் உரைக்கும் வார்த்தை !  அன்னைமீர்களே !  நீங்கள் என்னை சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேறுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்!  திருக்குறுங்குடிப் பெருமானை, அந்த வடிவழகிய நம்பியை  நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு, என் நெஞ்சமமானது, எப்படி பொருந்தி என்னிடம் இருக்கும் ?  நாம் அநுபவிப்பதற்குரிய சிறந்தவனான - சங்கு சங்கரங்களோடும்,  அழகிய தாமரை  போன்ற  திருக்கண்களோடும், சிவந்த கனிபோன்ற ஒப்பற்றதான அதரத்தோடும் உள்ள எம்பெருமானை நோக்கியே செல்கின்றது.  அவனிடம் சேர்த்தலே நம் அனைவருக்கும் உலப்பு - நம்மை செம்மைப்படுத்த வல்லது.

இந்தக் கைசிக புராண நாடகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பே சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனராம்.  தமிழிசை மரபில் ‘கைசிகப் பண்’ என்றழைக்கப் படுவதே இன்றைய ‘பைரவி’ யாகும். (ஹிந்துஸ்தானி இசையில் ‘பைரவி என்றழைக்கப்படுவது கர்நாடக இசை யின் ‘தோடி’ ராகமாகும்).: ராகங்களும் திரைப்படப் பாடல்களும்  ~ அறந்தை மணியன் [லக்ஷ்மன் ஸ்ருதி இணையத்தில்]  ஸ்வாமி ஐயப்பன் படத்தில் பிரபலமான "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ! ஸ்ரீமன் நாராயணா" என்ற பாடல் இந்த பண்ணில் அமைந்துள்ளதாம்.   படம்: ஸ்வாமி ஐயப்பன்(1975);  பாடியவர்: கே ஜே யேசுதாஸ்;          இசையமைப்பாளர்: த.தேவராஜன்; பாடல் வரிகளை எழுதியவர் : கவியரசு  கண்ணதாசன்



Here are some photos of Thirukkurungudi, Sri Nambiraya Perumal and later photos of Sri Parthasarathi on the occasion of Kaisika Ekadasi 2016.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.11.2020







 

  

No comments:

Post a Comment